உழவுக் கருவி வாங்குவதில் ரூ.38 கோடி ஊழல்: விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்

உழவுக் கருவி வாங்குவதில் நடந்த ரூ.38 கோடி ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்த பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆக்டபசின் கரங்களைப் போன்று நீளும் தமிழக ஆட்சியாளர்களின் ஊழல் உழவுக் கருவிகளைக் கூட விட்டு வைக்கவில்லை. விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் எனப்படும் உழவுக் கருவிகளை வழங்குவதில் மிகப்பெரிய அளவில் ஊழலும், முறைகேடுகளும் நடைபெற்று வருகின்றன. வேளாண் தொழிலை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக உழவர்களுக்கு மானிய … Continue reading உழவுக் கருவி வாங்குவதில் ரூ.38 கோடி ஊழல்: விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்

ராடியாவுக்கு முன்பே வாஜ்பாயி ஆட்சியில் இந்திய குடியரசு விற்பனைக்கு வந்தது; அதை வாங்கியது ரிலையன்ஸ்!

By Meetu Jain with Ushinor Majumdar in Delhi “இந்திய குடியரசு, தற்போது விற்பனைக்கு” நீரா ராடியா தொலைபேசி உரையாடல்களை நவம்பர் 2010ல்வெளியிட்டபோது அவுட்லுக் இந்த வார்த்தைகளைத்தான் பயன்படுத்தியது. அரசியல்வாதி-கார்ப்பொரேட்டுகள் - ஊடகங்களுக்கிடையான பிணைப்பை அந்த 140 உரையாடல்கள்  வெளிக்கொண்டு வந்தன. மன்மோகன் சிங் அரசாங்கத்தின் ஜீவாதாரமான விஷயங்களையெல்லாம் இந்த விவகாரம் தின்றது.  அது நிகழ்ந்து ஆறு வருடங்களுக்குப் பின் வெளிவந்திருக்கும் ‘எஸ்ஸார் டேப்ஸ்’ பெருமுதலாளிகள் இந்திய நீதித்துறையை, நாடாளுமன்றத்தை, வங்கிகளை, போட்டியாளர்களை, நிர்வாகிகளை எப்படி … Continue reading ராடியாவுக்கு முன்பே வாஜ்பாயி ஆட்சியில் இந்திய குடியரசு விற்பனைக்கு வந்தது; அதை வாங்கியது ரிலையன்ஸ்!

யாருக்கு ஓட்டு போடக் கூடாது; யாருக்கு ஓட்டு போடவேண்டும்?

 ஞாநி ஒவ்வொரு கட்சியாக நாம் ஏன் அதற்கு ஓட்டு போடக் கூடாது என்று பார்ப்போமா? தி.மு.க: 1. எவ்வளவு பூசி மெழுகினாலும், கருணாநிதி மாறன் குடும்பத்தின் நலன்களுக்கு முக்கியத்துவம் தந்து இயக்கப்படும் கட்சி. 2.பதவி பேரங்களுக்காக மட்டுமே டெல்லி அரசியலைப் பயன்படுத்தும் கட்சி. அங்கே இங்கே என இரண்டு இடங்களிலும் இதே கட்சி அதிகாரத்தில் இருந்தால், கட்சித்தலைவர் குடும்பத்தின் வியாபாரத்தொழில் துறை ஏகாதிபத்தியத்தின் விஸ்தரிப்பு கட்டுக்கடங்காமல் போய்விடும். 3. பகுத்தறிவு, தமிழ்ப்பற்று போன்றவற்றையெல்லாம் வெற்று கோஷங்களாக மட்டுமே … Continue reading யாருக்கு ஓட்டு போடக் கூடாது; யாருக்கு ஓட்டு போடவேண்டும்?

லஞ்சம் வாங்கிய விவரத்தை லெட்டர் பேடில் எழுதி ஜெயலலிதாவுக்கு அனுப்பிய அதிமுக பிரமுகர்!

பகுதி நேர ஆசிரியர் பணி மற்றும் கிராம உதவியாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி, அமைச்சராகவும் திருவண்ணாமலை அதிமுக மாவட்ட செயலாளராகவும் இருக்கும் முக்கூர் சுப்ரமணியம் லஞ்சம் வாங்கியதை, லெட்டர் பேடி எழுதி அதிமுக பொதுச் செயலாளருக்கு அனுப்பியிருக்கிறார் இராஜன் என்ற அதிமுக உறுப்பினர். இவர் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஊராட்சி ஒன்றிய கழகச் செயலாளராக இருக்கிறார். இவர் தன்னுடைய லெட்டர் பேடில் 13 லட்சம் ரூபாய்  வசூலித்து முக்கூர் சுப்ரமணியனிடம் கொடுத்ததாக சொல்கிறார். ஆனால் 3 … Continue reading லஞ்சம் வாங்கிய விவரத்தை லெட்டர் பேடில் எழுதி ஜெயலலிதாவுக்கு அனுப்பிய அதிமுக பிரமுகர்!

தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும் சீமான்!

 நாம் தமிழர் கட்சியின் சார்பாக 314 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை நாம் தமிழர் ஆட்சியின் செயல்பாட்டு வரைவு என்ற தலைப்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் வெளியிடப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழக அரசின் முத்திரையாக திருவள்ளுவர் படம் பொறித்த முத்திரையும், தமிழ்நாட்டு கொடியாக சேர, சோழ, பாண்டியர்களின் கொடியான மீன், புலி, வில்அம்பு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக தலைநகர் ஐந்தாக பிரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சென்னை, … Continue reading தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும் சீமான்!

’கூட்டணி ஆட்சிக்கு இப்ப சம்மதிக்கலனைன்னா அப்புறம் சம்மதிப்பீங்க’ என்பது கேப்டனின் மெஸேஜ்!

கதிர்வேல் 1. பிரேமலதா பேச்சு சூப்பர்ப். 2. கேப்டன் ஒருவழியா சஸ்பென்சை உடைச்சதுல நிம்மதி. 3. ஸ்டாலினோட ஓவர் கான்ஃபிடன்ஸ் பலூன்ல ஊசி குத்திருக்கார் கேப்டன். 4. கூட்டணி ஆட்சிக்கு இப்ப சம்மதிக்கலைன்னா, தேர்தலுக்கு அப்புறம் சம்மதிக்க போறீங்க என்பது கேப்டன் மெசேஜ். 5.தேமுதிக இதனால் இழக்க எதுவும் இல்லை. 6. திமுக இதனால் அனைத்தையும் இழக்க வாய்ப்பு இருக்கிறது. 7. இன்னும் நேரம் இருக்கிறது திமுக இறங்கிவர. 8. ஈகோ தடுத்தால் அம்மாவுக்கு அதிர்ஷ்டம். 9. … Continue reading ’கூட்டணி ஆட்சிக்கு இப்ப சம்மதிக்கலனைன்னா அப்புறம் சம்மதிப்பீங்க’ என்பது கேப்டனின் மெஸேஜ்!

“பெருங்கனவோடு எழுந்த ஒரு மாபெரும் இயக்கம் ஒரு குடும்பத்தின் வாசலில் வீழ்த்தப்பட்ட துயரம்!”

யோ. திருவள்ளுவர் தமிழக அரசியலிலிருந்து அதிமுக அகற்றப்படுவதை திமுகவும், திமுக அகற்றப்படுவதை அதிமுகவும் விரும்பாது. ஏனெனில் அவையிரண்டும் மணல், கிரானைட், மண், நிலம் கொள்ளை முதல் ஊழல், மதுஆலைகள், டாஸ்மாக், அணு உலைகள், கெயில், மீத்தேன், ஒப்பந்தம் கொள்ளைகள் ஆகிய அனைத்திலும் இருகட்சிகளுக்கும் அவ்வளவு ஒற்றுமை. மற்றொரு அணி அல்லது கட்சி தமிழக அரசியலில் பலம்பெறுவதை இரண்டு கட்சிகளும் விரும்பாது. மாற்று ஒன்று உருவானால் இருகட்சிகளின் கொள்கைகளுக்கும் முடிவு வந்துவிடுமல்லவா. அப்படி மாற்று அணி அல்லது கட்சி … Continue reading “பெருங்கனவோடு எழுந்த ஒரு மாபெரும் இயக்கம் ஒரு குடும்பத்தின் வாசலில் வீழ்த்தப்பட்ட துயரம்!”

மக்கள் நலக் கூட்டணியை ஏன் ஆதரிக்கவேண்டும்?

பத்ரி சேஷாத்ரி 1967-ல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டபின் இன்றுவரை தமிழகத்தை திமுகவும் அஇஅதிமுகவும் மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கின்றன. இவ்விரு கட்சிகளும் ஒரேபோல்வன என்று நான் சொல்ல வரவில்லை. நிச்சயமாக இரண்டில் தற்போதைக்கு மிக மோசமானது அஇஅதிமுகதான் என்று நினைக்கிறேன். கடந்த ஆறு தேர்தல்களில் இவ்விரு கட்சிகளுக்கும் மாறிமாறி வாக்களித்துவந்திருக்கிறோம். அவ்வகையில் இம்முறை திமுகதான் வெற்றிபெறவேண்டும். ஆனால் நிலைமை வெகுவாக மாறியுள்ளது என்று நான் நினைக்கிறேன். கடந்த தேர்தல்களின்போது பிற சிறு கட்சிகளெல்லாம் திமுக, அஇஅதிமுக இருவரில் எவருடன் சேர்வது … Continue reading மக்கள் நலக் கூட்டணியை ஏன் ஆதரிக்கவேண்டும்?

மக்கள் நலக் கூட்டணி, அதிமுகவின் பி’ டீம்! திமுகவின் விமர்சனத்துக்கு வைகோ என்ன சொல்கிறார்?

மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுகவின் பொதுச்செயலாளருமான வைகோ, தீக்கதிர் நாளிதழின் ஆசிரியர் அ. குமரேசனுக்கு அளித்த நேர்காணலின் ஒரு பகுதி... மக்கள் நலக் கூட்டணி அறிவிக்கப்பட்டதிலிருந்து அதை திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்தக் கூட்டணி அதிமுக-வின் ‘பி’ டீம் என்று கூட சொல்கிறார்கள். திமுக-வுக்கு இவ்வளவு ஆத்திரம் வரக் காரணம் என்ன? அதிமுக-வை வீழ்த்துவதுதான் நோக்கம் என்றால் திமுக பக்கம்தான் வரவேண்டும் என்கிறார்களே?அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற கோபம் தங்களுக்கு ஆதாயமாக மாறும் … Continue reading மக்கள் நலக் கூட்டணி, அதிமுகவின் பி’ டீம்! திமுகவின் விமர்சனத்துக்கு வைகோ என்ன சொல்கிறார்?