2009-ஆம் ஆண்டு நடத்திய போராட்டத்துக்காக ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி கைது!

ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி, மதுரையில் இன்று கைது செய்யப்பட்டார். 2009-ஆம் ஆண்டு விடுதி வசதி கேட்டு மாணவர் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக திவ்யா கைது செய்யப்பட்டதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணைக்கு வராத காரணத்தால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தற்போது நிபந்தனை ஜாமீன் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மனிதர்கள் சக மனிதர்களின் கழிவுகளை அள்ளும் அவலம் குறித்து திவ்யபாரதி, 'கக்கூஸ்' என்ற ஆவணப்படத்தை எடுத்தவர். இந்தப் படத்துக்கு பல்வேறு சமூக அமைப்புகள் விருது அளித்துள்ளன. … Continue reading 2009-ஆம் ஆண்டு நடத்திய போராட்டத்துக்காக ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி கைது!

விவாதம்: “கக்கூஸ்” ஆவணப்படத்தை பார்க்கணும்; ஆனால், அது பேசும் அரசியலை நிராகரிக்கணும்”

மீனா சோமு திவ்யா பாரதி இயக்கிய, "கக்கூஸ்" ஆவணப்படம் பார்த்தேன். மலத்தோடு அதன் நாற்றத்தோடு செத்துக் கொண்டிருப்பவர்களை பற்றிய ஆவணம் அது. 1.30மணி நேரம் ஓடிய ஆவணப்படம், நம் சமூகத்தின் கேடுகெட்ட நிலையை முகத்தில் மலத்தை அறைந்து சுட்டுகிறது. மலம் அள்ளும் பணியாளர்கள் இல்லையென்று சொன்னாலும் மலம் அள்ளும் நிலைக்கு தள்ளப்படும் துப்புரவு பணியாளர்கள் குறித்தும் அவர்களை அந்த நிலைக்கு ஆளாக்கிய அரசின் எத்தனம் பற்றியும் சமூக நிலை பற்றியும் பட்டவர்த்தனமாய் வைக்கும் ஆவணப்படம் இது. அதே … Continue reading விவாதம்: “கக்கூஸ்” ஆவணப்படத்தை பார்க்கணும்; ஆனால், அது பேசும் அரசியலை நிராகரிக்கணும்”

“எங்களை கொல்வதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள்?”: ‘கக்கூஸ்’ என்றொரு ஆவணப்படம்!

மதுரையைச் சேர்ந்த சமூக-அரசியல் செயற்பாட்டாளரான திவ்யபாரதி, மலக்குழியில் இறந்தி உயிர்விட்ட தொழிலாளிகள் குறித்து  ‘கக்கூஸ்’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.  மக்களிடம் நிதி பெறப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் படமாக்கப்பட்டது இந்த ஆவணப்படம். “நானும் ஒளிப்பதிவாளர்களாக குமார், கோபால் என மூவருமாக மட்டுமே தமிழகம் முழுக்க சுற்றி இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறோம். நண்பர்கள், தோழர்கள், முகநூல் மூலமாக நிதி திரட்டினோம். நிறைய கடன் வாங்கியிருக்கிறேன். என்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்திருக்கிறேன். ஒரு ஊருக்குப் போகும்போது குறைந்த பட்சம் … Continue reading “எங்களை கொல்வதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள்?”: ‘கக்கூஸ்’ என்றொரு ஆவணப்படம்!