“போராடத் தூண்டினால் குண்டர் சட்டம் கட்டாயம் பாயும்”: முதலமைச்சர் எச்சரிக்கை

"போராடத் தூண்டினால் குண்டர் சட்டம் கட்டாயம் பாயும்" என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அளித்த விளக்கத்தில், "மாணவி வளர்மதி மீது ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாணவி தன்னை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதால் சேலம் மாநகர காவல் ஆணையர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் … Continue reading “போராடத் தூண்டினால் குண்டர் சட்டம் கட்டாயம் பாயும்”: முதலமைச்சர் எச்சரிக்கை

7 கோடி முதலீட்டில் 33 கோடி சம்பாதிப்பது எப்படி? அமைச்சர் கே.சி.வீரமணி சாதனை ’சரித்திரம்’!

அதிமுக கோடீஸ்வர அமைச்சர் சிலரின் சொத்துக் கணக்குகள்... அமைச்சர் கே.சி. வீரமணி தாக்கல்‌ செய்துள்ள வேட்பு மனுவில் மொத்த சொத்து மதிப்பு 33 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார். 2011ல் அவரது சொத்து மதிப்பு 7 கோடியே 15 லட்சமாக குறிப்பிடப்பட்டது.   அமைச்சர் வளர்மதி மொத்தம் 8 கோடியே 92 ‌லட்ச ரூபாய் சொத்து உள்ளதாக கூறியிருக்கிறார். 2011ல் அவருக்கு 3 கோடியே 35 லட்ச ரூபாய் சொத்து இருந்ததாக கூறப்பட்டிருக்கிறது. அமைச்சர் கோகுல இந்திராவுக்கு … Continue reading 7 கோடி முதலீட்டில் 33 கோடி சம்பாதிப்பது எப்படி? அமைச்சர் கே.சி.வீரமணி சாதனை ’சரித்திரம்’!

சிறுமிக்கு பச்சை குத்திய விவகாரம்: ஒ.பி.எஸ் உட்பட ஐந்து அமைச்சர்கள் மீது மனித உரிமை மீறல் புகார்!!

கடந்த மாதம் 24 ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. அதில் ஒருபகுதியாக சென்னை வேளச்சேரி முருகன் திருமண மண்டபத்தில், 668 பேரின் வலது கையில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி, விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் கண்ணீரும் கம்பலையுமாக பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் முதல்வர் … Continue reading சிறுமிக்கு பச்சை குத்திய விவகாரம்: ஒ.பி.எஸ் உட்பட ஐந்து அமைச்சர்கள் மீது மனித உரிமை மீறல் புகார்!!

ஆனந்த விகடன் மந்திரி தந்திரியில் அவதூறு: மேலும் 5 அமைச்சர்கள் வழக்கு!

முதலமைச்சரை தொடர்ந்து ஆனந்த விகடன் வார இதழ் மீது மேலும் 5 அமைச்சர்கள் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். அமைச்சர்கள் வைத்திலிங்கம், கே.சி.வீரமணி, எம்.எஸ்.எம். ஆனந்தன், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஆனந்த விகடனில் மந்திரி தந்திரி பகுதியில் அமைச்சர்கள் பற்றி கூறியுள்ள தகவல்கள் உண்மைக்கு மாறானது என்று தெரிவித்துள்ளனர். தமிழக அரசுக்கு அவப் பெயரை உண்டாக்கும் விதமாக செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், … Continue reading ஆனந்த விகடன் மந்திரி தந்திரியில் அவதூறு: மேலும் 5 அமைச்சர்கள் வழக்கு!