இன்று பரிசு… நாளை பொக்கிஷம்: குழந்தைகளுக்குப் பரிசு வழங்கும்போது கவனிக்க வேண்டியவை!

கே. ஏ. பத்மஜா குழந்தைகளுக்கு மட்டும் அல்ல... பெரியவர்களுக்கும் பரிசுகள் வாங்குவதிலும் கொடுப்பதிலும் மட்டற்ற மகிழ்ச்சி. நாம் குழந்தைகளுக்கு பரிசுகளைக் கொடுக்கும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அவை: நீங்கள் கொடுக்கும் பரிசு குழந்தைக்கு உங்கள் அன்பை வெளிப்படுத்த வேண்டுமே தவிர உங்கள் பணபலத்தையோ அல்லது உங்கள் அந்தஸ்தையோ வெளிக்காட்டுவதாக அமைந்து விடக்கூடாது. குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசின் மதிப்பு தெரிந்திருக்க வேண்டும். விலையுர்ந்த பொருளை பரிசாக கொடுத்துவிட்டு, அந்தப் பொருளை பத்திரமாக வைத்திருக்க … Continue reading இன்று பரிசு… நாளை பொக்கிஷம்: குழந்தைகளுக்குப் பரிசு வழங்கும்போது கவனிக்க வேண்டியவை!

ஜங்கிள் புக் – ஐமேக்ஸ் மற்றும் சில அயோக்கிய பெற்றோர்கள்.

லக்ஷ்மி சரவணகுமார் கோடை காலம் தான் குழந்தைகளுக்குள் பல்வேறான புரிதல்களை உருவாக்குகிறது. முக்கியமாக சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் குழந்தைகளுக்கு இந்த சில நாட்கள் விடுமுறை தான் பெரும் ஆறுதல். புதிய விளையாட்டுக்கள் புதிய நண்பர்களென முந்தைய தலைமுறை அனுபவித்த சந்தோசங்கள் எதுவும் கிடைக்காத போதும் சின்ன சின்ன பயணங்கள் கடல் பார்த்தலென கொஞ்சம் இலகுவாக முடிவது இந்நாட்களில் தான். கோடை காலங்களை குறிவைத்து ஹாலிவுட் பாலிவுட் கோலிவுட் படங்கள் படையெடுப்பது வழக்கம். ( கடந்த வருடம் … Continue reading ஜங்கிள் புக் – ஐமேக்ஸ் மற்றும் சில அயோக்கிய பெற்றோர்கள்.

வாழ்தலைப் பற்றி மகளுடன் ஒரு தந்தையின் உரையாடல்!

அறிவழகன் கைவல்யம் பெரிய கரப்பான் பூச்சி கழிப்பறையில் இருக்கிறதென்று அழுதுகொண்டே ஓடி வருகிறாள் அன்பு மகள், "கரப்பான் பூச்சி ஒரு சின்ன உடல் பொருந்திய உயிர், மனிதர்களைக் கண்டு ஓடி ஒளிந்து கொள்கிற, மனிதர்களின் கழிவுகளைத் தின்று வாழ்கிற ஒரு சிறிய பூச்சியைக் கண்டா நீ அஞ்சுகிறாய் மகளே" சமாதானம் செய்துவிட்டுச் சொல்கிறேன். "அம்மா, கரப்பான் பூச்சிகளும் வாழ்ந்தாக வேண்டுமே!" "அப்பா, வாழ்தல் என்பது என்ன?" மிகச் சிக்கலான கேள்விதான், கொஞ்ச நேரம் நானும் யோசித்துப் பார்க்கிறேன், … Continue reading வாழ்தலைப் பற்றி மகளுடன் ஒரு தந்தையின் உரையாடல்!