உக்ரைனுடன் ரஷ்யா போர்: கார்ல் மார்க்ஸின் பெயரை நீக்கிய புளோரிடா பல்கலை

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உக்ரைனுடன் ரஷ்யா போரில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான மேற்குலக நாடுகளும், மேற்கின் ஆதரவு நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை அறிவித்தும் வருகின்றன. பொருளாதார தடைகள் மட்டுமல்லாது ரஷ்ய விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு எனத் தொடரும் இந்தத் தடைகளின் பட்டியலில், தற்போது ஜெர்மனிக்காரான் கார்ல் மார்க்ஸும் இணைந்துள்ளார். கடந்த வாரம், புளோரிடா பல்கலைக்கழகம், தனது மாணவர்கள் படிப்பறை ஒன்றுக்கு இட்ட பெயரான 'கார்ல் … Continue reading உக்ரைனுடன் ரஷ்யா போர்: கார்ல் மார்க்ஸின் பெயரை நீக்கிய புளோரிடா பல்கலை

வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும் – 3

ப. ஜெயசீலன் https://www.youtube.com/watch?v=0BCB3bBttbo&t=853s இறுதியாக. வசுமித்ரா கண்களில் அறிவுமிளிர அந்த பேட்டியில் அம்பேத்கர் மார்க்ஸையும் புத்தரையும் ஒப்பிட்டதே மிக பெரிய தவறென்று சொன்னதோடு புத்தர் ஒழுக்கவியலை முன்வைத்த ஒரு அறவாதி என்றும் மார்க்ஸ் ஒரு பொருளாதாரவாதி என்றும் ஒரு உன்னதமான உண்மையை நமக்கு அருளியதோடு அம்பேத்கர் புத்தரையும் நபிகளையும்தான் ஒப்பிட முடியுமே தவிர புத்தரை மார்க்ஸோடு ஒப்பிட முடியாது என்றார். இங்கு ஒரு கற்பனை கதை/ நிஜ உதாரணம் சொல்ல விழைகிறேன். இளையராஜா சில வருடங்களுக்கு முன்பு … Continue reading வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும் – 3

மார்க்ஸை எரிப்பதா, புதைப்பதா என்று சண்டையிடும் அறிஞர்கள்! (அண்ணல் மன்னிப்பாராக)

பிரேம் Muppala Ranganayakamma எழுதிய “For the solution of the "Caste" question, Buddha is not enough, Ambedkar is not enough either, Marx is a must“ என்ற நூலின் சில கட்டுரைகளை ஆங்கிலத்தில் படித்து மிகவும் நொந்து போய் இருக்கிறேன். பாவம் அவருக்கு மேற்கோள் எவை ஒரு நூலாசிரியரின் வாக்குகள் எவை என்பதுகூடத் தெரியாமல் அம்பேத்கரின் வரிகளில் குழம்பி வாசிப்பவர்களையும் குழப்பும் பக்கங்களை நிரப்பி வைத்திருக்கிறார். அந்த நூலைப்படிக்கும் ஒரு … Continue reading மார்க்ஸை எரிப்பதா, புதைப்பதா என்று சண்டையிடும் அறிஞர்கள்! (அண்ணல் மன்னிப்பாராக)

வேல்முருகனும், சரத்குமாரும் தேடிய ‘சுயமரியாதை’ அதிமுகவில் கிடைத்ததா?

ஜி. கார்ல் மார்க்ஸ் 'தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின்' வேல்முருகனுக்கு அதிமுக கூட்டணியில் இடம் ஒதுக்காமல் கைவிடப்பட்டதைக் கிண்டலடித்து  சமூக ஊடகங்களில் நிறைய பதிவுகள். தமிழ் ஹிந்துவில் கூட அவர் குறித்து செய்தி வந்திருக்கிறது. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவர்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டார்கள். எங்களிடம் கேட்டிருந்தால் நாங்கள் கோரிய வேட்பாளர்கள் எண்ணிக்கையைக் கூட குறைத்திருப்போம். முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம், அதைத் தராமல் பட்டியலை வெளியிட்டுவிட்டார்கள் என்று கண்ணீர் விட்டிருக்கிறார் வேல்முருகன். சரத்குமார் கூட இப்படியான ஒரு மனநிலையில்தான் … Continue reading வேல்முருகனும், சரத்குமாரும் தேடிய ‘சுயமரியாதை’ அதிமுகவில் கிடைத்ததா?

தமிழர் பண்பாடு என்கிற பெயரில் காலூன்றப் பார்க்கும் பாஜக!

Thamizh Thamizh ஜல்லிக்கட்டு பற்றி பெரியார் திடலில் பேசிய எனது உரையின் விரிவான சுருக்கம்! அரங்கத்தில் திரண்டிருக்கும் அனைவருக்கும் வணக்கம். வேலை விசயமாக சென்னை பணி மாற்றல் ஆனாலும் அதில் இன்னொரு தனிப்பட்ட விருப்பமும் இருந்தது. அது தந்தை பெரியாரின் திடலுக்கு அடிக்கடி செல்லலாம், கருத்துக்களை கேட்கலாம்...அய்யா வாழ்ந்த இடத்தை அவ்வப்போது பார்க்கலாம் என்பதுதான். அப்படிப்பட்ட பெரியார் திடலில் எனக்கு மேடை அமைத்து கொடுத்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி. தோழர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள். முதலில் இந்த அரங்கத்தில் பேசுவது … Continue reading தமிழர் பண்பாடு என்கிற பெயரில் காலூன்றப் பார்க்கும் பாஜக!