பத்திரிகையாளர்களுக்கு வார்த்தையில் நிதானம் வேண்டாமா?

இத விட அவர் பாலியல் தொழில் நடத்த போகலாம்னு சொல்றியா.. சேச்சே, அப்டி பேசுறது தப்பு..’னு ஒரு தலைவர இங்லீஸ்ல நக்கலடிச்சா தொண்டனுக்கு புரியாம போய்றாது.

தர்மம் மறுபடி வென்றது!

எழுபது வயதாகும் குமுதம், ஜவகர் தலைமையில் அடுத்த அத்தியாயத்தை இளமைத் துடிப்புடன் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்

போதும் இந்த நாடகம்!

கதிர் வேல் சசிகலாவை நேருக்கு நேர் சந்தித்தது இல்லை. அவருடன் பேசியதும் இல்லை. எனவே ஒரிஜினலாக எந்த கருத்தும் கிடையாது. தனிப்பட்ட துவேஷத்துக்கு இடமே இல்லை. ஆனால், நாட்டின் மிக உயர்ந்த கோர்ட் சசிகலா யாரென்று அடையாளம் காட்டி விட்டது. அதன் தீர்ப்பை வாசிக்கும்போது, 30+ ஆண்டுகளாக சசிகலாவை பற்றி கேள்விப்பட்ட விஷயங்கள் எவ்வளவு உண்மை என்பது விளங்குகிறது. ஒரு பயங்கரமான கொள்ளைக் கூட்டத்தின் தலைவியாக அவர் நடமாடினார் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் தீர்ப்பு அம்பலப்படுத்துகிறது. அப்போலோ … Continue reading போதும் இந்த நாடகம்!

”திமுக நம்மை ஒன்றும் செய்யாது என சசிகலா நம்புகிறார்!”

கதிர்வேல் ”வேலைக்காரி என்பதால் எதிர்ப்பதா? அப்படியானால் வேலைக்காரிகள் எல்லாம் கேவலமா? இதற்காகவே அவர் சீயெம் ஆக வேண்டும்” என்று ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கிறது. அந்த கோஷ்டியில் உள்ளவர்கள் ஆகட்டும், நீங்களாகட்டும், நானாகட்டும் எல்லோருமே வேலைக்காரன் அல்லது காரிகள்தான். உழைத்து சம்பளம் வாங்கும் எல்லோரும் வேலைக்காரர்கள் அல்லாமல் வேறென்னவாம்? எனவே, எதிர்ப்பு என்பது அவர் வேலைக்காரி என்ற அடிப்படையில் எழுந்தது அல்ல. சொல்லப் போனால் அவர் வேலைக்காரியாக இருந்ததே இல்லை. “அம்மாவுக்கு பணிவிடை செய்வதன்றி வேறேதும் அறியேன்” என்று … Continue reading ”திமுக நம்மை ஒன்றும் செய்யாது என சசிகலா நம்புகிறார்!”

முன்னாள் முதல்வர்கள், எதிர்கட்சித் தலைவருக்கு இல்லாத ‘சிறப்பான இடம்’ சசிகலாவுக்கு!

உடல்நலக் குறைவால் மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமியின் உடல் சென்னை எம்ஆர்சி நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், திரையுலகப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சோ உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் இதுதான் ஊடகங்களில் ‘சிறப்பான இடத்தை’ப் பிடித்தது. தினத்தந்தியின் முதல் பக்கத்தில் முதல் படமாக சசிகலாவின் படம் இடம்பெற்றது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் கதிர்வேல் ‘என்ன அவசரம்?’ என்ற … Continue reading முன்னாள் முதல்வர்கள், எதிர்கட்சித் தலைவருக்கு இல்லாத ‘சிறப்பான இடம்’ சசிகலாவுக்கு!

சாமானியனுக்கு இல்லாத ’சூழலா’ உங்களுக்கு…சொல்லுங்க சூர்யா!

கதிர்வேல் ஒவ்வொரு நடிகரும் ஓட்டு போட்டுட்டு விரலை உயர்த்தி போஸ் கொடுக்கும்போது சூர்யாவை கிண்டலடிக்கிற மாதிரியே தோணுது. அதுலயும், நா அந்த தேதில ஊர்லயே இருக்க மாட்டேன், இருந்தாலும் ஓட்டு போட முடியாது, என்னா என் பேரே பட்டியல்ல இல்லைனு சொன்ன கமல் கவுதமியோட வந்து ஓட்டு போட்டுட்டு கர்வமா சிரிக்கும்போது சூர்யாவுக்கு மெசேஜ் சொல்ற மாதிரியே இருக்கு. என்னாங்க பெரிய சூழல்.. தொலை தூரத்துல இருந்தும் வெளிநாட்ல இருந்தும் ஓட்டு போடதுக்குன்னே வந்திருக்க சராசரி ஜனங்க … Continue reading சாமானியனுக்கு இல்லாத ’சூழலா’ உங்களுக்கு…சொல்லுங்க சூர்யா!

#அவசியம்படிக்க: விருத்தாசலத்தில் என்ன நடந்தது? ஊடகங்கள் சொல்வது என்ன?

கதிர்வேல் ஜெயலலிதா பொதுக்கூட்டம். ஆண்களும் பெண்களும் அழைத்து வரப்பட்டார்கள். 11 மணி முதல் திடலுக்குள் விடப்பட்டார்கள். வெயில் கொளுத்தியது. தண்ணீர் தீர்ந்து விட்டது. தாங்க முடியாமல் சிலர் வெளியேற முயன்றார்கள். போலீஸ் தடுத்து விட்டது. சீயெம் வந்து விடுவார்; இப்போ போகக்கூடாது என்றது போலீஸ். அம்மா பேசிட்டு போகும் வரை அசையாமல் இருக்கணும்னுதானே கூட்டியாந்தோம் என்றனர் கட்சிக்காரர்கள். பலவீனமானவர்கள் மயங்கி சாய்ந்தார்கள். முதல்வர் மேடையேறி பேசும்போது மூன்றரை மணி ஆகிவிட்டது. மயக்கமான பெண்களை பார்த்து பதறிய ஆண் … Continue reading #அவசியம்படிக்க: விருத்தாசலத்தில் என்ன நடந்தது? ஊடகங்கள் சொல்வது என்ன?

’கூட்டணி ஆட்சிக்கு இப்ப சம்மதிக்கலனைன்னா அப்புறம் சம்மதிப்பீங்க’ என்பது கேப்டனின் மெஸேஜ்!

கதிர்வேல் 1. பிரேமலதா பேச்சு சூப்பர்ப். 2. கேப்டன் ஒருவழியா சஸ்பென்சை உடைச்சதுல நிம்மதி. 3. ஸ்டாலினோட ஓவர் கான்ஃபிடன்ஸ் பலூன்ல ஊசி குத்திருக்கார் கேப்டன். 4. கூட்டணி ஆட்சிக்கு இப்ப சம்மதிக்கலைன்னா, தேர்தலுக்கு அப்புறம் சம்மதிக்க போறீங்க என்பது கேப்டன் மெசேஜ். 5.தேமுதிக இதனால் இழக்க எதுவும் இல்லை. 6. திமுக இதனால் அனைத்தையும் இழக்க வாய்ப்பு இருக்கிறது. 7. இன்னும் நேரம் இருக்கிறது திமுக இறங்கிவர. 8. ஈகோ தடுத்தால் அம்மாவுக்கு அதிர்ஷ்டம். 9. … Continue reading ’கூட்டணி ஆட்சிக்கு இப்ப சம்மதிக்கலனைன்னா அப்புறம் சம்மதிப்பீங்க’ என்பது கேப்டனின் மெஸேஜ்!

ஆபரேஷன் அண்டர்வேர்: தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க புது உத்தி!

கதிர்வேல் ராணுவத்துக்கு ஆள் எடுக்க எழுத்து தேர்வு நடந்தது பிகாரில். ஆயிரம் வாலிபர்களுக்கு மேல் பேனா பென்சிலுடன் துள்ளி வந்தார்கள்.எல்லாரும் முதலில் சட்டையை கழற்றுங்கள் என்றார் அதிகாரி. அதிர்ச்சி அடைந்தாலும் அப்படியே செய்தனர் இளைஞர்கள். பேன்டையும் கழற்றுங்கள் என்றார் அதிகாரி. காரணம் புரியாமல், வேறு வழி தெரியாமல் கழற்றினார்கள். ஜட்டியுடன் மைதானத்தில் உட்கார வைத்து வினாத்தாளை கையில் கொடுத்து தேர்வு எழுத சொன்னார் அதிகாரி. மீடியாவுக்கு தகவல் போய் ஓடி வந்தார்கள். “காப்பி அடிக்காமல் தடுக்க எல்லாரையும் தனித்தனியாக … Continue reading ஆபரேஷன் அண்டர்வேர்: தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க புது உத்தி!