இரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்!

டி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் நிலையில், காஷ்மீரில் நிலவும் அமைதியின் உண்மையான பொருளை இந்த ஊடகங்கள் பதிவு செய்து வருகின்றன. இரு பிரசவங்கள் … Continue reading இரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்!

இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: மெகபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா

வீட்டுச்சிறையில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரான மெகபூபா முஃப்தி, “இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் இன்று” என இந்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார். மெகபூபா முஃப்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயக முறையில் ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் இன்று வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருப்பது எவ்வளவு பெரிய முரண் ஆக உள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்களின் குரல் ஒடுக்கப்பட்டிருப்பதை இந்த உலகமும் மக்களும் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். https://twitter.com/MehboobaMufti/status/1158308940695797760?s=20 மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை தேர்ந்தெடுத்த ஜம்மு காஷ்மீரில் … Continue reading இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: மெகபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா

தோற்றுப்போன மோடியின் இராணுவ அஸ்திரம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் எதிர்பாராத திருப்பமாக நடந்து முடிந்திருக்கிறது பாக் தீவிரவாத முகாம்களின் மீதான தாக்குதல். அரசு நிறுவனங்களின் இறுக்கத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் மக்கள் அபிநந்தனின் விடுதலையை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்பா, மகன், சிறைபிடிக்கப்பட்டிருக்கும் இந்திய வீரன் போன்ற அவர் மீதான பிம்பங்கள் ஊதப்பட்டதில், மோடி ஊதிப்பெருக்க விரும்பிய “இந்திய பராக்கிரமம்” எனும் பிம்பம் அதன் வசீகரத்தை இழந்து மூலையில் சாத்தப்பட்டதுதான் இந்த சம்பவத்தின் துயரம். இந்த விவகாரத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக நான் கருதுவது, நாற்பது … Continue reading தோற்றுப்போன மோடியின் இராணுவ அஸ்திரம்!

இந்தியா – பாகிஸ்தான் எல்லை எப்படி இருக்கும்?: ஓர் இராணுவ வீரரின் அனுபவம்

சதீஸ் செல்லதுரை எனது முதல் போஸ்டிங் காஷ்மீர் புல்வாமாவில். அது பார்டர் அல்ல.. அங்கே நடந்த ஒரு நிகழ்வு காஷ்மீரிகள் , பயங்கரவாதிகள் என்ற பொதுப்புத்தியிலிருந்து என்னை மாற்றியது. அடுத்து நான் பஞ்சாப் வந்த போது வேலியினை கடந்து ஜீரோ லைன் என நாங்கள் அழைக்கப்படும் இந்தியா பாகிஸ்தானின் எல்லையில் இந்திய விவசாயிகளின் பாதுகாப்பிற்கும் ,போதை பொருட்கள் கடத்தலை தவிர்க்கவும் காவலுக்கு நிற்போம். புதியதாக போன நிலையில் பாகிஸ்தான் நிலத்தில் மூத்திரம் பெய்து பெரும் வெறி ஒன்றை … Continue reading இந்தியா – பாகிஸ்தான் எல்லை எப்படி இருக்கும்?: ஓர் இராணுவ வீரரின் அனுபவம்

தி.நகரும் காஷ்மீரும் (அல்லது)அப்பாவிகளும் தீவிரவாதிகளும்

ஒரு போலீஸ்காரனை நீங்கள் எதிர்த்தோ, சட்டையைப் பிடித்து விட்டாலோ அவ்வளவுதான், மொத்த காவல்துறையும், அரசும் சேர்ந்து உங்களைப் போட்டுத் தள்ள தயாராகும்.

காஷ்மீர் போராட்டக்காரர்களை ஒடுக்க பெல்லட் குண்டுகளுக்குப் பதிலாக மிளகாய் கிரானேட்டு

காஷ்மீரில் இரண்டு மாதங்களாக நடந்துவரும் போராட்டங்களை ஒடுக்க பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி வந்தது இந்திய ராணுவம். பெல்லட் குண்டுகளால் சிறுவர்கள், இளைஞர்களுக்கு பார்வை இழப்பும், கடுமையான காயங்களும் ஏற்பட்டது. இதுகுறித்து தொடர்ந்து எழுந்த கண்டனங்களின் விளைவாக தற்போது, பெல்லட் குண்டுகளுக்குப் பதிலாக PAVA ஷெல்ஸ் எனப்படும் மிளகாய்(காரம்) கிரானேட்டுகளைப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது உள்துறை அமைச்சகம். ஆனால் இரண்டாம் நிலை ஆயுதமாக பெல்லட் குண்டுகளின் பயன்பாடும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரத்தன்மையுடைய கிரானேட்டுகளைப் பயன்படுத்தும்போது, போராட்டக்காரர்களால் செயல்பட முடியாது. … Continue reading காஷ்மீர் போராட்டக்காரர்களை ஒடுக்க பெல்லட் குண்டுகளுக்குப் பதிலாக மிளகாய் கிரானேட்டு

“உங்களை கைவிட்டதற்காக எங்களை மன்னியுங்கள் மார்க்”: முகநூல் தணிக்கைக்கு காஷ்மீரிகளின் மாறுபட்ட கண்டனம்

காஷ்மீரில் 15 நாட்களுக்கும் மேலாக நடந்துவரும் போராட்டங்களால் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். பல நூறு பேர் பெல்லட் எனப்படும் குண்டுகளால் பார்வையிழப்பை சந்தித்துள்ளனர். போராட்டங்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்க பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துகிறது இந்திய ராணுவம். இதில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் குழந்தைகளும் இளைஞர்களுமாகவே உள்ளனர். இந்நிலையில் காஷ்மீர் பிரச்சினையில் இந்திய அரசும் ஊடகங்களும் பிரபலங்களும் பாராமுகமாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் ‘நெவர் ஃபர்கெட் பாகிஸ்தான்’ என்கிற மனித உரிமை குழு தனது முகநூல் பக்கத்தில் உருக்கான … Continue reading “உங்களை கைவிட்டதற்காக எங்களை மன்னியுங்கள் மார்க்”: முகநூல் தணிக்கைக்கு காஷ்மீரிகளின் மாறுபட்ட கண்டனம்

பெல்லட் குண்டுகளால் துளைக்கப்பட்ட காஷ்மீரத்து சிறுமி; நம்பிக்கை ஓய்வதில்லை!

சமீபத்தில் காஷ்மீரில் நடந்துவரும் போராட்டத்தை ஒடுக்க இந்திய ராணுவம் பெல்லட் ரக குண்டுகளைப் பயன்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட இந்த குண்டுகளை அனாயசமாகப் பயன்படுத்துகிறது இந்திய ராணுவம். இந்த குண்டுகளால் துளைக்கப்பட்ட பல சிறுவர்கள் பார்வையிழந்துள்ளனர். அதிகமாக பாதிக்கப்படுவதும் சிறுவர்கள் தான் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து வயதான ஸோராவின் உடலில் 12 பெல்லட் (சிறிய) குண்டுகள் உள்ளன. ஸ்ரீநகரில் உள்ள  SMHS மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இவர், தன் பால்ய வயதுக்கே உரிய எழுந்து … Continue reading பெல்லட் குண்டுகளால் துளைக்கப்பட்ட காஷ்மீரத்து சிறுமி; நம்பிக்கை ஓய்வதில்லை!

காஷ்மீர்: இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவால்

பேரா. ஜி.கே. ராமசாமி 'காஷ்மீரிகள் பாகிஸ்தானின் கைக்கூலிகள், மத அடிப்படைவாதிகள், ஆயுதமேந்திய பயங்கரவாதிகள், இந்தியாவில் கலவரங்களுக்கு வித்திட்டு வருபவர்கள், பல்லாயிரக்கணக்கான இந்துக்களைக் கொன்றவர்கள், இந்திய ஒற்றுமையைச் சீர்குலைப்பவர்கள்'' இதுதான் ஊடகங்களின் ஒத்துழைப்புடன் இந்திய அரசு காஷ்மீர் மக்களைப் பற்றி ஏற்படுத்தியுள்ள பிம்பம். வரலாறும் அங்குள்ள உண்மை நிலையும் மேற்கூறிய கருத்துகளுடன் ஒத்துப்போகவில்லை என்பதுதான் சங்கடமான உண்மை. காஷ்மீர் பிரச்சினையைப் புரிந்துகொள்ளக் காஷ்மீரிகளின் வரலாற்றைச் சுருக்கமாகவாவது தெரிந்துகொள்வது அவசியம். காஷ்மீரில் நடப்பது தேச விடுதலைப் போராட்டம்.இது கடந்த 150 … Continue reading காஷ்மீர்: இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவால்

காஷ்மீரும் கந்தமாலும்

ஜோஸ்வா ஐசக் ஆசாத் ஜூலை 8ஆம் தேதி மாலை காஷ்மீரில் விடுதலைப் போராளி புர்ஹான் வானி கொல்லப்பட்ட அதே நேரத்தில் ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டம் துமுதிபந்த் கோட்டத்தில் இருக்கும் குமுதுமகா என்னும் கிராமத்தில் 5 தலித், ஆதிவாசிகள் மத்திய மாநில படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 2 வயது குழந்தை உட்பட 1 ஆண், 3 பெண்கள் அடங்குவர். பெரும்பாலானோர் அருகிலுள்ள நகரத்திற்கு சென்று தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணத்தை வங்கியிலிருந்து … Continue reading காஷ்மீரும் கந்தமாலும்

ஷாஹித் புர்ஹான் வானி: கொல்லப்படுவரெல்லாம் தீவிரவாதி அல்ல

ஜோஷ்வா ஐசக் ஆசாத்     நேற்றிலிருந்து இந்திய அரசாலும், ராணுவத்தாலும், ஊடகங்களாலும் மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடப்பட்டு வருவது புர்ஹான் வானி என்னும் 21 வயது இளைஞனின் மரணமாகும். நமக்கெல்லாம் தீவிரவாத இயக்கமாக அறியப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் இளம் தளபதிகளுள் ஒருவர் இவர். நேற்று நடைபெற்ற இந்திய ராணுவத்துடனான சண்டையில் தனது இரண்டு தோழர்களுடன் கொல்லப்பட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் தெற்கில் உள்ள புலவாமா மாவட்டத்தில் ட்ரால் நகரத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் முசாபர் வானியின் … Continue reading ஷாஹித் புர்ஹான் வானி: கொல்லப்படுவரெல்லாம் தீவிரவாதி அல்ல

தேசத்துக்கு எதிராக கோஷமிட்ட இந்திய பெண்கள் ; சில போராட்ட படங்கள்…

மும்பையில் ஆகஸ்ட் 15, 2010-ஆம் ஆண்டு, தேவதாசி பெண்கள் அரை நிர்வாணத்துடன் தங்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 2000 வழங்கக் கேட்டுப் போராடினர்.  அப்போது இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை அவர்கள் எழுப்பினர். இந்து மதத்தில் இந்து கடவுள்களுக்கு பெண் குழந்தைகளை ‘நேர்ந்துவிடுவது’ சமீபம் வரை வழக்கத்தில் இருந்த ஒன்று. இவர்கள் கடவுளுக்கு பணிவிடை செய்பவர்கள் என்ற பொருளில் தேவதாசி என அழைக்கப்பட்டனர். (Photo by Nagesh Ohal/India Today Group/Getty Images)   காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜூலை … Continue reading தேசத்துக்கு எதிராக கோஷமிட்ட இந்திய பெண்கள் ; சில போராட்ட படங்கள்…

#MustRead: கைதான ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாசார்யாவிடம் போலீஸ் நடத்திய விசாரணை எப்படி இருந்திருக்கும்?

டெல்லி போலீசால் கைது செய்யப்பட்ட் ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர் பன் பட்டாசார்யா ஆகியோரின் போலீஸ் விசாரணை எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கற்பனை உரையாடல். எழுதியவர்: எழுத்தாளர் ஆரிஃப் அயாஸ் பார்ரே; தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்   போலீஸ்: ஜேன்யூவில் நீங்கள் ஏன் ஒரு தேசவிரோத ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தீர்கள்? அனீர்பன்: பெனடிக்ட் ஆண்டர்சனின் பார்வையில் தேசம் என்பது கற்பனை செய்யப்பட்ட சமூகம். தங்களை அந்த சமூகத்தின் அங்கமாக நம்பும் மக்கள் சமூகரீதியாகக் கட்டுவதே … Continue reading #MustRead: கைதான ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாசார்யாவிடம் போலீஸ் நடத்திய விசாரணை எப்படி இருந்திருக்கும்?

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?

JNU மாணவர் சங்கத்தின் தலைவர் கண்ணையா குமாரைத் தேசவிரோத வழக்கின்கீழ் கைது செய்யப்பட்டதையொட்டி இந்திய ஊடகங்களில் மையமாக JNU வந்துள்ளது. காவிகளின் பாசிச ஊடகங்கள், JNUவின் பண்பாட்டினைத் திரித்துகூறி வருகின்றன. விவாதங்களுக்கும் மாற்று கருத்துவேறுபாட்டிற்கும் இடமளிக்கும் JNU வளாகத்தினை இந்துத்துவ கூடாரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. JNUவினைச் சுற்றி தடுப்புகளை உருவாக்கியுள்ள தில்லிக் காவல்துறை, முழுவளாகத்தினையும் தனது கட்டுபாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளது. பல்வேறு மாணவ சங்கங்களில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் மீது FIR போடப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர். … Continue reading ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?