ஜக்கியின் ஆதியோகி சிலை கோவையின் அடையாளமா..? அவமானமா..?

மு.ஆனந்தன் தமிழ் இந்து நாளிதழில் இன்று (21/01/2019) கொங்கே முழங்கு பகுதியில் ஜக்கியின் ஆதியோகி சிலையை கோவையின் அடையாளம் என நீட்டி முழங்கியுள்ளது. நீலியாறு, ராஜ வாய்க்கால், நொய்யலின் நீராதாரங்களையும், முப்போகம் விளையும் விவசாய நிலங்களையும் , யானை வழித்தடங்களையும், காணுயிர் வாழ்விடங்களையும் அழித்து, பழங்குடி மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து, எந்த அரசுத் துறைகளிலும் அனுமதி பெறாமல், விதிகளை மீறி சட்ட விரோதமாகக் கட்டப்பட்டுள்ள சிலை எப்படி ஒரு ஊரின் அடையாளம் ஆகும்? இது தொடர்பான வழக்கு … Continue reading ஜக்கியின் ஆதியோகி சிலை கோவையின் அடையாளமா..? அவமானமா..?

சிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது பெற்றார் பத்திரிகையாளர் மு. குணசேகரன்

இந்திய ஊடகவியலாளர்களின் மதிப்புமிக்க விருதாக கருதப்படும், ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது’ தமிழக பத்திரிகையாளர் மு.குணசேகரனுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஊடகத்துறை சாதனையாளர்களுக்கு ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பத்திரிகையாளர்களின் நேர்மையான, மிகச்சிறப்பான பங்களிப்பை போற்றும் வகையில் வழங்கப்பட்டு வரும் இந்த விருதை பத்திரிகையாளர் மு. குணசேகரன் பெற்றுள்ளார். 2007-ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய ஒக்கி புயல் பாதிப்பு குறித்த தொடர்ச்சியான பதிவுக்காகவும், மக்களின் குரலை ஒலிக்க வைத்தமைக்காவும் இந்த விருது … Continue reading சிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது பெற்றார் பத்திரிகையாளர் மு. குணசேகரன்

பெருங்கடல் வேட்டத்து: கடல் நிலத்துத் தமிழர்களின் வலியை ஒளிமொழியால் ஆவணப்படுத்தியுள்ள மிக முக்கியமான படம்:- மகாராசன்

மீனவர்களின் துயரப் பாடுகள் நிறைந்த வாழ்வியலை, ஒக்கிப் புயல் பாதிப்புகளை அரசு நிர்வாகங்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் மறைத்த மறந்த பல உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது இப்படம்.

புதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகேயன் மீது இந்துத்துவ ட்ரோல்கள் தாக்குதல்: சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் கண்டனம்

புதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகேயன் மீது இந்துத்துவ ட்ரோல்கள் தாக்குதல் நடத்திவருவதை சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்லவிடாமல் பெண்கள் தடுக்கப்படுவதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின், 'புதுப்புது அர்த்தங்கள்' நிகழ்ச்சியில் கடந்த 19 - 7 - 2018 அன்று விவாதிக்கப்பட்டது. அப்போது நெறியாளர் கார்த்திகேயன், "மாத விலக்கு காலத்தில் பெண்கள் கோவிலுக்குள் செல்லக் கூடாது என்றால், பெண் … Continue reading புதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகேயன் மீது இந்துத்துவ ட்ரோல்கள் தாக்குதல்: சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் கண்டனம்

திருப்பதி நாராயணன் சங்கிகளுக்கு வகுப்பு எடுக்கிறார்: மனுஷ்யபுத்திரன்

மாதவிலக்கான பெண்களை கோயிலிருந்து விலக்காதீர்கள் என்று கோருவது எப்படி ஒட்டு மொத்த பெண்ணினத்தை அவமதிப்பதாக அமையும்?

“பெருங்கடல் வேட்டத்து: அரசு மீதான மூடபக்தியை ஒழிக்கும் ஆவணம்!”

பெருங்கடல் வேட்டத்து ஆவணப் படம், ஆன்மாவற்ற ஆளும் வர்க்கப் பண்பை உள்ளது உள்ளவாறு வெளிப்படுத்தியுள்ளது. சிவில் சமூகத்தின் பொது புத்தியில் அரசு மீதான மூடபக்தியை ஒழிப்பதில் சமகாலத்தில் வந்துள்ள மிகச்சிறந்த ஆவணம்.

புதிய தலைமுறை, அமீர் மீதான அடக்குமுறைகளைக் கண்டிப்போம்!

டி. அருள் எழிலன் ஒன்றைச் சொல்லாமல் இந்த விஷயத்தை நேர் செய்ய இயலாது. ஒரு கவுன்சிலர் வார்டில் கூட சொந்த காலில் வெல்ல முடியாத பாஜகவுக்கு இங்குள்ள அனைத்து தொலைக்காட்சிகளுமே எல்லா விவாதங்களிலும் இரண்டு இருக்கைகளை ஒதுக்கின. நேரடியாக பாஜக பிரமுகர்களையும், சமூக ஆர்வலர், பத்திரிகையாளர், என பல வடிவங்களிலான இருக்கைகள். தமிழகத்தில் அரசு என்ற ஒன்று இருக்கிறது. ஆனால் அது ஆளும் அதிமுக அரசாக இல்லை. பாஜகவின் பொம்மை ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து வரும் நிலையில், … Continue reading புதிய தலைமுறை, அமீர் மீதான அடக்குமுறைகளைக் கண்டிப்போம்!

கார்பொரேட் உலகின் சட்ட விரோத பணிநீக்கங்கள் : விகடன் மட்டும் விதிவிலக்கா என்ன?

தொழிலாளர்கள்,விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், மீனவர்கள் என தமிழ்ச் சமூகத்தின் எந்த மூலையில் இருந்து குரல் எழுந்தாலும் அதற்கு ஆதரவாக குரல் எழுப்பி ஓர் முற்போக்கு ஊடக நிறுவனமாக அடையாளப்பட்டு இருக்கும் விகடன் நிர்வாகம் தனது சொந்த தொழிலாளர்களின் நியாயமான குரலை நசுக்குவது நியாயமா?

“ஊருக்கு நல்லது சொல்லும் விகடன், தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கலாமா?”: தொழிலாளர்களின் குமுறல்

“ஊருக்கு நல்லது சொல்லும் விகடன், தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கலாமா?”: தொழிலாளர்களின் குமுறல் https://youtu.be/0H3PqYbDCec

#Biggboss: அண்ணாத்த பயங்கரமா ஆடுறார்… ஒத்துக்கோ ஒத்துக்கோ !!

ஒருபக்கம் கோடிக்கணக்கான மக்களோட உரையாடக்கூடிய இந்த ஷோ, இன்னொரு பக்கம் அரசியல்வாதிகளுடனான உரசல், அதபத்தி அப்பப்ப இங்க ஒன்னு ரெண்டு வார்த்தைனு ஒரு சூப்பரான பேக்கேஜ் இது.

அர்னாப் கண்டுகொள்ளாத ஆர்.எஸ்.எஸ்ஸின் ’டெவலப்மெண்ட் நிதி’!

“இந்தியா டெவெலப்மென்ட் ரிலீப் பண்டு” என்ற நிறுவனத்தின் மூலமாக ஆர்.எஸ்.எஸ்க்கு வெளிநாடுகளிருந்து கோடிக்கணக்கான டாலர்கள் நிதி வருகிறது. வெளிநாடுகளிருந்து அதிகளவு நிதி வரும் அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் சே முதன்மையாக உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அர்னாபின் ஸ்டிங் ஆபரேஷன்: நடந்தது என்ன? சுப. உதயகுமாரன் விளக்கம்

அர்னாப் கோஸ்சுவாமியின் ரிபப்ளிக் டிவி, செவ்வாய்கிழமை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு செயல்பாட்டாளரும் பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமாகிய சுப. உதயகுமாரன் மீது வெளிநாட்டு நிதி பெற்றதாக குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளது. இதற்கு ‘ஆதாரமா’க ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ ஒன்றையும் அந்த டிவி ஒளிபரப்பியது. அந்த வீடியோ குறித்தும், ரிபப்ளிக் டிவி சுமத்தும் குற்றச்சாட்டுகள் குறித்து சுப. உதயகுமாரன் தனது முகநூலில் விளக்கம் அளித்துள்ளார். “வட இந்திய டிவி ஒன்றில் என்னைப் பற்றி அவதூறாக ஒரு செய்தி … Continue reading அர்னாபின் ஸ்டிங் ஆபரேஷன்: நடந்தது என்ன? சுப. உதயகுமாரன் விளக்கம்

”திமுகவின் கடைசி முதல்வர் கருணாநிதிதான்; ஸ்டாலின் உருண்டு வந்தாலும் ஆட்சியைப் பிடிக்க முடியாது”: டிவி விவாதத்தில் ஆவடி குமார்

திமுகவின் கடைசி முதல்வர் கருணாநிதிதான்; இனி ஒருபோதும் திமுக ஆட்சிக்கு வரமுடியாதும் என அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த ஆவடி குமார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தெரிவித்தார். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் ‘காலத்தின் குரல்’ என்ற விவாத நிகழ்ச்சியில், “எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் அதிமுக அணிகள் மீது புகார் சி.பி.ஐ. விசாரணை அவசியமா?” என்ற தலைப்பில் செவ்வாய்கிழமை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தை மு.குணசேகரன் நெறியாள்கை செய்தார்; அதிமுக அம்மா அணி சார்பில் பேச்சாளர் ஆவடி குமார், திமுக சார்பில் … Continue reading ”திமுகவின் கடைசி முதல்வர் கருணாநிதிதான்; ஸ்டாலின் உருண்டு வந்தாலும் ஆட்சியைப் பிடிக்க முடியாது”: டிவி விவாதத்தில் ஆவடி குமார்

தீபாவை ‘சொப்பனசுந்தரி’ தலைப்பிட்டு அட்டைப்படம்; சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்

தீபாவின் படத்தை முன் அட்டையில் போட்டு 'நான் தான் சொப்பனசுந்தரி, என்னை யாரு வெச்சிருக்கா?' என தலைப்பிட்டு வெளியிட்டுள்ளது குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை.

பாஜக செய்தித் தொடர்பாளரை வெளியேற்றியதுதான் ரெய்டுக்கு காரணமா?

மத்தியில் ஆளும் பாஜக அரசு அண்மையில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதற்கு தடை விதித்தது. அதுகுறித்து எண்டீடிவி நிறுவனம் விவாதம் ஒன்றை நடத்தியது. அந்த விவாதத்தை நெறியாள்கை செய்தவர் நிதி ரஸ்தான் என்ற பத்திரிகையாளர்.  இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் பிரதிநிதி, மனித உரிமை செயல்பாட்டாளர், திமுக பிரதிநிதி, பாஜக செய்தி தொடர்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பொறுப்பாளர் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தால் கட்சியில் இருக்க மாட்டேன் என அறிவித்திருந்தார். அதுகுறித்து நிதி ரஸ்தான் கேட்ட … Continue reading பாஜக செய்தித் தொடர்பாளரை வெளியேற்றியதுதான் ரெய்டுக்கு காரணமா?

“ஜோடிக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்”: சிபிஐ சோதனை குறித்து எண்டீடிவி

வங்கிக்கு இழப்பு ஏற்படுத்திய எண்டீடிவி நிறுவனர் பிரனாய் வீட்டில் இன்று காலை சிபிஐ சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து எண்டீடிவி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தவறனான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஜோடிக்கப்பட்ட அச்சுறுத்தலை எண்டீடிவி மீதும் அதன் புரோமோட்டர்கள் மீதும் சிபிஐ ஏவிவிட்டுள்ளதாக ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “தொடர்ந்து பல்வேறு வழிகளில் தங்கள் மீது ஏவிவிடப்படும் இத்தகைய தாக்குதலை சோர்வில்லாமல் எதிர்கொள்வோம். இந்திய ஜனநாயகத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் குறைத்து மதிப்பிடும் இந்த முயற்சிகளுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்களைப் போன்றோரை … Continue reading “ஜோடிக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்”: சிபிஐ சோதனை குறித்து எண்டீடிவி

NDTV நிறுவனர் பிரனாய் ராய் வீட்டில் சிபிஐ சோதனை; வழக்கு பதிவு

எண்டீடிவி இணை நிறுவனரான பிரனாய் ராயின் டெல்லி மற்றும் டெராடூனில் உள்ள வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெறுகிறது. ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ. 48 இழப்பு ஏற்படுத்தியதற்காக பிரனாய் ராய் மற்றும் அவருடைய மனைவி ராதிகா ராய் மீதும் ஹோல்டிங் நிறுவனம் ஒன்றின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையாளரான பிரனாய் ராய் தன்னுடைய மனைவி ராதிகா ராயுடன் இணைந்து 1988-ஆம் ஆண்டு எண்டீடிவி நிறுவனத்தை தொடங்கினார். தற்போது எண்டீடிவி நிறுவனத்தின் சேர்மனாக உள்ளார். 2015-ஆம் ஆண்டு எண்டீடிவி நிறுவனத்தின் … Continue reading NDTV நிறுவனர் பிரனாய் ராய் வீட்டில் சிபிஐ சோதனை; வழக்கு பதிவு

மாட்டிறைச்சி தடை; சுப.வீயின் கேள்விகளால் மைக்கை கழற்றிய பாஜக நாராயணன்

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டம் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் புதுப்புது அர்த்தங்கள் என்கிற நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. இதில் திராவிட இயக்க செயல்பாட்டாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் பாஜகவைச் சேர்ந்த நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர். தம்பி தமிழரசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்து புராண-இதிகாசங்களில் மாட்டிறைச்சி உண்டதற்கான சான்றுகள் குறித்து சுப.வீ பேசினார். நாராயணன் பசுவின் புனிதம் குறித்து விளக்கினார். மிருகவதை குறித்து கவலைப்படும் பாஜக அரசு, ஆடுகள், கோழிகள் … Continue reading மாட்டிறைச்சி தடை; சுப.வீயின் கேள்விகளால் மைக்கை கழற்றிய பாஜக நாராயணன்

ஒரு இளைஞனின் வாழ்வை சீர்குலைக்கும் புலனாய்வு பத்திரிகை!

கருப்பு கருணா இன்னமும் இந்த மக்கள் பத்திரிகைகளில் வரும் செய்திகளை உண்மையென்றே நம்புகிறார்கள்.அத்தகைய இடத்தில் இருக்கும் பத்திரிகைகள் தங்களின் பரபரப்பு அரிப்புக்காகவும் விற்பனைக்காகவும் மேஜையில் உட்கார்ந்து கொண்டு எழுதும் செய்தியால் எவ்வள்வு பேர் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் உணர்கிறார்களா..? இந்த கொடுமையான செய்தியை பாருங்கள். திருவண்ணாமலையை சேர்ந்த இளைஞர் ஷேக் ஹூசைன்.படித்த..முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர். நகரில் நடக்கும் நியாயமான போராட்டங்களில் முன்வரிசையில் நின்று குரல் கொடுக்கும் இளைஞர்.பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்.மார்க்சிய,அம்பேத்காரிய இயக்கங்களுடன் நல்லுறவுடன் இருப்பவர். இவரைப்பற்றி … Continue reading ஒரு இளைஞனின் வாழ்வை சீர்குலைக்கும் புலனாய்வு பத்திரிகை!

சன் நியூஸ் ராஜா வழக்கில் பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு பிடிவாரன்ட்

சன் செய்தி ஆசிரியர் ராஜா, பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக அந்த பெண்ணைப் பற்றியே அவதூறாக பேசியும் இழிவான தகவல்களை வெளியிட்டு, ராஜா நல்லவர் என்று நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வேலை செய்துவந்த எட்டு பெண் செய்தி வாசிப்பாளர்களும் பொய் சாட்சியம் அளித்தனர். இது தொடர்பாக சன் நியூஸ் ராஜாவால் பாதிக்கப்பட்ட‌ அந்த பெண், தன்னை இழிவாக சித்தரித்த எட்டு பெண் செய்தி … Continue reading சன் நியூஸ் ராஜா வழக்கில் பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு பிடிவாரன்ட்

“தி இந்து” நாளிதழின் ஊழியர் சங்கத் தலைவரானார் கனிமொழி; அசைவம் சாப்பிட அனுமதி கிடைக்குமா ?

திருமுருகன் காந்தி சந்தோசம்ம்ம்ம்... ’மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு கம்பேனி-தி இந்து’வின் ’பணியாளர் மற்றும் தேசிய பத்திரிக்கை ஊழியர் சங்கத்திற்கு’, ‘அக்மார்க்’ திராவிட கட்சி என்று சொல்லிக்கொள்ளும் திமுகவிலிருந்து  தலைவர் வந்திருக்கார்... தொழிற்சங்கத்திற்கு ‘ தி இந்துவின்’ அரசியல் பார்வை குறித்து முடிவெடுக்கும் அதிகாரப்பகிர்வு இருக்குமா? ( ‘தி இந்து’ என்.ராம் ஒரு கம்யூனிஸ்ட் ஆச்சே, மேலும் சி.பி.எம்மின் ஆதரவு பெற்ற கார்ப்பரேட் கம்பெனியாயிற்றே?). அல்லது தொழிலாளர்கள்-ஊழியர்களுக்கு சம்பளம் வாங்கி உழைக்கும் உரிமை மட்டும் கொடுக்கப்படுகிறதா? ‘தி இந்துவின்’ மனித … Continue reading “தி இந்து” நாளிதழின் ஊழியர் சங்கத் தலைவரானார் கனிமொழி; அசைவம் சாப்பிட அனுமதி கிடைக்குமா ?

ஒரே இதழில் மகப்பேறு விளம்பரம், மகப்பேறு விழிப்புணர்வு கட்டுரை..” ஆ.விகடனை விமர்சிக்கும் இயக்குநர்

செயற்கை கருத்தரிப்பு மையங்களில் நடக்கும் குற்றங்களை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான படம் ‘குற்றம் 23’.  அறிவழகன் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் நிலையில், விமர்சகர்களும் பாராட்டி வருகின்றனர். சினிமா விமர்சனங்களுக்காக தனித்த அடையாளம் உள்ள ஆனந்தவிகடன் ‘குற்றம் 23’ படத்துக்கு பிற்போக்கான விமர்சனம் தந்திருப்பதாக படத்தின் இயக்குநர் அறிவழகன் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார். “ஒரே இதழில் மகப்பேறு விளம்பரம், … Continue reading ஒரே இதழில் மகப்பேறு விளம்பரம், மகப்பேறு விழிப்புணர்வு கட்டுரை..” ஆ.விகடனை விமர்சிக்கும் இயக்குநர்

ஜக்கியின் தரப்பை கேட்டதுபோல செயல்பாட்டாளர்களின் தரப்பையும் ஊடகங்கள் கேட்க வேண்டும்!

ஒடியன் லட்சுமணன் வழக்கமான ஜக்கிவாசுதேவின் பேட்டிக்கும் நேற்று அவர் அளித்த பேட்டிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது . தன்மேல் வீசப்படுகின்ற குற்றச்சாட்டுகளை அவர் நிச்சயமாக மகிழ்வுடன் எதிர்கொள்ளவில்லை. அவரின் உடல்மொழியும் கண்களும் பதட்டத்தையே காட்டியது.அந்த சிரிப்புகூட வரட்டுத்தனமாகவே இருந்தது அவரிடம் இருப்பது ஞானமல்ல சாதரணமான பொதுப் புத்திதான் என்பது அப்பட்டமாக தெரிந்தது. அவர் சொன்னது பெரும்பாலும் உண்மைக்கு புறம்பானதுதான். செயல்பாட்டாளர்கள் 3 வருடங்களாக ஆவணங்களைத்திரட்டும் வேலைகளை மட்டுமே செய்துவந்தனர். அது முழுமையடைந்த பிறகே பேசவும் எழுதவும் போராடவும் … Continue reading ஜக்கியின் தரப்பை கேட்டதுபோல செயல்பாட்டாளர்களின் தரப்பையும் ஊடகங்கள் கேட்க வேண்டும்!

“குற்றவாளியை ஊக்கப்படுத்துகிறார் நிர்மலா பெரியசாமி” : ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்

நந்தினி கொலை வழக்கு தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில் குற்றவாளியை ஊக்கப்படுத்தும் விதமாக அதிமுக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி பேசியதாக ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 4-2-2017 அன்று புதிய தலைமுறை டிவி - 'நேர்படப் பேசு' நிகழ்ச்சியில் அரியலூர் தலித் சிறுமி நந்தினியின் கொலை வழக்கு குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த விவாதத்தில் பேசிய அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி இவ்வழக்கில் காவல்துறை துரிதமாக விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ததாக மிகப்பெரிய பொய்யை லட்சக்கணக் … Continue reading “குற்றவாளியை ஊக்கப்படுத்துகிறார் நிர்மலா பெரியசாமி” : ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்

செய்தி சேகரித்த தீக்கதிர் நிருபர் கவாஸ்கர் மீது தாக்குதல்; டியூஜெ கண்டனம்

ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் போடாமல் மூடிவைத்திருக்கும் வங்கி நிர்வாகங்களையும், மத்திய அரசையும் கண்டித்து சென்னை மேடவாக்கத்தில், வாலிபர் சங்கம்&சிபிஎம் கட்சி போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடியால், பலர் படுகாயமடைந்தனர். அந்த செய்தியை படம் பிடித்த தீக்கதிர் நிருபர் கவாஸ்கர் தாக்கப்பட்டதுடன் அவர், எடுத்திருந்த புகைப்படங்களையும் போலீசார் அழித்தனர். இந்த சம்பவத்திற்கு டி.யூ,ஜெ. மாநிலத்தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாதென அறிவித்தும், 50 நாட்களாகியும் புதிதாக … Continue reading செய்தி சேகரித்த தீக்கதிர் நிருபர் கவாஸ்கர் மீது தாக்குதல்; டியூஜெ கண்டனம்

தீக்கதிர் நிருபர் கவாஸ்கர் மீது தாக்குதல்; கோயமுத்தூர் பத்திரிகையாளர் சங்கம் கண்டிப்பு; சென்னை சங்கங்கள் மவுனம்!

மத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பால் அனைத்து தரப்பு மக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ள சூழலில், மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சென்னை மேடவாக்கம் பகுதியில் பணம் வராத ஏடிஎம் மையத்தின் முன்பாக மலர் வளையம் வைக்கும் போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவலர்கள் சிலர் பாலியல் ரீதியான தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கின்றனர். அதை எதிர்த்தவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இதனை படம் பிடிக்க சென்ற தீக்கதிர் … Continue reading தீக்கதிர் நிருபர் கவாஸ்கர் மீது தாக்குதல்; கோயமுத்தூர் பத்திரிகையாளர் சங்கம் கண்டிப்பு; சென்னை சங்கங்கள் மவுனம்!

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டா’ன்’ ராம்மோகன் ராவ்; மண்ணுக்குள் புதையும் பத்திரிகை தர்மம்…

இன்றைய தினமலர் நாளிதழில் , வருமான வரித்துறை சோதனையை அடுத்து, பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள  ராம் மோகன் ராவ் பற்றி முதல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. "நீக்கம்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், தலைமை செயலாளராக பதவி வகித்த ராம் மோகன் ராவை "அவன்" என்று ஏக வசனத்தில் எழுதப்பட்டுள்ளது, நாளிதழை வாசித்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமலரின் அந்த வரிகளை உங்களுக்காக இங்கே எழுத்து வடிவில் தருகிறோம். /வருமான வரித்துறை சோதனையை அடுத்து, தமிழக தலைமை … Continue reading காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டா’ன்’ ராம்மோகன் ராவ்; மண்ணுக்குள் புதையும் பத்திரிகை தர்மம்…

ஜெ. இறுதி ஊர்வல கவரேஜுக்கு அதிக பார்வையாளர்கள்: சர்ச்சையாகும் தந்தி டிவி விளம்பரம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி காலமானார். செய்தி தொலைக்காட்சியான தந்தி டிவி. டிசம்பர் 5-ஆம் தேதி 5 மணியளவில் ஜெயலலிதா இறந்துவிட்டதாக அறிவித்தது. மருத்துவமனை செய்தியை மறுத்த நிலையில், ஜெ. இரவு 11 மணியளவில் இறந்ததாக செய்தி அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், டிசம்பர் 6-ஆம் தேதி நடந்த இறுதி ஊர்வல கவரேஜை தந்தி டிவியில்தான் அதிகமானோர் பார்த்ததாக விளம்பரத்தை வெளியிட்டுள்ளது தந்தி … Continue reading ஜெ. இறுதி ஊர்வல கவரேஜுக்கு அதிக பார்வையாளர்கள்: சர்ச்சையாகும் தந்தி டிவி விளம்பரம்

எச்சரிக்கை: துக்ளக் ஆசிரியராக ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி பொறுப்பேற்றுள்ளார்!

அரசியல் விமர்சகர் என அறியப்பட்ட நடிகர் சோ. ராமசாமி, துக்ளக் என்ற வலதுசாரி பத்திரிகையை நடத்தி வந்தார். அண்மையில் அவர் மரமடைந்ததையொட்டி, அவர் ஆசிரியராக வகித்த பொறுப்புக்கு ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி வந்திருப்பதாக அந்த இதழ் அறிவிப்பு வெளியிட்டுருக்கிறது. வழக்கமாக ஊடகங்களில் புதிய பொறுப்புகளை அறிவிப்புகளாக வெளியிடுவார்கள். துக்ளக் பத்திரிகையை அறிவிப்பை எச்சரிக்கையாக வெளியிட்டுள்ளது. ஆர் எஸ் எஸ் இயக்க செயல்பாட்டாளராக அறியப்படுபவர் குருமூர்த்தி என்பது குறிப்பிடத்தகுந்தது. படம்: சஞ்சய் மூசா

அரசாங்க துக்க நாளில் கூட கூத்தடித்துக் கொண்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பும் தமிழ் சேனல்கள்!

இரவிலிருந்து ஒரேயாரு செய்தி தொலைக்காட்சியை மட்டும் பார்த்து வருக்கிறோமே, சற்று மற்ற சேனல்களிலும் என்ன சொல்றாங்கன்னு பார்க்க ரிமோட்டை எடுத்து மாற்றினானால், 'விஜய் டிவி' ல அவங்களோட காமெடி வல்லுநர்களின் காமெடி நிகழ்ச்சி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். சில லோக்கல் சேனல்கள் கூட அம்மாவின் பழைய நேர்காணல்கள் மற்றும் அரசாங்க துக்க நிகழ்வு போன்றவற்றை ஒளி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். விஜய் டிவி மட்டுமல்ல, அனைத்து சினிமா தொலைகாட்சிகளான ஆதித்தியா, சிரிப்பொலி, இசையருவி மற்றும் சன் மியூசிக் போன்ற அனைத்தும் … Continue reading அரசாங்க துக்க நாளில் கூட கூத்தடித்துக் கொண்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பும் தமிழ் சேனல்கள்!

”இது மாதிரி ஒரு பையன் நம் வீட்டில் வளர நாம் சம்மதிப்போமோ?”

விஜய் பாஸ்கர் சக்தி விகடனில் ஏழே வயதான இச்சிறுவன் செய்யும் சிவத்தொண்டு (?) பற்றி சிலாகித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள் கழுத்தில் போட்டிருக்கும் நான்கு மாலைகளை தாங்கக் கூடிய வலு அவனுக்கு இருக்குமா என்று தெரியவில்லை. அப்பாவும் அம்மாவும் சிவபக்தர்கள். அதனால் பையனையும் அப்படியே வளர்த்துவிட்டார்களாம். சிவனைப் பற்றி கதாகாலட்சேபம் செய்து அதன் மூலம் வரும் பணத்தை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்களாம். சிவன் என்றொருவர் இருக்கிறார் அவர் கழுத்தில் பாம்பெல்லாம் போட்டுக் கொண்டு … Continue reading ”இது மாதிரி ஒரு பையன் நம் வீட்டில் வளர நாம் சம்மதிப்போமோ?”

கருத்துரிமை: காங்கிரஸ்-திமுகவை குறை சொல்லும் தகுதி தினமலருக்கு இருக்கிறதா?…

பதான்கோட் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை நேரடியாக ஒளிபரப்பியதற்காக "என்.டி.டிவி'யின் இந்தி சேனலுக்கு ஒரு நாள் தடை விதிக்கப்பட்டது. இதை அனைத்து எதிர் கட்சிகளும் கண்டித்தன. குறிப்பாக காங்கிரசும், திமுக.,வும் கடுமையாகவே கண்டித்தன. இந்நிலையில் "காங்கிரஸ் - தி.மு.க., ஆட்சியில் தடை விதிக்கப்பட்ட 'டிவி' சேனல்கள்" என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ள தினமலர், அதில், "கருத்துரிமையை பேசும் தகுதி திமுக, காங்கிரஸ்க்கு இருக்கிறதா ?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் திமுக ஆட்சில் தினமலர் ஆசிரியர் கைது செய்யப்பட்டார் … Continue reading கருத்துரிமை: காங்கிரஸ்-திமுகவை குறை சொல்லும் தகுதி தினமலருக்கு இருக்கிறதா?…

என்டிடிவிக்கு தடை: தமிழக ஊடகங்கள் ஏன் மவுனம் சாதிக்கின்றன?

என்டிடிவி நிறுவனத்தின் இந்தி ஒளிபரப்புக்கு நரேந்திர மோடி அரசு ஒரு நாள் தடை விதித்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இதற்குத் தமிழக ஊடகங்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொறுப்புப் பொதுச்செயலாளர் கே. வேலாயுதம் இருவரும் ஞாயிறன்று (நவ.6) வெளியிட்ட அறிக்கை: ஊடகச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்படும் தொடர்தாக்குதல்களின் புதிய பதிப்பாக, என்டிடிவிதொலைக்காட்சி நிறுவனத்தின் மீதுஒரு ஒடுக்குமுறை … Continue reading என்டிடிவிக்கு தடை: தமிழக ஊடகங்கள் ஏன் மவுனம் சாதிக்கின்றன?

என்.டி.டி.வி. செய்தித் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை: கருத்துரிமையைத் தடுக்கிறதா மத்திய அரசு?

“பஞ்சாப் மாநிலம் பதன்கோட் இராணுவ முகாம் மீது ஜனவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான செய்திகளை என்.டி.டி.வி. தொலைக்காட்சி ஒளிபரப்பியது. பாதுகாப்பு தொடர்பான தகவல்களையும், அரசின் ரகசியமான ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளையும் பகிரங்கமாக ஒளிபரப்பியதாக குற்றம் சாட்டி, மத்திய அமைச்சர்கள் குழு அளித்துள்ள பரிந்துரையை ஏற்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நவம்பர் 9 ஆம் தேதி ஒரு நாள், என்.டி.டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தடை விதித்து இருக்கிறது. இது தொலைக்காட்சி … Continue reading என்.டி.டி.வி. செய்தித் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை: கருத்துரிமையைத் தடுக்கிறதா மத்திய அரசு?

என்டிடிவி ஒளிபரப்பை முடக்கும் நவம்பர் 9ம் தேதி கருப்புப்பட்டைகளை ஏற்றி எதிர்ப்பு தெரிவிப்போம்: ஆதவன் தீட்சண்யா

என்டிடிவி ஒளிபரப்பை முடக்கும் நவம்பர் 9ம் தேதி கருப்புப்பட்டைகளை ஏற்றி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அழைப்பு விடுத்திருக்கிறார். இதுகுறித்து தனது முகநூலில் ஆதவன் தீட்சண்யா எழுதிய குறிப்பு: “'என்டிடிவி இந்தியா' செய்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை ஒருநாள் நிறுத்திவைக்கும் மத்திய அரசின் முடிவானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்குவதில் அதன் நிலை மேலும் மூர்க்கமடைந்திருப்பதைக் காட்டுகிறது. ஊடகங்கள் மீது தொடங்கும் இப்படியான ஒடுக்குமுறைகள், எல்லாத்தளங்களிலும் வரவிருக்கும் எதேச்சதிகாரத்தின் முன்னறிவிப்பேயாகும். இன்று என்.டி.டி.வி.க்கான … Continue reading என்டிடிவி ஒளிபரப்பை முடக்கும் நவம்பர் 9ம் தேதி கருப்புப்பட்டைகளை ஏற்றி எதிர்ப்பு தெரிவிப்போம்: ஆதவன் தீட்சண்யா

என்டிடீவி இந்தியா சேனலுக்குத் தடை: டெலிகிராப் முதல் பக்கம்!

மோடி தலைமையிலான பாஜக அரசையும் அதன் பாசிச நடவடிக்கைகள் குறித்தும் கடுமையாக விமர்சித்து வரும் நாளிதழ் தி டெலிகிராப். டெலிகிராபின் முதல் பக்கம் கடுமையான விமர்சனத்தை பகடியாக சொல்லும்படி அமைந்திருந்தும். என்டிடீவி இந்தியா சேனலுக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கும் செய்தியை மிகச் சிறப்பாக சொல்கிறது டெலிகிராபின் முதல் பக்கம். “டெல்லி அரசில் ஏதோ ஒன்று கெட்டுப் போயிருக்கிறது! ஒரு பக்கம் காற்றில் மாசுபாடு; இன்னொரு பக்கம் எமர்ஜென்சியைப் போல ஒளிபரப்புக்குத் தடை” என முகப்புப் பக்க … Continue reading என்டிடீவி இந்தியா சேனலுக்குத் தடை: டெலிகிராப் முதல் பக்கம்!

கிறித்துதாஸ் காந்தி மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்கங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை

ஓய்வுபெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி கிறித்துதாஸ் காந்தி மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தமிழக முற்போக்கு இயக்கங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அறிக்கையின் விவரம் வருமாறு: தொலைக்காட்சி (தந்தி) விவாதம் ஒன்றில் முன்னாள் கூடுதல் தலைமைச்செயலாளர் கிறித்துதாசு காந்தி அவர்கள் கூறிய கருத்துக்காக, பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள் அவர் மீது தனிப்பட்ட தாக்குதலில் இறங்கியுள்ளன. அந்த நிகழ்ச்சியில் அவர் தெளிவாக, ” தனிப்பட்ட ஒருவர் எந்த மத நிகழ்ச்சியிலும் பங்கேற்கலாம்; ஆனால் முதலமைச்சராகவோ … Continue reading கிறித்துதாஸ் காந்தி மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்கங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை

தி இந்துவை விமர்சிப்பவர் அன்னிய கைக்கூலியா?

கிருபா முனுசாமி ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்!” என்று திருமுருகன் காந்தி எழுதியதை வெளியிட்ட 'தி டைம்ஸ் தமிழ்’ (The Times Tamil) இணையதளத்தை "வெறுப்பைப் பரப்புகிறது, முற்போக்கு முகங்களுக்குப் பின் வக்கிரங்கள்" என்றெல்லாம் தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கும் திரு. சமஸ் அவர்களுக்கு! உங்கள் எழுத்துக்களை பொறுக்கித்தனம் என்றும், ‘தி இந்து’ பத்திரிகையை மலம் என்றும் திருமுருகன் காந்தி எழுதினால், அதன் பின்னான உண்மைத்தன்மையை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், அதற்கான எதிர்வினையை நீங்கள் … Continue reading தி இந்துவை விமர்சிப்பவர் அன்னிய கைக்கூலியா?