ஜி. கார்ல் மார்க்ஸ் ஜெயலலிதாவின் ஆட்சி என்பது அதிகார துஷ்பிரயோகத்துக்கு எப்போதுமே பெயர் போனது. கிட்டத்தட்ட அதுவொரு சர்வாதிகார ஆட்சி. அதே சமயம் சுரண்டப்படும் மக்களின் முன்னால், அதுவரை அதிகாரத்தை சுவைத்துக்கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி செருப்பால் அடிப்பதன் மூலம் மக்களை கிளுகிளுப்புக்கு உள்ளாக்குவதும் அவரது வாடிக்கை. இது அவரது எல்லா ஆட்சிக் காலத்திலும் நடக்கும். இதற்கு சமீபத்திய உதாரணம் சசிகலா புஷ்பா விவகாரம். அவரது குடும்பத்தினர் மீது, அவர்களது வீட்டில் வேலை செய்தவர்கள் கொடுத்த பாலியல் அத்துமீறல் … Continue reading பத்தி: காவிரி, பாலாறு பிரச்சினையைவிட சசிகலா புஷ்பாவை சிறையில் அடைப்பதுதான் தமிழக அரசுக்கு முக்கியமா?
குறிச்சொல்: சசிகலா புஷ்பா
“ஒரு நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன்”: போயஸ் கார்டன் ரகசியங்களை வெளியிட்ட சசிகலா புஷ்பா
தன்னை அதிமுக தலைமையில் இருக்கும் ஜெயலலிதா, கன்னத்தில் அறைந்ததாக பரபர குற்றச்சாட்டை வைத்தார் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. அதிமுக தலைமை அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிருந்து நீக்கியது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஷ்பா, “சென்னை போயஸ் தோட்டத்தில் நான் ஒரு நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன் வெளியில் என்னுடைய குடும்பத்தினர் காரில் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் பேசுவதற்கு கூட என்னை அனுமதிக்கவில்லை. அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இனி … Continue reading “ஒரு நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன்”: போயஸ் கார்டன் ரகசியங்களை வெளியிட்ட சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தில் பேசியது என்ன?; முழுவீடியோ…
நான் துன்புறுத்தப்பட்டேன்; அவர் என்னை அறைந்தார்: ஜெயலலிதா குறித்து சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு முழு வீடியோ... https://youtu.be/yJ59EdA2w00
“ஒரு கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினரை அறையமுடியுமா?”: ஜெ. மீது சசிகலா நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு
“ஒரு கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினரை அறையமுடியுமா?” என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பெயரைக் குறிப்பிடாமல், அதிமுக எம்பி சசிகலா புஷ்பா நா தழுதழுக்க குற்றம்சாட்டினார். சனிக்கிழமையன்று டெல்லி விமானநிலையத்தில் அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவுக்கு திமுக எம்பி திருச்சி சிவாவுக்கு கைகலப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு குறித்து விமர்சனம் செய்ததால் திருச்சி சிவாவை கன்னத்தில் நான்கு அறைவிட்டதாக சசிகலா ஊடகங்களில் தெரிவித்தார். நான்கு அறையல்ல, ஒரு அறைதான் விட்டார் என திருச்சி சிவா … Continue reading “ஒரு கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினரை அறையமுடியுமா?”: ஜெ. மீது சசிகலா நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு
சசிகலா புஷ்பா என்னை ஒரு முறைதான் அறைந்தார்: திருச்சி சிவா
டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவுக்கும் அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவுக்கு தகராறு ஏற்பட்டது. திருச்சி சிவா, தமிழக அரசு குறித்து விமர்சித்ததாகவும் அதைக் கேட்டு சும்மா இருக்க முடியாது என்பதால் நான்கு அறை விட்டதாகவும் செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். ஆனால், திருச்சி சிவாவோ எதிரில் வந்த தன்னை சட்டையைப் பிடித்து ஒரே முறைதான் கன்னத்தில் அறைந்ததாகவும் பேட்டியளித்துள்ளார். https://www.facebook.com/qaneio/videos/10209933938562954/