போராட்டமும் எதார்த்தமும்

ஜி. கார்ல் மார்க்ஸ் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை பாரதீய ஜனதா கட்சி தட்டிக் கழித்திருப்பது தமிழகம் முழுவதும் கட்சிகளைக் கடந்து எல்லா மக்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது. இங்கு தன்னெழுச்சியாக நடக்கத் தொடங்கியிருக்கும் போராட்டங்கள், வெறும் காவிரிக்கானது மட்டும் அல்ல. காவிரி என்பது அதிருப்திகளின் பிரதான காரணமாக இருக்கிறது அவ்வளவே. கொஞ்சம் கொஞ்சமாக சேகரமாகிக்கொண்டே இருக்கும் அதிருப்தி அதன் கொதிநிலையை எட்டுவதன் வெளிப்பாடே இப்போது நடக்கும் போராட்டங்கள். காவிரி விவகாரத்தில், காங்கிரஸ், பிஜேபி, ஜனதாதளம் என எந்த … Continue reading போராட்டமும் எதார்த்தமும்

ஐபிஎல் போட்டிகளை புறக்கணியுங்கள்: வைரலாகும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் பதிவு

ஒரே ஒரு போட்டியை ஸ்டேடியத்துக்குச் சென்று காணாமல் இந்த வாழ்வுப் போராட்டத்தை வலுப்படுத்துவோம்!

கம்பீரமாக பதவி விலகி தேர்தலைச் சந்தியுங்கள் முதல்வரே: போராட்டக்களத்திலிருந்து ஒரு கடிதம்!

ராஜினாமா செய்யமுடியாது தற்கொலை மிரட்டல் விட முடியும். ஏன் என்று கேட்டால் தெருத்தெருவாக அழைந்து வெற்றி பெற்றது ராஜினாமா செய்வதற்கா என்று கேட்கிறார் ஒரு அமைச்சர்.

இந்தியா மட்டும்தான் தமிழர்களுக்கு துரோகம் செய்கிறதா?

இப்போது நம்முடைய முதன்மையான கோரிக்கை முழக்கமெல்லாம், தமிழக உரிமைகளை பாதுகாக்க முடியாத அதிமுக அரசே பதவிவிலகு என்பதாகதான் இருக்கவேண்டும்.

“தமிழ்நாடு இன்னொரு பாகிஸ்தான் அல்ல”: சமூக ஊடகங்களில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு

காவிரி நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண, அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. திங்கள்கிழமை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்னரே அமைக்க முடியும்; இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க … Continue reading “தமிழ்நாடு இன்னொரு பாகிஸ்தான் அல்ல”: சமூக ஊடகங்களில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு

காவிரி மேலாண்மை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: அரசியல் கட்சிகள் வரவேற்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும், காவிரி விவகாரத்தை விசாரணை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், காவிரி நதிநீர் விவகாரத்தில் மேற்பர்வை குழுவை தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்கள் எதிர்ப்பதால் காவிரி மேலாண்மை வாரியமே முடிவு செய்யும். எனவே, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் … Continue reading காவிரி மேலாண்மை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: அரசியல் கட்சிகள் வரவேற்பு

”6 கோடி பேர் சிறைக்கு சென்றாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூ‌ட தமிழகத்திற்கு தரமுடியாது”: வாட்டாள் நாகராஜ்

கடந்த 5–ம் தேதி காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாட்டுக்கு செப்டம்பர் 16–ந் தேதி வரை வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று உத்தரவிட்டது. இதன் காரணமாக கர்நாடகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் திருத்தம் கோரும் மனுவை கர்நாடக அரசு கடந்த 11–ந் தேதி தாக்கல் செய்தது. … Continue reading ”6 கோடி பேர் சிறைக்கு சென்றாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூ‌ட தமிழகத்திற்கு தரமுடியாது”: வாட்டாள் நாகராஜ்

“தமிழக ஆளுனர் பதவி ரப்பர் ஸ்டாம்பாக மாறிவிட்டது”

“தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுனர் உரையுடன் இன்று தொடங்கியுள்ளது. தமிழக அரசால் தயாரித்து தரப்படும் உரையை ஆளுனர் படிப்பது தான் வழக்கம். ஆனால், இம்முறை கடந்த காலங்களில் ஜெயலலிதா பேசிய விஷயங்களை ஆளுனர் அப்படியே படித்திருக்கிறார். தமிழகத்தில் ஆளுனர் பதவி இரப்பர் ஸ்டாம்பாக மாறிவிட்டதற்கு இது உதாரணம்” என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து அறிவிப்புகளும் அம்மா மூலமாக மட்டுமே வெளியிடப்பட … Continue reading “தமிழக ஆளுனர் பதவி ரப்பர் ஸ்டாம்பாக மாறிவிட்டது”