கல்வி அகதிகள்: மனுஷ்ய புத்திரன் கவிதை

மனுஷ்ய புத்திரன் தொலை தூர நகரங்களுக்கு தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்படுள்ளன அவர்கள் ஒன்றும் ஆழிப்பேரலையால் சூழ்ந்துகொள்ளப்பட்டிருக்கவில்லை அவர்களுக்கு பயண உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது அவர்கள் கடும் புயலில் காணாமல் போய்விடவில்லை அவர்களுக்கு உதவத் தயார் என்று கருணைக் கரங்கள் நீட்டப்படுகின்றன அவர்கள் பூகம்பங்களில் இடுபாடுகளில் சிக்கிக்கொண்டிருக்கவில்லை அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படவிருக்கிறது அவர்கள் ஒரு கலவரத்தில் சிதறடிக்கபட்டவர்கள் அல்ல அவர்களுக்கு தங்குமிடம் தர யாரோ அன்புக் கரம் நீட்டுகிறார்கள் அவர்கள் நகரங்கள் … Continue reading கல்வி அகதிகள்: மனுஷ்ய புத்திரன் கவிதை

#பெண்கள்தினம்: ‘நீ பயணிக்க வேண்டியது அக்னிப்பாதை!

புதியவன் ராபர்ஸ் ஃப்ராஸ்டின் கவிதையை பகிர்ந்தபோது, நண்பர் ஒருவர், “அக்னிபத்” கவிதையையும் தமிழில் தாருங்களேன் என்று கேட்டார். அக்னிபத் கவிதை ஹரிவன்ஷ்ராய் பச்சன் எழுதியது. இந்தியில் மிகப்பிரபலமான கவிதை. அப்படியே தமிழில் தருவது சாத்தியமே இல்லை. முயற்சி செய்திருக்கிறேன். இந்தத் தமிழாக்கம் உலகின் மகளிர் அனைவருக்கும் சமர்ப்பணம் * மரங்கள் வளர்ந்தோங்கி நிற்கலாம் அடர்ந்தும் வலுவேறியும் இருக்கலாம் ஒற்றை இலையின் நிழலையும் கேட்காதே தேடாதே மயங்காதே நீ பயணிக்க வேண்டியது நெருப்புப் பாதை ஒருபோதும் களைத்து விடாதே … Continue reading #பெண்கள்தினம்: ‘நீ பயணிக்க வேண்டியது அக்னிப்பாதை!

#ஞாயிறுஇலக்கியம்: மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் – ஆதவன் தீட்சண்யா

  அமைதியின்மையின் கொடுவெள்ளம் அடித்துச் செல்கிறது என்னை ஊனுறக்கமழித்து உளைச்சலாகி வாட்டும்     பதற்றத்தின் பேரலையோ   அலைக்கழிக்கிறது ஆணிவேரையும்     தீராப்பழி சுமத்தி திணறடிக்கும் சர்ச்சைகளால் சிதறடிக்கப்படுகிற எனது ஆளுமை வதந்திகளின் நஞ்சேறி சிறுமையுறுகிறது அவமதிப்புகளும் அவதூறுகளும் இற்றுவிழச் செய்கின்றன எனது பற்றுக்கோல்களை   முகாந்திரமின்றி ஒவ்வொரு நாளின் நள்ளிரவிலும் முற்றுகையிடப்படும் என் வீட்டை   எந்த நேரத்திலும் தகர்த்துவிட குறிவைத்து காத்திருக்கின்றன படையணிகள் வெடித்துச் சிதற     என்னையன்றி என்னிடம் எதுவுமேயில்லையெனத் தெரிந்திருந்தும் … Continue reading #ஞாயிறுஇலக்கியம்: மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் – ஆதவன் தீட்சண்யா