சிறைக்காவலருக்கு ஓர் எழுச்சிப் பாடல்: ஜி.என்.சாய்பாபா

சிறைக்காவலருக்கு ஓர் எழுச்சிப் பாடல் ஜி.என்.சாய்பாபா எனது ஆயுள் தண்டனைக் கூண்டிற்குள் பெரிய சாவிக் கொத்தொன்றைத் தட்டி ஓசை எழுப்பியவாறு காலை வணக்கம் என்னும் தழுவலுடன் அதிகாலைக் கனவுகளிலிருந்து என்னை விழித்தெழ வைக்கிறார் அவர் புன்னகையுடனும் சிரிப்புடனும். தலையில் கருநீல நேரு தொப்பி மேலிருந்து கீழ் வரை மூர்க்கத்தனமான காக்கி உடைகள் இடுப்பைச் சுற்றிப் பாம்பு போல் வளைந்தோடும் கருப்பு பெல்ட் தூக்கம் கலையாமல், பாதி திறந்திருக்கும் என் கண்களுக்கு முன் நிற்கிறார், தடுமாறுகிறார் நரகத்தின் வாயில்களைக் … Continue reading சிறைக்காவலருக்கு ஓர் எழுச்சிப் பாடல்: ஜி.என்.சாய்பாபா

எரியும் பனிக்காட்டுக்கு வயது பத்து: இரா. முருகவேள்

புத்தகத் திருவிழா அறிவிக்கப்பட்டதும் பட்டியல்கள் வரும். எப்படியோ நண்பர்களின் அன்பால் ஏதாவது ஒரு பட்டியலில் எனது நூல்களுக்கு ஒரு மூலையில் சிறிய இடம் கிடைத்து விடுகிறது. ஆனால் எந்தப் பட்டியலிலும் இடம் பெறாத எந்த விருதும் கிடைக்கப் பெறாத எனது நூல் ஒன்று இருக்கிறது. எரியும் பனிக்காடுதான் அது. இதுவரை மூல ஆசிரியர் பி.எச். டேனியலுக்கோ மொழிபெயர்ப்பாளனான எனக்கோ அந்த நூலுக்காக எந்த விருதும் கிடைத்ததில்லை. தொடக்கத்திலிருந்தே எரியும் பனிக்காடு விசித்திரமான பிரச்சினைகளைச் சந்தித்து வந்தது. அதன் முதல் … Continue reading எரியும் பனிக்காட்டுக்கு வயது பத்து: இரா. முருகவேள்

வசுமித்ரவும் கருத்து வன்முறையும் எழுத்து மேட்டிமையும் (உப தலைப்பு : கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவராத உண்மைகள்)

வெண்புறா சரவணன் கடந்த 25-9-2016 அன்று தமுஎகச மாநிலக்குழு சார்பில் தேனியில் சிறப்பாக நடந்து முடிந்த மாநில இலக்கியப் பரிசளிப்பு விழாவில், 2015ல் வெளிவந்த சிறந்த படைப்புகளுக்கு 'தமுஎகச விருதும்' படைப்பாளிகளை கெளரவித்து நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டன. முன்னதாக அன்று பகல் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட ஒன்பது புத்தகங்கள் குறித்த திறனாய்வு மற்றும் தேர்வு செய்யப்பட்ட காரணத்தை விளக்கி நடுவர்குழு தோழர்களால் முன்வைக்கப்பட்டு படைப்பாளிகளின் ஏற்புரைகளுடன் நிகழ்வுகள் நடைபெற்றன. இவ்விழாவின் முத்தாய்பான நிகழ்வாக, தமுஎகச வழங்கும் 'முற்போக்குக் கலை … Continue reading வசுமித்ரவும் கருத்து வன்முறையும் எழுத்து மேட்டிமையும் (உப தலைப்பு : கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவராத உண்மைகள்)

“எஸ்.வி.ஆர் தலைமறைவாகத் திரியும் தீவிரவாதியா?”: தமிழகத்தில் கருத்துரிமை பறிப்பு!

தமிழகத்தின் முக்கியமான மார்க்சிய அறிஞரான எஸ். வி. ராஜதுரை குறித்த ஆவணப்படத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களும் கடும் விமர்சனத்தை அரசு மீது வைத்துள்ளனர். ‘தமிழகத்தில் கருத்துரிமை பறிக்கப்படுவதாக’ குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்த முகநூல் பதிவொன்று: Chandra Mohan "எஸ்விஆர்" என பிரபலமாக தமிழில் அறியப்படும், 75 வயதைக் கடந்தும் கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டும் கூட, மார்க்சீயத்தின் பன்முக பரிமாணத்தையும், உலகளாவிய மார்க்சிய அறிஞர்கள் பற்றியும், பெரியார் & … Continue reading “எஸ்.வி.ஆர் தலைமறைவாகத் திரியும் தீவிரவாதியா?”: தமிழகத்தில் கருத்துரிமை பறிப்பு!

”நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்திய மண்ணை நேசிப்பவர்கள்”:கன்னய்யா குமாரின் உரை எஸ்.வி. ராஜதுரையின் தமிழாக்கத்தில்!

(டெல்லியின் புகழ் பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர்  கன்னைய குமார்  2016 பிப்ரவர் 12இல் இந்த உரையை நிகழ்த்தியதற்காக தேசதுரோகக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார். இப்போது அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்). Countercurrents.org, 18 February, 2016 தளத்தில் வெளியாகியுள்ள இவ்வுரையை தோழர். எஸ்.வி.ராஜதுரை தமிழாக்கம் செய்துள்ளார். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா தமிழாக்கத்தை தன்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். அதை நன்றியுடன் இங்கே மறுபிரசுரம் செய்கிறோம். மூவண்ணக் கொடிய எரிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், பிரிட்டிஷாரிடம் … Continue reading ”நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்திய மண்ணை நேசிப்பவர்கள்”:கன்னய்யா குமாரின் உரை எஸ்.வி. ராஜதுரையின் தமிழாக்கத்தில்!