கவிஞர் மதிவண்ணன், கவிஞர் பாரதிபுத்திரனின் கவிதை நூல்கள் குறித்த உரையாடல்!

கவிஞர் மதிவண்ணனின் ‘ஏதிலையைத் தொடர்ந்து வரும் நிலா’ மற்றும் கவிஞர் பாரதிபுத்திரனின் ‘மாரிக்கால இரவுகள்’ ஆகிய இரண்டு கவிதை நூல்கள் குறித்த உரையாடல் வாசகசாலையின் 28-வது நிகழ்வாக நடக்கவிருக்கிறது. சென்னை வடபழனியில் உள்ள ப்யூர் சினிமா புத்தக அங்காடியில் இந்நிகழ்வு இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

அருந்ததிய மக்களுக்காக குரல் கொடுக்கும் எழுத்தாளர் மதிவண்ணனை பழிவாங்கும் முயற்சியில் அரசு கல்லூரி நிர்வாகம்

ச.பாலமுருகன் தமிழ் கவிதை சூழலில் தலித் கவிதைகளின் வழியாகவும் மேலும் ஒடுக்கப்பட்ட அருந்ததிய மக்களின் உரிமைக் குரலை தொடர்ந்து முன்னெடுப்பவராகவும் உள்ள செயல்பாட்டாளர் கவிஞர் மதிவண்ணன். இவரின் இயற்பெயர் ம.மோகன்ராஜ் மாணிக்கராஜ் என்பதாகும். இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை, அரசு போக்குவரத்து கழகத்தின் ஐ.ஆர்.டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ் ரே பிரிவில் பணிபுரிந்து வருகின்றார். தொடர்ந்து அருந்ததிய மக்களின் அரசியல் உரிமைக்களை முன்னெடுத்த காரணத்தால் இவர் மீது உள்ளூர் ஆளும் கட்சி மந்திரி வகையறாக்களுக்கு கோபம் இருந்து … Continue reading அருந்ததிய மக்களுக்காக குரல் கொடுக்கும் எழுத்தாளர் மதிவண்ணனை பழிவாங்கும் முயற்சியில் அரசு கல்லூரி நிர்வாகம்