தெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி!

இன்னும் சொன்னால் குற்றவாளிகளும், குற்றங்களுமே சமூகத்தின் உள்ளார்ந்த ஆன்ம நலத்தை பிரதிபலிக்கிறார்கள். a crime gives us the insight in to the cross section of a society's mental wellness. இதை நாம் ஆராய தொடங்கினால் மொத்தமாக இந்தியாவின் மீது அணுகுண்டு போட்டு அழிக்க வேண்டிய முடிவிற்கு நம்மை கொண்டு போய் நிறுத்தும்.

இன்ஃபோஸிஸ் அலுவலக அறையில் நிர்வாணமாக இறந்துகிடந்த ஊழியர்

விழுப்புரம் மாவட்டம் வல்லம் அருகே உள்ள தளவாழப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. வயது 31. மென் பொறியாளரான இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  இளையராஜா செங்கல்பட்டு அருகே மகேந்திராசிட்டி தொழிற்பூங்காவில் உள்ள இன்ஃபோசிஸ் ஐ.டி. நிறுவனத்தில் கடந்த ஐந்து வருடமாக மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். திங்கள்கிழமை வேலைச் சென்ற கணவர் வீடு திரும்பாததை அடுத்து செவ்வாய்கிழமை அவருடைய மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் நேற்றிரவு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் … Continue reading இன்ஃபோஸிஸ் அலுவலக அறையில் நிர்வாணமாக இறந்துகிடந்த ஊழியர்

பேராசிரியை கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு

  கோவை மாவட்டம் காரமடையில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் தர்மராஜ். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மூத்த மகள் ரம்யா கோவையை அடுத்து உள்ள கிணத்துக்கடவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி நள்ளிரவு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்த மகேஷ் … Continue reading பேராசிரியை கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு

பழிவாங்கும் தலைமுறை! சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன் கடந்த இரண்டு நாட்களில் ஒருதலைக் காதலால் நடந்த நான்கு சம்பவங்களை சாதாரணமாகக் கடந்து போய்விட முடியாது. கரூரில் சோனாலி என்கிற மாணவி கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். தூத்துக்குடியைச் சேர்ந்த பிரான்சினா என்கிற ஆசிரியர் தொழில்புரிந்த பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டிருக்கிறார். திருச்சியைச் சேர்ந்த மோனிகா என்கிற மாணவி கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். புதுவை மாநிலத்தைச் சேர்ந்த வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருத்தரும் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். இந்த நான்கு சம்பவங்களும் இன்னொரு ஆழமான உண்மையை நமக்கு … Continue reading பழிவாங்கும் தலைமுறை! சரவணன் சந்திரன்

சவுக்கு சங்கர் மிரட்டியதாக செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி கொடுத்த புகார் பொய்யானது: சிபிஐ குற்றப்பத்திரிகை

சவுக்கு இணையதளத்தில் தன் மீது அவதூறான கட்டுரை வெளி வந்தது குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் மற்றும் வழக்கறிஞரான மகாலட்சுமி காவல்துறையில் புகார் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சில மாதங்கள் கழித்து, சவுக்கு தளத்தில் வந்த கட்டுரையை நீக்க வேண்டுமென்றால் 50 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று சவுக்கு தளம் சார்பாக யாரோ ஒருவர் போனில் மிரட்டியதாக மற்றொரு புகாரை … Continue reading சவுக்கு சங்கர் மிரட்டியதாக செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி கொடுத்த புகார் பொய்யானது: சிபிஐ குற்றப்பத்திரிகை

ஸ்வாதி கொலை வழக்கு: ஒரு வழக்கறிஞரின் 50 சந்தேகங்கள்…

வள்ளிநாயகம் சுட்கி கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி தமிழகம் முழுவதையும் அதிர்வலைக்கு உட்படுத்திய ஸ்வாதியின் கொலை மிகவும் கொடூரமான ஒன்று. இதை யாரும் மறுப்பதற்கு இல்லை. மறக்கவும் இல்லை. “ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது” என்று சட்டம் பயின்ற ஒரு வழக்கறிஞரான எனக்கு கொலை வழக்கின் விசாரணைப் போக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இக்கேள்விகள் எனது தனிப்பட்ட ஐயங்கள் மட்டும் இல்லை. பெரும்பாலான மக்கள் விளக்கம் எதிர்பார்த்து எழுப்பும் … Continue reading ஸ்வாதி கொலை வழக்கு: ஒரு வழக்கறிஞரின் 50 சந்தேகங்கள்…

போலீஸ்தான் ராம்குமார் கழுத்தறுத்த நிலையில் இருந்த படத்தை எடுத்தது: ராம்குமார் அப்பா

ஸ்வாதி படுகொலை வழக்கில் கைதான ராம்குமாரின் தந்தை பரமசிவம் ஊடகங்கள் முன்பு பேசியிருக்கிறார். ராம்குமார் கைதின் போது என்ன நடந்தது என்பது குறித்து அவர் சொன்னது: “வழக்கமா என் பையன் பின்னால இருக்க ரூம்ல படுத்துக்குவான். நான், எங்கூட்டம்மா, ரெண்டு பிள்ளைங்க முன்னாடி படுத்திருந்தோம். 11.30 மணி வாக்குல எங்க வீட்டுக்கதவை தட்டினாங்க.  இது முத்துகுமார் வீடான்னு கேட்டாங்க. எம் பொண்ணு இல்ல, முத்துகுமார்னு இங்க யாரும் இல்லைன்னு பதில் கொடுத்துச்சு. அப்புறம் கரெண்ட் இல்லாததால நான் … Continue reading போலீஸ்தான் ராம்குமார் கழுத்தறுத்த நிலையில் இருந்த படத்தை எடுத்தது: ராம்குமார் அப்பா

“எங்களை பெண்கள் என்றும் பார்க்காமல் துரத்தி துரத்தி வீடியோ எடுத்தார்கள்; எங்களுக்கு நியாயம் கிடைக்கணும்”: ராம்குமாரின் தங்கை 

ஸ்வாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் குடும்ப தரப்பில் இருந்து அவருடைய தங்கை முதன்முறையாக பேசியிருக்கிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில், “என் அண்ணன் எங்களை எப்போதும் படி படி என்றுதான் சொல்லிக்கொண்டிருப்பார். எங்களை ஐஏஎஸ் ஆக்கணும் என்று ஆசைப்பாட்டார். அவரும் அப்படித்தான் புத்தகமும் கையுமாக படித்துக் கொண்டிருப்பார். இந்த அளவு செய்து இருப்பார் என்று நம்பவில்லை. கொலையை திசைதிருப்ப இந்த வேலை நடக்கின்றது. நாங்கள் வழக்கறிஞரை இன்னும் முடிவு செய்யவில்லை. உள்ளூர் வழக்கறிஞரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம்.” என்றவர், ராம்குமார் … Continue reading “எங்களை பெண்கள் என்றும் பார்க்காமல் துரத்தி துரத்தி வீடியோ எடுத்தார்கள்; எங்களுக்கு நியாயம் கிடைக்கணும்”: ராம்குமாரின் தங்கை 

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை; தாத்தாவும் 15 வயது பேரனும் கைது

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தெளுங்கனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் 6 வயது மகள் தர்ஷினி, சனிக்கிழமை இரவு காணாமல் போனார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவரின் வீட்டில், பூஜை அறையில், பாத்திரம் ஒன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக ராமனும், அவரது 15 வயது பேரன் திருமூர்த்தியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டின் … Continue reading 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை; தாத்தாவும் 15 வயது பேரனும் கைது

பூணூலைத் தடவிக்கொண்டே ராம்குமாரை தூக்கில் ஏற்ற பரிந்துரைக்கிறது தினமணி!

நீதி எல்லோருக்கும் சமமானதாக இருக்கும்பட்சத்தில் விசாரணை, தண்டனை என இந்திய தண்டனைச் சட்டம், நீதிமன்றம் இயங்கும் அதே முறையில் ஸ்வாதி படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருக்கும் ராம்குமார் மீதான வழக்கும் விசாரிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான அறிகுறிகளே இங்கே தென்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படும்வரை அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை கொலையாளி என எவரும் சுட்டக்கூடாது என்பது விதி.  பெரும்பாலும் பார்ப்பனர் தலைமையில் கீழ் இயங்கும் ஊடகங்கள், பார்ப்பனமயமாக்கப்பட்ட ஊடகங்கள் கொல்லப்பட்டவர் பார்ப்பன சமூகத்தவர் (பெண் என்பதற்காகவெல்லாம் இல்லை; ஜெயந்திரர் … Continue reading பூணூலைத் தடவிக்கொண்டே ராம்குமாரை தூக்கில் ஏற்ற பரிந்துரைக்கிறது தினமணி!

சமூக வலைத்தளங்களில் வெளியானது ராம்குமார் சிகிச்சைக்குப் பிறகு பேசிய வீடியோ

ஸ்வாதி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிகிச்சைக்குப் பிறகு பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பெயர் என்ன என்ற கேள்விக்கு ராம்குமார் என பதில் தருகிறார். முன்னதாக, ராம்குமார் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்துக்கொண்ட படங்களும் வெளியாகின. வழக்கு விசாரணையில் இருக்கும் நபர் தொடர்பான விவரங்கள் எதற்காக, யாரால் கசியவிடப்படுகின்றன என்கிற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. https://www.facebook.com/nagarajan.naga.984/videos/729373053872551/

யார் இந்த ராம்குமார்?

ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம் குமார், நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்த தென்காசி அருகே உள்ள தேன் பொத்தை மீனாட்சி புரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவன் மகன் ராம்குமார். வீட்டில் இவர் மூத்த மகன். இவருக்கு இரண்டு தங்கைகளும் ஒரு தம்பியும் உள்ளனர். அப்பா பரமசிவம் பிஎஸ்என்எல் ஊழியர். கிராமத்தைப் பொறுத்தவரை இவர் அமைதியான சுபாவம் உடையவராகவே சொல்லப்படுகிறார். ஆலங்குளத்தில் உள்ள கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கல்லூரி படிப்பை முடித்ததும் வேலை தேடி சென்னை … Continue reading யார் இந்த ராம்குமார்?

அடுத்தடுத்து விஷ ஊசி கொலைகள்: சென்னை ரியல் எஸ்டேட் மாஃபியாவின் பகீர் நிஜக் கதை!

விஷ ஊசிப் போட்டு அடுத்தடுத்து மூவரைக் கொலை செய்த ரியல் எஸ்டேட் மாஃபியா ஸ்டீபனின் நிஜக் கதை பலரை திடுக்கிட வைத்துள்ளது. பணமும் அதிகார போதையும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று வாழ்ந்துவரும் பல ரியல் எஸ்டேட் மாஃபியாக்களின் ஒரு முகத்தைத் தோலுரிக்கிறது ஸ்டீபனின் மாஃபியாத்தனம். நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் ஹனுமான் காலனியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்(38). ஸ்டீபனுக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர். 12-ஆம் வகுப்பு படித்து முடித்த ஸ்டீபன், பின்னர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.காம். … Continue reading அடுத்தடுத்து விஷ ஊசி கொலைகள்: சென்னை ரியல் எஸ்டேட் மாஃபியாவின் பகீர் நிஜக் கதை!

ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் சிறப்பு நேர்காணலை வெளியிட்டுள்ளது  ‘தீக்கதிர்’(20-03-2016) நாளிதழ். அதனுடைய மறுபிரசுரம்... சந்திப்பு : மதுக்கூர் ராமலிங்கம், சி. ஸ்ரீராமுலு மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஏற்கெனவே பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்றிருந்தன. அதற்கும், தற்போது அமைந்துள்ள மக்கள் நலக் கூட்டணிக்கும் அடிப்படை வேறுபாடு என்ன? மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்திற்கு இந்தக் கூட்டணி எந்த வகையில் ஒத்திசைவாக உள்ளது? திமுக,அதிமுக ஆகிய இரு … Continue reading ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்

திருநெல்வேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிருடன் எரிப்பு: குழந்தைகளையும் விட்டு வைக்காத கோடூரம்!

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கீழவடகரையைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மகன் செந்தூர்பாண்டியன் (30). கேரளாவில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கும், புளியங்குடி அருகே உள்ள கீழதிருவேட்டநல்லூர் காலனியைச் சேர்ந்த ஈஸ்வரன் மகள் முத்துராணிக்கும் (23)கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம்நடந்தது. செந்தூர்பாண்டியனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் தினமும் குடித்து விட்டு வந்து முத்துராணியை கொடுமைப் படுத்துவாராம். ஊர்ப்பெரியவர்கள் செந்தூர்பாண்டியனை கண்டித்தும் அவர் திருந்தாததால் முத்துராணி சில நாட்களுக்கு முன் பெற்றோர் வீடான திருவேட்டநல்லூருக்கு … Continue reading திருநெல்வேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிருடன் எரிப்பு: குழந்தைகளையும் விட்டு வைக்காத கோடூரம்!

ஏர்வாடி காஜா மைதீன் குடும்பத்தாருக்கு ரூ.3 லட்சம் உதவி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை: கடந்த 21.12.2015 அன்று நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த காஜாமைதீன் என்ற வாலிபர் சமூகவிரோத சக்திகளால் மிகக்கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கொலை நடந்த விதமும், சூழ்நிலையும் ஆராய்ந்தால், முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. இதைக் கண்டித்தும், உண்மைக் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும், கொலையானவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக கொடுக்கும்படியும் தமிழக அரசை வலியுறுத்தி இருந்தோம். … Continue reading ஏர்வாடி காஜா மைதீன் குடும்பத்தாருக்கு ரூ.3 லட்சம் உதவி