ஆட்டிசம்: சமூகமாய் ஒன்றிணைந்து எதிர்கொள்வோம்!

கே. ஏ. பத்மஜா ஏப்ரல் 2 உலக ஆட்டிச தினம். உலகம் முழுவதும் ஆட்டிசம் குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக ஆட்டிசம் நாளாய் கடைபிடிக்கப் படுகிறது. ஆட்டிசம் ஒரு நோய் அல்ல அது ஒரு குறைபாடே. இந்த குறைபாட்டிற்கு என்று மருந்து மாத்திரை எதுவும் கிடையாது, பயிற்சிகள் மூலம் மட்டுமே நிச்சம் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்தியாவில் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு மேல் ஆட்டிசம் இருப்பதாய் ஒரு புள்ளி விபரம் குறிப்பிடுகிறது. மேலும் இது வருட … Continue reading ஆட்டிசம்: சமூகமாய் ஒன்றிணைந்து எதிர்கொள்வோம்!

இன்று பரிசு… நாளை பொக்கிஷம்: குழந்தைகளுக்குப் பரிசு வழங்கும்போது கவனிக்க வேண்டியவை!

கே. ஏ. பத்மஜா குழந்தைகளுக்கு மட்டும் அல்ல... பெரியவர்களுக்கும் பரிசுகள் வாங்குவதிலும் கொடுப்பதிலும் மட்டற்ற மகிழ்ச்சி. நாம் குழந்தைகளுக்கு பரிசுகளைக் கொடுக்கும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அவை: நீங்கள் கொடுக்கும் பரிசு குழந்தைக்கு உங்கள் அன்பை வெளிப்படுத்த வேண்டுமே தவிர உங்கள் பணபலத்தையோ அல்லது உங்கள் அந்தஸ்தையோ வெளிக்காட்டுவதாக அமைந்து விடக்கூடாது. குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசின் மதிப்பு தெரிந்திருக்க வேண்டும். விலையுர்ந்த பொருளை பரிசாக கொடுத்துவிட்டு, அந்தப் பொருளை பத்திரமாக வைத்திருக்க … Continue reading இன்று பரிசு… நாளை பொக்கிஷம்: குழந்தைகளுக்குப் பரிசு வழங்கும்போது கவனிக்க வேண்டியவை!

நிழலழகி 13: ஓவியா புகழ்பாடும் நாம் மஞ்சுவை என்ன செய்தோம்?

அருண் போன்ற ஆண்கள் மஞ்சுவிற்காய் இரக்கப்பட்டாலும், அவளை காதலித்தாலும், அவளை திருமணம் செய்ய கொஞ்சம் தைரியம் திரட்ட தயங்கி பின்வாங்கத்தான் செய்கின்றனர்.

தனியார் பள்ளிகளில் கட்டாயமாக்கப்படும் மதிய உணவு!

எல்லா வசதிகளும் இருந்தும், குழந்தை கை எட்டும் தூரத்தில் இருக்கும்போது கூட இப்படி குறுநகரங்களில் கூட மதிய உணவை பள்ளியே வழங்கி, அதற்கு என ஒரு கட்டணம் வசூலித்து பணம் சம்பாதிக்க பெற்றோராகிய நாமே ஒத்துழைப்பது எங்கோ ஆரோக்கியம், வசதி என்ற பெயரில் தேய்ந்துக்கொண்டு இருக்கிறது.

உங்கள் வீட்டில் ஓவியாக்களை ஏற்றுக் கொள்வீர்களா?

நடுஇரவில் ஒரு பெண், இரண்டு ஆண் நண்பர்களுக்கு இடையில் படுத்து இருப்பது காமத்தை தேடி அல்ல; ஆறுதல் தேடி மட்டும் தான் என்று பக்குவமாய் புரிந்து கொள்ள முடியுமா?

நிழலழகி 12: உங்களால் ‘குமாரி’க்களைக் காதலிக்க முடியுமா?

நாயகியின் அறிமுக காட்சியே தன்னை பாலியல் தொழிலாளி என நினைத்து பேரம் பேசியவனை விரட்டித் துறத்துவதுதான்.

குழந்தைகளின் வதை முகாம்களாக மாறிய டிவி சேனல்கள்!

கே. ஏ. பத்மஜா குட்டிப் பிள்ளைகள் டாம் அண்ட் ஜெர்ரி, டோரா, சோட்டா பீம் என 24 மணி நேரமும் கார்ட்டூன் சேனல்கள் முன்பு தவம் இருக்கும் கொடுமை ஒருபுறம் இருக்க, சமீபத்தில் தமிழ் காமெடி சேனல், காமெடி நிகழ்ச்சிகள், குழந்தைகள் நிகழ்ச்சி என மறுபுறம் புகழ் போதையில் பெற்றோரே வலுக்கட்டாயமாக பிள்ளைகளை பாடுபடுத்துகின்றனர். காமெடி சேனல் என்பது இன்று பல குடும்பங்களில் சர்வ சாதாரணமாய் பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, குழந்தைகள் இந்த காமெடி சேனலை … Continue reading குழந்தைகளின் வதை முகாம்களாக மாறிய டிவி சேனல்கள்!

நிழலழகி – 6: பாத்திமாவையும் ஜீனத்தையும் உங்களுக்குத் தெரியுமா?

கே. ஏ. பத்மஜா Alif | NK Muhammed Koya | Malayalam | 2015 நான் பள்ளியில் படிக்கும்போது "வலிமையான பெண்மணி" என்ற தலைப்பில் நடந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்றேன். சரோஜினி நாயுடு பற்றி ஏற்ற இறக்கத்துடன் அழுத்தமான பதிவுகளுடன் கனீர் குரலில் பேசி முதல் பரிசை வென்றேன். ஆனால், வாழ்க்கை என்றால் என்ன என்று ஓரளவு புரிந்துவிட்ட இப்போதைய நிலையில், அதே தலைப்பு எனக்கு கொடுக்கப்பட்டால், எனது பாட்டியை பற்றிதான் பேசுவேன். ஆம், நான் … Continue reading நிழலழகி – 6: பாத்திமாவையும் ஜீனத்தையும் உங்களுக்குத் தெரியுமா?

வளரும் பெண் பிள்ளைகளை அணுகுவது எப்படி?

கே. ஏ. பத்மஜா வளரும் பெண்பிள்ளைகளை அணுகும் முறைகள் ஒரு பெண்ணிற்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை முடிவு செய்வது ஆணின் விந்தணுக்களில் இருக்கும் குரோமோசோம்தான். ஆனால், ஏனோ இந்த சமூகம் பெண்பிள்ளை பிறந்தால் தாயை மட்டும் குறைசொல்லும் வழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அம்மா என்பவள் சுற்றி இருப்பவர்களின் ஆதரவும், வாழ்த்துகளும் பெரிதாய் இல்லாதபோதும் பெற்று எடுத்த பிள்ளைமேல் துளியும் பாசம் குறையாமல் வளர்க்கிறாள். இன்று பல தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் பருவ வயதை எட்டும்போது ஒருவித பதற்றத்துக்கு … Continue reading வளரும் பெண் பிள்ளைகளை அணுகுவது எப்படி?

ஆண்களே அந்த மூன்று நாட்களுக்கு தயாரா?

கே. ஏ. பத்மஜா பொதுவாய் எந்த ஆணும் தனித்து இருப்பது அரிது. காதலி, மனைவி, அக்கா, தங்கை, அம்மா இப்படி ஏதோ ஒரு பெண் உறவு அவனை சூழ்ந்து கொண்டுதான் இருக்கும். பெண் தன்னை ஒரு ஆண் மதிப்பதாக,பாசம்வைத்து இருப்பதாக உணரும் தருணங்களில் ஒன்று மாதவிடாய் காலத்தில் அவளை பார்த்துகொள்ளும் விதம் .எனவே கொஞ்சம் பெண்களின் அந்த மூன்று நாட்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பெண் பூப்பெய்தது முதல் ஒவ்வரு மாதமும் கருத்தரிக்காத கருமுட்டைகள் கருப்பை சுவருடன் … Continue reading ஆண்களே அந்த மூன்று நாட்களுக்கு தயாரா?