ரொம்பப் பேசுறீங்க, சமஸ்! : காவிரி உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா? கட்டுரைக்கு எழுத்தாளர் டி. தருமராஜ் எதிர்வினை

Dharmaraj Thamburaj தி இந்துவில் சமஸ் எழுதுகிற கட்டுரைகளை தொடர்ந்து படித்து விடுவேன்.  அதற்கு முக்கியக் காரணம் அவருடைய எழுத்திற்கு பின்னால் இருக்கும் அலைச்சல்.  திரியாமல் கட்டுரை எழுத முடியாது என்று அவரும் நம்புகிறார் என்றே ஒவ்வொரு முறையும் அவரை நினைத்துக் கொள்வேன். இதனால், அவருடைய கட்டுரைகளில் ஒரு அமைதி இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.  இந்த அமைதி, அலைந்து திரிந்து நிறைய மனிதர்களை சந்திப்பதால் ஏற்படும் அமைதி. ஆனால், சமீபகாலமாக, சமஸ் இந்த அமைதியை தனது எழுத்துகளில் … Continue reading ரொம்பப் பேசுறீங்க, சமஸ்! : காவிரி உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா? கட்டுரைக்கு எழுத்தாளர் டி. தருமராஜ் எதிர்வினை

காவிரி வாரியம் : கர்நாடகத்தின் குரலாக  ஒலித்து தமிழகத்திற்கு துரோகம் செய்வதா?

“காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை  நாளைக்கும் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்த நிலையில், வாரியத்தை அமைக்க முடியாது என்றும், அதுதொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியிருக்கிறது. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இம்முடிவு கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: < div>பல ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரி பிரச்சினை குறித்து 1990 … Continue reading காவிரி வாரியம் : கர்நாடகத்தின் குரலாக  ஒலித்து தமிழகத்திற்கு துரோகம் செய்வதா?

கூட்டாட்சி முறையின் மீதே அவநம்பிக்கை ஏற்படுத்தும்: சிபிஎம் கண்டனம்

காவிரி மேலாண்மைவாரியம் ஏற்படுத்த மறுப்பது கூட்டாட்சி முறையின் மீதே அவநம்பிக்கை ஏற்படுத்தும் என மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை: காவிரி நதிநீர்ப் பங்கீடு பிரச்சனையில், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைத்திட, உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு நாளையுடன் (04.09.2016) முடிவடைகிறது. இப்பிரச்சனையில், ஏற்கனவே காவிரி நடுவர்மன்றம் கொடுத்த தீர்ப்பைத்தான் உச்ச நீதிமன்றம் அமலாக்கச் சொல்லியுள்ளது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்காகவும், பின் அந்தத் தீர்ப்பை … Continue reading கூட்டாட்சி முறையின் மீதே அவநம்பிக்கை ஏற்படுத்தும்: சிபிஎம் கண்டனம்

அரசியல் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கிய மோடி அரசு: வைகோ கண்டனம்

காவிரி பிரச்சினையில் அரசியல் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கியுள்ளதாக மோடி அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “காவிரி நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண, அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செப்டம்பர் 30 ஆம் தேதி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இன்று (3.10.2016) மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக … Continue reading அரசியல் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கிய மோடி அரசு: வைகோ கண்டனம்

“தமிழ்நாடு இன்னொரு பாகிஸ்தான் அல்ல”: சமூக ஊடகங்களில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு

காவிரி நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண, அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. திங்கள்கிழமை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்னரே அமைக்க முடியும்; இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க … Continue reading “தமிழ்நாடு இன்னொரு பாகிஸ்தான் அல்ல”: சமூக ஊடகங்களில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு

’பாக்யஸ்ரீ மட்டுமல்ல, கேபிஎன் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள், இன்னாள் பணியாளர்களும் காரணம்!’

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கன்னட அமைப்புகள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதில், பெங்களூருவில் உள்ள கேபிஎன் தனியார் பேருந்து முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 42 பேருந்துகள் கடந்த 12ஆம் தேதி எரிக்கப்பட்டது. இந்தவிவகாரம் தொடர்பாக சிஐடி விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பாக பாக்யஸ்ரீ என்ற 22 வயது பெண் உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  பாக்யஸ்ரீ கன்னட அமைப்பின் … Continue reading ’பாக்யஸ்ரீ மட்டுமல்ல, கேபிஎன் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள், இன்னாள் பணியாளர்களும் காரணம்!’

உப்பிட்டவர்கள் தமிழ்நாட்டு மக்கள்; அவர்களுக்கு உதவுவது என் கடமை : கன்னடரின் நெகிழ்ச்சி….

காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடகாவில் நடந்த கலவரத்தின் போது பெங்களூருவில் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தமிழ்நாட்டின் கே.பி.என் நிறுவனத்தை சேர்ந்த 52 பேருந்துகள் தீக்கிரையாகின. இச்சம்பவம் காரணமாக, அங்கிருந்த  கேபிஎன் நிறுவனத்தின் 31 ஓட்டுனர்கள் அதிர்ச்சியுடனும், உயிர் பயத்துடனும் தவித்து கொண்டிருந்தனர்.  அபாகயரமான அந்த வேளையில், கர்நாடகாவை சேர்ந்த சாமராஜ்பேட் பகுதியில் “சிவா டிராவல்ஸ்” என்ற  நிறுவனம் நடத்தி வரும் சிவண்ணா என்பவர், இந்த ஓட்டுனர்களை தன்னுடைய லாரிகளில், பத்திரமாக  ஓசூர் அழைத்து சென்றார். பற்றி எரிந்த … Continue reading உப்பிட்டவர்கள் தமிழ்நாட்டு மக்கள்; அவர்களுக்கு உதவுவது என் கடமை : கன்னடரின் நெகிழ்ச்சி….

கழன்று விழும் இந்துமதவெறியர்களின் முகமூடிகள்

சு. இரவிக்குமார் "காவி"கள் உருவாக்கும் காவிரிச்சிக்கலின் பின்புலத்தில் இன்னுமொரு மதவெறி நிகழ்ச்சி நிரலும் உள்ளது. தற்காலத்தின் முதல்வர்களில் அவர் காங்கிரஸ் முதலமைச்சராய் இருந்த போதிலும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக உறுதியான நிலைபாடு எடுப்பதோடு, மூடநம்பிக்கைகளுக்கும், மூடப்பழக்க வழக்கங்களுக்கும் எதிராக உருப்படியான சட்டங்களையும் இயற்றியவர் சித்தராமய்யா. அதுதான் சித்தராமய்யாவைப் பதவியிலிருந்து அகற்றிவிட்டு, அங்கே பாஜக ஆட்சியை அமைப்பதன் மூலம், இத்தகைய முற்போக்கான சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யவோ அல்லது இல்லாமலே ஆக்கவோ செய்ய வேண்டும் என்பதும் பாஜகவின் உள்ளக் கிடக்கைகளில் … Continue reading கழன்று விழும் இந்துமதவெறியர்களின் முகமூடிகள்

கர்நாடகாவிடம் இருந்து நாம் கற்க வேண்டியவை என்னென்ன?

வில்லவன் இராமதாஸ் கர்னாடகாவில் தமிழக வாகனங்கள் மற்றும் ஓட்டுனர்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு இருவகையான எதிர்வினைகளை சமூக ஊடகங்களில் பார்க்க முடிகிறது. அதாவது பெங்களூர் பாதுகாப்பாக இருக்கிறது எனும் feel good பதிவுகள் அல்லது இந்த கன்னடர்களே இப்படித்தான் எனும் பதிவுகள் வெளியாகின்றன. இரண்டும் உண்மை இல்லை எனும் பதிவுகளும் இருக்கின்றன அவையும் தெளிவான கர்நாடக சூழலை காட்டுவதாக இல்லாமல் காவிரியின் வரலாறும் கர்நாடகாவின் வன்முறைகளுக்கான பிண்ணனி பற்றிய புரிதல் அற்றவைகளாக உள்ளன. இதற்கான தீர்வுகள் என … Continue reading கர்நாடகாவிடம் இருந்து நாம் கற்க வேண்டியவை என்னென்ன?

காவிகளின் கையில் சிக்கியிருக்கும் அரசியல் ஆயுதம் ‘காவிரி’!

அறிவழகன் கைவல்யம் கன்னடர்களுக்கும், தமிழர்களுக்கும் வாழ்வியல் பண்புகளில் பெரிய அளவில் வேறுபாடுகள் ஏதுமில்லை, குறிப்பாக ஊரகப் பகுதிகளில் தொல் குடிகளாக வசிக்கும் கன்னட உழைக்கும் மக்கள், விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னும் பெரிய அளவில் அரசியல் விழிப்புணர்வு இல்லாதவர்கள், அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர் மற்றும் கல்வி வேலை வாய்ப்புகளில் மிகவும் பின்தங்கி குரல் கொடுக்கவும் இயலாமல் இருப்பவர்கள். அங்கிருக்கும் ஆதிக்க சாதிகளான ஒக்கலிகர் (கௌடர்கள்) மற்றும் லிங்காயத்துகள் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை தங்கள் … Continue reading காவிகளின் கையில் சிக்கியிருக்கும் அரசியல் ஆயுதம் ‘காவிரி’!

முழு அடைப்புப் போராட்டம்; கட்சிகள் ஆதரவு; தனியார் பள்ளிகள், பெட்ரோல் பங்குகள் மூடல்

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்களின் சார்பில் தமிழகத்தில் செப்டம்பர் 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு லாரி உரிமையாளர்களின் சம்மேளனம், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளின் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த முழு கடையடைப்புப் போராட்டத்துக்குத் திமுகவின் … Continue reading முழு அடைப்புப் போராட்டம்; கட்சிகள் ஆதரவு; தனியார் பள்ளிகள், பெட்ரோல் பங்குகள் மூடல்

நிர்வாணமாய் தெரியும் ஊடகங்களின் போலி தர்மமும் போலி நியாயமும்

இக்பால் அகமது கடந்த ஏப்ரல் 18, 19 இரு நாட்களும் பெங்களூரில் லட்சக்கணக்கான உழைக்கும் வர்க்கம் வீறுகொண்ட ஆவேசத்துடன் சாலைகளில் திரண்டது; ஆகப்பெரும்பான்மையோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது; அது தன்னெழுச்சியான போராட்டம். மத்திய மோடி அரசு ’தொழிலாளர்களின் சேமிப்பான ஈபிஎஃப்-ஐ அவர்கள் ஓய்வுபெறும்போது அதாவது 58 வயது நிறைந்த பின்னரே மீட்டு எடுக்க முடியும்’ என்று திடீர் ஆணை பிறப்பித்தது; பெங்களூரின் லட்சக்கணக்கான ஆயத்த ஆடைத்தொழிலாளர்கள்தான் கோபாவேசம் கொண்டு வீதிகளில் திரண்டு இரண்டு நாட்கள் பெங்களூரின் அசைவை … Continue reading நிர்வாணமாய் தெரியும் ஊடகங்களின் போலி தர்மமும் போலி நியாயமும்

பற்றி எரிந்த தமிழக பேருந்துகள்; ஓட்டுனர்களை பத்திரமாக கரை சேர்த்த கன்னடர்:நேசங்களில் தழைக்கும் மனிதம்….

காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடகாவில் நடந்த கலவரத்தின் போது பெங்களூருவில் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தமிழ்நாட்டின் கே.பி.என் நிறுவனத்தை சேர்ந்த 52 பேருந்துகள் தீக்கிரையாகின. பேருந்துகள் எரிக்கப்பட்ட பதற்றமான சூழல் நிலவியபோதும் , அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக, பேருந்தின் ஓட்டுனர்கள் 31 பேரும் அங்கிருந்த ராஜராஜேஸ்வரி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததுடன், பாதுகாப்பும் கோரியுள்ளனர். கலவர பயம் காரணமாக இரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே அமர்ந்திருந்த, சேலம், தருமபுரி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த தமிழக ஓட்டுனர்கள், … Continue reading பற்றி எரிந்த தமிழக பேருந்துகள்; ஓட்டுனர்களை பத்திரமாக கரை சேர்த்த கன்னடர்:நேசங்களில் தழைக்கும் மனிதம்….

பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை: காவல்துறை ஆணையர் விளக்கம்

காவிரி நீர் பங்கீடு பிரச்சினையில் தமிழக இளைஞர் பெங்களூருவில் தாக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் கன்னடர்களுக்கு எதிரான தாக்குதல் ஆங்காங்கே நடைபெறத் தொடங்கியுள்ளது. திங்கள்கிழமை அதிகாலை சென்னை மயிலாப்பூரில் உள்ள உட்லாண்ட்ஸ் உணவகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட 7 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நாம் தமிழர் கட்சியினர், தமிழர் தேசிய முன்னையினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது. இதனிடையே, காவிரியில் இருந்து கடந்த … Continue reading பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை: காவல்துறை ஆணையர் விளக்கம்

காவிரி நீர் பிரச்சினை: அப்பாவிகளை அடிப்பது எப்படி தீர்வாகும்?

அருண் பகத் கன்னட இனவெறி மடையர்கள் செய்த முட்டாள்தனத்துக்கு எதிர்வினையாக சம்பந்தமே இல்லாத, யாரோ ஒரு கன்னடனை அடிப்பது என்ன நியாயம் ? இது எப்படி தீர்வைத் தரும் ? இரு தரப்பிலும் இன்னமும் பகைமை தீ பற்றி எரிவதை மட்டுமே இத்தகைய நடவடிக்கைகள் செய்யும். சாதி , மத , இன வெறி மண்டைக்கேறி விட்டால் காரண காரியங்களை ஆராய முடியாது. சரியானத் தீர்வைத் தேட முடியாது. கர்னாடகாவிற்கு மத்திய படைகள் விரைந்து , அங்கு … Continue reading காவிரி நீர் பிரச்சினை: அப்பாவிகளை அடிப்பது எப்படி தீர்வாகும்?

பெங்களூரு பற்றியெரியவும் இல்லை; தமிழர்கள் பரிதவித்தும் போகவில்லை: வா. மணிகண்டன்

வா. மணிகண்டன் இரண்டு மூன்று தினங்களாக நிறையப் பேர் விசாரித்துவிட்டார்கள். ‘உங்களுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லையே?’ என்று. உண்மையில் பெங்களூரில் பிரச்சினையே இல்லை. வியாழக்கிழமை இரவு எப்பொழுதும் போலத்தான் கிளம்பி ஊருக்குச் சென்றோம். TN 42 என்ற பதிவு எண் கொண்ட மகிழ்வுந்து. சற்று பயமாகத்தான் இருந்தது. யாராவது கல்லை விட்டு எறிவார்களோ என்று தயக்கத்தில்தான் ஓட்டினேன். அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. கர்நாடகக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு சில இளைஞர்கள் அத்திபள்ளியில் நின்று கொண்டிருந்தார்கள். திக்கென்றிருந்தது. அவர்கள் … Continue reading பெங்களூரு பற்றியெரியவும் இல்லை; தமிழர்கள் பரிதவித்தும் போகவில்லை: வா. மணிகண்டன்