கூட்டம் வராததுதான் கருணாநிதியின் சுற்றுப்பயண ரத்துக்குக் காரணமா?

திமுக தலைவர் கருணாநிதியின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க சுற்றுப்பயணம் மாற்றியமைக்கப்பட்டதாக தொண்டர்களுக்கு விளக்கம் அளித்திருந்தார் கருணாநிதி. இந்நிலையில் சென்ற வார சுற்றுப்பயணத்தின் போது தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை என்று சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. தற்போது அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது. கருணாநிதியின் பேச்சைக் கேட்க, முதல் பத்து வரிசைகளுக்குள் மட்டும் மக்கள் இருக்கிறார்கள். பின்னால் போடப்பட்டிருந்த இருக்கைகள் காலியாக இருக்கின்றன. பொதுவாக, … Continue reading கூட்டம் வராததுதான் கருணாநிதியின் சுற்றுப்பயண ரத்துக்குக் காரணமா?

சைதாப்பேட்டையில் கருணாநிதி பிரச்சாரம் முழு உரை

சைதாப்பேட்டையில் தனது பிரச்சார பயணத்தை சனிக்கிழமை தொடங்கினார் திமுக தலைவர் கருணாநிதி. தொடக்க பிரச்சாரக் கூட்டத்தில் கருணாநிதி ஆற்றிய உரை: “சைதைத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தம்பி மா. சுப்பிரமணியன் அவர்களே, ஆலந்தூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தம்பி தா.மோ.அன்பரன் அவர்களே, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகின்ற தம்பி தனசேகரன் அவர்களே, வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுகின்ற வாகை சந்திரசேகர் அவர்களே, சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிடுகின்ற அரவிந் ரமேஷ் அவர்களே மற்றும் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்ற திராவிட … Continue reading சைதாப்பேட்டையில் கருணாநிதி பிரச்சாரம் முழு உரை

கருணாநிதி கம்யூனிஸ்டுகளை விரும்புகிறாரா வெறுக்கிறாரா?

சாதாரணமாக பேசும்போது யாரை அதிகம் விரும்புகிறோமோ அல்லது வெறுக்கிறோமோ அவர்கள் நம்மை அறியாமல் வெளிப்பட்டு விடுவார்கள். சனிக்கிழமை பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கிய திமுக தலைவர் கருணாநிதி, பிரச்சார உரையின் ஒரு கட்டத்தில் தோழமைக்கட்சிகள் பற்றி பேசியபோது காங்கிரஸ் என்பதற்குப் பதிலாக கம்யூனிஸ்டுகள் என்று பேசினார். சில நொடிகள், காங்கிரஸ் என்று சொன்ன வாக்கியத்தைத் திருத்தினார். கம்யூனிஸ்டுகளை திமுக தலைவர் வெறுக்கிறாரா, விரும்புகிறாரா அவரவர் முடிவுக்கே விட்டுவிடுகிறோம். ஆனால் நடக்கிற சட்டமன்றத் தேர்தல் திருவிழாவில் இது ஒரு ரசிப்புக்குரிய … Continue reading கருணாநிதி கம்யூனிஸ்டுகளை விரும்புகிறாரா வெறுக்கிறாரா?