என்னை மோடியின் ஆதரவாளனைப் போல் சித்தரித்த புதியதலைமுறைக்குக் கண்டனம்: வே. மதிமாறன்

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தன்னை மோடியின் ஆதரவாளைனைப் போல் சித்தரித்த புதியதலைமுறைக்கு எழுத்தாளர் வே. மதிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவருடைய முகநூல் பதிவில் அவர் பின்வருமாறு தெரிவிக்கிறார்... “புதிய தலைமுறையில் திங்கள்கிழமை 8.30 மணியிலிருந்து 9 மணிவரை ஒளிபரப்பான ‘விளிம்பு நிலை மனிதர்கள்’ நிகழ்ச்சியில் மோடியின் பேச்சை மையமாக வைத்து, அதற்கு வலு சேர்ப்பது போல் பங்கேற்பாளர்களின் கருத்துக்கள் தொகுக்கப்பட்டு, முற்போக்காளர்களையே மோடியின் ஆதராவாளர்களைப்போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. அதற்கு சாட்சி நான் பேசும் போது ‘2000 ஆண்டுகளில் … Continue reading என்னை மோடியின் ஆதரவாளனைப் போல் சித்தரித்த புதியதலைமுறைக்குக் கண்டனம்: வே. மதிமாறன்

“தமிழரெல்லாம் மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு யார் காரணம்? அம்பேத்கர் என்று கூறனும்”!

ப்ரேமா ரேவதி மிக சுத்தமான உயர்தரமான சில சாலைகள் சில பகுதிகள் சென்னை மாநகரத்தில் உண்டு. அதில் முக்கியமான ஒன்று சேத்துப்பட்டில் இருக்கும் ஹாரிங்டன் சாலை. பல முறை துப்புரவு செய்யப்பட்டு பல பன்னாட்டு உணவு விடுதிகள் மிளிரும் இச்சாலையை பலமுறை கடந்திருக்கிறேன். இன்று அதிகாலை அதைக் கடக்கும்போது திடீரென “தமிழரெல்லாம் மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு யார் காரணம்? அம்பேத்கர் என்று கூறனும்” என்ற பாடல் மிக உரக்க ஒலித்தபோது இது ஹாரிங்டன் சாலைதானா என … Continue reading “தமிழரெல்லாம் மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு யார் காரணம்? அம்பேத்கர் என்று கூறனும்”!