மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் மனைவியுடன் சென்று வாக்களித்தார்

சென்னை ஆதம்பாக்கம் புனித மாற்கு பள்ளியில் CPIM மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தன் மனைவியுடன் சென்று வாக்களித்தார். இதேபோல் சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான உ. வாசுகியும் க. பீம்ராவும் வாக்களித்தனர். படங்கள்: கவாஸ்கர்.

எளியவர்களுக்கு வாய்ப்புத் தாருங்கள்: என். சங்கரய்யா

ஊழலை ஒழிக்க வேண்டுமானால் அதிமுக, திமுக இரு கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும். 6 கட்சிகளின் தலைமையிலான எளிய மக்களின் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு வாய்ப்பளியுங்கள் என்று விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா தமிழக மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமாகா அணி சார்பில் மதுரவாயல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக க.பீம்ராவ் போட்டியிடுகிறார். https://youtu.be/GSNy6IQAUCg அவருக்கு வாக்கு கேட்டு செவ்வாயன்று (மே 10) ராமாவரத்தில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் என்.சங்கரய்யா பேசியது வருமாறு: … Continue reading எளியவர்களுக்கு வாய்ப்புத் தாருங்கள்: என். சங்கரய்யா

வேட்பாளர் அறிமுகம்: ’மக்களின் எம்எல்ஏ’ க. பீம்ராவ்!

மதுரைவாயல் தொகுதி எம் எல் ஏவாக இருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் க. பீம்ராவ். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் மதுரவாயல் தொகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றியதோடு, முடங்கிக் கிடந்த பல்வேறு மக்கள் நல பணிகள் குறிப்பாக தேங்கிக் கிடந்த குப்பைகள் அகற்றுதல்,கழிவு நீர் அகற்றுதல் மற்றும் போரூர் ஏரியை பாதுகாத்தது உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றியவர் க. பீம்ராவ். பட்டா இல்லாதோருக்கு பட்டா வாங்கி அளித்ததும் தொகுதி மக்களிடையே இவருக்கு … Continue reading வேட்பாளர் அறிமுகம்: ’மக்களின் எம்எல்ஏ’ க. பீம்ராவ்!