டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்னய்யா குமார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று, டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை அவர் மீது அபராதம் உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று, பல்கலைக்கழகத்தை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பல்கலைக்கழகத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு ஆதரவான சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி தொடர்பான வழக்கில், நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது. முன்னதாக உமர் … Continue reading கன்னய்யா குமார் மீது எந்த நடவடிக்கையும் கூடாது: ஜே.என்.யூ பல்கலைக்கு நீதிமன்றம் உத்தரவு
குறிச்சொல்: கன்னய்யா குமார்
படுகொலை செய்யப்பட்ட கேரள தலித் மாணவி ஜிசாவின் தாயாருக்கு கன்னய்யா குமார், ஷெஹ்லா ரஷீத் ஆறுதல்
ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகிக்கள் கன்னய்யா குமார், ஷெஹ்லா ரஷீத் படுகொலை செய்யப்பட்ட கேரள தலித் மாணவி ஜிசாவின் தாயாரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். கேரளாவில் அமைந்திருக்கும் புதிய அரசு, ஜிசாவின் கொலையை விரைந்து விசாரிக்கும் எனவும் ஜிசாவின் தயாருக்கு தேவையான உதவிகளை செய்யும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மாணவர்களின் தாய் ஸ்மிருதி இரானிக்கு கன்னய்யா குமார் கடிதம்!
ஜேஎன்யு வளாகத்தில் பிப்ர வரி 9 அன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்த உயர் மட்ட அளவிலான விசாரணைக் குழு அந்த நிகழ்வு குறித்து ஜோட னையாகப் புனையப்பட்ட வீடி யோவை ஆதாரமாகக் கொண்டு இடதுசாரி மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் மீது பல்வேறுவிதமான தண்டனைகளை விதித்துள்ளது. இதனை எதிர்த்து அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவருமே என் குழந்தைகள் போன்றவர்கள் என்று ஒருசமயம் ஸ்மிருதி இரானி … Continue reading மாணவர்களின் தாய் ஸ்மிருதி இரானிக்கு கன்னய்யா குமார் கடிதம்!
ஜேஎன்யூவில் ஏழாவது நாளாக மாணவர்கள் உண்ணாவிரதம்: ’வீதிக்கு வா தோழா’ தமிழகத்திலிருந்து எழும் ஆதரவு பாடல்!
ஜவஹர்லால் நேரு பல்கலையில் ஏழுநாட்களாக, பல்கலை நிர்வாகத்தின் எதேச்சதிகாரத்தைக் கண்டித்து 14 மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இவர்களை ஆதரித்து வழக்கறிஞர் திவ்யா பாரதி, பாடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அதன் இணைப்பு கீழே... http://www.youtube.com/watch?v=EiuGyykTXaE
கன்னய்ய குமாரும், ரோஹித் வெமுலாவும் இடதுசாரி இயக்கத்தின் புதிய தளிர்கள் என்று நினைக்கிறீர்களா?: சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்
கேரளத்திலும் மேற்குவங்கத்திலும் முரண்படுகிறீர்களா என்பது உள்ளிட்ட தி எகனாமிக் டைம்ஸ் நாளேட்டின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி. தமிழில் : ச.வீரமணி. 2016ல் யார் வெற்றி பெறுவார்கள்? இடதுமுன்னணி கூட்டணியா? அல்லது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியா? இது ஒரு போராட்டம். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் உட்பட கடந்த சில சுற்று தேர்தல்கள் நடந்தபோது இருந்த நிலை இன்று கிடையாது. இந்த முறை, அனைத்துப் பகுதிகளிலும் போராட்டம். ... ஒரு … Continue reading கன்னய்ய குமாரும், ரோஹித் வெமுலாவும் இடதுசாரி இயக்கத்தின் புதிய தளிர்கள் என்று நினைக்கிறீர்களா?: சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்
உமர் காலித், அனிர்பென் பட்டாச்சார்யா பிணையில் விடுதலை!
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததாகக் கூறி தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் உமர் காலித், அனிர்பென் பட்டாச்சார்யா இருவருக்கு பிணை வழங்கியிருக்கிறது உயர்நீதிமன்றம். உமர், அனிர்பென் விடுதலை கொண்டாடும் ஜேஎன்யூ மாணவர்கள் http://www.youtube.com/watch?v=bcb4-MAUJCY
“கண்ணையா என்னுடைய நண்பர்; நான் புரபஸர் அல்ல; அந்தப் படத்தை நான்தான் என்னுடைய முகநூலில் பதிவிட்டேன்”: பக்தர்களின் அவதூறுக்கு பாதிக்கப்பட்ட பெண் பதில்
கடந்த மூன்று நாட்களாக ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் ஒரு பெண்ணுடன் அமர்ந்திருக்கும் படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கண்ணையா குமார் சோஃபாவில் அமர்ந்திருப்பது போலவும் சோஃபாவின் கைப்பிடி பகுதியில் அந்தப் பெண் அமர்ந்து, கண்ணையா தோளில் கைப் போட்டிருப்பது போலவும் அந்த படம் வெளியானது. இந்தப் படத்தை “ஜேஎன்யூவில் கல்வி, இந்த ஆசிரியர் கண்ணையா குமாரின் மடி மீது அமர்ந்து பாடம் நடத்துகிறார்; செவ்வணம்” என்ற வாசகத்துடன் பலர் பகிர்ந்துகொண்டனர். இதுகுறித்து விளக்கம் … Continue reading “கண்ணையா என்னுடைய நண்பர்; நான் புரபஸர் அல்ல; அந்தப் படத்தை நான்தான் என்னுடைய முகநூலில் பதிவிட்டேன்”: பக்தர்களின் அவதூறுக்கு பாதிக்கப்பட்ட பெண் பதில்
#அவசியம்படியுங்கள்: கண்ணையாவை கொண்டாடுங்கள் ஆனால் அதோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்!
வில்லவன் இராமதாஸ் கண்ணையா குமாரின் உரை பாமரத்தனமானதாக இருப்பதாகவும் அதனை உணராமல் பலரும் பரவசத்தோடு பதிவதாகவும் சில (இடதுசாரிகள்) பதிவுகளை காண நேர்ந்தது. மேலும் இப்படி உருவான முன்னாள் மாணவர் தலைவர்கள் கடைசியில் இந்த அமைப்போடு சமரசம் செய்துகொண்டதாகவும் சில தரவுகள் பகிரப்பட்டிருக்கின்றன (அசாம் கன பரிசத் கட்சி ஒரு மாணவ தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சி). இவற்றை முரட்டுத்தனமான மறுப்பது சரியாக இருக்காது. முதலில் பாமரத்தனம் என்பது ஆட்களைப் பொறுத்து மாறுபடும். இந்தியாவின் சிறந்த மார்க்சியவாதியை தெரிவுசெய்து … Continue reading #அவசியம்படியுங்கள்: கண்ணையாவை கொண்டாடுங்கள் ஆனால் அதோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்!
பலாத்காரம் பண்ணுவோம்;கொலை செய்வோம்: கன்னையா செய்திகளுக்காக பர்கா தத்தை மிரட்டும் மர்ம நபர்கள்….
கடந்த 4-ந்தேதியில் இருந்து,, தனக்கு டெலிபோனில் கொலை மிரட்டல் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளதாக, பத்திரிகையாளர் பர்கா தத் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, பர்கா தத், செவ்வாய்கிழமை டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராகி, வாக்குமூலம் அளித்தார். அப்போது, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பிரச்சினை குறித்து, தான் செய்தி வெளியிட்டதால், மர்ம நபர்கள், தன்னை டெலிபோனில் தொடர்பு கொண்டு, பாலியல் பலாத்காரம் … Continue reading பலாத்காரம் பண்ணுவோம்;கொலை செய்வோம்: கன்னையா செய்திகளுக்காக பர்கா தத்தை மிரட்டும் மர்ம நபர்கள்….
கன்னய்யா குமாரும் சுந்தர் பிச்சையும்: போஸ்டர் போட்டு அமெரிக்க குடிமகனுக்கு இந்திய சாயம் பூசும் பக்தர்கள்!
விஜயசங்கர் ராமச்சந்திரன் கண்ணையா குமாருக்கு எதிராக ஒரு போஸ்டர் சமூகவலைத் தளங்களில் வலம் வருகிறது. அதற்கு பதிலடியாக ஒரு போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கி, டிவிட்டரில் பதிவுசெய்திருப்பவர் ஸ்காட்சி என்பவர். “நான் உங்களுக்காக போஸ்டரில் சிறிய மாற்றம் செய்திருக்கிறேன் நண்பர்களே” என்று முதல் போஸ்டரை உருவாக்கியர்களுக்குச் சொல்கிறார் அவர். "Hey guys, I decided to fix this poster for you") Thanks to Venkatesh Chakravarthy போஸ்டர் 1. கண்ணையா குமாருக்கு வயது 29. … Continue reading கன்னய்யா குமாரும் சுந்தர் பிச்சையும்: போஸ்டர் போட்டு அமெரிக்க குடிமகனுக்கு இந்திய சாயம் பூசும் பக்தர்கள்!
#வீடியோ: ஜேஎன்யூவில் கன்னய்யா குமார் பேசியதன் தமிழ் டப்பிங்!
மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, நாடாளுமன்றத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை, ஜேஎன்யூ மாணவர்கள் விவகாரம் குறித்து பேசியதை தமிழக பாஜக தமிழில் டப் செய்து வெளியிட்டது. இப்போது இரானிக்கும் மோடிக்கும் பதிலடி கொடுக்கும்வகையில் பேசிய, கன்னய்யா குமாரின் பேச்சை தமிழில் டப் செய்திருக்கிறது தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. வீடியோ இணைப்பு கீழே... http://www.youtube.com/watch?v=SjDIS29Mquc
ஏபிவிபியின் அடுத்த இலக்கு அலகாபாத் பல்கலைக்கழகம்: ரோஹித் வெமுலா பாணியில் பல்கலைக்கழகத்தால் அலைக்கழிக்கப்படுகிறார் ரிச்சா சிங்
கன்னய்யா குமார், பிணையில் வெளியாகி ஜேஎன்யூ பல்கலை வளாகத்தில் ஆற்றிய உரை, பலருக்கு மகிழ்ச்சியையும் சிலருக்கு கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக பாஜகவுக்கும் அதைச் சார்ந்த ஆர் எஸ் எஸ் அமைப்பினருக்கும். இந்த வகையில் தான் கன்னய்யாவின் பேச்சுக்குக் கிடைத்த ஆதரவு குறித்து கேட்டபோது, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, ‘மாணவர்கள் அரசியல் செய்யக்கூடாது’ என்று கருத்து சொன்னார். அந்தக் கருத்து பாஜகவின் மிகப் பெரிய மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கும் பொருந்துமா என்கிற கேள்வியை பலர் முன்வைத்தனர். … Continue reading ஏபிவிபியின் அடுத்த இலக்கு அலகாபாத் பல்கலைக்கழகம்: ரோஹித் வெமுலா பாணியில் பல்கலைக்கழகத்தால் அலைக்கழிக்கப்படுகிறார் ரிச்சா சிங்
“துரோகி கன்னய்யா குமாரை சுட்டுக் கொன்றால் ரூ.11 லட்சம் பரிசு”
“துரோகி கன்னய்யா குமாரை சுட்டுக் கொன்றால் ரூ.11 லட்சம் பரிசு” டெல்லியில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் வாசகங்கள் இப்படித் தெரிவிக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன் வெளியான கன்னைய்யா குமார் குறித்த செய்திகளை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பூர்வாஞ்சல் சேனா என்று சொல்லிக் கொள்ளும் ஒரு அமைப்பு, “யார் இந்த துரோகி கன்னய்யாவை சுடுகிறார்களோ அவர்களுக்கு ரூ. 11 லட்சம் பரிசாக வழங்கப்படும்” என தெரிவித்து போஸ்டர்களை ஓட்டியுள்ளது. இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு இந்த அமைப்பின் … Continue reading “துரோகி கன்னய்யா குமாரை சுட்டுக் கொன்றால் ரூ.11 லட்சம் பரிசு”
விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை! தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்
விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் உரையாற்றினார். அதன் தமிழாக்கம் இங்கே... ஆங்கில மூலம்: இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன் இங்கிருக்கும் ஊடகங்களின் வாயிலாக ஜேஎன்யூவிற்கு ஆதரவாக நின்ற உலக மக்கள் அனைவருக்கும் நான் நன்றிசொல்ல விரும்புகிறேன். ஊடகங்களுக்கும், சிவில் சமூகத்திற்கும், அரசியலுக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்டும் ஜேஎன்யூவைக் காப்பாற்றவும், ரோஹித் வேமுலாவுக்கு நீதி கேட்டும் போராடும் அனைவருக்கும் நான் செவ்வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக அவர்களின் போலீஸ், அவர்களின் ஊடகங்கள் வாயிலாக எது சரி, எது தவறு … Continue reading விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை! தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்
“தேசியவாதம் என்பது இந்து ராஷ்ட்ரத்துடனோ, இஸ்லாமிய அரசுடனோ தொடர்புபடுத்தக் கூடியது அல்ல!”: ரோமிலா தாப்பர்
இந்தியா தற்சமயம் எதிர்க்கொண்டுவரும் தேசியவாதம், தேச விரோத விவாதங்கள் குறித்து வரலாற்றிஞர் ரோமிலா தாப்பருடன் ஸியா அஸ் ஸலாம் நடத்திய நேர்காணல். கேள்வி : தேசத் துரோகக் குற்றச் சாட்டு என்பது அலட்சியமாகவும் பொறுப்பற்ற முறையிலும் அரசை விமர்சனம் செய்யும் மாணவர்கள் மீது சுமத்தப்படுகின்றது. அனைத்து தனி மனித சுதந்திரத்தையும் அரசு நசுக்குகின்றது என எடுத்துக்கொள்ளலாமா? பதில் : தேசத் துரோகக் குற்றச் சாட்டானது மிகவும் கவனமாக பார்க்கவேண்டிய விஷயம். அதனை அண்மைக்காலத்தில் செய்யப்படுவது போன்று போகிறபோக்கில் … Continue reading “தேசியவாதம் என்பது இந்து ராஷ்ட்ரத்துடனோ, இஸ்லாமிய அரசுடனோ தொடர்புபடுத்தக் கூடியது அல்ல!”: ரோமிலா தாப்பர்
”இதோ ஒரு தலைவன் பிறந்துவிட்டான்”: கன்னய்யா குமாரின் உரை தலைப்புச் செய்திகளில்…
பிணையில் வெளிவந்த கன்னய்யா குமார், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் வியாழன் இரவு ஆற்றிய உரை குறித்துதான் இந்தியா இப்போது பேசிக்கொண்டிருக்கிறது. அவர் உரை குறித்து ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் செய்த அவதானிப்புகளின் தொகுப்பு இங்கே... தி வயர் இணையதளத்தின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜனின் பாராட்டு... https://twitter.com/svaradarajan/status/705483479228624896 கன்னய்யாவின் உரையை பலமுறை கேட்டேன். சிந்தனை தெளிவுமிக்க உரை. மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதைச் சொன்னார். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் … Continue reading ”இதோ ஒரு தலைவன் பிறந்துவிட்டான்”: கன்னய்யா குமாரின் உரை தலைப்புச் செய்திகளில்…
”நாடாளுமன்றத்தில் தீர்ப்பு சொன்னவர்களுக்கும் போலீஸுக்கும் நன்றி”:மூன்று வாரங்களுக்குப் பிறகு ஜேஎன்யூ திரும்பிய கன்னய்யா பேச்சு
தேச விரோத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைதான ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமாருக்கு டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியது. இதையடுத்து வியாழக்கிழமை திகார் சிறையில் இருந்து திரும்பிய கன்னய்யா, மாணவர் சங்க தலைவரை சந்தித்தார். பின்னர் ஜேஎன்யூ வளாகத்தில் தன்னை வரவேற்க காத்திருந்த மாணவர்களுடன் முழுக்கமிட்டார். பிறகு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். தனக்காக போராடிய மாணவர்களுக்கு நன்றி சொன்னார். நாடாளுமன்றத்தில் தீர்ப்பு சொன்னவர்களுக்கும் போலீஸுக்கும் நன்றி என்று கூறிய கன்னய்யாவுக்கு மாணவர்கள் ஆராவார கைத்தட்டல் செய்தனர். … Continue reading ”நாடாளுமன்றத்தில் தீர்ப்பு சொன்னவர்களுக்கும் போலீஸுக்கும் நன்றி”:மூன்று வாரங்களுக்குப் பிறகு ஜேஎன்யூ திரும்பிய கன்னய்யா பேச்சு
#ஆசாதிகன்னய்யா: ஜேஎன்யூ வளாகத்தில் ஏபிவிபி நடத்திய ‘பெருந்திரள் கூட்டத்தில் கலந்துகொண்ட 32 மாணவர்களும் இரண்டு நாய்களும்
கன்னய்யா குமாரை ஜாமீனில் விடுவித்த நீதிபதி பிரபா ராணி, மாணவர் சமூகம் நோய் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க தீவிர தொற்று தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதை முன்னிறுத்தி ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த ஜேஎன்யூ மாணவர்கள் பெருந்திரள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். வியாழன் அன்று மதியம் நடந்த இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முகப்புப் படத்தில் உள்ளனர். படங்கள்: Su Nand
கன்னையாவுக்கு ஜாமீன் கிடைத்ததைக் கொண்டாடும் சொந்த கிராமம்!
தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்ய குமாரின் குடும்பம் பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் மஸ்லன்புர்-பிஹத் என்ற கிராமத்தில் வசிக்கிறது. மூன்று வாரங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த கன்னய்யாவுக்கு புதன்கிழமை ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம். இதை கன்னய்யாவின் கிராமத்தினர் கொண்டாடினர். தங்களுடைய மகிழ்ச்சியை கன்னய்யா குடும்பத்தினருடன் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
”வைரமாகவும் முத்தாகவும் இருங்கள்; இல்லையென்றால் உங்களுடைய கிருமித் தொற்றை நீக்க கடும் நடவடிக்கைகளை அரசு எடுக்கும்”
தேச துரோக குற்றச்சாட்டில் கைதான மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரு 6 மாத இடைக்கால பிணை வழங்கிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா ராணி, ஹிந்தி படத்தின் பாடல் ஒன்றை தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார். அவர் சுட்டிக்காட்டிய பாடல் உபகார்’ படத்தில் இடம்பெற்ற தேசப்பற்றை வலியுறுத்தும் பாடல். அவர் மேற்கோள் காட்டிய வரிகள் இவைதான். Rang hara Hari Singh Nalve se Rang laal hai Lal Bahadur se Rang bana basanti Bhagat … Continue reading ”வைரமாகவும் முத்தாகவும் இருங்கள்; இல்லையென்றால் உங்களுடைய கிருமித் தொற்றை நீக்க கடும் நடவடிக்கைகளை அரசு எடுக்கும்”
’இஸ்ரத் ஜஹான் வழக்கை மோடியை பழிவாங்க காங்கிரஸ் பயன்படுத்தியது’ என்ற முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை அதானி குழுமத்தின் இயக்குனர்!
2004ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் மும்பையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான். அந்தச் சமயத்தில் குஜராத் முதலமைச்சராக இருந்தவர் நரேந்திர மோடி. நரேந்திர மோடியின் தூண்டுதலின் அடிப்படையிலே இந்த போலி மோதல் நடந்ததாக மத்திய அரசு பிரமாண பத்திரத்தில் சொன்னது. மத்திய அரசு முதலில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இஷ்ரத் ஜஹான் தீவிரவாதி என சொல்லப்பட்டார். ஆனால், அவருடைய குடும்பத்தினரிடமிருந்து, மனித உரிமை அமைப்புகளிடமிருந்து … Continue reading ’இஸ்ரத் ஜஹான் வழக்கை மோடியை பழிவாங்க காங்கிரஸ் பயன்படுத்தியது’ என்ற முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை அதானி குழுமத்தின் இயக்குனர்!
போலி வீடியோக்கள் விநியோகிக்கப்பட்டது ஸ்மிருதி இரானியின் உதவியாளர் ட்விட்டர் பக்கத்திலிருந்தே: வெளிச்சத்துக்கு வந்த உண்மை!
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார், உமர் காலித், அனிபன் பட்டாச்சார்யா உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் மீது தேச துரோக விரோத வழக்கு பதிவு செய்ய காரணமான போலி வீடியோக்களை பகிர்ந்தது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் உதவியாளர் ஷில்பி திவாரி என தெரியவந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் இரானிக்கு தேர்தல் வேலை செய்த, ஷில்பிக்கு விதிமுறைகளைத் தளர்த்தி அமைச்சகத்தில் ரூ. 35 ஆயிரம் சம்பளத்தில் பணிவாங்கிக் கொடுத்த விவகாரமும் … Continue reading போலி வீடியோக்கள் விநியோகிக்கப்பட்டது ஸ்மிருதி இரானியின் உதவியாளர் ட்விட்டர் பக்கத்திலிருந்தே: வெளிச்சத்துக்கு வந்த உண்மை!
#Breaking: ஆசாதி! கன்னய்யா குமாருக்கு ஜாமீன்…
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. கடந்த மாதம் தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னய்யாவுக்கு ஆறு மாத கால இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கன்னய்யா குமார் தேச விரோத முழக்கங்களை எழுப்பினார் என்பதற்கு ஆதாரமாக சொல்லப்பட்ட வீடியோக்கள் போலியானவை என நிபுணர்களால் நிரூபிக்கப்பட்டன. டெல்லி அரசு மேற்கொண்ட இந்த ஆய்வறிக்கை, உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. http://www.youtube.com/watch?v=6NJbxEgf3Uo
தேசவிரோத குற்ற வழக்கில் கைதான கண்ணய்யா குமாருக்கு புல்லட் புரூஃப் காவலர் உடை, ஹெல்மெட்: என்ன காரணம்?
டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமாரின் ஜாமீன் மனு புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. வழக்கறிஞர்கள் சிலர் தாக்குதல் நடத்துவோம் என அறிவித்துள்ள நிலையில் கன்னய்யா குமாருக்கு புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட், ஹெல்மெட், காவலர் சீருடை அணிந்து, நீதிமன்றம் அழைத்து வருகிறது டெல்லி போலீஸ். வழக்கறிஞர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவே இந்த ஏற்பாடு என சொல்கிறது டெல்லி போலீஸ். தாக்குதல் நடத்துவோம் என பகிரங்கமாக அறிவித்த வழக்கறிஞர்கள் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்கள் … Continue reading தேசவிரோத குற்ற வழக்கில் கைதான கண்ணய்யா குமாருக்கு புல்லட் புரூஃப் காவலர் உடை, ஹெல்மெட்: என்ன காரணம்?
#MustRead: கைதான ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாசார்யாவிடம் போலீஸ் நடத்திய விசாரணை எப்படி இருந்திருக்கும்?
டெல்லி போலீசால் கைது செய்யப்பட்ட் ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர் பன் பட்டாசார்யா ஆகியோரின் போலீஸ் விசாரணை எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கற்பனை உரையாடல். எழுதியவர்: எழுத்தாளர் ஆரிஃப் அயாஸ் பார்ரே; தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன் போலீஸ்: ஜேன்யூவில் நீங்கள் ஏன் ஒரு தேசவிரோத ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தீர்கள்? அனீர்பன்: பெனடிக்ட் ஆண்டர்சனின் பார்வையில் தேசம் என்பது கற்பனை செய்யப்பட்ட சமூகம். தங்களை அந்த சமூகத்தின் அங்கமாக நம்பும் மக்கள் சமூகரீதியாகக் கட்டுவதே … Continue reading #MustRead: கைதான ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாசார்யாவிடம் போலீஸ் நடத்திய விசாரணை எப்படி இருந்திருக்கும்?
போலி வீடியோ விவகாரம்; நாட்டு மக்களிடம் அர்னாப் மன்னிப்பு கேட்க வேண்டும் : சித்தார்த் வரதராஜன் வக்கீல் நோட்டீஸ்…
ஜே.என்.யூ பல்கலையின் மாணவர் சங்கத் தலைவர், கன்னையா குமார் தேசத்திற்கு விரோதமாக கோஷமிட்டதாக குற்றம்சாட்டப்படும் விவகாரத்தில், அதற்கு ஆதாரமாக, அனைத்து ஊடகங்களாலும் ஒளிபரப்பப்பட்ட வீடியோ, போலியானது என்று இந்தியா டுடே தொலைக்காட்சி, தகுந்த ஆதரங்களுடன் வெளியிட்டது. இந்நிலையில், ஜோடிக்கப்பட்ட அந்த வீடியோ குறித்த கட்டுரை ஒன்றில், "டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் அதை ஒளிபரப்பியதாக" தி வயர் இணையதளத்தின் நிறுவனரும், செய்தி ஆசிரியருமான சித்தார்த் வரதராஜன் கட்டுரை எழுதினார். ஆனால், அந்த கட்டுரை தவறு என்றும் அந்த வீடியோவை … Continue reading போலி வீடியோ விவகாரம்; நாட்டு மக்களிடம் அர்னாப் மன்னிப்பு கேட்க வேண்டும் : சித்தார்த் வரதராஜன் வக்கீல் நோட்டீஸ்…
#JNU_FlashBack: இந்திரா காந்தியை வேந்தர் பதவியிலிருந்து விலகச் சொல்லி சீதாராம் யெச்சூரி தலைமையில் மாணவர்கள் போராட்டம்; என்ன செய்தார் இந்திரா?
1977-ஆம் ஆண்டில் எமர்ஜென்ஸிக்குப் பிறகு, நடந்த தேர்தலில் இந்திரா காந்தி தோற்றார். அந்தக் காலக்கட்டத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்கத் தலைவராக இருந்தவர், சீதாராம் யெச்சூரி (இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர்). எமர்ஜென்ஸிக்கு எதிராக போராடிய காரணத்தால் சில காலம் தலைமறைவாக இருந்து, கைதாகி சிறையில் இருந்தவர். எமர்ஜென்ஸி விலக்கிக் கொள்ளப்பட்டப் பிறகு, இந்திரா காந்தி தேர்தலில் தோல்வியுற்ற பிறகும் அவர் ஜேஎன்யூவின் வேந்தர் பதவியில் இருந்து விலகாமல் இருப்பதைக் கண்டித்து … Continue reading #JNU_FlashBack: இந்திரா காந்தியை வேந்தர் பதவியிலிருந்து விலகச் சொல்லி சீதாராம் யெச்சூரி தலைமையில் மாணவர்கள் போராட்டம்; என்ன செய்தார் இந்திரா?
ஒரு ‘தேசத்துரோகி’ யின் திறந்த மடல்!
என் அன்பிலா தேசபக்தர்களே! என் இந்தியத் தாயின் வீர நெஞ்சங்களே (வீர மகன்களே என கூற இயலாது. ஏனெனில் இந்தியத் தாய்களையும் மகள்களையும் கொடுமைப்படுத்திக்கொண்டே பாரத் மாதா கி ஜே என கோஷம் போடும் உங்களை பாரத மாதா கூட மகன்களாக ஏற்க மாட்டாள்). ஜே.என்.யூ.காரனான நான் உங்கள் தேசபக்தியின் வெளிப்பாடு கண்டு திக்கு முக்காடி நிற்கிறேன். இதே தீரமிக்க பக்தியினை பதான்கோட் தாக்குதலிலும் காட்டியிருந்தால் நான் இன்னமும் மகிழ்ந்திருப்பேன். பொன்னாடை-புடவை-சூட்-மாம்பழம்-நேரில் தெரிவிக்கப்பட்ட பிறந்த நாள்வாழ்த்து- திடீர் … Continue reading ஒரு ‘தேசத்துரோகி’ யின் திறந்த மடல்!
கையில் சூளாயுதத்துடன் இந்துத்துவ வெறியர்கள்: நாடாளுமன்றத்தில் துர்க்கையை பற்றி அவதூறாக பேசியதாக சீதாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரிக்கு மதவெறியர்கள் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.ரோஹித் வெமுலா தற்கொலை, ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் மீதான அடக்குமுறை குறித்து மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். அவருடைய உரை, மதவெறியர்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவதாக அமைந்தது. அதற்குப் பதிலளித்து ஸ்மிருதி இரானி பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டார். அவை அனைத்தும் ஆதாரமற்ற பொய் என்பது அம்பலமாகிவிட்டது. இந்த நிலையில், சீத்தாராம் யெச்சூரியின் ஆற்றல் மிக்க உரையால் ஆத்திரமடைந்துள்ள இந்துத்துவா மதவெறியர்கள் … Continue reading கையில் சூளாயுதத்துடன் இந்துத்துவ வெறியர்கள்: நாடாளுமன்றத்தில் துர்க்கையை பற்றி அவதூறாக பேசியதாக சீதாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல்!
ஸ்மிருதி இரானியின் ‘நாடக உரை’க்கு விளக்கவுரை தந்த சீதாராம் யெச்சூரி
நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜவஹர் லால்நேரு பல்லைக் கழகம் மற்றும் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம் ஆகியவற்றில் நடை பெற்றுவரும் நிகழ்வுகளால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து குறுகிய கால விவாதம் வியாழன் அன்று நடை பெற்றது. அதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசினார். அதன் தமிழாக்கத்தை தீக்கதிர் வெளியிட்டிருக்கிறது. உரையின் முக்கியத்துவம் கருதி அதை இங்கே நன்றியுடன் மறுபதிப்பு செய்கிறோம். தமிழாக்கம்: ச. வீரமணி “நான் இந்தப் பிரச்சனைகள் மீது மிகவும் பொறுக்கமுடியாத மன வேதனை, மனக் கவலை … Continue reading ஸ்மிருதி இரானியின் ‘நாடக உரை’க்கு விளக்கவுரை தந்த சீதாராம் யெச்சூரி
#அவசியம்வாசிக்க: ‘காவிக் கிண்ணத்தில் ஊழல் வழிகிறது’ சீதாராம் யெச்சூரியின் நேர்காணல்
பாஜக இந்து வாக்குவங்கியை ஒருமுகப்படுத்துவதற்காகவே, ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தேசவிரோத முழக்கங்களை எழுப்பினார்கள் என்று பொய்யாக ஜோடனை செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். டெக்கான் ஹெரால்ட் நாளேட்டின் நிருபர்கள் சஞ்சய் பசக் மற்றும் நம்ராதா பிஜி அஹூஜா ஆகியோருக்கு யெச்சூரி அளித்த நேர்காணல். தீக்கதிருக்காக தமிழாக்கம் செய்தவர் ச. வீரமணி கேள்வி: ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் எழுப்பப்பட்ட தேச விரோத முழக்கங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? சீத்தாராம் யெச்சூரி: … Continue reading #அவசியம்வாசிக்க: ‘காவிக் கிண்ணத்தில் ஊழல் வழிகிறது’ சீதாராம் யெச்சூரியின் நேர்காணல்
#வீடியோ: சினிமா டப்பிங் பார்த்திருப்பீங்க, சீரியல் டப்பிங் பார்த்திருப்பீங்க, ஸ்மிருதி இரானியின் நாடாளுமன்ற பேச்சோட டப்பிங் கேளுங்க!
ஹிந்தி சினிமா டப்பிங் பார்த்திருப்பீங்க, ஹிந்தி சீரியல் டப்பிங் பார்த்திருப்பீங்க, நாடாளுமன்ற பேச்சையே டப்பிங் பண்ணி பார்த்திருக்கீங்களா? தமிழ்நாடு பாஜக ஸ்மிருதி இரானியின் பேச்சை டப் செய்திருக்கிறது. இந்த வீடியோ பாருங்கள்.... http://www.youtube.com/watch?v=CKnzVP_MPrk
பதிலில் திருப்தியில்லை;தலையை வெட்டிக் கொள்வீர்களா ஸ்மிருதி? : அதிரவைத்த மாயாவதி
ஹைதராபாத் பல்கலைக்கழக தலித் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, அப்பட்டமாக பொய்களை அள்ளி வீசியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஸ்மிருதி இரானி தனது பொய்களுக்கு உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் காரசாரமான விவாதத்தை வெள்ளியன்றும் மேற்கொண்டனர். மாநிலங்களவையில் வெள்ளியன்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மாயாவதி இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது. மாயாவதி, “இந்த விசாரணைக் கமிஷனில் … Continue reading பதிலில் திருப்தியில்லை;தலையை வெட்டிக் கொள்வீர்களா ஸ்மிருதி? : அதிரவைத்த மாயாவதி
உமர் காலித்தின் தந்தை டாக்டர் இலியாஸுடன் ஒரு சந்திப்பு: அ. மார்க்ஸ்
Marx Anthonisamy உமர் காலித்தின் தந்தை டாக்டர் இலியாஸ் அவர்களைச் சந்தித்தது இந்தப் பயணத்தில் ஒரு முக்கிய அனுபவம்... உமர் காலித் ஏதோ காஷ்மீரில் பிறந்த ஒரு காஷ்மீரி போல இங்குள்ள ஸீ டிவி போன்ற வலதுசாரி ஊடகங்கள் சித்திரித்துக் கொண்டிருக்கும் சூழலில் இலியாஸ் டெல்லியைச் சேர்ந்தவர், 'ஜமாத் ஏ இஸ்லாமியின்' 'வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியா' வின் தலைவர் என்பதெல்லாம் எல்லோரையும் போல எனக்கும் தெரியாது. அவர் கூப்பிடு தூரத்தில் நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு மிக … Continue reading உமர் காலித்தின் தந்தை டாக்டர் இலியாஸுடன் ஒரு சந்திப்பு: அ. மார்க்ஸ்
ஆர். எஸ். எஸ். பிரச்சாரகரின் பேரன் தேசத்துரோகியான கதை
விஜயசங்கர் ராமச்சந்திரன் கன்ஹையா குமாருடன் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அஷுதோஷ் குமார் யாதவ் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருடைய தாத்தா பிரபலமான ஆர். எஸ். எஸ். பிரச்சாரகர். ரஷ்யாவைக் குறித்த ஆய்வு மாணவரான யாதவ் கூறுவதைக் கேளுங்கள்: “நாங்கள் கூட்டுக்குடும்பத்தில் வசித்தோம். எங்கள் குடும்பம் இந்துத்வ மதிப்பீடுகளில் நம்பிக்கை கொண்டது. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது காவிக் கொடியை வைத்து விளையாடியதும், சங் அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான பஞ்சஜன்யாவைப் படித்ததும் நினைவில் இருக்கிறது. ... என் தாத்தா 1992இல் … Continue reading ஆர். எஸ். எஸ். பிரச்சாரகரின் பேரன் தேசத்துரோகியான கதை
“மாணவர்கள் மீது ஒரு கீறல் கூட விழக்கூடாது”: கன்னய்யா குமார் பிணை மனு விசாரணையில் நீதிமன்றம் அறிவுறுத்தல்
“மாணவர்கள் மீது ஒரு கீறல் கூட விழக்கூடாது” என கன்னய்யா குமார் பிணை மனு விசாரணையில் நீதிமன்றம் அறிவுறுத்திருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னய்யா குமார், ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த மனு செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. செவ்வாய்கிழமை விசாரணை நடைபெற்றபோது, கன்னய்யாவின் வழக்கறிஞர் கபில் சிபல், தேசத்துக்கு எதிரான முழுக்கங்கள் எழுப்பப்படவில்லை என்று நிரூபணமாகிவிட்ட நிலையில், கன்னய்யாவுக்கு ஜாமீன் தர வேண்டும் என்று வாதிட்டார். ஆனால், டெல்லி … Continue reading “மாணவர்கள் மீது ஒரு கீறல் கூட விழக்கூடாது”: கன்னய்யா குமார் பிணை மனு விசாரணையில் நீதிமன்றம் அறிவுறுத்தல்
#வீடியோ: சென்னை ஐஐடியில் JNU கைதிற்கு எதிராகப் போராட்டம்: விடியோ எடுத்த உளவுத்துறை; ஜெய் பீம் முழங்கத் தயங்கிய மாணவர்கள் !!
தேசவிரோத குற்றம்சாட்டப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு மாணவர்களுக்காக சென்னை ஐஐடி வளாகத்தில் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடகத் தொடர்பு குழுவைச் சேர்ந்த ஜோஸுவா ஐசக் ஆசாத் கலந்துகொண்டார். அவர் இந்த பேரணியில் கலந்து கொண்டு பேச மாணவர்களால் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை வளாகத்துக்குள் பாதுகாப்பு காவலர்கள் அனுமதிக்க முடியாமல் தடுத்துள்ளனர். தான் “ஜெய் பீம்” என முழங்கியது அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் என்கிறார் ஆசாத் அவருடைய முகநூல் பதிவில்... Joshua Isaac … Continue reading #வீடியோ: சென்னை ஐஐடியில் JNU கைதிற்கு எதிராகப் போராட்டம்: விடியோ எடுத்த உளவுத்துறை; ஜெய் பீம் முழங்கத் தயங்கிய மாணவர்கள் !!
#Video: JNU வில் சங் பரிவாரங்கள் கண்டெடுத்த மதுபாட்டில்கள், காராசேவ் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை
JNU வில் சங் பரிவாரங்களின் சோதனை அவர்கள் கண்டெடுத்தார்கள்...! 2000 இந்திய வெளிநாட்டு மதுமான பாட்டில்கள் 10,000 பயன்படுத்தி தூக்கிப் போட்ட சிகரெட் துண்டுகள் 4000 பீடி துண்டுகள் 50,000 சின்ன, பெரிய எலும்பு துண்டுகள் (அசைவம் உண்டதற்கான சாட்சி) 2000 சிப்ஸ், காராசேவ் பாக்கெட்டுகள் 3000 பயன்படுத்திய காண்டம்கள் 500 கருச்சிதைவு ஊசிகள் சங் பரிவாரங்களின் கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்தவர் க்யான் தேவ் அஹுஜா, பாஜக சட்டமன்ற உறுப்பினர் (இராஜஸ்தான்) http://www.youtube.com/watch?v=j3aw_zUH61U Thanthugi Blogspot இவ்விடத்தில் உபயோகப்படுத்திய காண்டம்கள்,. மது பாட்டில்கள், … Continue reading #Video: JNU வில் சங் பரிவாரங்கள் கண்டெடுத்த மதுபாட்டில்கள், காராசேவ் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை
எச்.ராஜாவின் கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை;வெங்கய்யா நழுவல்:பெரியாரை செருப்பாலடிப்பேன் என்று சொன்னவரின் தரம் எப்படி இருக்கும்?;கம்யூ.அதிருப்தி!
ஜவஹர்லால் நேரு பல்கலையில், தேசத்திற்கு விரோதமாக மாணவர்கள் கோஷமிட்டதாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களால் எழுப்பப்படும் குற்றச்சாட்டின் தொடர்ச்சியாக, கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் தொடர் குரல் எழுப்பி வரும், டி.ராஜாவின் மகள் அபராஜிதா ராஜாவும் ஜவஹர்லால் பல்கலையில் தேசத்திற்கு எதிராக குரல் கொடுத்ததாக கூறப்பட்டது. இது குறித்து கோவையில் பேட்டியளித்த பாரதீய ஜனதாவின் எச்.ராஜா "அபராஜிதாவை சுட்டுக்கொள்ள வேண்டுமென்று கூறினார். ”கம்யூனிஸ்ட் தலைவர் டி. ராஜா தன் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும்” ரத்த தாகம் … Continue reading எச்.ராஜாவின் கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை;வெங்கய்யா நழுவல்:பெரியாரை செருப்பாலடிப்பேன் என்று சொன்னவரின் தரம் எப்படி இருக்கும்?;கம்யூ.அதிருப்தி!
கன்னய்யா குமாரை விடுதலை செய்யக்கோரி கோவையில் தொடரும் போராட்டம்
கோவையில் தொடரும் போராட்டம் "சமூக மாற்றத்திற்கான மாணவர் கூட்டமைப்பு" சார்பில், கன்னய்யா குமாரை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரி திங்கள்கிழமை "பி.எஸ்.என்.எல். அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) , இந்திய மாணவர் சங்கம் (SFI),.இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO), கேம்பஸ் ஃப்ரெண்ட் ஆப் இந்தியா(CFI), புரட்சிகர மாணவர் முன்னணி (RSF), திராவிடர் மாணவர் கழகம், சமத்துவ மாணவர் கழகம், பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம் (SUMS), மக்கள் ஜனநாயக இளைஞர் … Continue reading கன்னய்யா குமாரை விடுதலை செய்யக்கோரி கோவையில் தொடரும் போராட்டம்