கல்வி நிலையங்களில் ஒடுக்குமுறையால் மரணித்தவர்களிடமிருந்து ரோஹித் வெமுலாவின் மரணம் எந்தவகையில் வேறுபாடுகிறது?

வெமுலா ரோஹித்தின் தற்கொலை தேசிய அளவில் செய்தியாகியிருக்கிறது. தேசத்தின் உயர்கல்வி நிறுவனங்களில் புரையோடிப்போயிருக்கிற ஜாதியின் கோர முகம் மீண்டும் வெளித்தெரிந்திருக்கிறது. ஊடகங்கள் அந்த மாணவனை 'தலித் ஸ்காலர்' என்று அடையாளப்படுத்துகின்றன. அவன் தூக்கை நெருங்குவதற்கு முன்னால், எழுதி வைத்தக் கடிதத்தில் ''வெறுமையாக உணர்கிறேன்; அதுதான் மிகவும் கொடுமையாக இருக்கிறது'' என்று சொல்லியிருக்கிறான். அதில் அவ்வளவு உண்மை இருக்கிறது. இந்த சமூகம் ஒரு தலித்துக்கு எப்போதும் கையளிப்பது இந்த வெறுமையைத்தான். ஆனால் இது ஏன் ஒரு ஆராய்ச்சி மாணவனை … Continue reading கல்வி நிலையங்களில் ஒடுக்குமுறையால் மரணித்தவர்களிடமிருந்து ரோஹித் வெமுலாவின் மரணம் எந்தவகையில் வேறுபாடுகிறது?

ரோஹித் மரணத்திற்கு காரணமான அமைச்சர் தத்தாத்ரேயாவுடன் கோவை வந்த மோடி: திரும்பி போக சொல்லி போராட்டம்…

கோவையில் மத்திய அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துவக்க விழா , பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி இன்று மதியம் கோவை வந்தார் கட்டிட திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், மற்றும் ஐதராபாத் பல்கலை மாணவன் ரோஹித் மரணத்திற்கு காரணம் என்று சுட்டிக்காட்டப்படும் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் கலந்து கொண்டனர். இதனிடையே கோவையில் பிரதமர் மோடிக்கு கறுப்பு … Continue reading ரோஹித் மரணத்திற்கு காரணமான அமைச்சர் தத்தாத்ரேயாவுடன் கோவை வந்த மோடி: திரும்பி போக சொல்லி போராட்டம்…

ஐதராபாத் பல்கலைக்கு நியமிக்கப்பட்ட இடைக்கால துணைவேந்தர்: தமிழக இளைஞர் தற்கொலைக்கு காரணமானவர் என்று புகார்

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி மாணவனாக படித்து வந்தார் செந்தில் குமார். பன்றிகளை வளர்த்து மேய்க்கும் ‘பன்னியாண்டி’ என்னும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவரின் சொந்த ஊர் சேலம் மாவட்டம். அந்த சாதியிலேயே அதிகம் படித்தவர். பள்ளி, கல்லூரி காலம் முழுவதும் பதக்கங்கள் சான்றிதழ்கள் என்று குவித்தவர். கனவு காணுங்கள் என்று சொன்ன கலாம் இவருக்கு மிகவும் பிடித்தமானவர். எப்படியாவது படித்து முன்னேறி தன் குடும்பத்தின் நிலையை மாற்றிட வேண்டுமென்ற முனைப்போடு படித்து வந்தார். … Continue reading ஐதராபாத் பல்கலைக்கு நியமிக்கப்பட்ட இடைக்கால துணைவேந்தர்: தமிழக இளைஞர் தற்கொலைக்கு காரணமானவர் என்று புகார்

ஜாதி ஆச்சாரத்தை காப்பாற்ற தனி கிணறு கட்டிய பிராமண பேராசிரியர்: இதுதான் ரோஹித் வெமுலாவை தற்கொலைக்கு தள்ளிய ஐதராபாத் பல்கலையின் உண்மை நிலைமை

மிச்சமாகி இருந்த வெறுமையில், ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொள்ள காரணமாக இருந்த ஐதராபாத் பல்கலை பற்றி நாளொரு அதிர்ச்சியும், பொழுதொரு ஆதங்கங்களும் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதில் இப்போது வெளியாகியுள்ள தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. ஐதராபாத் பல்கலையில் கணக்கு பிரிவில்  பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஒரு மூத்த பிராமண பேராசிரியர், பல்கலை குடியிருப்பில் தங்கி இருந்தபோது அவருடைய வீட்டிற்கு முன்னே ஒரு தனி கிணறு வெட்டி வைத்திருந்தது தற்போது வெளி வந்துள்ளது. அவருடைய  ஆச்சார சடங்குகளை புரியும் … Continue reading ஜாதி ஆச்சாரத்தை காப்பாற்ற தனி கிணறு கட்டிய பிராமண பேராசிரியர்: இதுதான் ரோஹித் வெமுலாவை தற்கொலைக்கு தள்ளிய ஐதராபாத் பல்கலையின் உண்மை நிலைமை

நிர்பயாவின் ஜாதியை கேட்டீர்களா ? ரோஹித் வெமுலாவின் ஜாதியை கேட்பவர்களுக்கு அவருடைய தாய் சீற்றத்துடன் கேள்வி

ஆர்.எஸ்.எஸ்சின் இளைஞர் அமைப்பான ஏ.பி.வி.பீ.யின் தூண்டுதல் காரணமாக ஐதராபாத் பல்கலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாலும், மத்திய அமைச்சர்களின் நெருக்குதல் கார்ரனமாகவும் தற்கொலை செய்து கொண்ட தலித் ஆராய்ச்சி மாணவன் ரோஹித் வெமுலாவின் மரணம், நாடு முழுவதும் உள்ள மாணவர்களை வீதிக்கு போராட அழைத்து வந்திருக்கிறது.  அமைச்சர்கள் தத்தாத்ரேயா, ஸ்மிருதி சூபின் இரானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். போராட்டத்தின் தொடர்ச்சியாக லக்னோவில் பாபாசாகேப் அம்பேத்கர் பல்கலையில் உரைநிகழ்த்திய பிரதமர் மோடிக்கு, அங்கிருந்த ஒரு … Continue reading நிர்பயாவின் ஜாதியை கேட்டீர்களா ? ரோஹித் வெமுலாவின் ஜாதியை கேட்பவர்களுக்கு அவருடைய தாய் சீற்றத்துடன் கேள்வி