“அரசியல் சட்டப் பிரிவு 360ன் படி குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும்”: தமிழக அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

அதிமுக அரசு மக்கள் நலத் திட்டங்களுக்கு மட்டுமல்ல நீதித்துறைக்கே நிதி ஒதுக்குவதில்லை என்பது உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தெரிவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ "தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை" அமலில் இருக்கிறதா என்று அதிமுக அரசைப் பார்த்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் அவர்கள் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பொருத்தமான கேள்வி எழுப்பியிருக்கிறது. "அரசியல் சட்டப் பிரிவு 360ன் படி குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும்" என்றும் … Continue reading “அரசியல் சட்டப் பிரிவு 360ன் படி குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும்”: தமிழக அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

சரக்கடிப்பவர்களுக்கு சகிப்புத்தன்மை ; சாதாரண மனிதனுக்கு ரொட்டி : ஆர்.எஸ்.எஸ். அனுதாபி அனுபம் கேர் தத்துவம்…

சகிப்புதன்மையின்மை பற்றிய தேசிய கருத்தரங்கு ஒன்றை "தி டெலிகிராப்’ பத்திரிகை கொல்கத்தாவில் ஏற்பாடு செய்திருந்தது. அதில் பி.ஜே.பி  எம்.பி கிரண் கேரின் கணவரும், பிரபல ஹிந்தி நடிகருமான அனுபம் கேர் கலந்து கொண்டு பேசினார். ஆர்.எஸ்.எஸ்.அனுதாபியான அனுபம் கேர், அந்த கூட்டத்தில் தன்னுடைய கருத்தாக வெளிப்படுத்திய விஷயங்களில் "ஷாம்பெயின் வைத்திருப்பவர்கள்தான் சகிப்புத்தன்மையின்மை பற்றி பேசுவதாக" குறிப்பிட்டார். "தெருவில் உலவும் சாதாரண மனிதனிடம் கேட்டால், அவன் ரொட்டித் துண்டை பற்றி மட்டும்தான் பேசுவான்" என்பது போன்ற தத்துவங்கள் இடம் … Continue reading சரக்கடிப்பவர்களுக்கு சகிப்புத்தன்மை ; சாதாரண மனிதனுக்கு ரொட்டி : ஆர்.எஸ்.எஸ். அனுதாபி அனுபம் கேர் தத்துவம்…

#JNU_FlashBack: இந்திரா காந்தியை வேந்தர் பதவியிலிருந்து விலகச் சொல்லி சீதாராம் யெச்சூரி தலைமையில் மாணவர்கள் போராட்டம்; என்ன செய்தார் இந்திரா?

1977-ஆம் ஆண்டில் எமர்ஜென்ஸிக்குப் பிறகு, நடந்த தேர்தலில் இந்திரா காந்தி தோற்றார். அந்தக் காலக்கட்டத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்கத் தலைவராக இருந்தவர், சீதாராம் யெச்சூரி (இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர்). எமர்ஜென்ஸிக்கு எதிராக போராடிய காரணத்தால் சில காலம் தலைமறைவாக இருந்து, கைதாகி சிறையில் இருந்தவர். எமர்ஜென்ஸி விலக்கிக் கொள்ளப்பட்டப் பிறகு, இந்திரா காந்தி தேர்தலில் தோல்வியுற்ற பிறகும் அவர் ஜேஎன்யூவின் வேந்தர் பதவியில் இருந்து விலகாமல் இருப்பதைக் கண்டித்து … Continue reading #JNU_FlashBack: இந்திரா காந்தியை வேந்தர் பதவியிலிருந்து விலகச் சொல்லி சீதாராம் யெச்சூரி தலைமையில் மாணவர்கள் போராட்டம்; என்ன செய்தார் இந்திரா?

“லூப்பு தரான் சரிதானா? போடலன்னா விடுறானா”:குடும்பக் கட்டுப்பாட்டை எதிர்த்தார்களா கம்யூனிஸ்டுகள்?

தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கத் தலைவர் மணி மதிவண்ணன்,  திமுக குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தியபோது, அதை கம்யூனிஸ்ட்டுகள் கடுமையாக எதிர்த்ததாக தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு எழுதியிருந்தார். “மேற்கு வங்கச் செயல்பாடுகளை வைத்து கம்யூனிஸ்டுகளை விமர்சிப்பது ஒருபுறம் இருக்கட்டும். தமிழ்நாட்டுச் செயல்பாடுகளைப் பார்ப்போமா? புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி புரட்சிக் கலைஞர் இவர்களை தமிழ்நாடு முழுக்க பரப்பியதிலும் வளர்த்து விட்டதிலும் அன்னாருக்கு என்ன பங்கு? தமிழ்நாட்டின் முன்னேற்றத்திலும் நல்வாழ்விலும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்கு முக்கியமான இடமுண்டு. அதை வெற்றிகரமாக்கியதில் … Continue reading “லூப்பு தரான் சரிதானா? போடலன்னா விடுறானா”:குடும்பக் கட்டுப்பாட்டை எதிர்த்தார்களா கம்யூனிஸ்டுகள்?

லீவிஸ் எம். சிமோன்ஸ்:இரவு விருந்தில் இந்திரா காந்தியை, சஞ்சய் காந்தி அறைந்த கதை என்ன?

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, அவரது மகன் சஞ்சய் காந்தி 6 முறை அறைந்த தகவல் தனக்கு எப்படி  கிடைத்தது, அதைப்பற்றிய தன்னுடைய கட்டுரை வெளியான பின் , ராஜீவ்காந்தி, சோனியா காந்தியுடனான சந்திப்பு எப்படி இருந்தது என்றெல்லாம் நினைவு கூறுகிறார் புலிட்சர் விருது பெற்ற வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிருபர் லீவிஸ் எம். சிமோன்ஸ். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1975ம் ஆண்டு அவசரநிலையை பிரகடனப் படுத்திய காலகட்டத்தில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் டெல்லி நிருபராக பணியாற்றியவர் … Continue reading லீவிஸ் எம். சிமோன்ஸ்:இரவு விருந்தில் இந்திரா காந்தியை, சஞ்சய் காந்தி அறைந்த கதை என்ன?