அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது: 2 ஜி வழக்கு தீர்ப்பு குறித்து மு. க. ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதி “அநீதி வீழும் அறம் வெல்லும்” என்று சொன்னதைப் போல, இன்றைக்கு “அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது” என திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ஏழு ஆண்டுகளாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி ஓ.பி. சைனி தன்னுடைய தீர்ப்பில் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தகவல் தொடர்பு துறை … Continue reading அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது: 2 ஜி வழக்கு தீர்ப்பு குறித்து மு. க. ஸ்டாலின்

கமலின் கருத்துகள் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை : கனிமொழி

நடிகர் கமல்ஹாசனை திமுக இயக்குவதாக கூறுவதில் உண்மை இல்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“திமுக என்பது மாபெரும் இயக்கம். அதில் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு வேறு யாருடைய உதவியும் தேவையில்லை. கமலை இயக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை. கமல் போன்ற பிறரின் உதவி திமுகவிற்கு தேவையில்லை. கமல்ஹாசன் அவருடைய கருத்துக்களை சொல்லி வருகிறார். அது பற்றி நான் ஒன்றும் சொல்வதிற்கில்லை” … Continue reading கமலின் கருத்துகள் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை : கனிமொழி

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து புதுடில்லி  மண்டி அவுஸ்சிலிருந்து பேரணி தொடங்கி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறுஅரசியல் கட்சித் தலைவர்கள், திராவிடர் கழகம் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் கனிமொழி உரையாற்றினார். இடதுசாரி கட்சிகளும் பேரணியில் பங்கேற்றன. https://www.facebook.com/CPMLTN/posts/618417248337847

திமுகவுக்கு ஆதரவு அலை வீசுகிறது; ஆனால் நாங்கள் கருத்து கணிப்புகளை நம்பவில்லை: கனிமொழி

திமுகவுக்கு ஆதரவு அலை வீசுகிறது என தெரிவித்துள்ளார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, கருத்து கணிப்புகள் எங்களுக்கு ஆதரவாக இருந்தாலும் நாங்கள் கருத்து கணிப்புகளை நம்பவில்லை என தெரிவித்தார்.

“பெருங்கனவோடு எழுந்த ஒரு மாபெரும் இயக்கம் ஒரு குடும்பத்தின் வாசலில் வீழ்த்தப்பட்ட துயரம்!”

யோ. திருவள்ளுவர் தமிழக அரசியலிலிருந்து அதிமுக அகற்றப்படுவதை திமுகவும், திமுக அகற்றப்படுவதை அதிமுகவும் விரும்பாது. ஏனெனில் அவையிரண்டும் மணல், கிரானைட், மண், நிலம் கொள்ளை முதல் ஊழல், மதுஆலைகள், டாஸ்மாக், அணு உலைகள், கெயில், மீத்தேன், ஒப்பந்தம் கொள்ளைகள் ஆகிய அனைத்திலும் இருகட்சிகளுக்கும் அவ்வளவு ஒற்றுமை. மற்றொரு அணி அல்லது கட்சி தமிழக அரசியலில் பலம்பெறுவதை இரண்டு கட்சிகளும் விரும்பாது. மாற்று ஒன்று உருவானால் இருகட்சிகளின் கொள்கைகளுக்கும் முடிவு வந்துவிடுமல்லவா. அப்படி மாற்று அணி அல்லது கட்சி … Continue reading “பெருங்கனவோடு எழுந்த ஒரு மாபெரும் இயக்கம் ஒரு குடும்பத்தின் வாசலில் வீழ்த்தப்பட்ட துயரம்!”

“ஸ்டாலின் தலைமையில் பாஜக-திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது; அதற்கு கவிஞர்தான் தூதர்”: ஜெயமோகன் சொல்லும் தேர்தல் கூட்டணி ‘ரகசியம்’

பாஜகவுடன் திமுக கூட்டணி குறித்து பரபரப்பு கிளம்யிருக்கும் சூழலில் எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய  வலைப்பக்கத்தில், “ஸ்டாலின் தலைமையில் பாஜக-திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது; அதற்கு கவிஞர்தான் தூதர்” என்று தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து வாசகர் ஒருவரின் கேள்விக்கு  ஜெயமோகன் அளித்த பதில்... “அன்புள்ள செல்வராஜ், இதைவிட ‘அனல்பறந்த’ பாராளுமன்றத்தேர்தலிலேயே நான் ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு இந்த அரசியலில் தரப்பே எடுக்கமுடியவில்லை. காரணம் பேசப்படுவன அனைத்தும் பொய்யான மிகைநாடகங்கள் என அறிவேன். உள்ளே நடப்பதை எவராவது என்னிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். உதாரணமாக … Continue reading “ஸ்டாலின் தலைமையில் பாஜக-திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது; அதற்கு கவிஞர்தான் தூதர்”: ஜெயமோகன் சொல்லும் தேர்தல் கூட்டணி ‘ரகசியம்’

ஏன் விகடனிடம் ராமதாஸ் ஆதரவு கேட்கிறார்?

திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவது தமிழகத்திற்கு இழைக்கும் துரோகம் என விகடன் குழுமத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியிருக்கிறார். இந்தக் கடிதத்தில் பாமக போன்ற மாற்று அரசியல் பேசும் கட்சிகளை விகடன் ஆதரிக்க வேண்டும் என்று கேட்கிறார். இதோ அந்தக் கடிதம்... அன்புள்ள திரு. பா. சீனிவாசன் அவர்களுக்கு... வணக்கம்! விகடனின் அடையாளமாய் வாழ்ந்து மறைந்த தங்களின் தந்தை எஸ். பாலசுப்ரமணியனின் முதல் நினைவு நாளையொட்டி ஜூனியர் விகடன் இதழில், ஆனந்த விகடன் ஆசிரியர் ரா.கண்ணன் எழுதியிருந்த … Continue reading ஏன் விகடனிடம் ராமதாஸ் ஆதரவு கேட்கிறார்?