“எங்கள் குடும்பத்துத்துப் பெண்களுக்கு பாரம்பரியம் என்று எதுவுமில்லை”

ஸ்வாதி படுகொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமாரின் தாயையும் தங்கையும் நக்கீரன், தினமலர் ஆகிய ஊடகங்கள் படம் எடுத்து வெளியிட்டிருக்கின்றனர்,  குற்றம்சாட்டப்பட்டர் சார்ந்த குடும்பத்தினரின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக பலர் இந்தப் போக்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். Prasanna Ramaswamy எல்லோருக்கும் அந்தரங்கம் காத்துக் கொள்ளும் உரிமை உண்டு. கொலை செய்ததாக கருதப் படுபவனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் கூட. Akb Ariff சுவாதி வெட்டப்பட்ட போட்டோவை பார்த்த போது ஏற்பட்ட அதே பதைபதைப்பு ராம்குமாரின் சகோதரி காவல் நிலையத்தில் முகத்தை மறைத்து … Continue reading “எங்கள் குடும்பத்துத்துப் பெண்களுக்கு பாரம்பரியம் என்று எதுவுமில்லை”

”இவர்கள் பத்திரிகைகளில் எழுதும் எழுத்துக்களை இனி நாம் எப்படி நம்புவது?”

அ. மார்க்ஸ்  "எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்.." (பத்திரிகையாளர்களின் பொறுப்பு குறித்து ஒரு சொல்) பத்திரிகைகள் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று. பொதுக் கருத்துக்களை உருவாக்குவதில் பத்திரிகைகளுக்குப் பெரும் பங்குண்டு. சமூக அமைதியை மட்டுமல்ல, வெறுப்பையும் அமைதியின்மையையும் வன்முறையையும் உருவாக்கும் சாத்தியம் பத்திரிகைச் செய்திகளுக்கு உண்டு. பத்திரிகைச் செய்திகளின் நம்பகத் தன்மையின் அடிப்படையில்தான் பல நேரங்களில் நீதிமன்றங்கள் கூடக் கருத்துக்களைத் தெரிவிக்கின்றன; நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன. அந்த வகையில்தான் பல கருத்து மாறுபாடுகள் இருந்தபோதும் The Hindu போன்ற இதழ்களை … Continue reading ”இவர்கள் பத்திரிகைகளில் எழுதும் எழுத்துக்களை இனி நாம் எப்படி நம்புவது?”

‘அடேயப்பா…234 தொகுதியிலும் இரட்டை இலையா?’; ஊடகங்கள் கட்டமைக்கும் அம்மா எனும் புனித பிம்பம்

வா. மணிகண்டன் அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை ஐவர் அணி காலி செய்யப்பட்டுவிட்டது. சென்னையை விட்டு விரட்டியடிக்கப்பட்ட செந்தில்பாலாஜி காணாமல் போய்விடுவார். ராஜேந்திர பாலாஜி, ராமஜெயம் போன்ற வாட்ஸ்-அப் புகழ் வேட்பாளர்களுக்கு இடமிருக்காது என்றெல்லாம் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்த ஊடகவியலாளர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்ற செயல்பாடற்ற ஆட்சியின் அத்தனை கழிசடைத்தனங்களும் எம்.எல்.ஏக்களாலும் மந்திரிகளாலும்தான் செய்யப்பட்டவையே தவிர அம்மா ஒரு அப்பாவி எனவும் அவருக்கும் கடந்த ஐந்தாண்டுகளின் அசமஞ்சத்தனத்துக்கும் சம்பந்தமேயில்லை என்று கட்டமைக்கப்பட்ட … Continue reading ‘அடேயப்பா…234 தொகுதியிலும் இரட்டை இலையா?’; ஊடகங்கள் கட்டமைக்கும் அம்மா எனும் புனித பிம்பம்

தலைவர்கள் அசதியால் கண் அசந்ததை செய்தியாக்குவது என்னமாதிரியான ஊடக அறம்?

ஆளூர் ஷாநவாஸ் பரபரப்பாக எதையாவது வெளியிட்டு, டி.ஆர்.பி ரேட்டிங்கில் சக டி.வி.க்களை முந்த வேண்டும் என்பது மட்டுமே ஊடகங்களின் ஒரே இலக்காக உள்ளது. கொட்டாவி விடுவதையும், வாயைப் பிளப்பதையும் படம் பிடித்து செய்தியாக்கி பரபரப்பு ருசி கண்டுவிட்டதால், இனி மூக்கை நோண்டுவது, காதைக் குடைவது, தலையை சொறிவது என அனைத்தையும் படம்பிடிக்க வெறியுடன் அலைவார்கள். நியூஸ் 7 டிவியை கண்டிக்கிறேன். சுந்தர்ராஜன் கேப்டன் விஜயகாந்த் அணி மீது எனக்கு ஏராளமான விமர்சனங்கள் உள்ளன. ஆனாலும் இதை ஒரு … Continue reading தலைவர்கள் அசதியால் கண் அசந்ததை செய்தியாக்குவது என்னமாதிரியான ஊடக அறம்?

நியூஸ் 7 தமிழ்: ஜேர்னலிஸ்டிக் எதிக்ஸ்னு எதாச்சு இருக்கா உங்களுக்கு?

ஜோஷ்வா ஐசக் ஆசாத் 'தாரை தப்பட்டை' படத்திற்காக இசைஞானிக்கு இன்று தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ் 7 தமிழ் செய்தி தொலைக்காட்சியில் இன்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் தொடர்பான செய்தி வருகிறது. இன்று தமிழ் திரைப்பட துறையில் யாரெல்லாம் தேசிய விருது வாங்கியிருக்கிறார்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கு அடுத்த செய்தி தேசிய விருதுகள் தேர்வுக் குழுவில் நடுவராக இருந்த கங்கை அமரனிடம் டெல்லியில் எடுத்த பேட்டியை போடுகிறார்கள். என்ன செய்தினா 'தேசிய விருதுக்கு இளையராஜாவின் பெயரை நான் … Continue reading நியூஸ் 7 தமிழ்: ஜேர்னலிஸ்டிக் எதிக்ஸ்னு எதாச்சு இருக்கா உங்களுக்கு?

ஊடகங்கள் வழங்கிய தீர்ப்பு: நோயின் மயக்கத்தில் தள்ளாடியவரை குடிகாரனாக்கிய அவலம்!

Wafiq Sha பல்வேறு நேரங்களில் பல நல்ல காரணங்களுக்காக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டாலும் ஒரு கொடிய தொற்று நோய் நாட்டில் பரவுவதை விட புரளிகளையும் பொய்யான தகவல்களையும் வேகமாக பரவச் செய்யவும் அது உதவுகிறது. இதனால் சமீபத்தில் பாதிக்கப்பட்டவர் டில்லி காவல்துறையின் தலைமை காவலர் சலீம். 40 வயதான சலீம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் குடி போதையில் டில்லி மெட்ரோவில் பயணித்ததாக வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அந்த வீடியோவில் சலீம் நிலை தடுமாறி நிற்க … Continue reading ஊடகங்கள் வழங்கிய தீர்ப்பு: நோயின் மயக்கத்தில் தள்ளாடியவரை குடிகாரனாக்கிய அவலம்!

பெண்களுக்கு சாதி இருக்கமுடியுமா?

மீனா கந்தசாமி How did you become an upper caste woman? Because your mother was asked to marry a man from her caste. Her cunt was controlled. How did she become an upper caste woman? Because your grandmother was asked to marry a man from her caste. Her cunt was controlled. How did your grandmother's mother … Continue reading பெண்களுக்கு சாதி இருக்கமுடியுமா?

ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அவதூறு;ஜாதி வெறியைத் தூண்டும் தினமலர்: செங்கொடியை அவமானப்படுத்திய நாளிதழின் அடுத்த டார்கட்!!!

சாதி வன்மத்தைத் தூண்ட தமிழகத்தில் அதிகம் விற்பனையாகும் நாளிதழ்களில் ஒன்றான தினமலரில் "அவசரம் வேண்டாம் பெண்களே!" என்ற தலைப்பில் " விசித்திர சித்தன், சமூக ஆர்வலர்" என்ற பெயரில் வெளிவந்துள்ள கட்டுரை இது. எழுதியவர் உண்மையிலே சமூகத்தின் மேல் ஆர்வம் கொண்டவராக இருந்தால் உண்மையான பெயரைப் போட்டு எழுதியிருக்க வேண்டும். விசித்திர சித்தன் என்ற பெயரில் ஒளிந்துகொண்டு எழுதுவது இப்படி விசித்திரமானதாகத்தான் இருக்கும். எத்தனை வன்மம். வெகுஜென நாளிதழ் என்ற போர்வையில் சாதிய வன்மத்தை, வர்ணாசிரமத்தை நிலைநிறுத்த … Continue reading ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அவதூறு;ஜாதி வெறியைத் தூண்டும் தினமலர்: செங்கொடியை அவமானப்படுத்திய நாளிதழின் அடுத்த டார்கட்!!!

தன்னைவிட வயது குறைவான ஆணை காதலிப்பது குற்றம்: கலாச்சார காவலர்களான ஊடகங்கள் தரும் உடனடி தண்டனை!

இன்றைய தமிழ் நாளிதழ்கள் அனைத்திலும் தவிர்க்கப்படாமல் வந்திருக்கும் செய்தி “மாணவனுடன் ஓடிய ஆசிரியர் கைது”; “ மாணவனுடன் ஓடிய ஆசிரியை சிக்கினார்” என்று இந்தச் செய்தியில் தொடர்புடைய பெண்ணை மிகக் குறிய மனோபாவத்துடன் எதிர்மறையாக எழுதியிருந்தனர். எந்தவொரு ஊடகமும் இதிலிருந்து தப்பவில்லை. விட்டால், இவர்களே தீர்ப்பு எழுதி, அந்தப் பெண்ணை கல்லால் அடித்துக் கொள்ளுங்கள் என தாலிபான் பாணியில் உடனடி நீதியும் தண்டனையும் அளித்திருப்பார்கள். அந்தப் என்ற பெண், எம். எஸ்ஸி படித்தவர். இவருடைய வயது என்ன என்பதை … Continue reading தன்னைவிட வயது குறைவான ஆணை காதலிப்பது குற்றம்: கலாச்சார காவலர்களான ஊடகங்கள் தரும் உடனடி தண்டனை!

பிரபல ‘வித்யாஷ்ரம’ பள்ளிகளில் தேசிய கீதம் பாடப் படுவதில்லை; நீதிமன்றத்துக்குப் போன ‘அவாள்’களின் நாட்டுப்பற்று!

நாட்டுப்பற்றை தனக்கே உரியதாக முழங்கிக் கொண்டிருக்கும் ஆர். எஸ். எஸ்., பாஜகவின் கொள்கைகளை பள்ளிகளில் புகுத்திக் கொண்டிருக்கும் ஆஷ்ரம பள்ளிகளில் தேசிய கீதமே பாடப்படுவதில்லை என முன்னாள் இராணுவ வீரர் செல்வ திருமாள் உயர்நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் சென்னையில் மிக புகழ் பெற்ற பள்ளிகளான வேலம்மாள் வித்யாஷ்ரம், பவன்’ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம், மகரிஷி வித்யா மந்திர், டிஏவி கேர்ஸ்ஸ் சீனியர் செகண்டரி ஸ்கூல் போன்ற பள்ளிகளில் தேசிய கீதம், காலை நேர … Continue reading பிரபல ‘வித்யாஷ்ரம’ பள்ளிகளில் தேசிய கீதம் பாடப் படுவதில்லை; நீதிமன்றத்துக்குப் போன ‘அவாள்’களின் நாட்டுப்பற்று!

“மனசாட்சி அறியும், வீடியோவில் தெரியும்”: சீமானின் வரம்பு மீறிய பேச்சை கட்டுப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பாண்டே விளக்கம்

செவ்வாய்கிழமை தந்தி டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன்(திமுக), சீமான்(நாம் தமிழர் கட்சி) ஆகியோர் கலந்துகொண்டனர். ரங்கராஜ் பாண்டே இந்த நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார். நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் சீமான் “ஏய், சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்காதய்யா” என அநாகரிகமான முறையில் பேரா.அருணனை ஏசினார். இதைப் படியுங்கள்: தந்தி … Continue reading “மனசாட்சி அறியும், வீடியோவில் தெரியும்”: சீமானின் வரம்பு மீறிய பேச்சை கட்டுப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பாண்டே விளக்கம்

தி டெலிகிராப்: சாயாத நான்காவது தூண்! இதோ டெலிகிராப் நாளிதழின் சில முகப்பு பக்கங்கள்…

பாஜக தலைமையில் மத்தியில் அமைத்திருக்கும் ஆட்சி இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவின் மதச்சார்பின்னைக்கு விடப்பட்ட மிகப்பெரும் சவாலாக உள்ளது. இதை நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி 2014-ஆம் ஆண்டு அமைந்த ஒவ்வொரு கணத்திலும் இந்தியர் உணரவே செய்கிறார்கள். ஆனால், வெகுஜென ஊடகங்கள்,  பாஜக அரசை- அவர்கள் முன்னெடுக்கும் மத அரசியலை கண்டும் காணாதது போல் செல்கின்றனர். ஆனால், இந்தியாவில் அதிக விற்பனையாகும் நாளிதழ்களில் ஒன்றான தி டெலிகிராப், துணிவோடு பாஜகவின் முகத்திரையை, அவர்களுடைய பொய்களை கட்டவிழ்க்கிறது. அதற்கு உதாரணங்களாக டெலிகிராப் … Continue reading தி டெலிகிராப்: சாயாத நான்காவது தூண்! இதோ டெலிகிராப் நாளிதழின் சில முகப்பு பக்கங்கள்…

பரோலில் வந்த நளினி ஊடகங்களுக்கு பேட்டி: நன்னடத்தை கீழ் விடுதலை ஆகும் வாய்ப்பில் கரும்புள்ளியாக அமையுமா?

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தன் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக, பரோலில் விடுவிக்கப்பட்டார். இதற்காக  வேலூர் சிறையில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்ட அவர், தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார். இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நளினி, பரோலில் தம்மை விடுவித்ததற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். பரோலில் வந்தவர்கள் ஊடகங்களிடம் பேச அனுமதியில்லை என்ற விதியை பின்பற்றாமல் நளினியை ஊடகங்கள் வற்புறுத்தி பேட்டி வாங்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இத்தகைய விதிமீறல், நளினி விடுதலைக்கு … Continue reading பரோலில் வந்த நளினி ஊடகங்களுக்கு பேட்டி: நன்னடத்தை கீழ் விடுதலை ஆகும் வாய்ப்பில் கரும்புள்ளியாக அமையுமா?

சமூக நீதியை பெண்கள் எழுதினால் தமிழக பத்திரிகைகள் பயந்து அலறுவது ஏன்?

மீனா சோமு பெண்களாகிய நாங்கள் (மீனா சோமு, கீதா இளங்கோவன், தயா மலர்) சமூக நீதிக்கு குரல் கொடுக்கிறோம் என்பதை செய்தியாகவும் தன் ப்ளாகிலும் பகிர்ந்த தோழர் இரா. எட்வின் அவர்களது செய்கை ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்கும். கட்டுண்டு கிடக்கும் பெண்களுக்கும் ஆணாதிக்க சாதிய சிந்தனைகளால் கட்டப்பட்டு இருக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வை தரும். தோழர். இரா எட்வின் அவர்களுக்கு நன்றியும் அன்பும். பெண்களுக்கான தளம் என்பது எழுத்திலும் சிந்தனையிலும் செயலிலும் கூட வரையறை செய்யும் சமூகம் இது. … Continue reading சமூக நீதியை பெண்கள் எழுதினால் தமிழக பத்திரிகைகள் பயந்து அலறுவது ஏன்?

தினமலரின் கங்காரு கோர்ட் வழங்கிய தீர்ப்பில் கன்னய்யா குமார், ‘தேசத் துரோகி’ என்பது நிரூபிக்கப்பட்டது!

தினமலரின் ‘அரசியல்’ எப்போதோ வெளிப்பட்டதுதான். ஆனால், கன்னய்யா குமார் நீதிமன்ற வளாகத்துக்குள் தாக்கப்பட்டதற்கு நாடே கொந்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில், “அடி, உதை; தேசத்துரோகி மாணவரை கவனித்தனர், டெல்லி வக்கீல்கள்” என்று வன்மத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது தினமலர்(திருச்சி பதிப்பு). இதை சமூக ஊடகங்களில் கவனப்படுத்தியிருக்கிறார் பொருளாதார அரசியல் விமர்சகர் நரேன் ராஜகோபாலன். தன்னுடைய முகநூலில் அவர் தன்னுடைய கருத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார். “பத்திரிக்கை தர்மமென்பது 'கங்காரு கோர்ட்' நடத்தி, தாங்களே ‘தேசத் துரோகி’ பட்டம் சுமத்துவது. வாங்கிய கூலிக்கு வஞ்சகம் செய்யாமல் வேலைப் … Continue reading தினமலரின் கங்காரு கோர்ட் வழங்கிய தீர்ப்பில் கன்னய்யா குமார், ‘தேசத் துரோகி’ என்பது நிரூபிக்கப்பட்டது!

பெருவணிக நிறுவனங்களாக மாறிவிட்ட ஊடகங்கள், பெருநிறுவனங்களின் ஊழல்களைக் கண்டுகொள்வதில்லை: சாய்நாத்

தி ஹிந்து(ஆங்கிலம்)வில், கிராமப்புற செய்திகளின் ஆசிரியராக பணியாற்றிய சாய்நாத், பின் அங்கு ஏற்பட்ட மனகசப்பினால் வேலையை விட்டு சென்றார். ஊடகத்துறையில் ஊழல் எந்தளவு புரையோடி இருக்கிறது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் சாய்நாத் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். ஊடகத்தில் தற்போது நிலவும் சூழலில்,  சேவியர் கல்லூரி நடத்திய, “ஊடக மாநாட்டில்” ஊடகவியலர்களின் பொய்கள் – கட்டமைக்கப்பட்ட நிர்பந்தம் – என்ற தலைப்பில் சாய்நாத் ஆற்றிய உரையின் தொடர்ச்சி.... முந்தைய பகுதி இந்திய பத்திரைக்கை மற்றும் ஊடகத் … Continue reading பெருவணிக நிறுவனங்களாக மாறிவிட்ட ஊடகங்கள், பெருநிறுவனங்களின் ஊழல்களைக் கண்டுகொள்வதில்லை: சாய்நாத்

’மக்களுக்காக அல்ல; விளம்பரத்துக்காகத்தான் நாங்கள்’ ஊடகங்களே ஒப்புக்கொண்ட உண்மையைச் சொல்கிறார் சாய்நாத்

தி ஹிந்து(ஆங்கிலம்)வில், கிராமப்புற செய்திகளின் ஆசிரியராக பணியாற்றிய சாய்நாத், பின் அங்கு ஏற்பட்ட மனகசப்பினால் வேலையை விட்டு சென்றார். ஊடகத்துறையில் ஊழல் எந்தளவு புரையோடி இருக்கிறது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் சாய்நாத் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். ஊடகத்தில் தற்போது நிலவும் சூழலில், ஊடகத்துறையில் நிலவும் பொய்கள் குறித்து, சாய்நாத் ஆற்றிய முக்கியமான உரையின் தமிழாக்கம் இது. மும்பை சேவியர் கல்லூரி நடத்திய, "ஊடக மாநாட்டில்" ஊடகவியலர்களின் பொய்கள் - கட்டமைக்கப்பட்ட நிர்பந்தம் – என்ற … Continue reading ’மக்களுக்காக அல்ல; விளம்பரத்துக்காகத்தான் நாங்கள்’ ஊடகங்களே ஒப்புக்கொண்ட உண்மையைச் சொல்கிறார் சாய்நாத்