ஏன் சில்லறை வணிகர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்? : மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு – 4

கௌதம சன்னா மோடி பேசும் பொய்களை நம்புவதற்கும் அதை பரப்புவதற்கும் அவரது அடிபொடிகள் தயாராக இருக்கலாம் ஆனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஏன் அப்படி இருக்க வேண்டும். ரூபாய்களை ரத்துச் செய்ததால் விலைகள் குறையும் என்று நம்பச் சொல்கிறார் மோடி. அது நடப்பதற்கு சாத்தியம் இல்லை மாறாக ஒட்டுமொத்த நாசம்தான் விளையப் போகிறது. போன கட்டுரையில் சில்லறை வணிகம் எப்படி அடித்தட்டு மக்களை பாதித்து சீரழிக்கும் என்பதை பார்த்தோம். இந்த கட்டுரையில் ஏன் சில்லறை வணிகம் மோடியினால் குறிவைக்கப்படுகிறது … Continue reading ஏன் சில்லறை வணிகர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்? : மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு – 4

கீழ்மட்டச் சந்தை திவால்: மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு – 3

  கௌதம சன்னா ஜப்பானிலிருந்து நாடு திரும்பிவிட்டார் மோடி. அவர் செய்துவிட்டுப் போன பேரழிவில் மக்களின் கூக்குரல் தம் காதுகளுக்கு எட்டும் தூரத்தில் அவர் இல்லை. அதனால் ஜப்பானில் அவர் என்ன செய்தார் என்பதை மக்கள் கண்டுக் கொள்ளவே இல்லை. அதுதான் அவருக்குத் தேவை. ஏனெனில் உலகம் முழுதும் அணு ஆற்றலுக்கு எதிரான போர்க் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் போது மோடி போன்ற கார்ப்ரேட் அனுதாபிகள் அணு ஆற்றல் முகவர்களாக மாறி செயல்பட்டுக் கொண்டிருகிறார்கள். அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, … Continue reading கீழ்மட்டச் சந்தை திவால்: மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு – 3

கரன்சியில் நடத்திய நாடகம்: மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு-2

கௌதம சன்னா ஜப்பானுக்கு விமானம் ஏறிய மோடி படியில் நின்று புன்னகைத்தவாறு கையசைத்தத் தோற்றத்ததைப் பார்த்த போது, ஓர் அமெரிக்க சிப்பாய் இந்தியாவின் மீது அணு குண்டை வீசிவிட்டு பெருமிதத்தோடு தப்பி ஓடுவதைப் போலத் தோன்றியது. ஒரு பொருளாதாரப் பேரழிவை நிகழ்த்திவிட்டு எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் அவர் காணப்படுவதைப் போலவே அவரது தேச பக்தர்களும் இருப்பது ஆச்சர்யம்தான். மோடி எதற்காக புதிய கரன்சிகளை அச்சிட்டு வெளியிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான்.. மக்களின் தேவைகளை பார்த்து அவற்றை … Continue reading கரன்சியில் நடத்திய நாடகம்: மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு-2

பங்கு சந்தை வீழ்ச்சி: மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு-1

கௌதம சன்னா யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரில்லாத் தாக்குதலைப் போல மோடியால் நிகழ்த்தப்பட்ட இந்த ரூபாய் மாற்றம் எனும் பொருளாதாரத் தாக்குதலின் சிதைவுகளை, விளைவுகளை பார்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. சீர்திருத்தம் என்ற இந்த மாயையின் பின்னால் திரளும் தேச பக்தர்களின் அறிவுக்கு எட்டாத பகுதிகளுக்கு போவது நமது கடமை.. அன்டிலியா என்பது மும்பையின் நடுவில் வானைத் துருத்திக் கொண்டு நிற்கும் 11000ம் கோடி ரூபாய் மதிப்புள்ள உலகின் ஓர் அதிக விலையுள்ள 26 அடுக்கு மாடி … Continue reading பங்கு சந்தை வீழ்ச்சி: மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு-1

திருவாளர் திமுக சாதியை எதிர்க்கிறீர்களாமே..?

கௌதம சன்னா வைகோ பேசிய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, அதே நேரத்தில் உடனே அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். அந்த மன்னிப்பு கோரலை ஏற்பதும் தண்டிப்பதும் கலைஞர் அவர்களின் பெருந்தன்மையைப் பொருத்தது.. ஆனால் இந்த நேரத்தில் பழைய கதைகளைப் பேசலாமா என்பது திமுகவினர் யோசிக்க வேண்டும். பழைய கதைகளைப் பேசினால் திருவாளர் திமுகவினரின் முற்போக்கான சாதிய நடவடிக்கைகள் அம்பலமாகும் என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். அருவருக்கத்தக்க வகையில் அவர்கள் மேற்கொள்ளும் … Continue reading திருவாளர் திமுக சாதியை எதிர்க்கிறீர்களாமே..?

இசைஞானி 1000: இளையராஜாவின் பாடல்கள் ஓவியமாகின்றன!

தமிழத்தின் மாபெரும் கலைஞரான இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் தமது இடையீடற்ற படைப்பாற்றலினாலும், கடுமையான உழைப்பினாலும் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து உலகின் தன்னிகரற்ற கலைஞராக மிளிர்கிறார். உலக இசையமைப்பாளர்கள் 25பேரில் 9ம் இடத்தில் இருக்கும் ஒரே இந்தியர் என உலக ஆய்வு தெரிவிக்கிறது. இந்திய அரசும் நூற்றாண்டு சாதனையாளர் என்று அறிவித்து கவுரவித்திருக்கிறது. இவையெல்லாம் ஒரு புறமிருக்க தமிழ் மற்றும் இந்திய இசை கலை மரபான ஆன்மீகமும் அன்பும் இசைந்த அம்சமாக கடந்த நாற்பது ஆண்டுகளாக … Continue reading இசைஞானி 1000: இளையராஜாவின் பாடல்கள் ஓவியமாகின்றன!