கட்டுரையாளர் : பலோமி ராய் தமிழில் : கை.அறிவழகன் மனநல மூலதனம் (மனவூக்கம்) உலகின் சமூக, பொருளாதார மேம்பாட்டில் ஒரு மிக முக்கியமான காரணி, வலுவான அறிவாற்றல் திறன்கள், ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் மேம்பட்ட செயல்திறன் போன்ற மானுட மேம்பாடுகள் சிறந்து விளங்க மனநல மூலதனம் மிக முக்கியமானது. உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் மனவூக்கம், நல்ல மனநல செயல்பாடு தேவைப்படுகிறது. இந்தியா ஒரு குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடு, இங்கே மனநல பராமரிப்பு … Continue reading பெருந்தொற்று இளம் இந்தியாவின் மனநல மூலதனத்தை எப்படி சிதைக்கிறது?
குறிச்சொல்: கோவிட் 19
மோடி – இப்போது இந்தியாவின் சாபம் அல்ல, உலகின் துயரம் !
சுப்ரமணியம் ஜெய்ஷங்கர், ஒரு மிகக்கடினமான பணியில் ஈடுபட்டிருக்கிறார், ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இந்தியாவில் இருந்து வரும் முதல் மூத்த அமைச்சரின் இந்த அதிகாரப்பூர்வமான அமெரிக்கப் பயணம் மோசமான காலத்தில் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்திய அரசுக்கும், அமெரிக்க சமூக இணையதள ஊடகங்களுக்கும் இடையில் மண்டிக்கிடக்கும் புகை மண்டலத்துக்கு இடையே இந்தப் பயணம் ஏற்பாடாகி இருக்கிறது, அவருடைய பயணத்தின் மிக முக்கிய நோக்கம் இந்தியாவுக்காக தடுப்பூசிகளை வாங்குவது, அது சாத்தியமாகுமா? இந்தியா தொடர்ந்து கோவிட் 19, பெருந்தொற்றால் … Continue reading மோடி – இப்போது இந்தியாவின் சாபம் அல்ல, உலகின் துயரம் !
நவீன அறிவியல் மருத்துவம் முட்டாள்தனமானது என பேசிய கார்ப்பரேட் சாமியார் ராம்தேவை கைது செய்க!
நவீன அறிவியல் மருத்துவ முறைகளால் லட்சக் கணக்கான நோயாளிகள் இறந்துவிட்டதாக தவறான கருத்துக்களை பரப்பும் கார்ப்பரேட் சாமியார் பாபா ராம் தேவை கைது செய்ய வேண்டும் எனவும் அறிவியலுக்குப் புறம்பான அவரது நிரூபணமாகாத மருந்துகளுக்கும் மருத்துவ முறைகளுக்கும் மத்திய அரசு தடை விதித்திட வேண்டும் எனவும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை:கோவிட் 19 என்ற கொடிய ,வேகமாக பரவும் தொற்று நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் … Continue reading நவீன அறிவியல் மருத்துவம் முட்டாள்தனமானது என பேசிய கார்ப்பரேட் சாமியார் ராம்தேவை கைது செய்க!
கோவிட் இரண்டாம் அலை: என்னென்ன உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்? மரு. கு. சிவராமன்
மரு. கு. சிவராமன் கோவிட் இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடிவருகிறது. ஒருபக்கம் ஊரடங்கு, வாக்சின் என பல முனைப்புகளை அரசும் எடுத்து வருகின்றது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெடம்சவிர் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என பயமுறுத்தும் விஷயங்களும் கூடவே..மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு முன்களத்தில் நிற்கும் அத்தனை மருத்துவ கார்பரேஷன் காவல் பணியாளர்களுக்கு உள்ள கடும் பணிச்சுமை நெருக்கடி... நம்மளவில் நாம் அக்கறையோடு இருக்க வேண்டிய சூழல் இது. நாம் அக்கறையாக இருந்தால் மட்டுமே அவர்களின் சுமை குறையும். முக … Continue reading கோவிட் இரண்டாம் அலை: என்னென்ன உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்? மரு. கு. சிவராமன்
கொரோனா பாதிப்பால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு கண்காணிக்க வேண்டும்?
அதிகம் கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும் Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 1. கொரோனா பாதிப்பால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு கண்காணிக்க வேண்டும்?கொரோனா பாதிக்கப்பட்டு சாதாரண அறிகுறிகள் இருப்பவர் வீட்டில் கழிப்பறையுடன் கூடிய அறையில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் தனிமைப்படுத்திக்கொள்ளும் காலம் 14 நாட்கள்.தனிமைப்படுத்திக்கொண்டவரிடம் ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர் இருக்க வேண்டும். அவரது ஆக்சிஜன் அளவுகளை சோதிக்க வேண்டும். எப்போதும் 94-95% க்கு மேல் இருக்க வேண்டும்.தினமும் மூன்று வேளை காலை, மதியம், இரவு, ஆறு நிமிடம் நடந்து விட்டு … Continue reading கொரோனா பாதிப்பால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு கண்காணிக்க வேண்டும்?
இந்தியா, மோடியின் எரியும் பிணக்காடு | ரானா அய்யூப்
ரானா அய்யூப்தமிழில்: கை. அறிவழகன்டாக்டர். ஜலீல் பார்க்கர், இந்தியாவின் தலைசிறந்த நுரையீரல் நிபுணர்களில் ஒருவர், முகத்தில் கடுமையான சோர்வு தெரிகிறது, மும்பை மாநகரத்தின் லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளைக் கவனித்தபடி தொலைக்காட்சிகளிலும் தோன்றி கோரமான கோவிட் இரண்டாம் அலை எப்படி ஆயிரக்கணக்கில் இந்தியர்களை தினமும் விழுங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்.கடந்த ஆண்டில் அவருக்கே கொரோனா தோற்று ஏற்பட்டு ஏறத்தாழ இறப்பின் விளிம்பு வரை சென்று வந்தார், இப்போது அமைதியிழந்தவராக நாம் அறிந்திராத பல உண்மைகளை … Continue reading இந்தியா, மோடியின் எரியும் பிணக்காடு | ரானா அய்யூப்