முஸ்லீமாக பிறந்து, மதமற்றவராக மாறிய பெண்ணுக்கு கோயிலில் நடனம் ஆட வாய்ப்பு மறுப்பு!

தான் இந்து அல்ல என்பதால், கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்ததாக, முஸ்லிமாக பிறந்த பரதநாட்டிய நடனக் கலைஞரான மான்சியா வி.பி. குற்றம்சாட்டியுள்ளார்.திருச்சூரில் உள்ள இரிஞ்சாலக்குடாவில் உள்ள கூடல்மாணிக்யம் கோயில் பத்து நாள் திருவிழாவிற்கு தயாராகி வருகிறது. இதில் சுமார் 800 கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். இக்கோயில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ளது.ஏப்ரல் 21 அன்று கோயில் … Continue reading முஸ்லீமாக பிறந்து, மதமற்றவராக மாறிய பெண்ணுக்கு கோயிலில் நடனம் ஆட வாய்ப்பு மறுப்பு!

அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் வழிபட அனுமதிக்கத் தயார்: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து, இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பும் 5 பெண் வழக்கறிஞர்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பினாகி சந்திரகோஷ், ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. இதுவரை கேரள அரசு தன்னுடைய வாதத்தில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது இயலாத என்றே வாதிட்டு வந்தது. இந்நிலையில் இன்று நடந்து விசாரணையில் அனைத்து வயது பெண்களை வழிபட அனுமதிக்கத் தயார் என … Continue reading அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் வழிபட அனுமதிக்கத் தயார்: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு

ஜிஷாவுக்கு நீதி பெற்றுதர கேரள முதல்வர் முதல் கையெழுத்து!

கேரள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு முதலமைச்சராக பிணராய் விஜயன்  பதவியேற்ற பின் தனது அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானத்தின்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரும்பாவூர் என்னுமிடத்தில் சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உடலில் 25 இடங்களில் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஜிஷா படுகொலை விசாரணை மந்தமாக இருந்ததோடு குற்றவாளிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில்  ஜிஷா வழக்கு … Continue reading ஜிஷாவுக்கு நீதி பெற்றுதர கேரள முதல்வர் முதல் கையெழுத்து!

’சபரிமலைக்கு ஏன் பெண்கள் போகக்கூடாது?’

சபரிமலை கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் செல்லக்கூடாது என கோவில் நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பக்திபசாரிஜா, லட்சுமி சாஸ்திரி உள்ளிட்டோர் சார்பில் 2006 ஆம் ஆண்டு பொது நல வழக்கு தொடரப்பட்டது. கோவில் நிர்வாகத்தின் உத்தரவை மாநில அரசும் பின்பற்றுவதால், பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது, இந்திய அரசியல் சாசனப்பிரிவு 14-ன் படி ஆண், பெண் சரிநிகர் என்ற … Continue reading ’சபரிமலைக்கு ஏன் பெண்கள் போகக்கூடாது?’