வரக்கூடிய நாட்களை மக்களுக்கு மென்மேலும் துன்பத்தை வழங்குகிற நாட்களாக அமையவுள்ளன. வேலை வாய்ப்பற்ற போக்கு, விவசாய வீழ்ச்சி, கல்வி சுகாதாரத்தில் அரசின் பாத்திரம் சுருங்கிச் செல்லுதல் என சங்கிலித் தொடர் நிகழ்வுகள் ஒரு மையப் புள்ளியில் குவிவதை நோக்கி செல்கின்றன.
குறிச்சொல்: கருத்துரிமை
கார்டூனிஸ்ட் பாலா கைது: பத்திரிகையாளர்கள் கூட்டறிக்கை
நெல்லையில் கந்துவட்டி கொடுமைக்கு பலியான இசக்கிமுத்து குடும்பம் தொடர்பாக விமர்சன கார்ட்டூன் வரைந்த கார்டூனிஸ்ட் பாலா சென்னை, போரூர் அருகே, பெரிய பணிச்சேரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து, இன்று நவம்பர் 5-ம் தேதி பகல் 1.30 மணி அளவில், நெல்லை போலீஸால் கைதுசெய்யப்பட்டார். கார்டூனிஸ்ட் பாலா கடந்த பல ஆண்டுகளாக குமுதம் வார இதழின் அதிகாரப்பூர்வ கார்டூனிஸ்டாக பணி புரிந்தவர். தற்போது சுதந்திரமான கார்டூனிஸ்டாக பணிசெய்து வரும் அவர், பல்வேறு பிரச்னைகளிலும் தன் கருத்தை வலியுறுத்தி … Continue reading கார்டூனிஸ்ட் பாலா கைது: பத்திரிகையாளர்கள் கூட்டறிக்கை
என்டிடிவி ஒளிபரப்பை முடக்கும் நவம்பர் 9ம் தேதி கருப்புப்பட்டைகளை ஏற்றி எதிர்ப்பு தெரிவிப்போம்: ஆதவன் தீட்சண்யா
என்டிடிவி ஒளிபரப்பை முடக்கும் நவம்பர் 9ம் தேதி கருப்புப்பட்டைகளை ஏற்றி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அழைப்பு விடுத்திருக்கிறார். இதுகுறித்து தனது முகநூலில் ஆதவன் தீட்சண்யா எழுதிய குறிப்பு: “'என்டிடிவி இந்தியா' செய்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை ஒருநாள் நிறுத்திவைக்கும் மத்திய அரசின் முடிவானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்குவதில் அதன் நிலை மேலும் மூர்க்கமடைந்திருப்பதைக் காட்டுகிறது. ஊடகங்கள் மீது தொடங்கும் இப்படியான ஒடுக்குமுறைகள், எல்லாத்தளங்களிலும் வரவிருக்கும் எதேச்சதிகாரத்தின் முன்னறிவிப்பேயாகும். இன்று என்.டி.டி.வி.க்கான … Continue reading என்டிடிவி ஒளிபரப்பை முடக்கும் நவம்பர் 9ம் தேதி கருப்புப்பட்டைகளை ஏற்றி எதிர்ப்பு தெரிவிப்போம்: ஆதவன் தீட்சண்யா
ஜெயலலிதா உடல்நலம் குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்ட வங்கி ஊழியர்கள் கைது!
ச. பாலமுருகன் இன்று 14.10.2016 கோயமுத்தூர் தொண்டாமுத்தூரில் கனரா வங்கி ஊழியர்கள் வங்கியில் தங்களுக்குள் முதல்வரின் உடல்நிலை குறித்து பேசி வந்ததாகவும் அதனை வாடிக்கையாளரான அ.தி.மு.க உறுப்பினர் கேட்டு போலிசில் புகார் கொடுத்ததாகவும் அதன் அடிப்படையில் வதந்தி பரப்புதல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்து காவல்துறை சிறைபடுத்தியுள்ளதை அறிய முடிகின்றது. காவல்துறையின் இந்த நடவடிக்கை அடிப்படை சனநாயக உரிமைகளை நசுக்கும் செயலாக உள்ளது. தனது இரண்டு நண்பர்கள் தமிழக முதல்வர் குறித்து உரையாடுவதே குற்றசெயலாக … Continue reading ஜெயலலிதா உடல்நலம் குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்ட வங்கி ஊழியர்கள் கைது!
“ரத்தத்தால் திலகமிடுவோம்; குண்டுகளால் ஆரத்தி எடுப்போம்” என்று முழங்கிய ஏபிவிபி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தேசத்துரோக குற்றம்சாட்டப்பட்ட கன்னையா குமார் கேள்வி
மகிழ்நன் பா.ம தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் கண்ணையா குமார் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் அவர், காவி பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்த்தவராக இருந்திருக்கிறார். அவர் ஆற்றிய ஒரு உரையின் தமிழாக்கம் இது: “எங்களுக்கு தேசபக்திக்கான சான்றிதழ் ஆர்.எஸ்.எஸிடமிருந்து வேண்டாம். 80 விழுக்காட்டிற்கும் மேல் ஏழைகள் வசிக்கும் இந்த நாட்டில், நாங்கள் ஏழைகள் நலனுக்காகவே உழைப்போம். அதுவே எங்களை பொறுத்தவரை தேசபக்தியாகும் எங்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் மீது … Continue reading “ரத்தத்தால் திலகமிடுவோம்; குண்டுகளால் ஆரத்தி எடுப்போம்” என்று முழங்கிய ஏபிவிபி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தேசத்துரோக குற்றம்சாட்டப்பட்ட கன்னையா குமார் கேள்வி
#விசாரணை: அதிகார மையத்துக்கு எதிராக மிக காத்திரமாக ஒலிக்கும் குரல்!
மீரா கதிரவன் சிறப்புக்காட்சியில் விசாரணை பார்க்க வாய்த்தது. தொடர்ச்சியாக கருத்துரிமை நசுக்கப்பட்டும் "கொல்லப்பட்டும்"வருகிற இன்றைய சூழலில்.. புரையோடிப்போன அதிகார மையத்திற்கு எதிராக மிக காத்திரமாக ஒலிக்கும் விசாரனையின் குரல் முக்கியமானது.கொண்டாடப் பட வேண்டியது! கதைப்பாத்திரங்களின் உருவாக்கம், அதற்கான நடிகர்களின் தேர்வு என எல்லா வகையிலும் ஒரு முழுமையான சினிமா அனுபவத்தை தருவதில் வெற்றிமாறன் ஜெயித்திருக்கிறார்.அவருடைய சினிமா வாழ்க்கையிலும் தமிழ் சினிமா வரலாற்றிலும் விசாரணை மிக முக்கியமான படம். அறிவுத் திருட்டு ஒரு கலாச்சாரமாகிக் கொண்டிருக்கும் சூழலில் லாக்கப் … Continue reading #விசாரணை: அதிகார மையத்துக்கு எதிராக மிக காத்திரமாக ஒலிக்கும் குரல்!