காஷ்மீர்: இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவால்

பேரா. ஜி.கே. ராமசாமி 'காஷ்மீரிகள் பாகிஸ்தானின் கைக்கூலிகள், மத அடிப்படைவாதிகள், ஆயுதமேந்திய பயங்கரவாதிகள், இந்தியாவில் கலவரங்களுக்கு வித்திட்டு வருபவர்கள், பல்லாயிரக்கணக்கான இந்துக்களைக் கொன்றவர்கள், இந்திய ஒற்றுமையைச் சீர்குலைப்பவர்கள்'' இதுதான் ஊடகங்களின் ஒத்துழைப்புடன் இந்திய அரசு காஷ்மீர் மக்களைப் பற்றி ஏற்படுத்தியுள்ள பிம்பம். வரலாறும் அங்குள்ள உண்மை நிலையும் மேற்கூறிய கருத்துகளுடன் ஒத்துப்போகவில்லை என்பதுதான் சங்கடமான உண்மை. காஷ்மீர் பிரச்சினையைப் புரிந்துகொள்ளக் காஷ்மீரிகளின் வரலாற்றைச் சுருக்கமாகவாவது தெரிந்துகொள்வது அவசியம். காஷ்மீரில் நடப்பது தேச விடுதலைப் போராட்டம்.இது கடந்த 150 … Continue reading காஷ்மீர்: இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவால்

#புத்தகம்2016: சர்ச்சையை ஏற்படுத்திய புத்தகங்கள்!

புத்தக திருவிழாவை ஒட்டி இந்த ஆண்டு வெளியான சர்ச்சைக்குரிய நூல்கள் இங்கே... 1. ஒரு கூர்வாளின் நிழலில் இந்த ஆண்டு வெளியான புத்தகங்களிலேயே அதிகம் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கும் நூல். விடுதலை புலிகள் அமைப்பின் மகளிரணி தலைவர்களுள் ஒருவரான தமிழினி எழுதிய தன்வரலாறு இந்த நூல். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  தமிழினி நோய்வாய்ப்பட்டு இறந்த பிறகு, அவரது விருப்பத்தின் பேரில் அவருடைய கணவர் ஜெயன் தேவா வெளியிட்டிருக்கிறார்.  இந்த நூல் தமிழினி எழுதியதே அல்ல என்று … Continue reading #புத்தகம்2016: சர்ச்சையை ஏற்படுத்திய புத்தகங்கள்!

சிம்புவின் ‘பீப்’ பாடலை முன்வைத்து காலச்சுவடு பேசும் கருத்து சுதந்திரம்: ஆதலால் இனி பெண்கள் காதை பொத்திக் கொண்டு அலைவோமாக!

விலாசினி ரமணி என் வீட்டுக்கருகில் ஒரு தறுதலை இருந்தான். எப்பொழுதெல்லாம் வீட்டை விட்டு இறங்குகிறேனோ அப்போதெல்லாம் சரியாக அவன் வண்டியைக் கிளப்பி தொடர்ந்து ஒலியெழுப்பிக்கொண்டேயிருப்பான். அவன் வீட்டு வாசலிலிருந்துதான். தெருவில் எங்காவது என்னைக் கடக்க நேர்ந்தாலும் விறுக்கென்று வண்டியை அதி வேகத்தில் உறுமவிட்டுச் செல்வான். எங்கள் வீடுகளுக்குப் பொதுவாக துவைத்த துணியைக் காய வைக்கக் கட்டப்பட்டிருக்கும் கொடியை (அது நான் கட்டியதில்லையென்றாலும்) சமயம் கிடைக்கும் போதெல்லாம் அறுத்தெறிவான். என் துணிகள் அதில் காயாத போதும். வீட்டில் தொலைபேசி … Continue reading சிம்புவின் ‘பீப்’ பாடலை முன்வைத்து காலச்சுவடு பேசும் கருத்து சுதந்திரம்: ஆதலால் இனி பெண்கள் காதை பொத்திக் கொண்டு அலைவோமாக!

“திருமாவளவன் பெண்ணிழிவு செய்தாரா?”: மீண்டும் ஒரு விளக்கம்!

சமீபத்தில் திருமாவளவனின் வீடியோ பேச்சு குறித்து காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் சுந்தரம்  முகநூலில் (டிசம்பர் 26) ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் திருமாவளவனின் பேச்சு சாதியத்தை வலியுறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.  அதற்கு கவிஞர் யாழன் ஆதி எதிர்வினை ஆற்றியிருந்தார். அந்தப் பதிவு இங்கே... இந்நிலையில் எழுத்தாளர் பிரேம் இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். “தோழர் திருமா பெண் முதன்மை உணராதவரா? பெண்ணியத்தைத் தன் அறிவுமுறையில் இணைத்துக்கொள்ளாதவரா? பெரியார் ஒரு ஃபாசிஸ்ட் என்று நிருவிவிட்டார்கள், பிறகு தலைவர் திருமா பெண்ணடிமைத்தனத்தை ஆதரிப்பவர் என்று நிறுவிவிட்டால் தமிழரசியல், … Continue reading “திருமாவளவன் பெண்ணிழிவு செய்தாரா?”: மீண்டும் ஒரு விளக்கம்!

ஜாதி வெறியைத் தூண்டுகிறாரா திருமாவளவன்? காலச்சுவடு கண்ணன் vs யாழன் ஆதி

சமீபத்தில் திருமாவளவனின் வீடியோ பேச்சு குறித்து காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் சுந்தரம்  முகநூலில் (டிசம்பர் 26) ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் திருமாவளவனின் பேச்சு சாதியத்தை வலியுறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.  மேலும் அந்தப் பதிவில், “திருமாவளவனின் இந்த உரை உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது. வசவு என்று கருதப்படும் சொற்களை அவர் பயன்படுத்துவதோ ஒடுக்கும் சாதிகளை சீண்டுவதோ என் அதிர்ச்சிக்கு காரணம் அல்ல. இவ்வுரையின் வழி பெண்கள் பற்றிய அவர் மன எண்ணங்கள் பல வெளியே சிந்தி விட்டன. கலப்புத் திருமணம் … Continue reading ஜாதி வெறியைத் தூண்டுகிறாரா திருமாவளவன்? காலச்சுவடு கண்ணன் vs யாழன் ஆதி