அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு: வரலாற்றில் முதன்முறையாக 38 பேருக்கு தூக்கு!

2008 ஆம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளை விரைந்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மற்ற 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்தியாவின் சட்ட வரலாற்றில் ஒரே வழக்கில் இத்தனை பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை! 2008, ஜூலை 26 அன்று குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அகமதாபாத்தில் அரசு மருத்துவமனை, அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் நடத்தும் மருத்துவமனை, வெவ்வேறு … Continue reading அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு: வரலாற்றில் முதன்முறையாக 38 பேருக்கு தூக்கு!

வயிறு கிழிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் கௌசர் பானுவும் காப்பாற்ற வேண்டியவர்தான் மோடி ஜீ..!

சம்சுதீன் ஹீரா ஆமாம் மோடி ஜீ...! முஸ்லிம் பெண்களின் வாழ்வைச் சூரையாடுவதை நாம் அனுமதிக்க முடியாதுதான். அதெப்படி அந்த உரிமையை முஸ்லிம் ஆண்களுக்கு கொடுக்க முடியும்..? ஃபாசிசம் தலையெடுக்கும்போதெல்லாம் சாத்தான்கள் வேதம் ஓதக் கிளம்பிவிடுவதை நாம் வரலாறு முழுவதும் பார்த்தே வருகிறோம். இதோ இப்போது நீங்கள் திருவாய் மலர்ந்திருக்கிறீர்கள். குஜராத் இனப்படுகொலையில் எஞ்சிய முஸ்லிம்களின் அகதி முகாமை, குழந்தைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை என்று வர்ணித்த உங்கள் வார்த்தைகளில் கூடபெண்கள்மீது நீங்கள் கொண்ட அளப்பறிய மரியாதையை வெளிப்படுத்தினீர் … Continue reading வயிறு கிழிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் கௌசர் பானுவும் காப்பாற்ற வேண்டியவர்தான் மோடி ஜீ..!

புதிய கதைகளைப் புனைகிறது குல்பர்க் சொஸைட்டி தீர்ப்பு: தீஸ்தா செடல்வாட் நேர்காணல்

குல்பர்க் சொஸைட்டி படுகொலை தீர்ப்பு வந்த ஓரிரு நாட்களிலேயே வெளிநாட்டு நிதி பெறுவதற்கான உரிமத்தை இழந்தது மனித உரிமை செயற்பாட்டாளர் தீஸ்தா செடல்வாட்டின் ‘சப்ரங்’ அறக்கட்டளை. இது குறித்து தீஸ்தா தரப்பை அறியும் பொருட்டு டிஎன்ஏ இதழின் யோகேஸ் பவார், தீஸ்தா செடல்வாட்டுடன் செய்த நேர்காணல். அதன் தமிழாக்கம் இங்கே... கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு நீதிமன்றம் வெளியிட்ட குல்பர்க் சொஸைட்டி தீர்ப்பு குறித்து உங்களுடைய கருத்தென்ன? நான் முழு தீர்ப்பையும் வரிக்கு வரி படித்துக்கொண்டிருப்பதால், முழுமையான கருத்தை என்னால் … Continue reading புதிய கதைகளைப் புனைகிறது குல்பர்க் சொஸைட்டி தீர்ப்பு: தீஸ்தா செடல்வாட் நேர்காணல்

“அத்தனை படுகொலைகளையும் 12 பேர் மட்டும்தான் செய்தார்களா?” குல்பர்க் சொஸைட்டி படுகொலை தீர்ப்பு குறித்து ஜாக்கியா ஜஃப்ரி

2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, குஜராத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்த குல்பர்க் சொஸைட்டிக்குள் புகுந்த வன்முறை கும்பல், அந்தக் குடியிருப்பை தீயிட்டு பொசுக்கியது. காங்கிரஸ் எம்பி இஸான் ஜஃப்ரி உள்ளிட்ட 69 பேர் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். கடந்த 14 ஆண்டுகளாக சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கில் இந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. “இந்த படுகொலைகள் திட்டமிட்டு நடத்தப்படவில்லை” என்று அறிவித்தார் நீதிபதி பி. பீ. தேசாய். இந்த … Continue reading “அத்தனை படுகொலைகளையும் 12 பேர் மட்டும்தான் செய்தார்களா?” குல்பர்க் சொஸைட்டி படுகொலை தீர்ப்பு குறித்து ஜாக்கியா ஜஃப்ரி

குல்பர்க் சொசைட்டி படுகொலை: சமரசத்துக்குள்ளாக்கப்பட்ட நீதி

  மா லெ தீப்பொறி குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் 24 பேருக்கு தண்டனை வழங்கியுள்ளது; 36 பேரை விடுவித்துள்ளது. ‘போதுமான சாட்சிகள் இல்லை’ என்று சொல்லி சதி வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பு நீதிக்கான வேட்கையை தீர்க்காது. 2002 பிப்ரவரி 27, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலைகளில், குல்பர்க் சொசைட்டி படுகொலை மிகவும் கொடூரமான ஒன்று. விஸ்வ இந்து பரிசத்தைச் சேர்ந்த சில முக்கிய தலைவர்கள் … Continue reading குல்பர்க் சொசைட்டி படுகொலை: சமரசத்துக்குள்ளாக்கப்பட்ட நீதி

“உதவி கேட்ட இஸான் ஜஃப்ரியிடம்  நீங்கள் இன்னும் சாகவில்லையா என்று கேட்டார் மோடி”

குஜராத் குல்பர்க் சொஸைட்டியில் படுகொலைச் செய்யப்பட்டவர்களில் காங்கிரஸ் தலைவரும் எம்பி யாக இருந்தவருமான இஸான் ஜஃப்ரியும் ஒருவர். இவர் தான் கொல்லப்படுவதற்கு முன் தங்கள் இருப்பிடத்தைச் சூழ்ந்துகொண்ட குண்டர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றும்படி பல அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு தொலைபேசியில் பேசியிருக்கிறார்.  அதில் அப்போது குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த இப்போது இந்தியாவின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியுடனும் பேசியதாக இந்தத் தாக்குதலில் உயிர் பிழைத்த ரூபா பென் தெரிவித்துள்ளார். தனது மகனை கொலை தாக்குதலுக்கு பலிகொடுத்த ரூபா பென், … Continue reading “உதவி கேட்ட இஸான் ஜஃப்ரியிடம்  நீங்கள் இன்னும் சாகவில்லையா என்று கேட்டார் மோடி”

“காந்தி, நேரு, கார்ல் மார்க்ஸ், தஸ்தாவெஸ்கி, ஆஸ்கர் ஒய்ல்டு சாட்சியாக என் அப்பா கொல்லப்பட்டார்”: இஸான் ஜாஃப்ரி கொலையான அந்த நாள்

நிஷ்ரி ஜாஃப்ரி உசைன்  என் அப்பா, இஸான் ஜஃப்ரி கொலை செய்யப்பட்டபோது மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, நாராயண் தேசாய், அன் பிரான்க், கார்ல் மார்க்ஸ், தாஸ்தாவெஸ்கி, ஏ. எம். ஸெய்தி, ஆஸ்கர் ஒய்ல்டு, ஜஃபர் இக்பால் மற்றும் பலர் சாட்சிகளாக இருந்தனர். ஆமாம், 14 வருடங்களுக்கு முன் அவர்கள், புத்தக அலமாரிகளில் இருந்தபடியே அவரும் அவருடைய அண்டை வீட்டில் வாழ்ந்த முஸ்லீம்களும் பிப்ரவரி 28, 2002-ஆம் ஆண்டு பட்டப் பகலில் இந்துத்துவ குண்டர்களால்,  பாஜக அரசு … Continue reading “காந்தி, நேரு, கார்ல் மார்க்ஸ், தஸ்தாவெஸ்கி, ஆஸ்கர் ஒய்ல்டு சாட்சியாக என் அப்பா கொல்லப்பட்டார்”: இஸான் ஜாஃப்ரி கொலையான அந்த நாள்

குஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட உண்மைகளை புத்தகமாக்கிய ரானா அயூப்

தெஹல்கா ஏட்டின் ஆசிரியராக இருந்தவர் ரானா அயூப்,“குஜராத் கோப்புகள் : மறைக்கப் பட்ட விவரங்கள்’’ என்று குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் முஸ்லிம் களுக்கு எதிராக நடைபெற்ற படுகொலைகளின்போது நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்து ஒரு நூல் எழுதி இப்போது வெளியாகி இருக்கிறது. ரானா அயூப், அப்போது குஜராத் அரசாங்கத்தின் உள்துறை செயலாளராக இருந்த அசோக் நாராயணன் என்பவரைப் பேட்டி கண்டு, ரகசியமாக ஒலிப்பதிவுசெய்து அதனை இந்த நூலில் வெளியிட்டிருக்கிறார். அது தொடர்பான அம்சங்கள் வருமாறு: தி ஒயர் இணைய … Continue reading குஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட உண்மைகளை புத்தகமாக்கிய ரானா அயூப்

இஷ்ரத் ஜஹானின் பின்னணியும் பத்ம ஸ்ரீ விருது பெற்ற அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிக்கமின் தந்திரமும்

மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பாக அமெரிக்க சிறையிலிருக்கும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி டேவிட் ஹெட்லியிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஏ சனாப் முன்னிலையில் பெறப்படும் இந்த வாக்குமூலத்தில், வியாழனன்று பெண் பயங்கரவாதிகள் யாருக்காவது மும்பை தாக்குதலில் தொடர்பு இருக்கிறதா? என்று கேட்கப்பட்டு உள்ளது. அதற்கு தனக்கு தெரியாது என்று ஹெட்லி கூறியுள்ளார். ஆனால் அவரை விசாரித்த போலீசாரும் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளும் மூன்று பெண்களின்பெயரைக் கூறி அவர்களில் யாரையாவது சுட்டிக்காட்ட … Continue reading இஷ்ரத் ஜஹானின் பின்னணியும் பத்ம ஸ்ரீ விருது பெற்ற அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிக்கமின் தந்திரமும்

குஜராத்தில் போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் எப்படி பயங்கரவாதி ஆக்கப்பட்டார்?

நரேந்திரமோடி முதல்வராக இருந்தபோது, குஜராத்தில் போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டவர் இஷ்ரத் ஜஹான். இந்நிலையில் இவரை, லஷ்கர்-இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி என்று நிறுவும் வகையில், புதிய வாக்குமூலம் ஒன்று டேவிட் ஹெட்லியிடம் பெறப்பட்டு உள்ளது. மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பாக, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியான டேவிட் ஹெட்லி, கடந்த 3 நாட்களாக அமெரிக்கச் சிறையில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம் அளித்து வருகிறார். மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஏ. சனாப் முன்னிலையில் இந்த வாக்குமூலம் … Continue reading குஜராத்தில் போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் எப்படி பயங்கரவாதி ஆக்கப்பட்டார்?