சாதிய சனாதன சக்திகளோடு சமரசம் செய்து கொள்ளாத சின்னக்குத்தூசி

பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி பிறந்த நாளை ஒட்டி, அவர் நினைவாக நக்கீரன் கோபால் தொடங்கிய சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளையின், அச்சு ஊடகம் சார்ந்த சிறந்த கட்டுரையாளர்களுக்கான & வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கு விழா சென்னையில் நடைபெற்றது. வாழ்நாள் சாதனையாளருக்கான் விருதை பதிப்பாளர் வைகறைவாணன் பாராட்டு, பட்டயம், ரூபாய் ஒரு லட்சம் தொகையுடன் பெற்றுக் கொண்டார். ஜீவசுந்தரி பாலன், ஹெச்.பீர்முகமது, பேரா.என்.சீனிவாசன் ஆகியோர் சிறந்த கட்டுரைக்கான  தலா 10,000 ரூபாய் விருதைப் பெற்றுக் கொண்டனர். சின்னக்குத்தூசியின் எளிமை, கொள்கை … Continue reading சாதிய சனாதன சக்திகளோடு சமரசம் செய்து கொள்ளாத சின்னக்குத்தூசி

புனித திரு உரு’ பிம்பங்கள்!

அ. மார்க்ஸ் நமது அரசியல் தலைவர்கள் பற்றிய 'திரு உரு'பிம்பங்களைக் கட்டமைப்பது, அப்பழுக்கற்ற iconic images உருவாக்குவது முதலியன ஆபத்தானது என அருள் எழிலன் கூறியுள்ளது முக்கியமான ஒன்று. காமராசர் பற்றிக் கிட்டத் தட்ட ஒரு குட்டிக் கடவுள் என்கிற அளவு பிம்ப உருவாக்கம் நடதுள்ளதை அவர் குறிப்பாகக் கூறியுள்ளார் காமராசர் குறைகளே இல்லாதவர் என்பதல்ல. ஆனால் காமராசர், கக்கன் முதலானோருக்கு இத்தகைய பிம்பம் உருவானது எப்படி என்பது பற்றியும் நாம் ஆராய வெண்டும். இன்றைய தலைவர்களுடன் … Continue reading புனித திரு உரு’ பிம்பங்கள்!

‘பேச்சுத்திறன்கொண்டோர் எல்லாம் தலைவர்களா?’

எழிலரசன் தமிழகத்தின் பொதுப்புத்தியில் ‘பேச்சாளர்கள்’ எல்லாம் ஏதோ பெரிய தலைவர்கள் என்பதுபோல் பதிந்திருக்கிறது. அதனால்தான், பேச்சாளர்களுக்கு போகும் இடமெல்லாம் அதீத மரியாதை தரப்படுகிறது. ஆனால், பேச்சுத்திறன் கொண்டுள்ளோர் எல்லாம் தலைமைத்திறனையும் கொண்டிருப்பார்களா என்பது கேள்விக்குறியே! தமிழகத்தில் பலத் தலைவர்கள் சிறந்த பேச்சாளர்களாக விளங்கியிருக்கிறார்கள். பெரியார், அண்ணா ஆகியோர் சிறந்த உதாரணம். பேச்சாற்றல் பெருமளவு இல்லாதிருந்தும் தலைமைப்பண்புக் காரணமாக தலைவர்களாக இருந்தவர்களும் உண்டு. உதாரணம் காமராஜர். ஆனால், பேச்சுத்திறனை தலைமைத்திறனோடு போட்டு குழப்பிக்கொண்டு, காலப்போக்கில் ஒலிபெருக்கி முன்னால் நின்று … Continue reading ‘பேச்சுத்திறன்கொண்டோர் எல்லாம் தலைவர்களா?’