ஐஐடியில் மாட்டுக்கறி விருந்து ஏற்பாடு செய்த மாணவர் மீது காவி கும்பல் தாக்குதல்!

சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த மாட்டிறைச்சி தடை விதிக்கும் அறிவிக்கையை எதிர்த்து சென்னை ஐஐடி வளாகத்தில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாட்டுக்கறி உண்ணும் விழாவுக்கு ஏற்பாடு செய்தனர். சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த இந்த விழாவில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான முனைவர் பட்ட மாணவர் சூரஜை, மற்றொரு வலதுசாரி மாணவர் அமைப்பினைச் சேர்ந்த 6 பேர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் … Continue reading ஐஐடியில் மாட்டுக்கறி விருந்து ஏற்பாடு செய்த மாணவர் மீது காவி கும்பல் தாக்குதல்!

“600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி

  சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 1995-ஆம் ஆண்டு ஜனவரியில் இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கணிதத் துறையில் இணைப் பேராசிரியர் பதவிக்கு, டாக்டர் டபிள்யூ.பி.வசந்தா கந்தசாமி விண்ணப்பித்தார். ஆனால் அவர் தேர்வாகவில்லை. அதே சமயம், பேராசிரியர் தேர்வில் கலந்து கொண்ட அவர், இணை பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பேராசிரியர் பணிக்கு தன்னை தேர்வு செய்யாததை எதிர்த்தும், அடிப்படை தகுதிகள் இல்லாத சிலர் இணை பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டதாகக் கூறியும், அவர்களின் நியமனத்தை எதிர்த்தும், இந்த முறைகேடுகள் குறித்து … Continue reading “600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி

ஐஐடிகளில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 90% பேர் தலித், பழங்குடியின மாணவர்கள்!

கடந்த 25 ஆண்டுகளில் உயர்கல்விக் கூடங்களில் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. ஐஐடிகளில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 90% பேர் தலித் பழங்குடியின மாணவர்கள் என தெரியவந்துள்ளது. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியல், பதிவு செய்யப்பட்டவை மட்டுமே. ஐஐடிகளில் மாணவர்களின் தற்கொலை விகிதம் 18% சதவீதம் வருடாவருடம் அதிகரிக்கிறது. ஹைதராபாத் பல்கலையில் மட்டும் எட்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். கடந்த ஐந்தாண்டுகளில் (2010-15) ஐஐடி சென்னையில் 10 மாணவர் இறந்திருக்கிறார்கள். இதே காலக்கட்டத்தில் ஐஐடி கான்பூரில் … Continue reading ஐஐடிகளில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 90% பேர் தலித், பழங்குடியின மாணவர்கள்!

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் சாதிய ஒடுக்குமுறை காரணமாக தற்கொலை செய்து கொண்ட தமிழ் மாணவர்!

Joshua Isaac Azad ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி மாணவனாக படித்து வந்தார் செந்தில் குமார். பன்றிகளை வளர்த்து மேய்க்கும் 'பன்னியாண்டி' என்னும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவரின் சொந்த ஊர் சேலம் மாவட்டம். அந்த சாதியிலேயே அதிகம் படித்தவர். பள்ளி, கல்லூரி காலம் முழுவதும் பதக்கங்கள் சான்றிதழ்கள் என்று குவித்தவர். கனவு காணுங்கள் என்று சொன்ன கலாம் இவருக்கு மிகவும் பிடித்தமானவர். எப்படியாவது படித்து முன்னேறி தன் குடும்பத்தின் நிலையை மாற்றிட வேண்டுமென்ற … Continue reading ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் சாதிய ஒடுக்குமுறை காரணமாக தற்கொலை செய்து கொண்ட தமிழ் மாணவர்!