யமுனா ராஜேந்திரன் அண்ணா அருகில் கலைஞருக்கு இடம் இல்லை என்கிறார்கள். அரசு ரீதியில் ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். தமிழக வரலாற்றில் இலக்கியம், கருத்தியல் என்பவற்றில் நிலைத்து நிற்கும் பங்களிப்புச் செய்தவர். எளிய தமிழக மக்களின் அன்றாட வாழ்வில் நெடிதுநிற்கும் அரசியல் மாற்றங்களைச் சட்டமாக்கியவர். தமிழக வரலாற்றில் பெரியார், அண்ணாவிற்குப் பிறகு அந்த இடம் கலைஞருக்குத்தான். வெகுமக்கள் வந்துபோகும் மெரினா கடற்கரையில் கலைஞருக்கு இடம் இல்லை என்பது இழிவான அரசியல். அண்ணா அறிவாலயமோ பெரியாரது நினைவிடமோ … Continue reading ‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது!
குறிச்சொல்: கருணாநிதி
கருணாநிதி நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடுகிறார்; மூடநம்பிக்கைக் கிருமிகளும் உள்ளே நுழைய யாரும் வழிவகுக்கக்கூடாது: கி.வீரமணி அறிவுறுத்தல்
'கருணாநிதி நோய்க் கிருமிகளை எதிர்த்து அவர் போராடுகிறார்; மூடநம்பிக்கைக் கிருமிகளும் உள்ளே நுழைய யாரும் வழிவகுத்து விடக்கூடாது' என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'கருணாநிதியை மதிப்பது என்பது அவர் கட்டிக் காத்த கொள்கையை மதிப்பதே. திமுக தலைவர் கருணாநிதி மருத்துவ நிபுணர்களின் சீரிய சிகிச்சையால் நலம் பெற்று வருகிறார். இந்த நிலையில், அவர் உடல்நலம் பெற பிரார்த்தனை என்பது போன்ற மூடநம்பிக்கை சடங்குகளில் திமுகவினர் ஈடுபடவேண்டாம். கருணாநிதி அவர்கள் … Continue reading கருணாநிதி நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடுகிறார்; மூடநம்பிக்கைக் கிருமிகளும் உள்ளே நுழைய யாரும் வழிவகுக்கக்கூடாது: கி.வீரமணி அறிவுறுத்தல்
முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்
அண்மையில் நியூஸ் 18 தொலைக்காட்சியில் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் பேசிய தமிழர் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, கருணாநிதி குறித்து சில விமர்சனங்களை வைத்தார். இது திமுக ஆதரவாளர்களிடையே விமர்சனத்துக்கு ஆளானது. ஒருசிலர் கருத்துக்களால் விமர்சனம் செய்துகொண்டிருக்க ஒருசிலர் தனிப்பட்ட தாக்குதலை வைத்தனர். தியாகுவுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் எழுத்தப்பட்டன. எழுத்தாளர் நலங்கிள்ளியின் பதிவு: “கலைஞருக்குத் தோழர் தியாகு தொடுத்த அதிரடிக் கேள்விகள்! நேற்று நியூஸ் 18 … Continue reading முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்
நீங்கள் எழுதிய “கீழ்த்தரமான ட்வீட்களுக்கு” எப்போது மன்னிப்பு கேட்பீர்கள் தான்யா..?
தான்யா ராஜேந்திரனுக்கு... வணக்கம். இதே பத்திரிகைத்துறையில் எட்டு வருடங்களுக்கு மேலாகக் குப்பை கொட்டுவதாலும், தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் ஆங்கில ஊடகவியலாளர்களுக்குமான லாபியிங் திறமை என்பது மலைக்கும் மடுவுக்குமானது என்பது பற்றித் தெரியுமென்பதாலும் உங்களுடைய சமீபத்திய செயல்பாடுகள் குறித்து எனக்குள் எழும் சில கேள்விகளை உங்களிடம் கேட்கலாம் என நினைக்கிறேன். “நியூஸ் மினிட்” என்கிற ஆங்கில இணையதளத்திற்கு நீங்கள் “எடிட்டர் இன் சீஃப்” ஆக இருக்கலாம். ஆனால் நீங்கள் செய்தியாளாரா அல்லது வெறும் செய்தி சேகரிப்பாளரா என்பதில் உங்களுக்கே சந்தேகம் … Continue reading நீங்கள் எழுதிய “கீழ்த்தரமான ட்வீட்களுக்கு” எப்போது மன்னிப்பு கேட்பீர்கள் தான்யா..?
அரசியல் களத்தில் கருணாநிதி இருந்திருந்தால் அதிமுக ஆட்சியை கவிழ்த்திருப்பார்: விஜயகாந்த் பேட்டி!
இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாகவே அரசியலில் ஒதுங்கியிருந்த , இந்த பேட்டியின்போது தீவிர அரசியல் பேசியது மட்டுமல்லாது, தோற்றத்திலும் புதுப்பொலிவுடன் இருப்பதை பார்க்க முடிகிறது. அந்த பேட்டியிலிருந்த சில கேள்விகளின் தமிழாக்கம் இங்கே. ****************** கேள்வி: அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என்று திமுக சொல்லியதைப்போல, செயலில் கட்டமுடியவில்லை என்று நினைக்கிறீர்களா ? பதில்: இந்த அதிமுக அரசு தானாகவே … Continue reading அரசியல் களத்தில் கருணாநிதி இருந்திருந்தால் அதிமுக ஆட்சியை கவிழ்த்திருப்பார்: விஜயகாந்த் பேட்டி!
நான் டெல்லிக்கு ஓடியதற்கு திமுக ஆட்சிதான் காரணம்: சாருநிவேதிதா
தமிழ்நாடே வேண்டாம் என்று தில்லிக்கு ஓடி விட்டேன். அந்த வகையில் தமிழ்நாட்டை விட்டு ஓடிய பிராமணர்களைப் போல் தான் நானும்.
திமுக செயல்தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின்; ஓய்வுக்கு ஓய்வு தரும் தலைவருக்கு ஓய்வு தேவையென பேச்சு!
திமுக பொதுக்குழு கூட்டம் காலை 9 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், திமுக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். முதன் முறையாக திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்காமல் அக்கட்சியின் பொதுக்குழு நடக்கிறது. இந்த கூட்டத்தில் திமுகவின் செயல்தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும், செயல் தலைவருக்கு வழங்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை பொதுச்செயலாளர் அன்பழகன் … Continue reading திமுக செயல்தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின்; ஓய்வுக்கு ஓய்வு தரும் தலைவருக்கு ஓய்வு தேவையென பேச்சு!
யார் அந்த பிடல் காஸ்ட்ரோ?
பிடல் காஸ்ட்ரோவை இழந்து வாடும் "கியூபா" நாட்டு மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அவரது அபிமானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக என திமுக தலைவர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பிடல் காஸ்ட்ரோ மறைந்து விட்டாராம்! யார் அந்த பிடல் காஸ்ட்ரோ? ஒரு சின்னஞ்சிறிய நாட்டில் சிங்கக் குட்டியாக உலவி பெருமைக் குரிய புரட்சித் தலைவனாக வளர்ந்த பிடல் காஸ்ட்ரோ நான் மறக்க முடியாத மாவீரர்களில் ஒருவர். கியூபா மண்ணின் நெஞ்சம் நிறைந்த … Continue reading யார் அந்த பிடல் காஸ்ட்ரோ?
ஆறுமுகத்துக்கு ’தீப்பொறி’ அடைமொழி தந்தவர் அண்ணாதான்: கருணாநிதி இரங்கல்
திமுகவின் முன்னணி பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் மறைவுக்கு கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைமைக் கழக முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவரும், தி.மு.கவின் முன்னோடிகளில் ஒருவருமான மதுரை தீப்பொறி ஆறுமுகம்நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு (5-11-2016) மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். தீப்பொறி ஆறுமுகம் தனது பதினைந்தாவது வயதிலேயே தந்தை பெரியாரின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி, பெரியாரால் அப்போதே பாராட்டப்பட்டவர். அவருடைய … Continue reading ஆறுமுகத்துக்கு ’தீப்பொறி’ அடைமொழி தந்தவர் அண்ணாதான்: கருணாநிதி இரங்கல்
என்.டி.டி.வி.க்குத் தடை : கருத்துரிமையை நசுக்கும் பாஜக அரசு! கருணாநிதி கண்டனம்
என்.டி.டி.வி.க்குத் தடை விதித்திருப்பதன் மூலம் கருத்துரிமையை பாஜக அரசு நசுக்குவதாக திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டப்பட்ட அறிக்கையில், “பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் இந்திய விமானப் படைத் தளத்திற்குள், 2-1-2016 அன்று பயங்கரவாதிகள் திடீரென்று புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். அந்த நிகழ்வினை என்.டி.டி.வி. இந்தியா இந்தி சேனல் அதனை ஒளி பரப்பியதாக மத்திய பா.ஜ.க. அரசு குற்றம் சாட்டியதோடு, பத்து மாதங்கள் கழித்து, நவம்பர் 9ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல், மறுநாள் … Continue reading என்.டி.டி.வி.க்குத் தடை : கருத்துரிமையை நசுக்கும் பாஜக அரசு! கருணாநிதி கண்டனம்
மொழிவாரி மாநிலங்கள் அமைந்த அறுபதாண்டு ஆண்டு; தலைவர்கள் வாழ்த்து
மொழிவாரி மாநிலங்கள் அமைந்து 60 ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு வாழ்த்து தெரிவித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை விட்டுள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை: நவம்பர் 1 - 1956ஆம் ஆண்டு நவம்பர் 1- ஆம் தேதி தான், மொழி வழி மாநிலங்கள் பிரிந்து, தமிழ்நாடு தனி மாநிலமாகவும், ஆந்திரா தனி மாநிலமாகவும், கேரளா தனி மாநிலமாகவும், கர்நாடகா தனி மாநிலமாகவும் பிரிந்து, அறுபது ஆண்டுகள் ஆகின்றன. பேரவையில் பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர், … Continue reading மொழிவாரி மாநிலங்கள் அமைந்த அறுபதாண்டு ஆண்டு; தலைவர்கள் வாழ்த்து
அண்ணா பெயரில் கட்சி; ஆனால் அண்ணா நூலகம் புறக்கணிப்பா?
அண்ணா பெயரில் கட்சி வைத்துக்கு அண்ணா நூலகத்தை ஆளும் அதிமுக அரசு புறக்கணிப்பதாக திமுக தலைவர் மு. கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை இங்கே: கேள்வி :- சென்னை மாநகரில் தண்ணீர் லாரி மோதி மூன்று கல்லூரி மாணவிகள் பலியானது பற்றி? கருணாநிதி:- மிகப் பெரிய கொடுமை அது. தங்கள் குழந்தைகளை இழந்து வாடும் மாணவிகளின் பெற்றோருக்கும் எப்படி ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை. போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. இந்த … Continue reading அண்ணா பெயரில் கட்சி; ஆனால் அண்ணா நூலகம் புறக்கணிப்பா?
“ஜெய் ஸ்ரீ ராம்” முழக்கமிட்ட பிரதமர்: மீண்டும் கிளம்புகிறதா ராமர் பிரச்சினை?
ஓட்டுரசியலுக்காக மத்தியில் ஆளும் மோடி அரசு ராமர் பிரச்சினையை கையிலெடுக்க ஆரம்பித்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜ.,க. 2017 இல் நடைபெற விருக்கின்ற சட்டப் பேரவைத் தேர்தலை மனதிலே கொண்டு, எந்த உத்தியையாவது கடைப்பிடித்து வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், ஜனநாயகத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழக விவசாயிகளுக்கு முறைப்படி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி நியாயமாகக் கொடுக்க … Continue reading “ஜெய் ஸ்ரீ ராம்” முழக்கமிட்ட பிரதமர்: மீண்டும் கிளம்புகிறதா ராமர் பிரச்சினை?
முதல்வரின் உடல் நலம் குறித்து வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா?: கருணாநிதி
தமிழக முதல்வரின் உடல் நலம் குறித்து வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா? என வினவியுள்ளார் திமுக தலைவர் மு. கருணாநிதி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா ஒரு வார காலத்திற்கும் மேலாக - கடந்த 22ஆம் தேதி முதல், சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு ஆகியவற்றுக்குச் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வருவதாகவும், ஆனாலும் இன்னும் சில நாட்கள் மருத்துவ மனையிலே இருக்க வேண்டுமென்று அப்பல்லோ … Continue reading முதல்வரின் உடல் நலம் குறித்து வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா?: கருணாநிதி
ராம்குமார் சாவில் மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டாக வேண்டும்: கருணாநிதி
ராம்குமார் மரணம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக தலைவர் மு. கருணாநிதி கேட்டிருக்கிறார்கள். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கைள்: சென்னை நுங்கம்பாக்கம் புகைவண்டி நிலையத்தில் பட்டப் பகலில் சுவாதி என்ற பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றவாளி ராம்குமார் என்பவரைக் காவல் துறையினர் கண்டுபிடித்துக் கைது செய்ததைப் பற்றி நான் 8-7-2016 அன்று விரிவாக தெரிவித்திருந்தேன். நெல்லையில் இருந்து சென்னைக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் ராம்குமார் அழைத்து வரப்பட்ட போது விடிய விடியத் … Continue reading ராம்குமார் சாவில் மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டாக வேண்டும்: கருணாநிதி
பொதுவுடமைவாதிகள் சுயநல அடிப்படையில் முடிவு எடுப்பதில்லை: திமுக தலைவருக்கு ஜி. ராமகிருஷ்ணன் பதில்
திமுக தலைவர் கருணாநிதி கம்யூனிஸ்டுகளின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கவில்லை என வருத்தப்படுவதாக கேள்வி பதில் அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் பதில் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். “திமுக தலைவர் கலைஞர் அவர்கள் 27.7.2016 முரசொலி ஏட்டில் “பொதுவுடமைவாதிகள் ஒரு சிலரின் சுயநலம் காரணமாக தமிழக சட்டமன்றத்தில் எத்தனையோ ஆண்டு காலமாக ஒலித்து வந்த கம்யூனிசக் கொள்கைகளின் வாய் மூடப்பட்டுவிட்டதே” என்று கேள்வியெழுப்பி, அதற்கு பதிலாக, “அதைப்பற்றி நாம் கூறினால் … Continue reading பொதுவுடமைவாதிகள் சுயநல அடிப்படையில் முடிவு எடுப்பதில்லை: திமுக தலைவருக்கு ஜி. ராமகிருஷ்ணன் பதில்
” சிவபெருமானின் உடுக்கை ஒலியில் இருந்து பிறந்தது தான் தமிழும், சமஸ்கிருதமும்”
சமஸ்கிருதம் குறித்து திமுக பேச வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார். மதுரை பீ.பீ.குளத்தில் வருமான வரி அலுவலகம் எதிரே மதுரை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் மக்கள் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம் மையத்தை கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்கள் "சமஸ்கிருதத்தை திணித்தால் கிளர்ச்சி ஏற்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியது பற்றி கேள்வி கேட்டனர். அதற்க்கு பதில் … Continue reading ” சிவபெருமானின் உடுக்கை ஒலியில் இருந்து பிறந்தது தான் தமிழும், சமஸ்கிருதமும்”
சாதிய சனாதன சக்திகளோடு சமரசம் செய்து கொள்ளாத சின்னக்குத்தூசி
பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி பிறந்த நாளை ஒட்டி, அவர் நினைவாக நக்கீரன் கோபால் தொடங்கிய சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளையின், அச்சு ஊடகம் சார்ந்த சிறந்த கட்டுரையாளர்களுக்கான & வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கு விழா சென்னையில் நடைபெற்றது. வாழ்நாள் சாதனையாளருக்கான் விருதை பதிப்பாளர் வைகறைவாணன் பாராட்டு, பட்டயம், ரூபாய் ஒரு லட்சம் தொகையுடன் பெற்றுக் கொண்டார். ஜீவசுந்தரி பாலன், ஹெச்.பீர்முகமது, பேரா.என்.சீனிவாசன் ஆகியோர் சிறந்த கட்டுரைக்கான தலா 10,000 ரூபாய் விருதைப் பெற்றுக் கொண்டனர். சின்னக்குத்தூசியின் எளிமை, கொள்கை … Continue reading சாதிய சனாதன சக்திகளோடு சமரசம் செய்து கொள்ளாத சின்னக்குத்தூசி
புதிய மொந்தையில் பழைய கள்: ஜெயலலிதாவின் கோரிக்கைகள் பற்றி கருணாநிதி
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமரைச் சந்தித்து 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளது குறித்து திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான ஆட்சி அமைந்த போது, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா டெல்லி சென்று 3-6-2014 அன்று பிரதமரிடம் 31 கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்ததோடு, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களையும், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்களையும் சந்தித்து விட்டு சென்னை … Continue reading புதிய மொந்தையில் பழைய கள்: ஜெயலலிதாவின் கோரிக்கைகள் பற்றி கருணாநிதி
“ஆடு, கசாப்புக் கடைக்காரனைத் தான் நம்புகிறது”: கருணாநிதி பிறந்த நாள் செய்தி
93வது பிறந்தநாளை கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதி, கட்சித் தொண்டர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், உணர்வில்லா மாந்தர்க்கு உணர்வூட்டி, திராவிடத்தின் துயர் துடைப்போம் என அழைப்பு விடுத்துள்ளார். பிறந்த நாள் செய்தியாக, திமுக தொண்டர்களுக்கு, கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது 93வது பிறந்த நாள்! 92 வயது நிறைவடைந்து, 93வது வயதில் அடியெடுத்து வைக்கும் இனிய வேளையில், எனை ஈன்று புறந்தந்த என் அருமைத் தாய் அஞ்சுகம் அம்மாள், எனைச் சான்றோனாக்கிய அன்புத் தந்தை முத்துவேலர், கொள்கை வேல் … Continue reading “ஆடு, கசாப்புக் கடைக்காரனைத் தான் நம்புகிறது”: கருணாநிதி பிறந்த நாள் செய்தி
பினராயி விஜயனின் கருத்து மகிழ்ச்சியளிக்கிறது: கருணாநிதி
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பற்றித் தமிழக அரசுடன் சுமூகமாகப் பேசித் தீர்வு காண விரும்புவதாகக் கேரள முதலமைச்சர், பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். இதற்கு திமுக தலைவர் மு. கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில், “கேரள முதல்வராகப் பொறுப்பேற்ற பின் டெல்லிக்குச் சென்ற பினராயி விஜயனிடம், செய்தியாளர்கள் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாடு குறித்துக் கேட்ட போது இவ்வாறு கூறியிருக்கிறார். மேலும் “தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட … Continue reading பினராயி விஜயனின் கருத்து மகிழ்ச்சியளிக்கிறது: கருணாநிதி
அதிமுகவை உடைக்க முயற்சியா?: கருணாநிதியின் பேட்டி சொல்லவருவது என்ன??
திமுக தலைவர் கருணாநிதி “தி இந்து” ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி... 1. பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும் களத்தில் இருந்து வந்த தகவல்களும் திமுக வெற்றி பெறும் என்றே தெரிவித்தன. இருப்பினும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. இதற்கு காரணம் என்ன? கருணாநிதி:- தேர்தல் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைப் பட்சமாகவே இருந்ததையும், ஆளுங்கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதைப் போலச் செயல்பட்டதையும் தமிழகமே … Continue reading அதிமுகவை உடைக்க முயற்சியா?: கருணாநிதியின் பேட்டி சொல்லவருவது என்ன??
சென்னையில் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்தது எதனால்? பிரபல முகநூல் பதிவர்கள் தலைமையில் விவாதம்!
நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மாநில அளவில் சென்னையில் மட்டும் வாக்குப் பதிவு சதவீதம் மிகக் குறைவாக(57%) பதிவாகியுள்ளது. ஏன் சென்னையில் மட்டும் வாக்குப் பதிவு சதவீதம் ஏன் குறைந்தது என முகநூல் முழுக்க விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. பிரபல முகநூல் பதிவர்கள் தலைமையில் நடக்கும் இந்த விவாதங்களின் தொகுப்பு இங்கே... ஊடகவியலாளரும் பிரபல முகநூல் பதிவருமான Saraa Subramaniam காரணத்தை அலசுகிறார்: “விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகை வீடு மாறும் அவலநிலைக்கு … Continue reading சென்னையில் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்தது எதனால்? பிரபல முகநூல் பதிவர்கள் தலைமையில் விவாதம்!
“நான் தான் முதல்வராவேன்; இயற்கையாக எனக்கு ஏதேனும் நேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராவார்”: கருணாநிதி பேட்டி
திமுக தலைவர் கருணாநிதி என்டிடீவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் “சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தான் தான் முதல்வராவேன்” என தெரிவித்துள்ளார். மு. க. ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என பலர் விரும்புகிறார்களே அவர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்? என்ற கேள்விக்கு “முதல்வராக வேண்டும் என்று ஸ்டாலினே விரும்பவில்லை. அவரே திமுக தலைவர்தான் முதல்வராவார் என அறிவித்துள்ளார். 1967 முதல் நான் தேர்தலில் வென்று வருகிறேன். நான் வென்றால் ஆறாவது முறையாக முதல்வராவேன்.” ஸ்டாலினுக்கு எப்போதுதான் … Continue reading “நான் தான் முதல்வராவேன்; இயற்கையாக எனக்கு ஏதேனும் நேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராவார்”: கருணாநிதி பேட்டி
திமுக ஆட்சிக்கு வந்தால் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும்: கருணாநிதி
திமுக ஆட்சிக்கு வந்தால் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகம் பொதுத் தேர்தல் முடிந்து, ஆட்சிப் பொறுப்பினை ஏற்குமானால், 7-3-2007 முதல் தமிழகத்தில் நுழைவுத் தேர்வினை ரத்து செய்து நடைமுறையில் இருந்து வரும் சட்டத்தின் அடிப்படையில், 21-12-2010 அன்று இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையினைத் திரும்பப் பெறவோ அல்லது திருத்தி அமைக்கவோ தேவையான ஏற்பாடுகளை போர்க்கால அவசரத்தில் மேற்கொண்டு, தமிழகத்திலே … Continue reading திமுக ஆட்சிக்கு வந்தால் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும்: கருணாநிதி
திமுகவுக்கு ஆதரவு அலை வீசுகிறது; ஆனால் நாங்கள் கருத்து கணிப்புகளை நம்பவில்லை: கனிமொழி
திமுகவுக்கு ஆதரவு அலை வீசுகிறது என தெரிவித்துள்ளார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, கருத்து கணிப்புகள் எங்களுக்கு ஆதரவாக இருந்தாலும் நாங்கள் கருத்து கணிப்புகளை நம்பவில்லை என தெரிவித்தார்.
சோனியாவுக்கு எதிராக கருப்புகொடி!
சென்னை தீவுத்திடலில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார். புதுச்சேரியில் நடைபெறும் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் சோனியா, அதைத் தொடர்ந்து மாலை தீவுத் திடலில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். திமுக தலைவர் கருணாநிதியும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார். சோனியாவின் வருகையைக் கண்டித்து சென்னை உழைப்பாளர் சிலை முன்பு மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். https://twitter.com/mahajournalist/status/728175593615970304
“திருச்செந்தூரில் கலைஞர் விசுவாசி ஒருவர் கூட இல்லையா?”அனிதா ராதாகிருஷ்ணனை விமர்சித்த தயா அழகிரி!
“திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கட்சி மற்றும் மக்கள் பணியாற்ற கலைஞர் விசுவாசி ஒருவர் கூட இல்லையா?” என தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட மு.க. அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி. கடந்த 2015-ஆம் ஆண்டு திமுகவிலிருந்து தற்காலிக நீக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் திமுக தலைமை மீது பரபரப்பு புகார் கூறினார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை புகழ்ந்த அவர், சந்தர்ப்பம் கிடைத்தால் அதிமுகவில் இணைவேன் என்றும் சொல்லியிருந்தார். … Continue reading “திருச்செந்தூரில் கலைஞர் விசுவாசி ஒருவர் கூட இல்லையா?”அனிதா ராதாகிருஷ்ணனை விமர்சித்த தயா அழகிரி!
“கண்ணியமானவர்; துணிச்சலானவர்”: மோடியை புகழ்ந்த கருணாநிதி!
மதுரையில் நடந்த திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, பிரதமர் மோடியை புகழ்ந்தார். “கரூரில் அன்புநாதன் போன்றவர்கள் அமைச்சர்களின் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு கோடி கோடியாக கொள்ளை அடிக்கின்றனர். இவர்கள் மீது நிர்வாகத் திறமை மிக்க, எதையும் துணிச்சலுடன் செய்யும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து எங்களை அமைதியாக ஜனநாயகக் கடமை ஆற்ற வழி ஏற்படுத்தி தர வேண்டும். மாற்றப்பட்ட அதிகாரிகளை மீண்டும் அதே இடத்தில் நியமிக்கும்படி தேர்தல் ஆணையத்தை தம்பிதுரை மிரட்டுகிறார். இந்த தேர்தலில் … Continue reading “கண்ணியமானவர்; துணிச்சலானவர்”: மோடியை புகழ்ந்த கருணாநிதி!
அண்ணா அறிவாலயத்திலும் அம்மா ஆலயத்திலும் எழுதப்படும் கருத்துக் கணிப்புகள்!
“மழைக்காலத்தில் முளைக்கும் காளான்களைப் போல தேர்தல் காலத்தில் கருத்துக்கணிப்புகளை நடத்தி வெளியிடுவதற்காக ஏராளமான கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் கடை விரிக்கின்றன. உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப வார்க்கப்படும் தோசைகளைப் போல, இந்த கருத்துக்கணிப்பு நிறுவனங்களும் தங்களின் அரசியல் முதலாளிகளின் விருப்பப்படி கருத்துக்கணிப்பு முடிவுகளை தயாரித்து வெளியிடுகின்றன. இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும்” கருத்துக் கணிப்புகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை. முழுவதும்... “சென்னை லயோலா கல்லூரி சார்பில் ஒரு காலத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் கிட்டத்தட்ட சரியாக இருந்தன. … Continue reading அண்ணா அறிவாலயத்திலும் அம்மா ஆலயத்திலும் எழுதப்படும் கருத்துக் கணிப்புகள்!
#தலித்வரலாற்றுமாதம்: சத்தியவாணி முத்து முதல் பெண் தலித் அமைச்சர்!
ஸ்டாலின் ராஜாங்கம் ஞாயிறு தமிழ் தி இந்து(01.05.2016) பெண் இன்று இணைப்பில் முதல் பெண் தலித் அமைச்சர் என்ற தலைப்பில் சத்தியவாணிமுத்து பற்றி சிறு கட்டுரை ஒன்றை ஆதி எழுதியுள்ளார் .திமுக வின் தொடக்ககால தலைவர்களில் ஒருவர், 1967 ல் திமுகவின் முதல் அமைச்சரவையில் இடம்பெற்ற தலித்,தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற கழகம் என்ற கட்சி நடத்தியது, மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட அவர் பற்றிய பெரும்பாலான தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. நல்ல பதிவு. எல்லோரும் கருதுவதை போல சத்தியவாணிமுத்துவின் அரசியல் வாழ்க்கை … Continue reading #தலித்வரலாற்றுமாதம்: சத்தியவாணி முத்து முதல் பெண் தலித் அமைச்சர்!
“நான் வராததை வந்ததாகவே கருதி, கழகக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்”: கருணாநிதி சுற்றுப்பயணம் மாற்றம்!
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தேர்தல் பிரச்சாரப் பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில், “மே 16 அன்று நடைபெறவுள்ள தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்திற்காக என்னுடைய திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரல் இன்று தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. முதலில் வெளியிடப்பட்ட சுற்றுப் பயண நிகழ்ச்சிகளில் விடுபட்டுப் போன மாவட்டங்களின் கழகச் செயலாளர்கள் சிலர், தங்கள் மாவட்டங்களில் பிரசாரப் பயணம் வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், முதலில் வெளியிடப்பட்ட நிகழ்ச்சிகளிலேயே ஒருசில … Continue reading “நான் வராததை வந்ததாகவே கருதி, கழகக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்”: கருணாநிதி சுற்றுப்பயணம் மாற்றம்!
ஆவின் பால் 7 ரூபாய் குறைக்கப்படும்: திமுக வாக்குறுதி சாத்தியமா? இதோ ஒரு கணக்கு!
பெ.சண்முகம் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ஹீரோ என்று கூட்டம் தவறாமல் கூறிவருகிறார் மு.க.ஸ்டாலின். வாக்குறுதிதானே பின்னால், யார் கேட்கப் போகிறார்கள், அப்படியே கேட்டாலும் வார்த்தையால் விளையாடத்தான் கலைஞர் இருக்கிறாரே என்ற தைரியத்தில் பல பொய்யான வாக்குறுதிகளை தேர்தல்தோறும் வழங்குவது வாடிக்கையாகிவிட்டது திமுக,விற்கு! உதாரணத்திற்கு சில மட்டும் இங்கே! 1967 தேர்தலில் ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்று அண்ணா சொன்னார். ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு படி நிச்சயம், மூன்று படி லட்சியம் என்று கூறி அதுவும் ஒரு … Continue reading ஆவின் பால் 7 ரூபாய் குறைக்கப்படும்: திமுக வாக்குறுதி சாத்தியமா? இதோ ஒரு கணக்கு!
தேர்தலில் செலவிடப்படும் ’பினாமி’ பணங்கள்!
அ. மார்க்ஸ் இரண்டு நாட்களாகப் பெரிய அளவில் (கோடிக் கணக்கில்) பதுக்கி வைக்கப்பட்ட பணம் கைப்பற்றப்படுகிறது. இவர்கள் அனைவரும் அ.தி.மு. க வினர்க்கு நெருக்கமானவார்கள், அமைச்சர்களுக்கு பினாமிகளாக இருப்பவர்கள் என்கிற செய்தியும் வருகிறது. மாவட்ட ஆட்சியாளர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளும் பெரிய அளவில் மாற்றப்படுகின்றனர். கரூரில் கைப்பற்றப்பட்ட 4.77 கோடி ரூபாய்க்கு உரிய அதிமுக காரர் அரசு வாகனம் என்கிற பெயரில் போலி பதிவு எண்ணுடன் இக் குற்றத்தைச் செய்துள்ளார். இவர்கள் கைது செய்யப்பட்டு கொஞ்ச … Continue reading தேர்தலில் செலவிடப்படும் ’பினாமி’ பணங்கள்!
சீமான் இரட்டை இலைக்கு; கருணாநிதி கம்யூனிஸ்டுகளுக்கு;பொன்.ராதா திமுகவுக்கு வாக்கு கேட்டார்!
நாம் தமிழர் வேட்பாளருக்கு தருமபுரியில் வாக்கு சேகரித்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் என்பதற்கு பதிலாக இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்கள் என்றார். திமுக தலைவர் சைதாப்பேட்டையில் பிரச்சாரத்தை தொடங்கியபோது காங்கிரஸ் என்பதற்கு பதிலாக கம்யூனிஸ்டுகள் என்றார். இந்த வரிசையில் பொன்னாரும் சேர்ந்திருக்கிறார். தூத்துக்குடியில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், பாஜக என்பதற்கு பதிலாக திமுக வாக்களியுங்கள் என்றார்.
கருணாநிதி பிரசாரத்தின் போது விபத்து: சன் டிவி ஒளிப்பதிவாளர்கள் படுகாயம்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை சைதாப்பேட்டை பகுதியில் இருந்து கருணாநிதி ஏப்ரல் 24ந் தேதி தொடங்கினார். இதற்காக, சென்னை சி.ஐ.டி காலனியில் இருந்து கிளம்பும் போது கருணாநிதியின் பிரசாரத்தை ஒளிப்பதிவு செய்வதற்காக தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் உமாசங்கர், லோகநாதன் ஆகியோர் கன்வே வேனின் மேற்கூரையில் அமர்ந்து சென்றனர். அதில் உள்ள பக்கவாட்டு தடுப்பு உடைந்ததில் இருவரும் சாலையில் விழுந்தனர். படுகாயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒளிப்பதிவாளர் லோகநாதன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
“இன்றைய அரசியலில் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி ஜெயலலிதாதான்”
ஜி. கார்ல் மார்க்ஸ் எனக்குத் தெரிந்து இன்றைய அரசியலில், மிகவும் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி யாரென்றால் அது ஜெயலலிதாதான். எழுத்தாளர்கள், அரசியல் விமர்சகர்கள், முக்கியமாக கார்ட்டூனிஸ்டுகள் ஆகியோருக்கு தனது தேர்தல் பரப்புரை மூலம் ஜெயலலிதா அளித்துக்கொண்டிருப்பது பெரும் தீனி. ஜனநாயகத்துக்கு கொஞ்சமும் தகுதியில்லாத, பதட்டங்கள் நிறைந்த காமெடியனாக அவர் தோற்றம் கொண்டிருக்கிறார். ஒரு செருப்போ, ஒரு கல்லோ மேடையை நோக்கி வரக்கூடும் என்ற பதட்டம் அவரைச் சுற்றியுள்ள மற்றெல்லோருக்கும் இருக்கிறது. அதனால் தான் இவ்வளவு உருட்டல் … Continue reading “இன்றைய அரசியலில் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி ஜெயலலிதாதான்”
அரசியல்வாதிகளே…பேராசிரியர் முத்துக்குமரனை நினைவிருக்கிறதா?
ஆ.விஜயானந்த் பேராசிரியர் முத்துக்குமரன். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்தவர். சமச்சீர் கல்விக் குழுவின் தலைவராக பதவி வகித்தவர். அவரது இறப்பு குறித்த செய்தி நாளேடுகளில் பெரிய அளவில் பதிவு செய்யப்படவில்லை என்பது கூடுதல் சோகம்.இன்றைக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூற்றுக்கணக்கான சென்ட்டம்களும், மாநில அளவில் அதிக எண்ணிக்கையிலான முதலிடங்களும் உருவாகக் களம் அமைத்தவர் முத்துக்குமரன். சமீபநாட்களாக, நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தவர், நேற்று முன்தினம் தன்னுடைய இயக்கத்தை நிறுத்திக் கொண்டார். அவர் உருவாக்கிய … Continue reading அரசியல்வாதிகளே…பேராசிரியர் முத்துக்குமரனை நினைவிருக்கிறதா?
சாதி வெறி, ஆணாதிக்க வெறி, நிலவுடமை ஆதிக்க மனநிலை இது தான் சீமானின் தமிழ் தேசியமா?
சமத்துவ படை கட்சியின் தலைவர் சிவகாமி ஐஏஎஸ், திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு பெற்றதை, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தரம் தாழ்ந்து விமர்சித்திருக்கிறார். முகப்பில் உள்ளது அவர் இட்ட முகநூல் பதிவு. இந்தப் பதிவிற்கு ‘சாதி வெறி, ஆணாதிக்க வெறி, நிலவுடமை ஆதிக்க மனநிலை இது தான் சீமானின் தமிழ் தேசியமா?’ என சமூக வலைத்தளங்களில் கண்டனம் எழுந்துள்ளது. Veeramani Panneerselvam தமிழினத்தைக் காப்பாற்ற நான் ஒருவன்தான் இருக்கிறேன் என்பவரின் தம்பி … Continue reading சாதி வெறி, ஆணாதிக்க வெறி, நிலவுடமை ஆதிக்க மனநிலை இது தான் சீமானின் தமிழ் தேசியமா?
நேற்று தொடங்கிய மக்கள் தேமுதிகவுக்கு தொகுதி; ஆதித்தமிழர் கட்சிக்கு திமுகவின் இதயத்தில் மட்டும் இடமா?
நேற்று தொடங்கிய மக்கள் தேமுதிகவை அழைத்து தொகுதி ஒதுக்கும் திமுக, நீண்ட காலமாக திமுகவை ஆதரித்துவரும் அதியமான் தலைமையிலான ஆதித்தமிழர் கட்சிக்கு ஏன் தொகுதி ஒதுக்கவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது. வே. மதிமாறன் ‘சீட்டு குடுக்கிறேன் வா’ என்று கண்ட கண்ட கழிசடைகளையெல்லாம் இன்னும் கூவி கூவி கூப்பிடுகிற திமுக, தன்னுடனே இருக்கும் ஆதித் தமிழர் பேரவைக்கு இன்னும் எத்தனை தொகுதிகள் என்பதை ஏன் அறிவிக்காமல் இருக்கிறது? அங்கீகாரமே தரக்கூடாத பல சந்தவர்ப்பாவத கட்சிகளுக்கும், ஜாதிக் கட்சிகளுக்கும் சீட்டு … Continue reading நேற்று தொடங்கிய மக்கள் தேமுதிகவுக்கு தொகுதி; ஆதித்தமிழர் கட்சிக்கு திமுகவின் இதயத்தில் மட்டும் இடமா?