குடும்பம் என்பது பெண்களைப் போல ஆண்களுக்கும் ஏன் குழந்தைகளுக்கும்கூட பாதுகாப்பற்றது!: எழுத்தாளர் தமயந்தி

தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் சொற்ப பெண்களில் தமயந்தி தனித்துவமானவர். குடும்பம், சமூகம் போன்ற அமைப்புகள் பெண்கள் மீது செலுத்தும் வன்முறைகளை  சிறுகதைகளில் பதிவாக்கியவர். தான் எழுதிய அப்படியானதொரு சிறுகதையை படமாக்கியுள்ளார் தமயந்தி. ‘தடயம்’ என்ற பெயரில் அந்தப்படம் வெளியாக உள்ளது.  இதுகுறித்து தமயந்தியுடன் நடத்திய உரையாடல் இங்கே... நீங்கள் சிறுகதை எழுத்தாளராகவும் ஊடகவியலாளராக அறியப்பட்டவர். பின், சினிமா வசனகர்த்தாக அறிமுகமானீர்கள். இப்போது இயக்குநராக... ஆக, இயக்குநராவதுதான் இலக்காக இருந்ததா? “இது சிக்கலான கேள்விதான். நான் தென்மாவட்டத்திலிருந்து, மத … Continue reading குடும்பம் என்பது பெண்களைப் போல ஆண்களுக்கும் ஏன் குழந்தைகளுக்கும்கூட பாதுகாப்பற்றது!: எழுத்தாளர் தமயந்தி

‘தடயம்’ திரைப்படம் குறித்து இயக்குநரும் எழுத்தாளருமான தமயந்தி நேர்காணல்

‘தடயம்’ திரைப்படம் குறித்து எழுத்தாளர் தமயந்தி நேர்காணல் ஆடியோ வடிவில் https://soundcloud.com/i1qu7gv6b9fl/writer-damayanthi-interview

#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்

எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல் என்ற நிகழ்வை இன்று மாலை ஒருங்கிணைத்திருக்கிறது பிரக்ஞை பதிப்பகம். சென்னை டிஸ்கவர் புக் பேலஸில் நிகழும் இந்நிகழ்வுக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் தலைமை ஏற்று நடத்துகிறார். நிகழ்வில் எழுத்தாளர் தமயந்தியின் ‘இந்த நதி நனைவதற்கல்ல’ (பிரக்ஞை வெளியீடு) கட்டுரை நூல், ’ஒரு வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும்’(கருப்பு பிரதிகள் வெளியீடு) சிறுகதை தொகுப்பு, ’அதனினும் சிறப்பான உயிர்தெழுதல்’(பனிக்குடம்/ஆகுதி வெளியீடு) சில்வியா ப்ளாத்தின் கவிதைகள் மொழிபெயர்ப்பு நூல் குறித்து எழுத்தாளர்கள் பேச விருக்கிறார்கள்.