மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார் பத்தி: பாப் மார்லியும் கண்ணகி நகரும்

மரு.அரவிந்தன் சிவக்குமார் “இன்று காலை விழித்தபோது ஊரடங்கு உத்தரவு. கடவுளே நானும் கைதியானேன். என்மீது நின்றோர் முகம் தெரியவில்லை, அவர்களை அலங்கரித்தன கொடூரர்களின் சீருடை. இன்றிரவு அழுது புலம்புகிறோம். யார் எங்கள் கண்ணீர் துடைக்க? பல ஆண்டுகளாய் நீள்கிறது எங்கள் துயரம். நான் வளர எனக்கு சோறு கொடுங்கள், கஞ்சா வேண்டாம். இன்றிரவு, எரிப்போம்! கொள்ளையடிப்போம்! எரிப்போம் !எங்களின் இருத்தலுக்காக ..... எரிப்போம் !சீர்கேட்டினை... எரிப்போம் !மாயைகளை... இன்றிரவு, எரிப்போம் கொள்ளையடிப்போம். எரிப்போம் சீர்கேட்டினை”. (பாப் மார்லியின் 'Burning … Continue reading மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார் பத்தி: பாப் மார்லியும் கண்ணகி நகரும்

கண்ணகி நகர்: முள்வேளியில்லாத வதை முகாம்!

இசையரசு வழிப்பறி சம்பவம் தொடர்பாக, கடந்த 18.09.2016 அன்று மாலை மீன் கார்த்தி , அருணாச்சலம் என்ற இருவரை விசாரணைக்காக அழைத்து சென்றது கண்ணகிநகர் போலீஸ், இரண்டு நாட்கள் விசாரணை என்ற பெயரில் கண்ணகி நகர் போலீஸ் கடுமையாக தாக்கியதில், மீன் கார்த்தி 21.09.2016 அன்று மர்மமான முறையில் இறந்துவிட்டார். இதில் கார்த்திக்கோடு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அருணாசலத்தை காணவில்லை, மகனை மீட்டுத்தரவேண்டும் என அவரின் தாய் கவிதா சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். வழக்கு … Continue reading கண்ணகி நகர்: முள்வேளியில்லாத வதை முகாம்!

நீதிபதியின் சாதி மனசாட்சி..!

வன்னி அரசு. சாதி மறுத்து காதல் மணம் புரிந்த சங்கர் கவுசல்யாவை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிச் சாய்த்தது சாதிவெறி கும்பல். காதல் மணம் புரிந்த எட்டு மாதங்கள் முழுக்க கொலை மிரட்டல்கள், லட்சங்களில் பணம் தருகிறோம் என்று அவன் காதலுக்கு விலை சொல்லப்பட்ட போதும், இரண்டு முறை கொலை முயற்சி நடந்தபோதும் எந்த விதத்திலும் தன் காதலை விட்டுத்தராமல், உறுதியோடு நின்று, இந்த முறை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டான் எங்கள் வீரன் சங்கர். எல்லாவற்றையும் விட தான் … Continue reading நீதிபதியின் சாதி மனசாட்சி..!

கண்ணகி நகர் தலித் சிறுவனை தவறாக அழைத்துச் சென்று அடித்து உதைத்த போலீஸ் : ஆள்மாறாட்டம் என்று தெரிந்தவுடன் நடுரோட்டில் வீசி செல்லப்பட்ட கொடூரம்!

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த வின்சென்ட் சுமதி தம்பதியின் 3-வது மகனான 17 வயது முகேஷ்,  ஒரு சுமை தூக்கும் தொழிலாளி.  வெள்ளிக்கிழமை இரவு, நள்ளிரவு 11 மணி அளவில் அப்பகுதிக்கு வந்த போலீஸார், வீட்டுக்குள் நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த முகேஷை அடித்து உதைத்து காருக்குள் போட்டுக்கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் அவரது தலை, முகம் என உடம்பு முழுவதும் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு, ‘நாம் தேடிவந்தது இவன் அல்ல’ … Continue reading கண்ணகி நகர் தலித் சிறுவனை தவறாக அழைத்துச் சென்று அடித்து உதைத்த போலீஸ் : ஆள்மாறாட்டம் என்று தெரிந்தவுடன் நடுரோட்டில் வீசி செல்லப்பட்ட கொடூரம்!

திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி கடையின் அடைப்பை நீக்கப்போன 4 இளைஞர்கள் பலி

ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள  திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி கடையில், கழிவுநீர் தொட்டியில் இறங்கிய கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த 4 தலித் இளைஞர்கள் விஷவாயு தாக்கி பலியாயினர். இந்நிலையில் இவர்கள் தனியார் நிறுவனத்தின் மூலம் சாக்கடை அடைப்பு நீக்கும் பணிக்குச் சென்றதால், இவர்கள் உயிரிழப்புக்கு பொறுப்பேற்கவும் உரிய இழப்பீடு வழங்கவும் அரசு தரப்பு மறுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இசையரசு துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த 4 துப்புரவு தொழிலாளர்கள், விஷவாயு தாக்கி பலியானது ஊரறிந்த செய்தி. … Continue reading திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி கடையின் அடைப்பை நீக்கப்போன 4 இளைஞர்கள் பலி