ப.ஜெயசீலன் "revenge is the purest human emotion" தலித் சினிமாக்களில் தவிர்க்கமுடியாத ஒரு கூறாக "counter narrative" இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். தங்களை பற்றிய உண்மைக்கு புறம்பான பொது சித்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் அல்லது மறுக்கும் அல்லது சிதைக்கும் முனைப்பை தலித்திய கலை, இலக்கிய, சினிமாவில் நீங்கள் காணலாம். தலித்துகள் பற்றிய மிக விஸ்தாரமான, நுணுக்கமான, தேர்ந்த கதையாடல்கள் பார்ப்பனிய சனாதனத்தை உள்வாங்கி பார்பனியர்களால், சாதி ஹிந்துக்களால் ஏன் தலித்துகளாலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த கதையாடல்கள் எல்லாமும் … Continue reading தலை துண்டிக்கப்பட்ட கடவுள்களின் புதல்வன் “கர்ணன்” | பகுதி – 2
குறிச்சொல்: கபாலி
ஜானி வந்துடாம்பா!: casteless collective இசை நிகழ்ச்சி குறித்து…
ப. ஜெயசீலன் அமெரிக்க கருப்பின போராட்ட வரலாறு அதி உன்னதமான அறம் சார்ந்த மானுட விடுதலைக்கான, சமுத்துவத்திற்கான எளிய,வறிய, தன்னடையாளம் பறிக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் போர் குணத்தையும், அவர்கள் அடைந்த உன்னத வெற்றிகளையும் உள்ளடக்கியது. அமெரிக்க கருப்பின மக்களின் போராட்டம் என்பது தங்களின் பூர்விக மண்ணிலிருந்து பிடுங்கி எறியப்பட்டு, அவர்களின் கலை,இலக்கியம், மொழி, மதம், அடையாளம், சடங்குகள் என அவர்கள் சார்ந்த எல்லாவற்றையும் இழந்து, எல்லாமும் பறிக்கப்பட்டு மிஞ்சிப்போனவைகளையும் இழிவென கற்பிக்கப்பட்டு அதை சார்ந்து அவமானத்திற்க்கு உள்ளான … Continue reading ஜானி வந்துடாம்பா!: casteless collective இசை நிகழ்ச்சி குறித்து…
“பன்றி” யார்? : பகுதி -3
தேசிய/மாநில விருது பெற்ற இயக்குனர் ரோஹித், முத்து கிருஷ்ணனின் மரணத்தை முன்னிட்டு தலித் அமைப்புகளை குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறார்...
அங்குசெட்டிபாளைய மாணவியின் பரணியும் கபாலியின் இறுதி வசனமும்….
மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார் வடுக்கப்பட்டி ஜூலை 2013, அருண்குமார் தலித் மாணவன் தன்னுடைய பள்ளிக்கு சென்றுவிட்டு தன் காலனிக்கு கையில் செருப்புடன் வந்தான்.அப்போது அவன் நண்பர்கள் கிரிகெட் விளையாடிக்கொண்டிருந்தனர். அவனும் சேர்ந்து கொண்டான், வெயில் தாளாதால் அவனுடைய செருப்பு மேல் நின்றுக்கொண்டிருந்தான். அதை பார்த்த ஆதிக்க சாதியை சார்ந்த ஒருவன் அவனை தெருத் தெருவாய் செருப்பை தலை மீது சுமந்து நடக்கவைத்தான். மனம் ஒடிந்த அந்த தலித் மாணவன் பள்ளிக்கு போகாமல் முடங்கி போனான். ஆகஸ்ட் 29 … Continue reading அங்குசெட்டிபாளைய மாணவியின் பரணியும் கபாலியின் இறுதி வசனமும்….
இம்மானுவேல் சேகரனைப் போலச் செய்திருந்த கபாலி: சிலபிற்சேர்க்கைக் குறிப்புகள்
ஏர் மகாராசன் அண்மையில் வெளியான கபாலி படம் குறித்து த.தருமராசு அவர்களின் முகநூல் பதிவுகள் குறித்துக் காட்டமான பதிவுகள் இரு தரப்பிலும் வெளிப்பட்டன. போதாக்குறைக்கு நானும் ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தேன். கபாலி படம் தமிழ்த் தேசிய அரசியலையும் பேசவில்லை , தலித் அரசியலையும் பேசவில்லை. இரஞ்சித் இயக்கத்திலும் தாணு தயாரிப்பிலும் இரசினி நடித்த ஒரு வணிகப் படம் அவ்வளவே. ஆயினும் , தமிழ்த் திரையில் காட்டப்படாத காட்சிகளும் பேசப்படாத உரையாடல்களும் பதிவு செய்துள்ளது என்பதை ஏற்றுக் … Continue reading இம்மானுவேல் சேகரனைப் போலச் செய்திருந்த கபாலி: சிலபிற்சேர்க்கைக் குறிப்புகள்
கபாலியும் ஜோக்கரும்: மாயநதியில் மிதந்துவரும் பெருந்தீ – ஹெச்.ஜி.ரசூல்
ஹெச்.ஜி.ரசூல் கபாலியும் ஜோக்கரும் தமிழில் அண்மையில் வெளிவந்து பரவலாகப்பேசப்படும் இரண்டு திரைப்படங்கள். தமிழ்ரசிகர்களை இப்படங்கள் எப்படியோ ஒரு வகையில் இருதுருவங்களாக நின்று ஈர்த்திருக்கின்றன. கபாலியின் பலம் என்பதே அது தன் கதைப்புலத்தில் நிகழ்த்திக்காட்டிய தமிழர் அரசியல் மற்றும் தலித் அரசியல் என்பதாக புரிந்துகொள்ளலாம்.அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இளம் இயக்குனர் பா.ரஞ்சித், கபாலியில் ரஜினிகாந்தை மிக நேர்த்தியாக அவரது இயல்பும் தனித்துவமும் மாறாமல் படைத்துக் காட்டியுள்ளார். ஒரு காலத்தில் எம்ஜிஆர் திரைப்படங்களில் எம்ஜிஆர் விவசாயி, தொழிலாளி, மீனவநண்பன், ரிக்ஷாக்காரன் … Continue reading கபாலியும் ஜோக்கரும்: மாயநதியில் மிதந்துவரும் பெருந்தீ – ஹெச்.ஜி.ரசூல்
”சாதித் திமிரைத் தவிர வேறு எதுவும் அற்ற தமிழ் மனம் அது”: பிரேம்
பிரேம் திரைப்படத்தால் எந்தத் தீமையையும் புதிதாக உருவாக்க முடியாது ஆனால்; புதிதாக எந்த நன்மையும் உருவாகாமல் அதனால் பார்த்துக்கொள்ள முடியும்! செய்திக்கப்பால் என்ற ஒரு நிகழ்ச்சியில் கபாலி பட அரசியல் பற்றி ஒரு திரைப்பட இயக்குநர் தெரிவித்த கருத்து பற்றி சற்றே சீற்றத்துடன் கூடிய ஒரு குறிப்பைப் பார்த்தேன். அது பற்றி அவ்வளவு கோபப்பட என்ன உள்ளது? படிப்பதை விட பார்க்கலாம் என்று தோன்றியது. 4 நிமிடம் மற்றும் 6 நிமிட அளவுள்ள இருகாட்சிகள். அது ஒரு நீண்ட நிகழ்ச்சியில் ஒரு … Continue reading ”சாதித் திமிரைத் தவிர வேறு எதுவும் அற்ற தமிழ் மனம் அது”: பிரேம்
தமிழ் திரையுலகின் ஸ்டான்லி கூப்ரிக் கரு.பழனியப்பன்…நமக்கு புரியாத விஷயங்களை புரிந்து வைத்துள்ள மாமேதை..
ப .ஜெயசீலன் 2000 A space odyssey என்ற திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகியும் இன்றும் அதன் இறுதி காட்சியில் இயக்குனர் சொல்ல வந்த உட்பொருள் குறித்து பெரும் விவாதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படியான ஒரு படத்தை இயக்கிய ஸ்டான்லி கூட தன்னிடம் கேள்வி எழுப்பியவரை பார்த்து நான் சொல்வது உங்களுக்கு புரியாது என்று சொன்னதில்லை. தமிழ் திரையுலகின் ஸ்டான்லி கூப்ரிக் கரு.பழனியப்பன் அவர்கள் சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினி கரு. பழனியப்பன் தாடி … Continue reading தமிழ் திரையுலகின் ஸ்டான்லி கூப்ரிக் கரு.பழனியப்பன்…நமக்கு புரியாத விஷயங்களை புரிந்து வைத்துள்ள மாமேதை..
‘அப்பா’: இருக்கக்கூடாத பிற்போக்குத்தனத்தின் கடைக்கூறொன்று சமுத்திரக்கனியிடம் இருக்கிறது
நிலா லோகநாதன் அப்பா திரைப்படம் நல்ல திரைப்படமெனவும் அது கபாலி போன்ற வணிக சினிமாவினால் காணாமல் போய்விட்டதெனவும் நிறைய நண்பர்கள் வருத்தமுடன் எழுதியிருந்தார்கள். எனக்கென்னவோ சமுத்திரக்கனிக்கு இருக்கக் கூடாத பிற்போக்குத்தனத்தின் கடைக்கூறொன்று இருப்பதைப் போலப்படுகிறது. நாடோடிகள் மாதிரியான "மெச்சத்தக்க"படத்தை எடுத்தவரல்லவா? அப்பா திரைப்படம் தொடங்கும் போது, கூரையில் கயிற்றைக் கட்டி இழுத்துக்கொண்டு வலியைத் தாங்கி வீட்டில் பிரசவிக்கிறார் அந்தப் பெண். சமுத்திரக்கனி அதைத்தான் வலியுறுத்துகிறார். ஆஸ்பத்திரிக்குச் சென்றால் வெட்டிப்போட்டு விடுவார்கள் என்கிறார். அதற்கு முதற்காட்சியில், பக்கத்து வீட்டுப் … Continue reading ‘அப்பா’: இருக்கக்கூடாத பிற்போக்குத்தனத்தின் கடைக்கூறொன்று சமுத்திரக்கனியிடம் இருக்கிறது
ஸ்வாதி கொலையும் சமுத்திரக்கனியின் கபாலி விமர்சனமும்: ப. ஜெயசீலன்
ப. ஜெயசீலன் ஸ்வாதி கொலை குறித்து நான் முதன் முதலில் பத்திரிக்கை செய்தியாக படித்த பொழுது அந்த கொலையின் ஊடாக நிகழ்த்த பட்டிருந்த அந்த வன்முறை மிக மிக அதிர்ச்சியாகவும் மிக மிக அறுவெறுப்புப்பூட்ட கூடியதாகவும் இருந்தது. எனக்கு அந்த செய்தியை படித்த பின் ஏனோ முதலில் நினைவுக்கு வந்த பெயர் சமுத்திரக்கனி. சமுத்திரக்கனியின் "நாடோடிகள்" படத்தை நான் பார்த்த பொழுது ஒரு நாகரீக சமூகத்தில் ஒரு வெகுஜன ஊடகமான சினிமாவில் இப்படி பட்ட கதையை சிந்திக்க … Continue reading ஸ்வாதி கொலையும் சமுத்திரக்கனியின் கபாலி விமர்சனமும்: ப. ஜெயசீலன்
மோடிடா!: கபாலி ரீமிக்ஸ்..
கரு. பழனியப்பன் சாதி பற்றி பேசுவதை ஏன் தவிர்த்தார்? நியூஸ் 7 தொகுப்பாளர் கேள்வி!
நியூஸ் 7 தொலைக்காட்சியில் வெளியான ‘செய்திக்கு அப்பால்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் கரு. பழனியப்பன், அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மிருனாள் சரணை மூக்குடைத்து விட்டதாகக் கூறி, அந்த வீடியோவைப் பகிர்ந்து வைரலாக்கிக் கொண்டிருக்கிறார்கள் சமூக ஊடக மக்கள். உண்மையில் என்ன நடந்தது என்பதை நிகழ்ச்சி தொகுப்பாளரே எழுதியிருக்கிறார் படியுங்கள்! Mrinal Saran செய்திக்கு அப்பால் நிகழ்ச்சியில் நான் கபாலி படம் பற்றி திரு கரு.பழனியப்பன் அவர்களுடன் உரையாடும் வீடியோ நேற்றில் இருந்து வைரலாகிக் கொண்டிருக்கிறது. கரு.பழனியப்பனைப் … Continue reading கரு. பழனியப்பன் சாதி பற்றி பேசுவதை ஏன் தவிர்த்தார்? நியூஸ் 7 தொகுப்பாளர் கேள்வி!
வைரமுத்துவின் அந்த சிரிப்பு, யதார்த்தமானது அல்ல, வெறும் வெறுப்பில் வந்தது அல்ல, அது விஷமம்!
வாசுகி பாஸ்கர் வைரமுத்து பேசியதை நானும் கூட ரொம்ப லைட் டோன்ல எடுத்துகிட்டோமோ என தோணியது, அதற்கு காரணம் இருக்கு, வைரமுத்து ஒரு முற்போக்குவாதி, திராவிட அரசியல் சார்பு கொண்டவர், இறை மறுப்பாளர், என்கிற விவகாரங்களால் அவர் பேசியதில் மிஞ்சி போனால் வெறும் வாய்ப்பு மறுக்கப் பட்ட தொனி மட்டுமே என விட்டு விடலாமா என்கிற போது தான் அந்த வீடியோவில் அந்த நமட்டு சிரிப்பு, ஏளன சிரிப்பு, என்னை உருத்திக் கொண்டே இருக்கிறது! இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்குமான … Continue reading வைரமுத்துவின் அந்த சிரிப்பு, யதார்த்தமானது அல்ல, வெறும் வெறுப்பில் வந்தது அல்ல, அது விஷமம்!
“குளிக்கும் போதும் கோட்-சூட் போட்டுக்கிட்டு…”: இதற்கு என்ன விளக்கம் கவிஞரே!
கபாலி தோல்வி படம் என்று வைரமுத்து விழா ஒன்றில் பேசியது சமூக ஊடகங்களில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். விழாவில் பேசும்போது அவரது கடவுள் நம்பிக்கையோ எனது கடவுள் மறுப்போ எங்கள் நட்புக்கு எந்த வகையிலும் தடையாய் இருந்ததில்லை என்பதை விளக்கிச் சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியாத இடத்திலும் புரிந்துகொள்ள வேண்டும் என்று உணர்ச்சி ஓட்டத்தில் குறிப்பிட்டேன். நான் … Continue reading “குளிக்கும் போதும் கோட்-சூட் போட்டுக்கிட்டு…”: இதற்கு என்ன விளக்கம் கவிஞரே!
புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான ‘கபாலி’: ரஜினிகாந்த் கடிதம்!
சமீபத்தில் வெளியான தனது ‘கபாலி’ படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அதில், “என்னை வாழவைக்கும் தமிழக மக்களாகிய அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள். ‘லைக்கா’ தயாரிப்பில் திரு. ஷங்கர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகும் ’2.0’ மற்றும் நண்பர் தாணு அவர்களின் தயாரிப்பில் பா. ரஞ்சித்தின் புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான மலேசியாவிலும் இந்தியாவிலும் எடுக்கப்பட்ட ‘கபாலி’ படத்தில் ஓய்வில்லாமல் நடித்ததன் காரணமாக கொஞ்சம் உடம்பிற்கும், மனதிற்கும் ஓய்வு தேவைப்பட்டது. அதையொட்டி இரண்டு … Continue reading புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான ‘கபாலி’: ரஜினிகாந்த் கடிதம்!
இந்திய அளவில் கபாலி வசூல் சாதனை; ஆனால் கவிஞர் வைரமுத்து கபாலி தோல்வி என்கிறார்!
ரஜினிகாந்த் நடித்து கடந்த 22ம் தேதி காபலி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. 2016ம் ஆண்டில் இதுவரை எந்த படமும் நிகழ்த்திராத சாதனயை இப்படம் நிகழ்த்தியுள்ளது. கடந்த மாதம் இந்தி நடிகர் சல்மான்கானின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் இந்தியாவில் முதல் நாள் செய்த வசூலே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இந்தியாவில், சுல்தான் திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ. 36.54 கோடி வசூல் செய்திருந்தது. கபாலி முதல் நாளில் மட்டும் ரூ. 48 கோடி வசூல் செய்ததாக … Continue reading இந்திய அளவில் கபாலி வசூல் சாதனை; ஆனால் கவிஞர் வைரமுத்து கபாலி தோல்வி என்கிறார்!
#கபாலி முதன்முறையாக ரஜினி பெண்களை தாழ்த்தி பேசாமல் நடித்திருக்கிறார்: மனநல மருத்துவர் ஷாலினியின் பாராட்டு
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கபாலி’ குறித்து பாராட்டுகளும் சர்ச்சைகளும் விவாதங்களும் எதிர்ப்புகளும் வந்தவண்ணம் உள்ளன. மனநல மருத்துவர் ஷாலினி ஒரு மாற்றுப்பார்வையில் ‘கபாலி’யைப் பார்த்திருக்கிறார். https://www.facebook.com/psrf.india/posts/10153667450916994 “முதன்முறையாக ரஜினிகாந்த், பெண்களை தாழ்த்தி பேசாமல் நடித்திருக்கிறார். அவருடைய மகள் சுயசார்புள்ள பெண்ணாக இருக்கிறார். இதுபோன்ற நேர்மறையான கதாபாத்திரங்களை காட்டியதற்காக இயக்குநர் ரஞ்சித்திற்கு நன்றி சொல்ல வேண்டும். ரஞ்சித்துக்கு என்னுடைய பாராட்டை எவரேனும் தெரிவியுங்கள். அதுபோல, அடுத்த படைப்பில் கருப்புத் தோலுடைய பெண்ணை கதாநாயகியாக நடிக்கவைக்க … Continue reading #கபாலி முதன்முறையாக ரஜினி பெண்களை தாழ்த்தி பேசாமல் நடித்திருக்கிறார்: மனநல மருத்துவர் ஷாலினியின் பாராட்டு
தினமணி ‘கபாலி’ விமர்சனம்: சமூக ஊடகங்களில் பெருக்கெடுக்கும் எதிர்வினை
தினமணி எழுதிய ‘கபாலி’ விமர்சனத்துக்கு தொடர்ந்து கண்டனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் முதல் தொகுப்பை இங்கே காணலாம். தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள சில பதிவுகளை இங்கே தந்திருக்கிறோம்... Yamuna Rajendran தமிழ் சினிமா வெளியில் ரஞ்ஜித் ஒரு நிகழ்வு. அவர் முன் வைத்திருககும் சினிமா ஜானரும் ஒரு நிகழ்வு. சிவப்பு மல்லியைத் தொடர்ந்து அதே பாணியில் ராம நாராயணன் இரு படங்கள் எடுத்தார். அட்டகத்திக்கும் கபாலிக்கும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. பொதுவாக சினிமா வெகுஜனங்களின் உளவியலாக்கத்தில் … Continue reading தினமணி ‘கபாலி’ விமர்சனம்: சமூக ஊடகங்களில் பெருக்கெடுக்கும் எதிர்வினை
இந்துத்துவத்திற்கு ஆதரவான பண்பாட்டைப் பேசியிருந்தால் கபாலி கொண்டாடப்பட்டிருக்கும்!
வேந்தன். இல எங்கே பார்த்தாலும் 'கபாலி', யார பார்த்தாலும் 'கபாலி'.. யார்ரா அந்த 'கபாலி' ? 'கபாலி' - பெயர் காரணம் 'கபாலி' பெயர் காரணத்தை பேரா.செல்வக்குமார் அவர்கள் தான் ஒரு முறை என்னிடம் சொன்னார். புத்தர் உணவு வாங்குவதற்காக பயன்படுத்திய திருஓட்டின் பெயர் தான் 'கபாலம்'. அதை தான் பூர்வீக மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு 'கபாலி' என்று பெயர் சூட்டினர் என்றார். பௌத்தத்தின் மீதான வெறுப்பு தான் தீண்டாமைக்கு காரணம் என்பார் அம்பேத்கர். இன்று கபாலி … Continue reading இந்துத்துவத்திற்கு ஆதரவான பண்பாட்டைப் பேசியிருந்தால் கபாலி கொண்டாடப்பட்டிருக்கும்!
#கபாலி: ரஜினி ஏன் ரஞ்சித்தை தேர்ந்தெடுத்தார்?
Rajasangeethan John 1990-ல் வந்த படம். அதுவும் இதேதான். A retiring don, who wants to get back to his family, is threatened by a gang wa, for one last time. படம் Godfather 3. இந்த லைனை செய்வதானால், தமிழில் யாரால் செய்ய முடியும்? கமல் மொத்த Godfather படங்களையும் நாயகன் படத்திலேயே முடித்துவிட்டார். வேறு வழியில்லை. பாட்ஷா ரஜினியால் மட்டும்தான் முடியும். இப்படியான லைனை ரஞ்சித் ரஜினிக்கு … Continue reading #கபாலி: ரஜினி ஏன் ரஞ்சித்தை தேர்ந்தெடுத்தார்?
“பேரன்புள்ள பா.இரஞ்சித்” : ஒரு சினிமா விமர்சகரின் கடிதம்!
கீட்சவன் பேரன்புள்ள பா.இரஞ்சித், நான் தனிமையில் இருக்கும்போதெல்லாம் என் அருகே அமர்ந்திருக்கும் எனக்குப் பிரியமானவர்களிடம் பேசுவது பழக்கம். அவர்கள் என் கண்களுக்கு மட்டுமே தெரிவார்கள். சக மனிதர்கள் பார்வையில் இது மனநோய் போல் தெரியலாம். எனக்கு இது வாழ்க்கையின் ஒரு முக்கியப் பகுதி. அப்படித்தான் உங்களோடு பேசினேன். அதன் வரிவடிவம்தான் இந்தக் கடிதம் என்று கருதிக்கொள்ளலாம். #அட்டக்கத்தி எனும் அற்புத சினிமாவைக் கண்டு ரசித்த நாள் முதல் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்... ரவுடிகளையும், சமூகப் பின்னணித் … Continue reading “பேரன்புள்ள பா.இரஞ்சித்” : ஒரு சினிமா விமர்சகரின் கடிதம்!
அதென்ன “லோ பட்ஜெட்’ அடித்தட்டு சிந்தனை? தினமணி சினிமா விமர்சனத்தில் பா. ரஞ்சித் மீது ஏன் இத்தனை காழ்ப்பு?
அண்மைக்காலமாக ‘தினமணி’ தலித் விரோதத்தை வெளிப்படையாக வன்மத்துடன் வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறது. ஸ்வாதி கொலை தொடர்பில் கைதான ராம்குமார் தலித் என்ற ஒரே காரணத்துக்காக அவரை விசாரணை, தீர்ப்பு இன்றியே குற்றவாளியாக்கி தூக்கில் ஏற்ற எழுதியது. இப்போது பா. ரஞ்சித், தலித் என்ற ஒரே காரணத்துக்காக அவர் இயக்கிய ‘கபாலி’ படம் குறித்து மிக வன்மமான முறையில் ஒரு விமர்சனத்தை எழுதியுள்ளது. இதற்கு முன் இப்படியான விமர்சனங்கள் வெளிவந்த எவ்வித சுவட்டையும் நாம் காணவில்லை. கபாலியை தொழிற்நுட்ப ரீதியாக விமர்சிக்க … Continue reading அதென்ன “லோ பட்ஜெட்’ அடித்தட்டு சிந்தனை? தினமணி சினிமா விமர்சனத்தில் பா. ரஞ்சித் மீது ஏன் இத்தனை காழ்ப்பு?
#கபாலி பின்னணி கதை: மலேசியா வாழ் தமிழர்கள் ஏன் கேங்கஸ்டர் ஆனார்கள்?
Jeyannathann Karunanithi சிங்கையில் இருந்த ஒன்றரை வருடங்களும் இங்கு நான் படித்த புத்தகங்களும், கேட்ட கதைகளும் எதற்கு பிரயோஜனமாகும் என்ற கேள்வி என் மனதில் என்றும் இருந்திருக்கிறது. இந்த மண்ணிலிருந்து வெளியாகும் நேரத்தில் வந்தது அதற்கான விடை, மலேசிய வாழ் தமிழர்களில் பெரும்பான்மையானவர்களான தோட்ட கூலித் தொழிலாளர்களின் கதையை பேசும் கபாலியை புரிந்துகொள்ளவேயென்று. காலம் காலமாக ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்கள் பின் உலகமயமாக்கல், மலிவான செயற்கை ரப்பர் உற்பத்தி தொழிற்நுட்பம், இயற்கை ரப்பரின் விலை … Continue reading #கபாலி பின்னணி கதை: மலேசியா வாழ் தமிழர்கள் ஏன் கேங்கஸ்டர் ஆனார்கள்?
#கருப்புநெருப்புடா: ரஜினிகாந்துக்கு எதுக்கு ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் க்ரீம்?
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய கருப்பு நிறத்துக்காக அறியப்பட்டவர். அண்மையில் பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா, கருப்பான நடிகர் இந்தளவுக்கு எப்படி ஸ்டாராக முடிந்தது என்று எழுதியிருந்தார். ‘கபாலி’ தென்னிந்தியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் படம். தென்னிந்தியர்களின் நிறமே கருப்புதான். தலித் அரசியலை பேசும் படம் எனவும் விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஆனால், இந்தப் படத்துக்கு ஸ்பான்ஸர் செய்துள்ளது இமாமி ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் க்ரீம். நெருப்பாக உள்ள ஆண்களுக்கான க்ரீம் என விளம்பரத்தில் சொல்லப்படுகிறது. ஆண்கள் ஃபேர்னஸ் க்ரீம் … Continue reading #கருப்புநெருப்புடா: ரஜினிகாந்துக்கு எதுக்கு ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் க்ரீம்?
“கபாலி” ஒரு தலைகீழாக்கம்: ப்ரேம்
பிரேம் “கிவின்டின் டராண்டினோ தமிழில் தொழில்நுட்பம் சார்ந்து மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திய காட்சிமொழியாளர். ஆனால் ஜாங்கோ அன்செயின்ட் (2013), இன்க்ளோரியஸ் பாஸ்டெர்ட்ஸ் (2009) இரண்டின் காட்சிவழி வழக்காறு, அரசியல் நடத்தையியல் இரண்டையும் தமிழின் திரைக்கதைக்காரர்கள் உள்ளே நுழையவிடாமல் பார்த்துக்கொள்வார்கள். அதன் வன்முறை, கையை வெட்டுதல், காலை ஒடித்தல் எல்லாம் களிப்புக்கானவையாக இங்கு மாறும். ஆனால் அதில் உள்ள அரசியல்- அச்சுறுத்தல் இங்கு கவனமாகத் தவிர்க்கப்படும்.” என “தமிழில் பேசினாலும் தமிழ் பற்றிப் பேசாத படங்கள்” … Continue reading “கபாலி” ஒரு தலைகீழாக்கம்: ப்ரேம்
“25 வருஷமா ரஜினியை எப்படி பார்க்க ஆசைப்பட்டோமோ அப்படி ஒரு ரஜினிப்படத்தை கொடுத்து இருக்கீங்க ரஞ்சித்!”
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகியுள்ள ‘கபாலி’ படம் குறித்து விமர்சனங்கள் வெளியாகத்துவங்கியுள்ளன. முதல் கருத்தாக Rajarajan RJ முகநூலில் பதிவு: “25 வருஷமா ரஜினியை எப்படி பார்க்க ஆசைப்பட்டோமோ அப்படி ஒரு ரஜினிப்படத்தை கொடுத்து இருக்கீங்க ரஞ்சித்! கதாநாயகனில் இருந்து மீண்டும் கதையின் நாயகனாக சூப்பர் ஸ்டாரை ஆக்கி இருக்கீங்க! தூய நரையில் காதல் வழியும் காட்சிகளில் கண்களிலும் ஆனந்தத்தை வழிய வைத்துவிட்டீர்கள் ரஞ்சித்! மீண்டும் ஒரு "காளியை", "தளபதியை", "பரட்டையை" "கபாலியாக" எங்களுக்கு தந்து இருக்கிறீர்கள்! … Continue reading “25 வருஷமா ரஜினியை எப்படி பார்க்க ஆசைப்பட்டோமோ அப்படி ஒரு ரஜினிப்படத்தை கொடுத்து இருக்கீங்க ரஞ்சித்!”
இதோ #NeruppuDaTeaser நெருப்புடா பாடல் டீஸர்!
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே நடிக்கும் கபாலி படத்தின் ‘நெருப்புடா’ பாடல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. https://youtu.be/wg-kEWsL6Xc
15 வயது தலித் மாணவன் கொடூர கொலை;கபாலிக்கு அடித்துக் கொண்டிருக்கிறதா தமிழ் சமூகம்?
Joshua Isaac Azad மதுரை SMP காலனியை சேர்ந்த லக்ஷமணன் என்னும் பதினைந்து வயது மாணவன், 12.06.16 அன்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்புகையில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறான். மாணவனது உடலை வாங்க மறுத்து, விடுதலை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கொலையாளிகளை "எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மீது வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கும் சட்டத்தின்" கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து, கொலை தொடர்பாக ஆறு பேரை போலீசார் … Continue reading 15 வயது தலித் மாணவன் கொடூர கொலை;கபாலிக்கு அடித்துக் கொண்டிருக்கிறதா தமிழ் சமூகம்?
யார்ரா அந்தக் கபாலி?
ஒடியன் வைணவத்தில் 1 வடகலை 2 தென்கலை இருந்ததைப்போலவே சைவத்துக்குள் 1 வார்மம், 2 பாசுபதம், 3 காளாமுகம், 4 பைரவம் 5 மாவிரதம், 6 கபாலிகம், என ஆறு உட்பிரிவுகள் இருந்தது ஆறு பிரிவுகளில் கபாலிகம், காளமுகம் முக்கியமான பிரிவுகள், இந்த இரண்டு பிரிவுகளுக்குள் நடந்த சண்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அது தமிழ் வழிபாட்டுமுறைக்கும் சமஸ்கிருத வழிபாட்டுமுறைக்கும் இடையே நடந்த மோதல். இன்னும் எளிமையாகச் சொன்னால் தலக்கறி சாப்பிடுபவர்களுக்கு தயிர்வடை சாப்பிடுபவர்களுக்கும் இடையே நடந்த சண்டை! ஒரு கட்டத்தில் … Continue reading யார்ரா அந்தக் கபாலி?
#கபாலிடா: குறியீடு தேடும் சமூக வலைத்தள ரசிகர்கள்!
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தின் டீஸர் மே 1 ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது. வெளியிட்ட சில மணி நேரங்களில் கபாலி டீஸர் வைரலாக, சமூக வலைத்தளங்களில் கபாலி பட பேச்சே முதன்மையாக இருக்கிறது. http://www.youtube.com/watch?v=9mdJV5-eias Jeeva Bharathi கபாலி டீசரில் அரசியல் அடிமைகளுக்கு ஒரு செய்தி இருக்கு.... கொஞ்சம் நிமிரவும்... #கபாலிடா Swara Vaithee கபாலி நமக்கு இரண்டு வகையான வாய்ப்பை வழங்குகிறது. அதை ஒரு சினிமாவாக அணுகலாம், அல்லது அதன் ஒவ்வொரு அசைவிலும் … Continue reading #கபாலிடா: குறியீடு தேடும் சமூக வலைத்தள ரசிகர்கள்!
ரஜினிகாந்த் ரூ.10 கோடி வெள்ளநிவாரண நிதி
நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ரூ. 10 கோடி வெள்ளநிவாரண நிதி அளித்தார். முன்னதாக வரவிருக்கும் டிசம்பர் 12-ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.