“ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்” : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்

நந்தன் நீலகேணி பெரிய தொழில்நுட்ப வல்லுநர் அல்ல; மாறாக அவர் ஒரு மார்கெடிங் மனிதர். மன்மோகன்சிங் அரசிடம் இந்த திட்டம் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிற மானியத்தை பெருமளவில் குறைக்கலாம் என்று அவரிடம் சொல்லி, UPA -2 அரசை இந்த திட்டத்தை ஏற்க வைத்தார்கள். மக்களை கண்காணிக்கலாம் என்று சொல்லி மோடி அரசிடம் சொல்லி இதனை தொடர வைத்தார்கள்.