கோவையில் கடையை உடைத்து செல்போன்களை அள்ளும் இந்து முன்னணியினர்; சிசிடிவி கேமராவில் சிக்கினர்

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொல்லப்பட்டார். இதைக் கண்டிப்பதாகக் கூறி இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட் இந்துத்துவ அமைப்பினர் கோவையில் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறை காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், கடைகளின் பூட்டை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். கோவை துடியலூரில் மொபைல் கடையை உடைத்து கையில் செல்போன்களை அள்ளிச் சென்ற காட்சி அந்தக் கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. https://youtu.be/BwqQkGOU7N8 வீடியோ உதவி: ஒடியன் லட்சுமணன்

பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டுவீச்சு; கடைகள் சூறையாடல்: கோவையில் நடந்த வன்முறைகளின் பட்டியல்

கோவையில் வெள்ளிக்கிழமை இந்து முன்னணியினர் நடத்திய வன்முறைகளின் பட்டியலுடன் தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு மனு ஒன்றை அளித்துள்ளார் சிபிஐ(எம்)மின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன். இந்த மனு விவரம்:  கோவையில் இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்ப்பாளர் பொறுப்பில் இருந்த டி. சசிக்குமார் (35) என்பவர் 21.09.2016 அன்று இரவு அடையாளம் தெரியாத சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பத்தையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் காலை முதல் இரவு வரை கடைகள் அடைக்க வைக்கப்பட்டது. இந்து முன்னணியினர் … Continue reading பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டுவீச்சு; கடைகள் சூறையாடல்: கோவையில் நடந்த வன்முறைகளின் பட்டியல்

இந்து முன்னணி நடத்திய வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொல்லப்பட்டதை அடுத்து பொது மக்கள் மீது இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் வன்முறையை கட்டவிழ்த்தனர். இதைக் கண்டித்து அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் ஒருங்கிணைந்து  கண்டன ஆர்ப்பாட்டத்தை சனிக்கிழமை நடத்தின. இதில் பெருந்திரளானவர்கள் திரண்டு, வன்முறையாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கோவை வன்முறைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலையானதை அடுத்த நடத்தப்பட்ட வன்முறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “22.9.2016 இரவு கோவை துடியலூர், சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்த திரு. சசிகுமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் கொலையை வன்மையாகக் கண்டிக்கிறது. கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது. ஆனால், இந்தக் கொலையைப் பயன்படுத்தி இந்து … Continue reading கோவை வன்முறைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்