பாகிஸ்தானில் இருந்து வரக்கூடிய முசுலீம்களுக்காகத்தான் போராடுகிறார்கள்: மாலன்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்தியாவில் நடக்கும் போராட்டங்கள், ‘பாகிஸ்தானிலிருந்து வரக்கூடிய முசுலீம்களுக்காகத்தான் என பத்திரிகையாளரும் மோடி அரசின் ஆதரவாளருமான மாலன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்த போராட்டங்கள் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கலந்துகொண்ட மாலன், ‘இந்தியாவில் இருக்கும் முசுலீம்களுக்கு பிரச்சினை இல்லை. எதிர்கால சந்ததியினருக்கும் பிரச்சினை இல்லை. பாகிஸ்தானில் இருந்துவரக்கூடிய இசுலாமியார்களுக்குத்தான் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. காங்கிரஸ் கட்சி இவங்களுக்கு ஏன் குடியுரிமை கொடுக்கவில்லை என்றுதான் போராடுகிறது’ என்றார் அவர்.

அலிகர் முசுலீம் பல்கலைக்கழக மாணவர் கவுதம் நக்கீரன் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், மாலன் உள்ளிட்டவர்களின் அவதூறுக்கு பதிலளித்துள்ளார்.

அத்னான் சாமிக்கு கிடைத்த குடியுரிமை எனக்கு ஏன் கிடைக்கவில்லை? தஸ்லிமா நஸ்ரின்

பாகிஸ்தானிய பாடகர் அத்னான் சாமிக்கு குடியுரிமை வழங்கியிருக்கிறது இந்திய அரசு. இந்நிலையில் மிக நீண்ட காலமாக குடியுரிமை கேட்டு விண்ணப்பித்திருக்கும் தனக்கு குடியுரிமையை இந்தியா மறுப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வங்க தேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தெரிவித்துள்ளார். தான் மதங்கள் வலியுறுத்தும் அடிப்படை வாதத்தை கேள்வி கேட்பதுதான் இங்கே பிரச்சினையாக இருப்பதாகவு அவர் தெரிவிக்கிறார்.

https://twitter.com/taslimanasreen/status/682958862316486656

https://twitter.com/taslimanasreen/status/682958926296387585