திருவள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை: ‘ஆய்வாளர்’ மாஃபா பாண்டியராஜன்

திருவள்ளுவருக்கு காவி உடையணிவித்து சமூக ஊடகங்களில் பாஜகவினர் பரப்பினர். இது கண்டனத்தை கிளப்பிய நிலையில், ‘திருவள்ளுவர் நாத்திகரா?’ என்கிற சர்ச்சை கிளம்பியது.

பாஜகவின் எச். ராஜா, நாராயணன் போன்றோர் அவரை ஆத்திகர் எனக் கொண்டாடிய நிலையில், தமிழக அமைச்சர் மஃபா பாண்டியராஜன், ‘திருவள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பேயில்லை என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் சில காலம் இருந்த பாண்டியராஜன், அதிமுகவில் பாஜகவின் பி டீமாக செயல்படுவதாக விமர்சனங்கள் வைக்கப்படும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

’நாத்திகர்’ என தமிழ் மரபில் குறிப்பிடப்படுவதற்கு பொருள், பார்ப்பன எதிர்ப்பு மரபில் வந்தவர் என்பதே என பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

”திருவள்ளுவரை நாத்திகர் என்று எவருமே கூறாதபோது இவருக்கு ஏன் ஆத்திரம்? வேத மறுப்பு என்பது வேத காலத்திலேயே தோன்றியதாகும். எடுத்துக்காட்டு: சாருவாகம். தசரதனுடைய அவையில் இருந்த ஜாபாலியைப் பற்றி வால்மீகி ராமாயணம் கூறுகிறது. வேத மறுப்பாளர்களையும் அவை சொரிந்து (விலங்குகளைப் பலியிட்டு) நடத்தப்பட்ட வேள்விகளை எதிர்ப்பவர்களைக் கொன்று குவிக்க இராமனைத் தன்னுடன் காட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று தசரதனிடம் விசுவாமித்திரன் கேட்டதாகவும் இராமாயணத்தில் உள்ளது. எதிர்த்தோருக்கு அசுர முத்திரை.

அப்படியாயின், அவிசொரிந்து ஆயிரம் வேட்டலை எதிர்த்த வள்ளுவர் வேதநெறிப்பட்டவரா? வேதநெறி எதிர்ப்பாளரா? அவர்கள் பார்வையில் வள்ளுவரும் அசுரரே! போகட்டும்! வள்ளுவர் கூறியதாகக் கூறப்படும் வாலறிவன், வேண்டுதல் வேண்டாமை இலான், பொறிவாயில் ஐந்தவித்தான், அறவாழி அந்தணன் (பிதாமணன் அல்லன்) என்னும் இலக்கணத்துக்குட்பட்ட இந்து மதக் கடவுள் ஒன்றையாவது (ஒருவரையாவது) சங்கிகளாலும் சங்கிகளின் அடிதாங்கிகளாலும் காட்டமுடியுமா?” என முத்துசெல்வம் என்பவர் முகநூலில் பாண்டியராஜனின் கருத்துக்கு பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மனநல மருத்துவர் ஷாலினி தனது முகநூலில்

“திருவள்ளுவர் நாத்திகராக இருக்க முடியாதாம்… ஹலோ நாத்தீகம்னா என்னனு தெரிஞ்சிகிட்டு பேசுங்க.

நாத்திகம் என்றால் வேத மறுப்பு, தட் மீன்ஸ், பிறப்பால் உயர்வு தாழ்வு, ஜாதி, privilege, entitlement, Supremacy மாதிரியான அம்சங்களை ஏற்காதவர் என்று அர்த்தம். நான்கு வர்ண அடுக்கு நிலையை நிராகரித்தவர் என்று அர்த்தம்.

எட்டாம் நூற்றாண்டின் classification படி ஆதிக்க மதங்கள்: சைவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம், வைணவம். இவை எல்லாமே சதுர் வர்ணமெனும் racist கோட்பாட்டை ஏற்றவை.

அதே கிளாஸிபிகேஷன் படி நாத்தீக மதங்கள்: லோகாயதா, ஆசீவகம், பௌத்தம், ஜெய்னம். இவை எல்லாவற்றுக்குமான பொது அம்சம்: வேதம் விட்ட கப்ஸாவை நம்பாமல் சொந்த அறிவை பயன்படுத்தியவர்கள். இதில் ஜயினர்கள் பிறவி, மறுப்பிறவி, மாதிரியான கருத்துக்களை வைத்திருந்ததால் அவர்கள் கொஞ்சம் வைதீகத்தோடு ஒத்துப்போனார்கள்.

ஆனால் ஆசீவர்கள் ஒரு போதும் ஒத்து போகவேயில்லை. ஆதி தமிழரது மதம் ஆசீவகம். திருவள்ளுவர் ஆசீவக மதத்தை சேர்ந்தவராக இருக்கக்கூடும்.  ஆசீவகர்களை சமணர் என்று அழைப்பர்.  இவர்கள் தத்துவம், வானியல், மருத்துவம் ஆகியவற்றில் ஜித்தர்கள். ஜித்து=சித்து. திருநாவுக்கரசருக்கு சூளை நோய்க்கு அறுவை சிகிச்சை செய்தவர் ஆசீவக துறவியர். இந்த துறவியரை தான் பிறகு சைவர்கள் கழுவில் ஏற்றி கொன்றார்கள். இவர்கள் தீவிர வேத எதிர்ப்பாளர்கள், அதனால் நார்த்தீகர்கள்!!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் vs சதுர்வர்ணம் மயா சிருஷ்ட்டம்.

நீங்கள் எந்த பக்கம்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் மொழியை சனியனே என்று ஈவேரா பேசியதற்கு ஆதாரங்கள் உள்ளது: ஹெச்.ராஜா

பெரியார் சிலை பற்றிய ஹெச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த ஹெச். ராஜா, தனது முகநூல் நிர்வாகி தனக்கு தெரியாமலே, பெரியார் சிலை பற்றிய சர்ச்சை பதிவை பதிவிட்டு விட்டதாகவும் விளக்கம் அளித்து இருந்தார். இதனால், இந்த விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில், பெரியார் பெயரில் ஹெச்.ராஜா மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தில் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “தமிழ் மொழியே இருக்க கூடாது என்பதற்காக தமிழர்கள் மீது திணிக்கப்பட்டதுதான் திராவிடம். தமிழ் மொழியை சனியனே என்று ஈவேரா பேசியதற்கு ஆதாரங்கள் உள்ளது. இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதால்தான் வசைபாடுகிறார்கள்” என்று தெரிவித்தார். ஹெச்.ராஜாவின் இந்த கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்றால் அர்த்தம் என்னவோ?: பேராசிரியர். அருணன்

கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான எச் ராஜாவின் கொலைவெறிப் பேச்சை கேட்டேன். அவர் ஒரு ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி என்பது மேலும் நிச்சயமாகிறது. “ஆண்டாள் ஒரு தேவதாசி” என்று ஓர் ஆய்வாளர் கூறியதை கவிஞர் மேற்கோள் காட்டியதற்குத்தான் “அவரது தலை உருள வேண்டும்” என்று தன் சகாக்களை தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார். இது ஆய்வுரிமை மீது, கருத்துரிமை மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்.

ஆண்டாளைப் பற்றிய செய்திகளுக்கு ஆதாரம் அவரின் பாடல்கள் மற்றும் அவரைப் பற்றிய வைணவ நூல்களின் கூற்றுக்கள். அவற்றைப் படிக்கிற எவருக்கும் ஆண்டாள் ஒரு தேவதாசியாக இருக்கலாம் எனும் சந்தேகம் வராமல் போகாது. எச் ராஜாவே “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்று பெருமையோடு பேசியிருக்கிறார். அதன் அர்த்தம் என்னவோ? தான் சூடிய மாலையை விஷ்ணுவிற்கு அனுப்பினால் அதன் பொருள் அந்தக் கடவுளை மணந்தார் என்பது. பொட்டுக்கட்டும் சடங்கில்தான் ஒரு கடவுளை மணப்பது வரும்.

அப்புறம், தனது பாடல்களில் விஷ்ணு தன்னை உறவுகொள்ள வரவேண்டும் என்று உருகி உருகிப் பாடியிருக்கிறார். இதர பெண்களைப் போல் சாதாரண மணவாழ்வை ஆண்டாள் வாழவில்லை என்றே வைணவ நூல்கள் கூறுகின்றன. இவற்றைக் கொண்டு ஓர் ஆய்வாளர் அத்தகைய ஒரு முடிவுக்கு வந்தால் அது பாவமா? தேவதாசி முறையே இல்லை என்று இந்த மனுவாதியால் கூற முடியுமா? அதை கடவுளின் பெயரால் பராமரித்தது வருணாசிரமவாதிகளே என்பதற்கு ஆழ்வார்கள் வாழ்வு பற்றிய “குரு பரம்பரை” நூலிலேயே ஆதாரம் உள்ளது.

எச். ராஜாவின் இந்த கொலை மிரட்டலை அனுமதித்தால் மெய்யான வரலாற்று ஆய்வுகளே தமிழகத்திலும் காணாமல் போய்விடும். தமிழகமும் வடமாநிலங்கள் போல பிராமணய உத்தரவுகளால் நிறைந்துவிடும். இந்து மதம் பல பிரிவுகளை உள்ளடக்கியது. அதில் ஒரு பிரிவுதான் பிராமணிய மதம். அதைச் சார்ந்தோர் “இந்து மதம்” என்பதன் பெயரால் உத்தரவுகள் போடுகிறார்கள். எச் ராஜா போன்றவர்கள் காத்தவராயனையும் மதுரைவீரனையும் முனியாண்டியையும் கருப்பணசாமியையும் வழிபடுவார்களா? மாட்டார்கள் என்பதை பஞ்சம, சூத்திர இந்துக்கள் உணர்ந்து கொண்டால் இவரைப் போன்றவர்களின் உண்மை சொரூபம் வெளிப்பட்டுப் போகும்.

பேராசிரியர். அருணனின் முகநூல் பதிவு.

முகப்பு ஓவியம் நன்றி: மணிஷா ராஜு

எச். ராஜாவுக்கு எதிராக அறிக்கைவிட்டதுதான் நடிகர் விஷால் அலுவலக ரெய்டுக்குக் காரணமா?

நடிகர் விஷாலுக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நடத்தி வருகின்றனர். அண்மையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவுக்கு எதிராக அறிக்கைவிட்டதுதான் நடிகர் விஷால் அலுவலக ரெய்டுக்குக் காரணம் என்ற கருத்து சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டிருக்கிறது.

சட்டவிரோத தேர்தல்: எச்.ராஜா

சாரண, சாரணியர் இயக்க தலைவருக்கான தேர்தல் சட்ட விரோதமாக நடந்துள்ளதாக பாஜக தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களுக்கு நடிகர் கமல்ஹாசனின் அழைப்பு

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதம்:

“வணக்கம்…

இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல. அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாகக் காசுக்கு விலை போகாத தமிழக வாக்களாருக்கும்கூட.

ஊரே கூடி ஊழல், ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்ட பின்பு, சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதிசயம்.

‘ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா’ என்று அறைகூவல் விடும் தம்பி மாண்புமிகு. ஜெயகுமாரோ அல்லது எலும்பு வல்லுனர் தம்பி எச்.ராஜாவோ, நான் அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள்.

தெரிந்தோ, தெரியாமலோ என்று இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தேனோ, அன்றே நான் வயதுக்கு வராத அரசியல்வாதிதான்.

நாற்காலி மோகத்தில் பத்தையும் பறக்கவிட்டு அடுக்கு மொழியில் அறிவுரைகளை அள்ளி வீசுபவர்கள்.. ஊர் அறிய கைக்கூலி வாங்கி கடமை செய்ய மறந்தவர்கள். என்னை வரி ஏய்ப்புக்காக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுவது, ஒருங்கே கோபத்தையும், சிரிப்பையும் வர வைக்கிறது.

ஆதாரத்துடன் சொல்ல வேண்டுமாம்…! அமைச்சர் கட்டளை இது. ஊரெல்லாம் கேட்ட ஊழல் பற்றிய ஓலம் அதற்குள் மறந்திருந்தால் நினைவுப்படுத்த மக்களே இருக்கிறார்கள். நடுவில் நான் எதற்கு பூசாரி…?

இந்த அறிக்கை, அமைச்சர் கேட்டுக் கொண்டபடி ஆதாரங்களை மக்களே இணைய தளங்களில் அல்லது உங்கள் வசதிகேற்ற ஊடகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்க்கு அனுப்பி வைக்கும் ஒரு வேண்டுகோளே.

நீங்கள் இவ்வரசின் காலத்தில், ஊழலால் அனுபவித்த இன்னல்களை விளக்கிக் கேள்வியுடன் சேதி அனுப்புங்கள்.

எக்காரணம் கொண்டும் மரியாதை குறையாமல் இருக்கட்டும் உங்கள் கேள்விகள்.

தற்கால அமைச்சர்கள்விட மாண்புமிக்கவர் மக்கள் என்று அவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

குறைந்தபட்சம் சில லட்சம் கேள்விகள் நிச்சயம் வரும்.

அத்தனை கேள்வியாளர்களையும் கைது செய்வீரோ அல்லது பதில் சொல்வீரோ!

பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

இத்தனை லட்சம் பேரை, கைது செய்து வைக்க போதிய சிறைகள் தென்னகத்தில் இல்லை.

நிற்க.. செய்தி சரியாகப் புரியாதவர்களுக்கு…

“ஊழலே இல்ல நிரூபி பாப்போம்னு அமைச்சர் கேட்டார்ல.? ஊழல் இருக்குன்னா எழுதி அனுப்பிடுங்க.

கார்டு, கவர்ல, கடுசுதால வேணாம். கிழிச்சுப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பாங்க. டிஜிட்டல் யுகம் இது. டிஜிட்டலா பதிவு செய்ங்க. ஆனா மரியாத தவறாம அதச் செய்ங்க.”

எல்லாத் துறைக்கும் மக்கள் குரல் கொடுப்பார்கள். என் துறைக்கான ஊழலை நான் சுட்டிக் காட்டுகிறேன்.

சினிமாவில் வரி விலக்கு அளிக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு படத்திற்கும் தனிச் சான்றிதழ் வழங்க நடக்கும் லஞ்ச நாடகங்களுக்கு என்னைப் போல் வெகு சிலரைத் தவிர, மற்றவெரல்லாம் பயந்து உடந்தையாய் இருக்கின்றனர். இது என் குரல்.

துணிவுல்ல சினிமாக்காரர்கள் மட்டும் குரல் கொடுத்தாலே, அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும்.

மக்கள் மந்தைகள் அல்லர். மக்கள் குரல் கேட்கும் மாண்பை எய்துங்கள்.

விரைவில் அது கேட்கும். தெளிவாக

உங்கள்

கமல்ஹாசன்

அனுப்ப வேண்டிய துறை சார்ந்த அமைச்சர்கள் முகவரி :

http://www.tn.gov.in/ministerslist

கம்யூனிஸ்ட்களுக்கு முடிவு கட்டாமல் விடமாட்டேன்: ஹெச்.ராஜா சவால்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி உட்பட பல்வேறு கேள்விகளுக்கு சென்னையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலளித்தார்.
கேள்வி:– தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா காலூன்ற முடியாது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான டி.ராஜா கூறியிருக்கிறாரே?

பதில்:– “இந்தியாவில் நடந்த முதல் பொது தேர்தலின் போது 2–வது பெரிய கட்சியாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி இருந்தது. இப்போது ஒரு சீட் கட்சியாக மாறிய பிறகும் கம்யூனிஸ்டு தலைவரின் செருக்கு குறையவில்லை என்பதையே காட்டுகிறது.

நாடு முழுவதும் கம்யூனிசத்தை அப்புறப்படுத்த மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். கேரளாவுக்கு நான் பொறுப்பாளர். அந்த மாநிலத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு முடிவு கட்டாமல் விடமாட்டேன்.

தமிழக அரசியலில் கணுக்கால் அளவு கூட உயரம் இல்லாத போது அவர்கள் இவ்வாறு கூறுவது நகைப்புக்குரியது.” என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சோ.ராமசாமி , எஸ்.வி.சேகர், எச்.ராஜா, சீமான்!

வி. சபேசன்

10940633_788394964542335_8137855451266181462_n
வி. சபேசன்

இன்று சீமான் பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று இருந்தேன். அப்படியே இருந்திருக்கலாம். தெரியாமல் ‘தமிழ்.ஒன்இண்டியா’ இணையத்தில் சீமானின் பேட்டியின் இரண்டாம் பாகத்தை படித்துத் தொலைத்து விட்டேன்.

‘சீமானின் கேள்விகளால் ஒரு வேள்வி செய்வோம்’ என்று அதற்கு ஒரு தலைப்பு வேறு. வேள்வி என்றால் ஆடு வெட்டுவதா அல்லது நெருப்பு வளர்த்து இந்திரனைக் கூப்பிடுவதா என்பது தெரியவில்லை. அதைப் பிறகு ஒரு நாள் பார்ப்போம்.

அந்தப் பேட்டியிலே சீமான் சொல்கிறார் ‘என்னையே எடுங்க…. இதுவரை நீங்க என்ன ஆளுங்கன்னு கேட்காத ஒரே ஒருத்தன் பிராமணன்தான். நம்ம தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவங்கதான் நீங்க என்ன ஆளு, என்ன சாதின்னு கேட்டிருக்கான்’

உண்மையில் இதைப் படித்த போது சீமானை ‘லூசுப் பயல்’ என்றுதான் சொல்லத் தோன்றியது.

தலையிலே இருந்து பிறந்தவன் காலிலே இருந்து பிறந்தவனிடம், நீ எந்தக் கால் விரலில் இருந்து பிறந்தாய் என்று கேட்பானா? அது பற்றி அவன் ஏதும் அக்கறைப்படுவானா?

சீமான் அவர்களே! நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்!

வர்ணாச்சிரமம் பற்றி தந்தை பெரியாரின் பாசறையில் படித்திருப்பீர்கள். அதை மீண்டும் நினைவுபடுத்துங்கள். பார்ப்பனர்கள் கடவுளின் தலையிலேயே இருந்து வந்தவர்கள். நாம் எல்லாம் சூத்திரர்கள். கடவுளின் காலிலே இருந்து பிறந்தவர்கள்.

சூத்திரர்கள் யார் என்பதற்கு மனு தர்மம் ஒரு அருமையான விளக்கமும் தந்திருக்கிறது.

இந்த சூத்திரர்களுக்குள்தான் ஆயிரம் பிரிவுகள். அவர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள். அந்த ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையில், ஒரு சூத்திரன் இன்னொரு சூத்திரனைக் காணும் போது, ‘நீ என்ன ஜாதி’ என்று கேட்பான். தன்னை விட அவன் சாதியில் உயர்ந்தவனா என்று அறிவதுதான் நோக்கம்.

எல்லாவற்றிற்கும் மேலே இருக்கின்ற பார்ப்பானுக்கு தனக்கு கீழே உள்ளவன் எந்தப் படியில் நிற்கிறான் என்பதில் அக்கறை இல்லை. இந்த ஏணிப்படிமுறை உடையாமல் இருந்தால் போதும்.

பார்ப்பானுக்கு ஒருவன் பார்ப்பானா அல்லது பார்ப்பான் இல்லையா என்பதுதான் முக்கியம். பார்ப்பான் இல்லையென்றால் அவன் எதுவாக இருந்தாலும் கவலை இல்லை.

விளங்குகிறதா சீமான் அவர்களே?

அந்தப் பேட்டியைப் படித்துப் பார்த்தேன். சோ.ராமசாமி , எஸ்.வி.சேகர், எச்.ராஜா போன்றவர்கள் தரக் கூடிய ஒரு பேட்டி அது. இன்று இவற்றை எல்லாம் சீமானின் வாயில் இருந்து கேட்க நேர்ந்திருப்பது காலத்தின் கொடுமை.

எச்.ராஜாவின் கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை;வெங்கய்யா நழுவல்:பெரியாரை செருப்பாலடிப்பேன் என்று சொன்னவரின் தரம் எப்படி இருக்கும்?;கம்யூ.அதிருப்தி!

ஜவஹர்லால் நேரு பல்கலையில், தேசத்திற்கு விரோதமாக மாணவர்கள் கோஷமிட்டதாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களால் எழுப்பப்படும் குற்றச்சாட்டின் தொடர்ச்சியாக, கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் தொடர் குரல் எழுப்பி வரும், டி.ராஜாவின் மகள் அபராஜிதா ராஜாவும் ஜவஹர்லால் பல்கலையில் தேசத்திற்கு எதிராக குரல் கொடுத்ததாக கூறப்பட்டது.

இது குறித்து கோவையில் பேட்டியளித்த பாரதீய ஜனதாவின் எச்.ராஜா “அபராஜிதாவை சுட்டுக்கொள்ள வேண்டுமென்று கூறினார்.

”கம்யூனிஸ்ட் தலைவர் டி. ராஜா தன் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும்” ரத்த தாகம் கொண்ட எச். ராஜாவின் பேச்சு

எச்.ராஜாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இது குறித்து பாரதீய ஜனதா பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது “எச்.ராஜாவின் கருத்துக்கும் பாரதீய ஜனதாவிற்கும் தொடர்பில்லை என்றும், இது போன்ற கருத்து சொல்ல யாருக்கும் அனுமதியில்லை என்றும் தெரிவித்தார். மேலும்  தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கி பேசுவது ஏற்புடையதல்ல என்றும் வெங்கய்யா குறிப்பிட்டார்.

எச்.ராஜாவின் கருத்து தொடர்பாக அதிருப்தி வெளியிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.பி.யுமான சுப்பராயன், “பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்ற எச்.ராஜா, நாகரீகமாக பேசினால்தான் ஆச்சர்யப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

”கம்யூனிஸ்ட் தலைவர் டி. ராஜா தன் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும்” ரத்த தாகம் கொண்ட எச். ராஜாவின் பேச்சு

பாஜகவின் தேசிய செயலாளர் எச்.  ராஜா, சனிக்கிழமை கோவையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “டி. ராஜா உண்மையான தேசபக்தராக இருந்தால் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக அவர் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும். என் மகள் அந்த ஆர்ப்பாட்டத்தில் நின்றிருந்தால் நான் அதைத்தான் செய்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். எச். ராஜாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
Arunan Kathiresan

ரத்த தாகம் கொண்ட பா. ஜ. க. வின் எச் ராஜா

“கம்யூனிஸ்டு டி ராஜா தனது மகளை சுட்டுக் கொல்லச் சொல்ல வேண்டும், யெச்சூரி நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று பேட்டி கொடுத்திருக்கிறார் பா ஜ க வின் தேசியச் செயலாளர் எச் ராஜா. ஏனிந்தக் கொலைவெறி ? தோழர் டி ராஜாவின் மகள் “இந்தியாவை உடைப்போம்” என்று கோஷம் போட்டாராம்! அத்தகைய மாணவர்களை
யெச்சூரி ஆதரித்தாராம்! இந்திய கம்யூனிஸ்டுகள் நாட்டின் ஒற்றுமையைக் காப்பதில் தங்கள் இன்னுயிரைத் தத்தம் செய்தவர்கள் என்பதை பஞ்சாபின் வரலாறு சொல்லும். 
பிரிவினைவாத பிந்திரன்வாலா கோஷ்டியை தொடக்கம் முதல் இறுதிவரை எதிர்த்தவர்கள் கம்யூனிஸ்டுகள்தாம் என்பதை நாடறியும். காஷ்மீரிலும் பிரிவினைவாதிகளை  எதிர்த்து போராடி வருகிறவர்கள் அவர்கள்தாம்.

ஆனால் பஞ்சாபிலும் காஷ்மீரிலும் பிரிவினைவாதிகளை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சிகளோடு பதவிஅரசியல் ஆதாயத்திற்காக உறவு வைத்திருக்கும் கட்சி சாட்சாத் பா ஜ கதான். பாபர் மசூதியை இடித்து இந்திய மக்களின் மனங்களை மதரீதியாகப் பிளக்க முயன்றதும் பாஜ கதான். அந்தக் கட்சியின் தலைவருக்கு தேச ஒருமைப்பாடு பற்றி எங்களுக்கு புத்திசொல்ல எந்த யோக்யதையும் கிடையாது.

தோழர் டி ராஜாவின் மகள் மட்டுமல்ல ஜே என் யூ மாணவர் தலைவர் கன்னய்யா குமாரும் அத்தகைய பிரிவினை கோஷங்களை எழுப்பவில்லை, அதைச் செய்தது சதிகார பா ஜ க மாணவர் பிரிவுதான் எனும் உண்மை இப்போது வெளியாகியிருக்கிறது. அப்படியும் ரத்த தாகம் கொண்டலைகிறார் பா ஜ க தலைவர். அந்தக் கட்சியின் கோரமுகம் வெளிப்பட்டுப் போனது ; தமிழகத்தின் ஜனநாயகக் கட்சிகள் எச்சரிக்கை கொள்ளட்டும்.

பெத்தப்புள்ளய சுட்டுக்கொல்லச்சொல்லி அப்பனே கேட்கனும்னு சொல்ற இந்த கொலைவெறியனை நம்பி பக்கத்தில படுத்து தூங்கிறாதீங்க, தலையில கல்லைத் துக்கிப் போட்டு கொன்னுப்புட்டு நாட்டுக்காக செஞ்சேன்னு ரீல் விட்டுருவான். மோசடியாக போலி வீடியோவை பரப்பி நாட்டில் அமைதியின்மையையும் பதற்றத்தையும் உருவாக்கியிருக்குற எச்ச ராஜா கும்பல்தான் நாட்டைவிட்டு ஓடணும் இல்லேன்னா நாண்டுக்கிட்டு சாகணும்.

இந்தக் கொலைவெறியும் ரத்தவெறியும் பீதி உண்டாக்குகிறது. இவர்கள் எல்லாம் மனிதர்கள்தானா? ஒரு மனித உயிர் இவர்களுக்கு அத்தனை துச்சமா? இந்தப் பேச்சைவிட வேதனை அளிப்பது இந்த வெறித்தனத்தை ஆதரிக்கவும் இந்த நாட்டில் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதுதான்.

அபராஜிதா குறித்து தி டைம்ஸ் தமிழின் பதிவு: தேசவிரோத குற்றவாளியா டி.ராஜாவின் மகள்…?

அபராஜிதாவின் பேச்சு இங்கே: