2024 தேர்தல்: காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்? பிரசாந்த் கிஷோர் யோசனை

ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், கட்சியை மறு சீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளம், பாஜக, திரினாமுல் காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு கட்சிகளின் தேர்தல் வெற்றிகளுக்கு பிரச்சார வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் காங்கிரஸ் எப்படிப்பட்ட … Continue reading 2024 தேர்தல்: காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்? பிரசாந்த் கிஷோர் யோசனை

அன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்?

அன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தரப்புகளின் முரணியக்கமாக காண்பவன். அந்த வகையில் அண்ணா ஈ.வி.கே.சம்பத் ஆகியோருக்கு அடுத்து திராவிட இயக்கத்தின் ஆகச்சிறந்த நாடாளுமன்றவாதி நீங்கள்தான் என்பதில் இப்போதும் பெரிய … Continue reading அன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்?

எக்சிட் போல் முடிவுகள் உண்மையா? உள்நோக்கமுடையதா?

கா. ஐயநாதன் இந்திய நாடாளுமன்றத்தின் 17வது மக்களவையைத் தேர்ந்தெடுக்கும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக் கிழமை முடிவடைந்த சில நிமிடங்களிலேயே “மீண்டும் மோடி ஆட்சியே அமையப் போகிறது” என்று கூறும் வாக்குக் கணிப்பு முடிவுகள் (Exit Poll Results) தொலைக் காட்சிகளில் வெளியாகியுள்ளன. முன் திட்டமிடப்பட்டுபோல் எல்லா தொலைக்காட்சிகளின் வாக்குக் கணிப்பு முடிவுகளும் மோடியின் தலைமையில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசு அமையும் என்று கூறியுள்ளன. பாஜக தலைமையிலான தேச ஜனநாயகக் கூட்டணி … Continue reading எக்சிட் போல் முடிவுகள் உண்மையா? உள்நோக்கமுடையதா?

பாசிசத்தை ஒழிக்க வந்த பாசிஸ்டுகள்: வாசுகி பாஸ்கர்

வாசுகி பாஸ்கர் நடந்து முடிந்த தேர்தல் நேரத்தில், "பாசிச பாஜக வந்துடும்" என்று சொல்லிக்கொண்டே பல பேர் பாசிஸ்டுகளாக மாறியிருந்தார்கள். இதை தேர்தல் நேரத்திலேயே எழுதியிருக்கலாம், ஒரு பாதகமுமில்லை. ஆனால் தங்களின் முகநூல் பதிவுகள் மூலம் தான் மக்கள் திரண்டுபோய் வாக்களிப்பதாக நம்பிக்கொண்டிருந்த பலர் ஏற்படுத்திய கருத்துருவாக்கத்திற்கு நானும் மதிப்பளித்து, இதை தேர்தல் முடிவடைந்ததும் எழுதுவது என்று திட்டமிட்டுக்கொண்டேன். அம்பேத்கரை அம்பேத்கரின் எழுத்துக்கள் வாயிலாகவே புரிந்துக்கொள்ள நாம் முயன்றோமானால், ஜனநாயகம் / அதிகாரம், இவையிரண்டையுமே அவர் எப்படி … Continue reading பாசிசத்தை ஒழிக்க வந்த பாசிஸ்டுகள்: வாசுகி பாஸ்கர்

கர்நாடக தேர்தல்: வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்பு!

கர்நாடக தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்தியா டுடே தொலைக்காட்சியும் அக்ஸிஸ் இந்தியாவும் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. 70, 574 பேரிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவுகள்: காங்கிரஸ் 106 -118 இடங்களை பிடிக்க வாய்ப்பு பாஜக 72- 92 இடங்களைப் பெற வாய்ப்பு ஜனதா தளம்(ம) - 22 -30 இடங்கள் பெறலாம் மற்றவர்கள் - 1- 4 இடங்கள். மொத்தம் 224 தொகுதிகள் உள்ள கர்நாடக சட்ட … Continue reading கர்நாடக தேர்தல்: வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்பு!

போராட்டமும் எதார்த்தமும்

ஜி. கார்ல் மார்க்ஸ் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை பாரதீய ஜனதா கட்சி தட்டிக் கழித்திருப்பது தமிழகம் முழுவதும் கட்சிகளைக் கடந்து எல்லா மக்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது. இங்கு தன்னெழுச்சியாக நடக்கத் தொடங்கியிருக்கும் போராட்டங்கள், வெறும் காவிரிக்கானது மட்டும் அல்ல. காவிரி என்பது அதிருப்திகளின் பிரதான காரணமாக இருக்கிறது அவ்வளவே. கொஞ்சம் கொஞ்சமாக சேகரமாகிக்கொண்டே இருக்கும் அதிருப்தி அதன் கொதிநிலையை எட்டுவதன் வெளிப்பாடே இப்போது நடக்கும் போராட்டங்கள். காவிரி விவகாரத்தில், காங்கிரஸ், பிஜேபி, ஜனதாதளம் என எந்த … Continue reading போராட்டமும் எதார்த்தமும்

இடதுசாரிகளின் மேட்டிமைத்தனத்தனம்  மூர்க்க தேசியத்திற்கு ஆயுதங்களைத் தருகிறது: இராமச்சந்திர குஹா

வரலாற்று ஆய்வாளர் இராமச்சந்திர குஹா, கர்நாடகம் உருவான நவம்பர் ஒன்றாம் நாளன்று புதுதில்லியில் நீதிபதி சுனந்தா பண்டாரே (Sunanda Bhandare )  நினைவு சொற்பொழிவு ஆற்றினார். தற்கால அரசியலை மையப்படுத்திய இந்த உரை பல செய்திகளை புதிய கோணத்தில் வைக்கிறது.அரசியலமைப்பு நாட்டுப்பற்று (constitutional patriotism) , மூர்க்க தேசியவாதம், பாகிஸ்தானால் இந்தியாவில் அடிப்படைவாதம்,  யூதர்களை போல முஸ்லிம்கள், பன்மைத்தன்மை போன்ற  கருத்துக்களை மையப்படுத்தி இவரது உரை அமைந்து இருக்கிறது. ஆங்கில ஊடகங்களில் பரவலாக இந்த உரை கவனம் … Continue reading இடதுசாரிகளின் மேட்டிமைத்தனத்தனம்  மூர்க்க தேசியத்திற்கு ஆயுதங்களைத் தருகிறது: இராமச்சந்திர குஹா

பாஜகவின் வெற்றிக்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சிகளா?!

மாதவராஜ் பாரதீய ஜனதா அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு பெற்றதற்கு, கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் நிலைபாடுகள்தான் காரணம் என்னும் கருத்து இந்த நேரத்தில் முன்வைக்கப்படுகிறது. சென்ற பாராளுமன்றத் தேர்தலில், ‘பாஜக, காங்கிரஸ் இரண்டையும் நிராகரிப்போம்’ என்று சி.பி.எம் எடுத்த அரசியல் நிலைபாடு விமர்சிக்கப்படுகிறது. காங்கிரஸை ஆதரித்து பாஜகவை வீழ்த்துவதே இப்போதைய நோக்கம் என பரப்பப்படுகிறது. சென்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு அடிப்படையான காரணமே காங்கிரஸ் ஆட்சியின் அட்டூழிய நடவடிக்கைகளும், அநியாயமான ஊழல் குற்றச்சாட்டுகளும்தான். மக்களின் கடும் … Continue reading பாஜகவின் வெற்றிக்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சிகளா?!

தொண்டர்களின் கருத்தை மதிக்காத சோனியாவின் அறிவிப்பு; போராடிய தொண்டர் மரணத்தின் பிடியில்…

அண்மையில் நடந்து முடிந்த புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெற்றது.  புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பாக யார் முதல்வராவார்கள் என்கிற எதிர்பார்க்க எல்லா மட்டத்திலும் இருந்தது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமியை முதல்வராக அறிவித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் போலீஸார் தடியடியில் ஈடுபட்டனர். பல தொண்டர்கள் காயமடைந்தனர். விஜயன் என்பவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் … Continue reading தொண்டர்களின் கருத்தை மதிக்காத சோனியாவின் அறிவிப்பு; போராடிய தொண்டர் மரணத்தின் பிடியில்…

சோனியாவுக்கு எதிராக கருப்புகொடி!

 சென்னை தீவுத்திடலில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார்.  புதுச்சேரியில் நடைபெறும் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் சோனியா, அதைத் தொடர்ந்து மாலை தீவுத் திடலில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். திமுக தலைவர் கருணாநிதியும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார். சோனியாவின் வருகையைக் கண்டித்து சென்னை உழைப்பாளர் சிலை முன்பு மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். https://twitter.com/mahajournalist/status/728175593615970304

காங்கிரஸ் வேட்பாளர் (முழு) பட்டியல் 2016!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் 1. திருத்தணி – ஏ.ஜி.சிதம்பரம் 2. அம்பத்தூர் – ஹசன் மவுலானா 3. ராயபுரம் – ஆர்.மனோகர் 4. சோளிங்கர் – ஏ.எம்.முனிரத்னம் 5. ஓசூர் – கே. கோபிநாத் 6. கலசப்பாக்கம் – செங்கம் ஜி.குமார் 7. ஆத்தூர் (தனி) – எஸ்.கே.அர்த்தநாரி 8. சங்ககிரி – டி.கே.ராஜேஸ்வரன் 9. நாமக்கல் – டாக்டர் ஆர்.செழியன் 10. தாராபுரம் (தனி) – வி.எஸ்.காளிமுத்து 11. … Continue reading காங்கிரஸ் வேட்பாளர் (முழு) பட்டியல் 2016!

விரும்பியது கிடைக்கவில்லை; வேண்டாதது கிடைத்திருக்கிறது: ப. சிதம்பரம்

புதுக்கோட்டையில் மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கான  சொந்த அலுவலகக் கட்டடத்திறந்து விழாவில் கலந்து கொண்டு பேசினார் காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் பேசியது, “காங்கிரஸுக்கு இந்த முறை 41 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளது. அதிலும் விரும்பிய தொகுதிகள் கிடைக்கவில்லை. வேண்டாதது கிடைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளதையே இது காட்டுகிறது. கிடைத்த தொகுதிகளிலும் விரும்பக்கூடிய வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களா என்பது சந்தேகமே. கூட்டிக் கழித்துப் பார்த்தால் மகிழ்ச்சி இல்லைதான். ஆனால் கடமை இருக்கிறது” என்று … Continue reading விரும்பியது கிடைக்கவில்லை; வேண்டாதது கிடைத்திருக்கிறது: ப. சிதம்பரம்

கட்சியின் கொள்கைக்கு எதிராகத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்துவிட்டதாக சொல்கிறார்களே, உண்மை என்ன?

திரிணாமுல் ஆட்சியைத் தூக்கி எறிந்து வங்கத்தைக் காப்பாற்றுவதே இப்போதைய மக்கள் முழக்கம் என்றும், அதை ஏற்றுக் குரல் எழுப்பும் மக்கள் அனைவரும் மம்தாவின் அரசை அதிகாரத்திலிருந்து கீழே இறக்குவதென்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா கூறுகிறார். திரிணாமுல் ஆட்சியின் வீழ்ச்சியை உறுதிசெய்கிற மக்களின் எழுச்சியைத்தான் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒவ்வொரு நாளும் காணமுடிகிறது. மம்தாவின் ஆட்சியில் ஜனநாயகத்தின் அனைத்து மாண்புகளும் மீறப்பட்டு வன்முறையும் … Continue reading கட்சியின் கொள்கைக்கு எதிராகத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்துவிட்டதாக சொல்கிறார்களே, உண்மை என்ன?

”இளம் தலைமுறை தலைவர்களுக்கு மிகப் பெரிய துரோகம் இழைத்துவிட்டார் ஈ.வி. கே. எஸ்” : ஜோதிமணி

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு அரவக் குறிச்சி தொகுதி ஒதுக்கப்படாததால் அதிருப்தி அடைந்த ஜோதிமணி, தமிழக காங்கிரஸ் தலைமை தன்னைப் போன்ற இளம் தலைமுறை தலைவர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், “இந்தியா முழுக்க படித்த இளைஞர்கள், வசதி வாய்ப்பில்லாத அடித்தட்டு இளைஞர்கள் தலைமைப் பதவிகளுக்கு வர வேண்டும் என்பதே திரு. ராகுல்ஜியின் இலட்சியம். அதை நிறைவேற்றும் விதமாகத்தான் கடந்த தேர்தல்களில் நான் உட்பட பல் இளைஞர்கள் தேர்தலில் போட்டியிட்டோம்! ஆனால், அந்த செயல்திட்டத்தை உடைக்கும் … Continue reading ”இளம் தலைமுறை தலைவர்களுக்கு மிகப் பெரிய துரோகம் இழைத்துவிட்டார் ஈ.வி. கே. எஸ்” : ஜோதிமணி

கேட்ட தொகுதியை திமுக தரவில்லை: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி சுயேச்சையாக போட்டியிட முடிவு

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இன்று 41 இடங்கள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டன. அதில் அரவக் குறிச்சி தொகுதி இடம்பெறவில்லை. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி, தேர்தல் தேதி அறிவித்தவுடன் அரவக் குறிச்சி தொகுதியில் தேர்தல் பணிகளைத் தொடங்கினார். தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட அவருக்கு திமுக அரவக் குறிச்சியை ஒதுக்கும் என்றே சொல்லப்பட்டது.  ஆனால், அறிவிப்பில் அந்தத் தொகுதி ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து தனது முகநூலில் ஜோதிமணி, “அரவக்குறிச்சி தொகுதியில் மட்டுமே போட்டியிடும் எனது முடிவில் எந்த மாற்றமும் … Continue reading கேட்ட தொகுதியை திமுக தரவில்லை: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி சுயேச்சையாக போட்டியிட முடிவு

மீண்டும் பேராசிரியராக பஞ்சாப் பல்கலைக்குச் செல்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் மீண்டும் பேராசிரியராக பணியாற்ற உள்ளார். மன்மோகன்சிங்கை பஞ்சாப் பல்கலைக் கழக துணைவேந்தர் அருண்குமார் குரோவர் சந்தித்து பேசினார். அப்போது பல்கலை.யில் பேராசிரியராக பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை மன்மோகன் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து பல்கலை. பகுதி நேர பேராசிரியராக பணியாற்ற உள்ளார். முன்னதாக மன்மோகன்சிங் இதே பல்கலை.யில் முதுநிலை பேராசிரியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சர்ச்சையில் குஷ்பூ: கட்டான் சாய் குடித்த படங்களைப் பகிர்ந்து மதுஅருந்துவதாக சமூக ஊடகங்களில் அவதூறு!

சமூக ஊடகங்களில் மீண்டும் சர்ச்சையாகியிருக்கிறார் குஷ்பூ. குஷ்பூ மது அருந்துவதாகச் சொல்லி சில புகைப்படங்களில் பரவலாக சமூக ஊடகங்களில் பகிரப் பட்டுக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸாருடன் சேர்ந்து குஷ்பூ மது ஒழிக்கும் விதம் இதுதான் என சொல்லி இந்தப் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றி குஷ்பூ விளக்கம் அளித்திருக்கிறார். கேரளா சென்றிருந்த போது அங்கு, நண்பர்களுடன் புகழ்பெற்ற கட்டன் சாய் குடித்தேன். அந்தப் படங்களை என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன். அதைத்தான் இப்போது எல்லோரும் பகிர்கிறார்கள் என அவர் … Continue reading மீண்டும் சர்ச்சையில் குஷ்பூ: கட்டான் சாய் குடித்த படங்களைப் பகிர்ந்து மதுஅருந்துவதாக சமூக ஊடகங்களில் அவதூறு!

இங்கிலாந்து மக்களின் கூட்டுமனசாட்சிக்காக தூக்கிலிடப்பட்ட பகத்சிங்,சுகதேவ்,ராஜ்குரு: தோலுரிக்கும் அம்பேத்கரின் தலையங்கம்!

  (பகத்சிங்,சுகதேவ்,ராஜ்குரு தூக்கிலிடப்பட்டதைப்பற்றி பாபாசாகேப் மராத்தி இதழான ஜனதாவில் எழுதியது ஜனதா 13 ஏப்ரல், 1931) பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் தூக்கிலப்பட்டுவிட்டார்கள். சாண்டர்ஸ் என்னும் ஆங்கிலேய காவல்துறை அதிகாரியையும், சர்மன் சிங் என்னும் சீக்கிய சிப்பாயையும் கொன்றதாக அவர்கள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல், பனாரஸ் காவல்துறை கண்காணிப்பாலரை கொலை செய்ய முயற்சித்தது, அசெம்ப்ளியில் குண்டு வீசியது, மௌலிமியா கிராமத்தில் ஒரு வீட்டை கொள்ளையடித்தது உட்பட மூன்று, நான்கு குற்றச்சாட்டுகளும் அவர்கள் மேல் சுமத்தப்பட்டன. … Continue reading இங்கிலாந்து மக்களின் கூட்டுமனசாட்சிக்காக தூக்கிலிடப்பட்ட பகத்சிங்,சுகதேவ்,ராஜ்குரு: தோலுரிக்கும் அம்பேத்கரின் தலையங்கம்!

குஷ்பூவுக்கு எதிராக களமிறங்கும் கி. வீரலட்சுமி!

நடைபெற இருக்கிற சட்டப் பேரவைத் தேர்தலில் குஷ்புவுக்கு எதிராக களமிறங்கப் போவதாக தெரிவித்திருக்கிறார் மிழர் முன்னேற்ற படையின் நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி. தன்னுடைய நிலைத் தகவலில், “காங்கிரஸ் கட்சியை சார்ந்த நடிகை குஷ்புவை எதிர்த்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் உங்கள் அன்பு சகோதரி போட்டியிடுகிறேன் உறவுகளே” என  தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி  தெரிவித்துள்ளார்.

பாட்டன்களை மாற்றிக்கொண்டிருக்கும் சீமானின் கொள்கை பற்றி ஓர் ஆய்வு!

மதுரை சொக்கன் சீமான் இயக்கிய `பாஞ்சாலக்குறிச்சி’ படத்தில் நகைச்சுவை காட்சி ஒன்று உண்டு. முழு போதையில் வீட்டுக்கு வரும் வடிவேலு ஒரு ஓலைப் பாயை விரித்து படுத்துக் கொள்ள முயல்வார். அது எப்படி விரித்தாலும் சுருட்டிக்கொண்டே வரும். கடைசியில் பாயை விரித்து வைத்துக் கொண்டு அதில் தொபுக்கடீர் என்று விழுவார். பார்த்தால் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டும். அப்படியும் விடாமல் “சின்னான்னா சும்மாவா” என்று கெத்தாக பேசுவார்.சீமானும் கிட்டத்தட்ட சின்னான் போல ஆகிவிட்டார். தமிழ்தேசியம் என்ற ஒரு … Continue reading பாட்டன்களை மாற்றிக்கொண்டிருக்கும் சீமானின் கொள்கை பற்றி ஓர் ஆய்வு!

’ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்களை சிதைத்துக் கொண்டிருக்கும் இந்துத்துவ அடியாள் சீமான்!’

வி. சபேசன் 2009இல் ஈழத் தமிழகளின் விடுதலைப் போர் மோசமாக தோற்கடிக்கப்பட்டது. தமிழினம் பேரழிவுக்கு உள்ளானது. இது பலரை ஒருவித மனப்பிறள்வுக்கு உள்ளாக்கியது. இந்த மனப்பிறள்வு தமிழர்களை நிதானமான முறையில் சிந்தித்து, எதிர்கால திட்டங்களை வகுக்க முடியாதபடி செய்தது. இந்த மனப்பிறள்வுக்கு உள்ளாகியவர்களில் சீமான் முக்கியமானவர். ஒரு நேரத்தில் அவரிடம் இருந்த தமிழினப் பற்றை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அவருடைய மனப்பிறள்வு அவரை ஒரு மோசமான நிலையை நோக்கி கொண்டு சென்றது. சீமான் உண்மையில் ஒரு … Continue reading ’ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்களை சிதைத்துக் கொண்டிருக்கும் இந்துத்துவ அடியாள் சீமான்!’

ஏர்செல் மேக்ஸிஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு, கார்த்தி சிதம்பரம் 14 நாடுகளில் முதலீடு: நடவடிக்கை கோரி அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஏர்செல் மேக்ஸிஸ் ஒப்பந்தத்திற்குப் பின்னர், சொத்துக்களை குவித்துள்ளார் என்றும் இதில் வந்த முறைகேடான பணத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளதாகவும், தி பயோனீர் ஆங்கில நாளிதழில் செய்தி பிரசுரமானது. இதுதொடர்பாக “தி பயோனியர்” என்ற ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஏர்செல் - மேக்சிஸ் வழக்கை விசாரித்த அமலாக்கத் துறை, கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான … Continue reading ஏர்செல் மேக்ஸிஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு, கார்த்தி சிதம்பரம் 14 நாடுகளில் முதலீடு: நடவடிக்கை கோரி அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம்

அம்பேத்கருக்கும் இந்துத்துவத்துக்கும் என்ன தொடர்பு? சில வரலாற்று உண்மைகள்!

மகிழ்நன் பா.ம இந்துத்வ அம்பேத்கர் என்று நூலின் பெயரை வெளியிட்டதாலேயே பலருக்கும் கிலி வந்திருக்கிறது. எல்லோரும் அஞ்சி சாகிறார்கள் என சிலர் எழுதி திரிகிறார்கள். அவர்களின் பொருட்டு அம்பேட்கரை மீண்டும் புரட்டிப் பார்ப்போம்... இந்துத்வ கும்பல் எழுதியிருக்கும் நூலின் குயுக்தியை பற்றி அம்பேட்கரை மதிப்பிடக் கூறினால் ”இந்துக்கள் நாவில் ராம நாமமும், கட்கத்தில் கூரிய வாளையும் வைத்திருக்கின்றனர். முனிவர்களைப் போல பேசி, கசாப்புக்காரர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.” என்றுதான் அண்ணல் கூறுவார் அந்த நூலை எழுதியவர்கள் நிறுவ விரும்புவது … Continue reading அம்பேத்கருக்கும் இந்துத்துவத்துக்கும் என்ன தொடர்பு? சில வரலாற்று உண்மைகள்!

அரசுக்கு எதிராக செய்தி: ராஜ்ய சபா டிவியை நிறுத்த மோடி அரசு முடிவு!

அரசுக்கு எதிரான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதால் ராஜ்ய சபா தொலைக்காட்சி நிறுத்தப்போவதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நேரிடையாக ஒளிபரப்புவதற்காக லோக் சபா, ராஜ்ய சபா என இரு தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டன. இதில் லோக் சபா தொலைக்காட்சி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. மத்திய அரசு துறைகள் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாய் மூலம் லோக் சபா டிவி நிர்வகிக்கப்படுகிறது. ஆனால், ராஜ்ய சபா தொலைக்காட்சி அதன் தலைவரும்,குடியரசு துணைத் தலைவரின் நேரடி … Continue reading அரசுக்கு எதிராக செய்தி: ராஜ்ய சபா டிவியை நிறுத்த மோடி அரசு முடிவு!

உம்மன் சாண்டிக்கு ஆதரவாக சாட்சி அளிக்கும்படி சரிதா நாயருக்கு பாடம் நடத்தினாரா காங்கிரஸ் தலைவர் ?: ஆடியோ வெளியானதால் சர்ச்சை!

உம்மன் சாண்டிக்கு ஆதரவாக சாட்சி அளிக்கும்படி சரிதா நாயருக்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரவி சொல்வதாக வெளியான ஆடியோ கீழே... https://youtu.be/1C7HLYAtM0Q ஆடியோவின் எழுத்து வடிவம்... ரவி: சரிதா நீ அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க வேண்டும். நீ டெல்லியில் சாண்டியை சந்திக்கவில்லை என்று சொல்ல வேண்டும். சரிதா நாயர்: சரி. ரவி: இரண்டு முறை அலுவலகத்திலும் வேறொரு முறை மேடையிலும். அரசாங்க தரப்பிலிருந்து நமது ஆள் பேசுவதை நீ கேட்க வேண்டும். சரிதா நாயர்: சரி, சரி. … Continue reading உம்மன் சாண்டிக்கு ஆதரவாக சாட்சி அளிக்கும்படி சரிதா நாயருக்கு பாடம் நடத்தினாரா காங்கிரஸ் தலைவர் ?: ஆடியோ வெளியானதால் சர்ச்சை!

சட்டசபை தேர்தலில் திமுக முன்னிலை பெறும்: லயோலா கருத்து கணிப்பு

லயோலா கல்லுாரியின் முன்னாள் மாணவர்களின் “பண்பாடு மக்கள் தொடர்பகத்தின்" சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில்  5176 பேரிடம்  நடத்தப்பட்ட சட்டமன்ற தேர்தல்  கருத்துகணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதில், 'தமிழகத்தில் பிரச்னைகளை தீர்க்கும் திறமையான கட்சியாக எந்த கட்சி வரும் தேர்தலில் ஆட்சிக்கு வரவேண்டும்?' என்ற மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,  தி.மு.க-விற்கு 33.9% மக்களும்,  அ.தி.மு.க விற்கு 31.5% மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க விற்கு 8.%, தே.மு.தி.கவிற்கு 14.4% மக்களும், பா.ம.கவிற்கு 9.9% … Continue reading சட்டசபை தேர்தலில் திமுக முன்னிலை பெறும்: லயோலா கருத்து கணிப்பு

பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநில இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டப் பேரவைக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுக்தேவோ பகத் வெற்றி பெற்றுள்ளார்.  தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார். பீகார் தேர்தலுக்குப் பிறகு மத்திய பிரதேசத்தில் நடந்த எம்பி தொகுதிக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் வென்றது. அதுபோல தற்போது ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் வென்றுள்ளது. இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆள்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.