தமிழர், ஆரியம், திராவிடம் என்று சாயம் பூசிக்கொள்கிறார்கள் |கொற்றவை

கொற்றவை என் குழந்தை பருவத்திலிருந்து நான் கடைசியாக இந்த வேலையே வேணாம் “மானத்தோட” பொழைச்சா போதும் என்று முடிவெடுத்து என் வேலையை ராஜினாமா செய்த 42, 43 வயது வரை நான் ஏதோ ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டே தான் இருந்தேன். (வேலையிடத்தில் நீ கொற்றவையா என்றா பார்க்கப் போகிறார்கள்? அங்கு நான் வெறும் கூலிக்கு என் உழைப்புச் சக்தியை விற்க வந்த ஒரு பண்டம்… அவ்வளவே). எனக்கு 10, 11 வயது இருக்கும் … Continue reading தமிழர், ஆரியம், திராவிடம் என்று சாயம் பூசிக்கொள்கிறார்கள் |கொற்றவை

#நிகழ்வுகள்: க்ருப்ஸ்கயாவின் ’உழைக்கும் மகளிர் நூல்’ வெளியீட்டு விழா

விடிவெள்ளி வாசகர் வட்டம் நடத்தும் தோழர் க்ருப்ஸ்கயா-வின் உழைக்கும் மகளிர் நூல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. வரவேற்புரை: தோழர் சபரிதா தலைமை : தோழர் சங்கீதா நூல் வெளியீடு : தோழர் லட்சுமி - ஆட்டோ ஓட்டுனர் பெற்றுக்கொள்பவர் : தோழர் மகிழ்நன்.பா.ம, திரைத்துறை கருத்துரை தோழர் கீதா ராமகிருஷ்னன், அமைப்புச் சாரா தொழிலாளர் கூட்டமைப்பு தோழர் மதன் அறிவழகன் தோழர் ஈஸ்வரி, திரைப்படத் துறை தோழர் பா.ஜீவசுந்தரி, எழுத்தாளர் தோழர் ஜி.மஞ்சுளா, … Continue reading #நிகழ்வுகள்: க்ருப்ஸ்கயாவின் ’உழைக்கும் மகளிர் நூல்’ வெளியீட்டு விழா

இயக்குநர் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் பா. ரஞ்சித், பட்டியலின எம்.ஏ.க்கள், எம்.பிக்கள் தங்களை தேர்ந்தெடுத்த பட்டியிலின மக்களின் நலனுக்காக பேச வேண்டும் என பேசினார். இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ. கு. தமிழரசன், இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் பா. ரஞ்சித் பேசிய சில கருத்துக்கள் விவாதமாகியுள்ளது. “தலித் மக்களுக்காக பேச முடியாவிட்டால், பிற கட்சிகளில் உள்ள தலித் எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள், அந்த கட்சிகளை … Continue reading இயக்குநர் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்

அன்னையர் தின கட்டவிழ்ப்பு: கொற்றவை

நான் பெண், ஆனால் பெண்மையைத் துறந்தவள்
நான் தாய், ஆனால் தாய்மையைத் துறந்தவள்
நான் ஆகச்சிறந்த காதலி, ஆகவே சகியாக் காதலை துறப்பவள்...

பொதுவெளியில் இயங்கும் பெண்கள் ஏன் “ஐட்டம்” ஆகிறார்கள்?

கொற்றவைக்கு எதிர்வினையாற்றுகிறோம் என்கிற பெயரில் பல ட்ரோல்கள் அவரை மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளால் எழுதியுள்ளனர்.  அவர்கள் அத்தனை பேருடைய வார்த்தைகளிலும் மிக பிரதானமாக உள்ளது “ஐட்டம்” என்கிற சொல்.

கம்யூனிஸ்ட்கள் தங்களை தலித்துகளாக எண்ணக்கூடாது ; நிர்மலா கொற்றவையின் புதிய கருத்து…

மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் எழுத்தாளர் கொற்றவை. 'கம்யூனிஸ்டுகள் தங்களை கம்யூனிஸ்டுகளாக மட்டுமே எண்ண வேண்டும். தலித்துகளாக உணரக்கூடாது' என தனது முகநூல் பதிவில் எழுதியுள்ள கருத்து விவாதங்களை கிளப்பியுள்ளது. Kotravai N: கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் தோழர்கள் தங்களை கம்யூனிஸ்டுகளாக உணர வேண்டுமே அல்லாது தலித்துகளாக எண்ணக் கூடாது. கம்யூனிஸ்டுகளாக கருதினால் எவர் பற்றிய விமர்சனத்தையும் அவர்கள் திறந்த மனதோடு காண்பார்கள். கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டு தங்களை தலித்துகளாக உணர்வதென்பது, அவர்கள் இன்னும் சாதியை கடக்கவில்லை … Continue reading கம்யூனிஸ்ட்கள் தங்களை தலித்துகளாக எண்ணக்கூடாது ; நிர்மலா கொற்றவையின் புதிய கருத்து…

“கொற்றவையாகிய நான் இனி எழுதப் போவதில்லை”

கொற்றவை வணக்கம் தோழர்களே, இச்சமூகத்தில் என்னை நான் என்னவென்று அடையாளப்படுத்திக் கொள்வது என்று வருந்தும் நிலைக்கு இன்று நான் ஆளாக்கப்பட்டுள்ளேன். இதுவரை நான் எத்தனையோ விதமான விமர்சனங்களை சந்தித்துள்ளேன். அதை துணிவுடன் ஒற்றை ஆளாக நின்றே எதிர்கொண்டும் உள்ளேன். நான் சொன்ன எந்த கருத்திலிருந்தும் - அது என்னுடைய அறிவிற்கும் - சமூக மாற்றத்திற்கும் சரியானதே என்று கருதிய எந்த கருத்திலிருந்தும் நான் பின்வாங்கியதில்லை. ஆனால் விமர்சனம் என்பது வேறு அவதூறு என்பது வேறு. அதிலும் சாதிய … Continue reading “கொற்றவையாகிய நான் இனி எழுதப் போவதில்லை”

#விவாதம்: “என் சாதி உயர்வானது என்று சொல்லும் எல்லோருமே பிராமணர்கள்தான்”

தமயந்தி இரண்டு நாட்களாய் இணையத்தில் நெஞ்சுரம் கொண்ட ஆணவக் கொலைக்கெதிரான கட்டுரை( புகைப்படம் ) பார்த்த போதே அதன் பின்னிருக்கும் அரசியல் எனக்கு நன்கு புரிந்தது. இணையத்தில் இதைப் புரிந்து கொள்ளாமல் அவரவர் அரசியல் புரிதலும் அவசரமான பழி வாங்கும் சொற்களும் மிக ஆபாசமாக பகிர்ந்து கொள்ளப்பட்டன. கொற்றவை, குட்டி ரேவதி ,முக்கியமாக ஜோதியின் களப்பணி நான் அறிந்ததே. அவர்கள் ஒருபோதும் அப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க முடியாதென திண்ணமாக எண்ணினேன். நம்பினேன். தனிவிரோத தாக்குதல்களாய் தூக்கி வீசப்பட்ட … Continue reading #விவாதம்: “என் சாதி உயர்வானது என்று சொல்லும் எல்லோருமே பிராமணர்கள்தான்”