#அவசியம்படியுங்கள்: கண்ணையாவை கொண்டாடுங்கள் ஆனால் அதோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்!

வில்லவன் இராமதாஸ் கண்ணையா குமாரின் உரை பாமரத்தனமானதாக இருப்பதாகவும் அதனை உணராமல் பலரும் பரவசத்தோடு பதிவதாகவும் சில (இடதுசாரிகள்)  பதிவுகளை காண நேர்ந்தது. மேலும் இப்படி உருவான முன்னாள் மாணவர் தலைவர்கள் கடைசியில் இந்த அமைப்போடு சமரசம் செய்துகொண்டதாகவும் சில தரவுகள் பகிரப்பட்டிருக்கின்றன (அசாம் கன பரிசத் கட்சி ஒரு மாணவ தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சி). இவற்றை முரட்டுத்தனமான மறுப்பது சரியாக இருக்காது. முதலில் பாமரத்தனம் என்பது ஆட்களைப் பொறுத்து மாறுபடும். இந்தியாவின் சிறந்த மார்க்சியவாதியை தெரிவுசெய்து … Continue reading #அவசியம்படியுங்கள்: கண்ணையாவை கொண்டாடுங்கள் ஆனால் அதோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்!

’பொதுத் தொகுதியில் தலித்’ சொல்லாடலும் அரசியல் தீண்டாமையும்

அறிவழகன் கைவல்யம் "அவாளை எல்லாம் ஆத்துக்குள்ள ஏன் அலவ் பண்றேள்" என்று சொல்கிற ஒரு பார்ப்பனரைக் கூட மன்னிக்கலாம், ஆனால், "பொதுத் தொகுதியில் ஒரு தலித்தை நிற்க வைத்திருக்கிறோம்" என்று சொல்கிற எவரையும் மன்னிக்க முடியாது, அந்தச் சொற்களின் பின்னால் ஒரு ஆழமான சாதிய வன்மமும், அரசியல் தீண்டாமையும் இருக்கிறது. பொதுத் தொகுதி ஒன்றும் தலித்துகளுக்கு நீங்கள் வழங்கும் பிச்சைப் பாத்திரம் அல்ல ஆண்டைகளே, சமூக அக்கறையும், அரசியல் அறிவும், பொது வாழ்வில் அனுபவமும் மிக்க எவரும் … Continue reading ’பொதுத் தொகுதியில் தலித்’ சொல்லாடலும் அரசியல் தீண்டாமையும்

பெரியாரை நினைக்க: “தமிழன் திராவிடன்னு சொல்லி பள்ளு-பறை எல்லாம் ஒன்னா ஆக்கிட்டான்”

எழுத்தாளர் ப்ரேம் பெரியார் எனும் பெயரை வெறுக்கக் கற்றுத் தந்த பெரியவர்கள் வழியாகவே நான் பெரியாரை அறிந்து கொண்டேன். எனது அரசியல் கல்வி பெரியார் எதிர்ப்பு வழி உருவானது. கம்யூனிசம் பெரியாரியம் இரண்டையும் வெறுக்கவும் அவற்றை வேரோடு அழிக்கவும் தம் வாழ்க்கையை அளித்த மனிதர்களைக் கொண்ட ஊரும்-அக்காலமும் எனக்கு முதலில் அச்சத்தை உருவாக்கியது, பிறகு கேள்வியை உருவாக்கியது. கம்யூனிசமாவது ஒரு கட்சி, ஒரு பெருங்கூட்டம் அதனை ஒரு அமைப்பு எனக்கண்டு எதிர்த்தனர் பலர். பெரியாரைத் தனி மனிதராக, … Continue reading பெரியாரை நினைக்க: “தமிழன் திராவிடன்னு சொல்லி பள்ளு-பறை எல்லாம் ஒன்னா ஆக்கிட்டான்”