மரு.கிருஷ்ணசாமி மகளுக்கு மருத்துவ சீட் வாங்கிக்கொடுத்தோம்; சட்டசபையில் சொன்ன ஓ.பி.எஸ்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மரு. கிருஷ்ணசாமி தன் மகளுக்கு மருத்துவ சீட்டை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடன் கேட்டு பெற்றதாக, முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தன்னுடைய முகநூலில் எழுதிய பதிவு வைரலானது.  இதுகுறித்து கிருஷ்ணசாமியிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, ‘அந்தப் பொம்பளையை நான் பார்த்ததே இல்லை’ என பேசினார். இந்நிலையில் மரு. கிருஷ்ணசாமி சட்டசபையில் என்ன பேசினார், தன் மகளுக்கு மருத்துவ சீட் பெற்ற விடயத்தை சட்டசபையில் சொன்ன அதிமுக எம்.எல்.ஏ. யார் என வெளிபடுத்தியுள்ளார் வீடியோ பதிவர் … Continue reading மரு.கிருஷ்ணசாமி மகளுக்கு மருத்துவ சீட் வாங்கிக்கொடுத்தோம்; சட்டசபையில் சொன்ன ஓ.பி.எஸ்.

”தலித் மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்துக்காக போராடுவதே என் நோக்கம்” டாக்டர் கிருஷ்ணசாமியின் ஃபிளாஷ்பேக் பேட்டி

1998-ம் ஆண்டு பத்திரிக்கையாளர் ஷோபா வாரியாருக்கு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க்ருஷ்ணசாமி அளித்த பேட்டியின் ஒரு பகுதியை இங்கே தமிழாக்கம் செய்திருக்கிறோம். நீட் தேர்வுக்கு ஆதரவாக போராட்டம், இட ஒதுக்கீடுக்கு எதிராக போராட்டம், தேவேந்திர குல வேளாளர்களை தலித் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் இன்றைய டாக்டருக்கும், தலித்துகளை ஒன்றுபடுத்தி அரசியல் அதிகாரத்தை நோக்கி நகரவேண்டும் என்ற அன்றைய டாக்டருக்கும் எட்ட முடியாத அளவிலான வித்தியாசங்களைப் பார்க்க முடிகிறது. ஆச்சர்யமாகவும் … Continue reading ”தலித் மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்துக்காக போராடுவதே என் நோக்கம்” டாக்டர் கிருஷ்ணசாமியின் ஃபிளாஷ்பேக் பேட்டி

ஆர்.எஸ்.எஸ்.ஸின் குரலாக மாறியிருக்கிறார் கிருஷ்ணசாமி!

தர்மபுரியில் சாதி வெறியாட்டத்தை எதற்காக இராமதாஸ் உருவாக்கினாரோ, அதே கொள்கைக்காகத்தான் இப்போது கிருஷ்ணசாமி ஆர்.எஸ்.எஸ்.ஸின் குரலாக மாறியிருக்கிறார்.

சாதி சண்டையை தூண்டி விடுகின்றனவா திராவிட கட்சிகள் ? கிருஷ்ணசாமியின் கருத்து உண்மையா ? இல்லையா?…

யாழன் ஆதி (தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் கூறிய இந்துத்துவம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை அனைவரும் விவாதித்தாகிவிட்டது. எனக்கும் அதில் தலைவர் மீது மிகப்பெரிய வருத்தம் தான். ஆனால் ஏன் ஒருவர் கூட அவர் திராவிடத்தின் மீது வைத்த குற்றசாட்டை விவாதத்திற்கு உட்படுத்தவில்லை. 1. திராவிடம் சமூகநீதிக்கு எதிரான திசையில் பயணிக்கிறது என்கிறார். உண்மையா? இல்லையா? 2. இரண்டு திராவிட கட்சிகளின் (திமுக & அதிமுக) தென்மாவட்ட மாவட்ட செயலாளர்கள் தேவர் சாதியாகவும், கொங்கு மண்டல மாவட்ட செயலாளர்கள் … Continue reading சாதி சண்டையை தூண்டி விடுகின்றனவா திராவிட கட்சிகள் ? கிருஷ்ணசாமியின் கருத்து உண்மையா ? இல்லையா?…

பொது சிவில் சட்டம் இந்துகளுக்குள் முதலில் கொண்டு வரவேண்டும்: கிருஷ்ணசாமி

பொது சிவில் சட்டம் இந்துகளுக்குள் முதலில் கொண்டு கொண்டுவர வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். "ஒரு நாட்டுக்கு பொதுவான சிவில் உரிமைச் சட்டம் இருக்க வேண்டுமென்பதை நாம் மறுக்க முடியாது. கண்டிப்பாக பொது சிவில் சட்டம் இருக்க வேண்டும். ஆனால் நாடாக இருக்கக்கூடிய ஒரு நாட்டில் தான் அதை செலுத்த முடியும். நாம் இன்னும் நாடாக உருவாகவில்லை. ஏனெனில் நாம் ஒரு சாதியாக இல்லை; ஒரு மொழியாகவும் இல்லை; ஒரு இனமாகவும் … Continue reading பொது சிவில் சட்டம் இந்துகளுக்குள் முதலில் கொண்டு வரவேண்டும்: கிருஷ்ணசாமி

ஒழிக்கப்பட்ட ‘ஜமீன்’ வார்த்தையைப் புகுத்துவது பட்டியலின மக்களுக்கு துன்பமாகும்: கிருஷ்ணசாமி எதிர்ப்பு

ஒழிக்கப்பட்ட சாதிய வார்த்தைகளை மீண்டும் புகுத்துவது பட்டியலின மக்களுக்கு துன்பமாக முடியும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். ‘ஜமீன் கயத்தாறு’ என தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய தாலுகாவுக்கு பெயர் வைப்பது தொடர்பாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக ஜமீன் கயத்தாறு என்ற பெயரில் புதிய தாலுகாவை உருவாக்கப்போவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜமீன் என்ற வார்த்தை பல ஆண்டுகளுக்கு முன்பே ஒழிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வற்புறுத்தலின் அடிப்படையில் … Continue reading ஒழிக்கப்பட்ட ‘ஜமீன்’ வார்த்தையைப் புகுத்துவது பட்டியலின மக்களுக்கு துன்பமாகும்: கிருஷ்ணசாமி எதிர்ப்பு

’கூட்டணி ஆட்சிக்கு இப்ப சம்மதிக்கலனைன்னா அப்புறம் சம்மதிப்பீங்க’ என்பது கேப்டனின் மெஸேஜ்!

கதிர்வேல் 1. பிரேமலதா பேச்சு சூப்பர்ப். 2. கேப்டன் ஒருவழியா சஸ்பென்சை உடைச்சதுல நிம்மதி. 3. ஸ்டாலினோட ஓவர் கான்ஃபிடன்ஸ் பலூன்ல ஊசி குத்திருக்கார் கேப்டன். 4. கூட்டணி ஆட்சிக்கு இப்ப சம்மதிக்கலைன்னா, தேர்தலுக்கு அப்புறம் சம்மதிக்க போறீங்க என்பது கேப்டன் மெசேஜ். 5.தேமுதிக இதனால் இழக்க எதுவும் இல்லை. 6. திமுக இதனால் அனைத்தையும் இழக்க வாய்ப்பு இருக்கிறது. 7. இன்னும் நேரம் இருக்கிறது திமுக இறங்கிவர. 8. ஈகோ தடுத்தால் அம்மாவுக்கு அதிர்ஷ்டம். 9. … Continue reading ’கூட்டணி ஆட்சிக்கு இப்ப சம்மதிக்கலனைன்னா அப்புறம் சம்மதிப்பீங்க’ என்பது கேப்டனின் மெஸேஜ்!