மேக்கே தாட்டு அணை கட்டுவதற்கு ஒப்புதல்: ஒட்டுமொத்த காவிரிச்சமவெளியின் உருக்குலைவு

ஆறுக்கும் மக்களுக்குமான உறவை, அணைகளை மேலாண்மை செய்கிற அதிகாரி வர்க்கத்தின் ஒற்றை தீர்மானங்கள் கிழித்துப் போட்டது! தற்போது நீதிமன்றங்கள் அதை செய்து வருகிறது.

”உழவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்க, முதலமைச்சர் தனது பதவியை தக்க வைக்க போராடிக்கொண்டிருக்கிறார்”

”உழவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்க, முதலமைச்சர் தனது பதவியை தக்க வைக்க போராடிக்கொண்டிருக்கிறார்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசின் செயலற்ற தன்மையை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகுக்கே உணவு படைத்து வாழ வைக்கும் கடவுளராக போற்றப்படும் விவசாயிகள் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தும் இறக்கும் கொடுமை தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய முதலமைச்சரும், அமைச்சர்களும் அதை செய்யாமல், தங்கள் … Continue reading ”உழவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்க, முதலமைச்சர் தனது பதவியை தக்க வைக்க போராடிக்கொண்டிருக்கிறார்”

நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் தற்கொலைக் களமாக மாறிக்கொண்டிருக்கிறது: ஸ்டாலின்

“அதிமுக ஆட்சியில் நடக்கும் விவசாயிகள் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலை செய்தி கேட்டு ஒரு காலத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் இப்படி தற்கொலைக் களமாக மாறக் கூடிய அவலமான நிலை இந்த அதிமுக ஆட்சியில் உருவாகியிருக்கிறது” என கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சை கீழ்த்திருப்பந்துருத்தி ராஜேஷ்கண்ணா, திருவாருர் கோட்டூர் அருகேயுள்ள ஆதிச்சியபுரம் அழகசேன், திருத்துறைப்பூண்டி கோவிந்தராஜ் ஆகிய … Continue reading நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் தற்கொலைக் களமாக மாறிக்கொண்டிருக்கிறது: ஸ்டாலின்

தேயிலைத் தோட்டங்களின் பெருக்கமும் வறண்ட காவிரியும்: சூழலியலாளர் நக்கீரன்

நக்கீரன் ஒரு காவிரிப்படுகை மாவட்டக்காரனாக இது எனக்கொரு துயரமான ஆண்டு. என் வீட்டையொட்டியே வெறும் நான்கடியில் தொடங்கி கண்ணுக்கெட்டிய வரை வயல்கள்தாம். உழவும், நடவுப்பாட்டும், கொக்குகள் கூட்டமுமாக இருந்திருக்க வேண்டிய பசுமை வயல்கள் பழுதடைந்து கிடக்கின்றன. என் வாழ்நாளில் இவ்வளவு வறட்சியாக இவ்வயல்களை நான் கண்டதில்லை. கடந்த 2012க்கு பிறகு குறுவைச் சாகுபடி மறுக்கப்பட்ட வயல்களே இன்னமும் வலியை தந்துக்கொண்டிருக்கையில், சம்பாவும் மறுக்கப்பட்ட இவ்வாண்டு மனதைக் குலைக்கிறது. பத்தடிக்குக் கீழ் தண்ணீர் கிடைத்து வந்த ஊரில் இவ்வாண்டு … Continue reading தேயிலைத் தோட்டங்களின் பெருக்கமும் வறண்ட காவிரியும்: சூழலியலாளர் நக்கீரன்

உப்பிட்டவர்கள் தமிழ்நாட்டு மக்கள்; அவர்களுக்கு உதவுவது என் கடமை : கன்னடரின் நெகிழ்ச்சி….

காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடகாவில் நடந்த கலவரத்தின் போது பெங்களூருவில் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தமிழ்நாட்டின் கே.பி.என் நிறுவனத்தை சேர்ந்த 52 பேருந்துகள் தீக்கிரையாகின. இச்சம்பவம் காரணமாக, அங்கிருந்த  கேபிஎன் நிறுவனத்தின் 31 ஓட்டுனர்கள் அதிர்ச்சியுடனும், உயிர் பயத்துடனும் தவித்து கொண்டிருந்தனர்.  அபாகயரமான அந்த வேளையில், கர்நாடகாவை சேர்ந்த சாமராஜ்பேட் பகுதியில் “சிவா டிராவல்ஸ்” என்ற  நிறுவனம் நடத்தி வரும் சிவண்ணா என்பவர், இந்த ஓட்டுனர்களை தன்னுடைய லாரிகளில், பத்திரமாக  ஓசூர் அழைத்து சென்றார். பற்றி எரிந்த … Continue reading உப்பிட்டவர்கள் தமிழ்நாட்டு மக்கள்; அவர்களுக்கு உதவுவது என் கடமை : கன்னடரின் நெகிழ்ச்சி….

காவிரி விற்பனைக்கு; பின்னணியில் கர்நாடக, தமிழக கார்ப்பொரேட் அரசியல்வாதிகள்

திருமுருகன் காந்தி பெங்களூரில் 13 லட்சம் லிட்டர் தண்ணீர் தினந்தோறும் கோக், பெப்சி ஆலைகளுக்கு கொடுக்கப்படுகிறது. 4000 மெகாவாட் மின்சார உற்பத்தி நிலையம் மைசூரில் அமைக்கப்பட இருப்பதற்கு 7 டி.எம்.சி தண்ணீர் காவேரியில் இருந்து திட்டமிடப்பட்டிருக்கிறது. கர்நாடகம் தண்ணீரை தனியார் மயமாக்கிய முன்னணி மாநிலம். பெங்களூரில் தண்ணீர் தனியார் மயத்திற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு வெகுநாட்களாகிறது, மைசூர் தனியார் தண்ணீர் திட்டம் வெகுமக்களால் எதிர்க்கப்பட்டு நிறுத்தப்பட்டு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டொரு வருடத்திற்கு முன் அமெரிக்க தண்ணீர் விநியோக நிறுவனங்களின் சொந்தக்காரர்கள், அதிகாரிகள் … Continue reading காவிரி விற்பனைக்கு; பின்னணியில் கர்நாடக, தமிழக கார்ப்பொரேட் அரசியல்வாதிகள்

காவேரிப் பிரச்சினையில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பை அடுத்து தமிழக அரசு என்ன நிலை எடுக்கப் போகிறது?

  காவேரிப் பிரச்சினையில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பை அடுத்து தமிழக அரசு என்ன நிலை எடுக்கப் போகிறது? என கேட்டுள்ளார் திமுக தலைவர் மு. கருணாநிதி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்திற்குத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தருவது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதி மன்றத்திலே முறையிட்டு, அதன் பிறகே தண்ணீரைப் பெற வேண்டிய நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டு வருகிறது. … Continue reading காவேரிப் பிரச்சினையில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பை அடுத்து தமிழக அரசு என்ன நிலை எடுக்கப் போகிறது?

காவிரி உச்சநீதிமன்ற தீர்ப்பு: மாண்டியாவில் முழு அடைப்பு, விவசாயி தற்கொலை முயற்சி, பேருந்துகள் நிறுத்தம்

தமிழக அரசு தாக்கல் செய்திருந்த காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரியில் நாள்தோறும் 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தின் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. பதட்டமான சூழல் நிலவுவதால் தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் தமிழக அரசு பேருந்துகள் அனைத்தும் ஒசூர் வரை மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. * கர்நாடகாவிலிருந்து தமிழகம் வரும் பேருந்துகள் வழக்கம் போல் … Continue reading காவிரி உச்சநீதிமன்ற தீர்ப்பு: மாண்டியாவில் முழு அடைப்பு, விவசாயி தற்கொலை முயற்சி, பேருந்துகள் நிறுத்தம்

கும்பகோண மகாமகம்: மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு துப்புரவுத் தொழிலாளர்களை வற்புறுத்துவதாகக் குற்றச்சாட்டு

கும்பகோண மகாமகம் கோலாகலமாக நடந்துவரும் நிலையில் துப்புரவுப் பணியாளர்கள் கடும் பணிச்சுமையை சுமப்பதாக ஆதித்தமிழர் பேரவை கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து ஆதித்தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மற்றவர்கள் மாற்றமும் ஏற்றமும் பெற்றிட.. துப்புரவுத் தொழிலாளர்கள் நாற்றத்தைச் சுமந்து சாக வேண்டுமா? தமிழக அரசே! கும்பகோண மகாமக விழாவில் குவியும், குப்பைக் கழிவுகளுடன் கூடிய மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு துப்புரவுத் தொழிலாளர்களை வற்புறுத்தி ஊர் ஊராய் அழைத்துச் வந்து கொடுமைப் படுத்துவதை உடனே நிறுத்து! உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள … Continue reading கும்பகோண மகாமகம்: மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு துப்புரவுத் தொழிலாளர்களை வற்புறுத்துவதாகக் குற்றச்சாட்டு