பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பொதுக்கருத்தை இந்தியா உருவாக்கக்கோரி கையெழுத்து இயக்கம்: ஆர். நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார்!

சர்வதேச அளவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பொதுக்கருத்தை இந்தியா உருவாக்கக்கோரி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் மூத்த அரசியல் தலைவர் ஆர். நல்லக்கண்ணு. இஸ்ரேல் அரசுடனான இராணுவ தொடர்புகளை கைவிட வேண்டும்; பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சர்வதேச பொதுக்கருத்தை உருவாக்குவதற்கு இந்திய அரசு முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர். நல்லக்கண்ணு இணையவழி விண்ணப்பத்தை change. org என்ற இணையத்தில் முதல் கையெழுத்து இட்டு தொடங்கி வைத்தார். அவர் தனது கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது … Continue reading பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பொதுக்கருத்தை இந்தியா உருவாக்கக்கோரி கையெழுத்து இயக்கம்: ஆர். நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார்!

வெனிசுலாவின் எதிர்காலம் ..?

வெனிசுலாவில் நிறுவப்பட்ட அரசானது, சோசலிச பொருளாதார கொள்கைக்கு ஆதரவளிக்கிற அரசே தவிர, பாட்டாளிகள் விவசாயிகளின் சர்வாதிகார அரசல்ல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். முதலாளித்துவ ஜனநாயக வடிவத்திலான வர்க்க சமரச ஆட்சியில் எதிர்கட்சிகளை உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்காக ஒடுக்குவது சாத்தியமற்றது. உழைக்கும் மக்கள் திரளின் ஆதரவின்றி எதிர்க்கட்சிகளை ஒடுக்குகிற மதுராவின் முடிவு அவருக்கு எதிராக திரும்பவே செய்யும்.

பிகினி உடையின் க‌வ‌ர்ச்சிக்குப் பின்னால் ம‌றைந்திருக்கும் அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌த்தின் கோர‌முக‌ம்!

1946 ம் ஆண்டு, உல‌கின் முத‌லாவ‌து நைட்ர‌ஜ‌ன் குண்டு பிகினித் தீவின் அருகில் தான் ப‌ரிசோதிக்க‌ப் ப‌ட்ட‌து. அணு குண்டை விட‌ ச‌க்தி வாய்ந்த‌ நைட்ர‌ஜ‌ன் குண்டு ப‌ரிசோதிப்ப‌த‌ற்கு முன்ன‌ர், பிகினித் தீவில் இருந்த‌ ம‌க்க‌ள் வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர். அமெரிக்க‌ இராணுவ‌ம் அவ‌ர்க‌ளுக்கு பொய்யான‌ வாக்குறுதிக‌ள் வ‌ழ‌ங்கி இன்னொரு தீவில் த‌ங்க‌ வைத்த‌து.

இன்று துருக்கி நாளை இந்தியா; முதலாளித்துவ பாராளுமன்ற முறையில் இருந்து சர்வாதிகாரத்திற்கு…

அருண் நெடுஞ்செழியன் துருக்கியில் ஜனாதிபதி பதவிக்கு மிக அதிகமான அதிகாரம் வழங்குகிற சட்டத் திருத்தம் மீதான ஓட்டெடுப்புக்கு சாதகமாக 51% விழுக்காட்டு மக்கள் ஆதரவளித்துள்ளனர். இன்னும் சில தினங்களில் எர்டோகன் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொள்வார்.அடுத்து பத்தாண்டுகளுக்கு இவர் துருக்கியின் அரசியல் பொருளாதாரத்தை ஏகபோகமாக தீர்மானித்திட,சர்வாதிகார ஆட்சி நடத்திட சட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.துருக்கியின் நீதிபதிகள், ராணுவம்,அரசியல் தேசிய சபை என அனைத்தும் எர்டோகன் ஒருவரால் கட்டுப்படுத்தப்படும். எர்டோகனின் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்த லட்சக்கணக்கானோர் சிறையில் உள்ளனர். மதமும் … Continue reading இன்று துருக்கி நாளை இந்தியா; முதலாளித்துவ பாராளுமன்ற முறையில் இருந்து சர்வாதிகாரத்திற்கு…

சிரியாவில் அமெரிக்காவின் வீழ்ச்சி: ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையிலான உலகப்போரின் தொடக்கமா?

அருண் நெடுஞ்செழியன் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வள வேட்டைக்கான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்ய நாடுகளின் போரானது, சிரியாவின் அலெப்போ வீழ்ச்சியோடு ஒரு சுற்று முடிவுறுகிறது. அமெரிக்கா-இஸ்ரேல்-அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்கள்-குர்துகள் ஒரு முகாமாகவும் ஆசாத்தின் சிரியா அரசு-ரஷ்யா-ஈரான் மற்றொரு முகாமாகவும் மேற்கொண்ட சிரியாவின் மீதான பாகப்பிரிவனை யுத்தமானது கடந்த ஐந்து ஆண்டுகளில் லட்சக் கணக்கான உயிர்களை காவு கொண்டு முடிவடைந்துள்ளது. ஏகாதிபத்திய நாடுகளின் வள வேட்டைக்கான இரண்டாம் சுற்றுப் போரானது,கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற பிராக்சி போராக … Continue reading சிரியாவில் அமெரிக்காவின் வீழ்ச்சி: ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையிலான உலகப்போரின் தொடக்கமா?

கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்

கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை நலிவு காரணமாக ஓய்வெடுத்து வந்த கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ (90) காலமானார். இதை கியூப அரசு தொலைக் காட்சி அறிவித்துள்ளது. பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் ஹவானாவில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு இறந்ததாக கியூப ஊடகம் தெரிவித்துள்ளது.  பிடலின் இறப்பை அவருடைய சகோதரரும் தற்போதைய அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ உறுதிப் படுத்தியுள்ளார். மாணவராக இருந்தபோது அரசியல் செயல்பாட்டில் இறங்கிய பிடல், அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பி மக்கள் மனதில் … Continue reading கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்

அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்டு ட்ரம்ப் வெற்றி

சர்சைகளுடன் களம் கண்ட 45வது ஐக்கிய அமெரிக்க தேர்தல் களம் முடிவுக்கு வந்துள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு ட்ர்ம்ப் தோற்கடித்தார். முஸ்லிம்கள் அமெரிக்கா வருவதை தடை செய்வோம், அகதிகள் வருவதை தடுக்க தடுப்புச் சுவர் எழுப்புவோம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொன்னதோடு பெண்களிடன் முறைகேடாக நடந்துகொண்டதாகவும் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தது. இந்நிலையில் முன்னேறிய சமூகமாகச் சொல்லிக்கொள்ளும் அமெரிக்கர்கள் பிற்போக்குத்தனமான கருத்துகளை முன்வைத்த ட்ரம்பை தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் பின்னணியில் அமெரிக்கா: துருக்கி அதிபர் குற்றச்சாட்டு

ஐரோப்பிய நாடுகளில் ‌ஒன்றான துருக்கியில் ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் திடீரென முயற்சி மேற்கொண்டது. 13 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் அதிபர் தாயிப் எர்டோகனுக்கு எதிராக ராணுவத்தின் ஒரு பிரிவினர் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டனர். மக்களின் ஆதரவின்மையால் ராணுவத்தின் இந்த  முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், துருக்கி அதிபர் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக குற்றம்சாட்டியிருக்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் மதகுரு ஃபெதுல்லா குலனின் தூண்டுதலில் துருக்கி ராணுவத்தில் உள்ள ஒரு பகுதியினர் ஆட்சிக்கவிழ்ப்பில் … Continue reading ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் பின்னணியில் அமெரிக்கா: துருக்கி அதிபர் குற்றச்சாட்டு

பிரான்ஸ் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர் இஸ்லாமிய பயங்கரவாதி அல்ல; பொருளாதார பயங்கரவாதி!

பிரான்ஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. நீஸ் நகரின் ‌கடற்கரையில் திரண்டிருந்த பொதுமக்கள், அந்நாட்டு தேசிய தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, லாரி ஒன்றை அதிவேகமாக ஓட்டியவாறு ஒருவர், திரண்டிருந்த கூட்டத்திற்குள் நுழைந்தார். அந்த நபர், கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். இதில் 80 பேர் உயிரிழந்தனர்;பலர் காயமடைந்தனர். இதையடுத்து, காவல்துறையினர் ‌அந்த நபரை சுட்டுக்கொன்றனர். இதைத்தொடர்ந்து பிரான்சில் பதட்டம் அதிகரித்துள்ளதால் அவசர நிலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக … Continue reading பிரான்ஸ் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர் இஸ்லாமிய பயங்கரவாதி அல்ல; பொருளாதார பயங்கரவாதி!

இத்தனை எளிமையான கேமரூன் பனாமா பேப்பர்ஸ் முறைகேட்டில் சிக்கியது எப்படி?

பிரிட்டன் பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் பதவியை பிரிக்சிட் வாக்கெடுப்புக்குப் பிறகு ராஜினாமா செய்தார்.  அரசு மாளிகையை விட்டு அவருடைய குடும்பம் அண்மையில் வெளியேறியது இதையொட்டி முகப்பில் இருக்கும் படம், உலகம் முழுக்க வைரலானது. இங்கிருப்பவர்கள் கேமரூனின் எளிமையை புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். சில பதிவுகளைப் பாருங்கள்:   Thadagam Mugund பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் பதவியை ராஜினாமா செஞ்சுட்டு ஆபிச காலி பண்ணும் போது...நம்ப ஊரு வார்ட் மெம்பரிடம் கூட இதெல்லாம் எதிர்பார்க்க முடியுமானு தெரியல. … Continue reading இத்தனை எளிமையான கேமரூன் பனாமா பேப்பர்ஸ் முறைகேட்டில் சிக்கியது எப்படி?

#ஒளிப்படம்: கலைக்காக இந்த நிர்வாண ஊர்வலம்!

நூற்றுக்கணக்கான மக்கள் உடலில் நீல நிறத்தை பூசி இங்கிலாந்தின் ஹல் நகரில் ஒன்று கூடியினர். இது முழுக்க கலைக்காக. ஹல் நகரின் கடலுடனான உறவைக் குறிக்கும் வகையில் நீல நிறத்தைப் பூசி ஒளிப்படங்களுக்காக நின்றனர் இந்த மக்கள். இந்தக் கலை நிகழ்வை  சீ ஆஃப் ஹல் என்ற பெயரில், நியூயார்க் கலைஞர் ஸ்பென்சர் ட்யூனிக் நிகழ்த்தினார்.

‘’ஐரோப்பிய யூனியன் ஒரு தோல்வியடைந்த திட்டம் ‘’

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து பிரிவதாக ஓட்டெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம கால உலக அரசிலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது. உலகமயமாக்கலுக்கு விழுந்த அடியாக இதை பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள்.  ஐரோப்பிய யூனியனில் தொடரலாமா? வெளியேறலாமா? என பிரிட்டனில் வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பு முடிவுகளின்படி 52% மக்கள் வெளியேறவும் 48% மக்கள் தொடரவும் வாக்களித்துள்ளனர். இதனால் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது பிரிட்டன். வாக்கெடுப்பு முடிவு குறித்து இங்கிலாந்தின் UKIP தலைவர் நைஜல் ஃபரேஜ், “இது சாமானியர்களின் வெற்றி” என கருத்து … Continue reading ‘’ஐரோப்பிய யூனியன் ஒரு தோல்வியடைந்த திட்டம் ‘’

“இரண்டு ஆண்கள் முத்தமிடுவதைப் பார்த்து அவன் எரிச்சலடைந்தான்”: ஒர்லாண்டோ தாக்குதலை நடத்தியவரின் தந்தை

“இரண்டு ஆண்கள் முத்தமிடுவதைப் பார்த்து அவன் எரிச்சலடைந்தான்” என அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரில் ஓரினச் சேர்க்கையாளர் விடுதியில் தாக்குதலை நடத்தியவரின் தந்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், தீவிரவாதிகளுடன் எவ்வித தொடர்பும் தன் மகனுக்கு இருந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஒர்லாண்டா நகரில் உள்ள பல்ஸ் என்ற பெயரிலான ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான விடுதியில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் இறந்தனர். 50க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல் நடத்தியவர் அமெரிக்க காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். … Continue reading “இரண்டு ஆண்கள் முத்தமிடுவதைப் பார்த்து அவன் எரிச்சலடைந்தான்”: ஒர்லாண்டோ தாக்குதலை நடத்தியவரின் தந்தை

ரமலான் நேரத்தில் திண்பண்டங்கள் விற்ற முதியவரை தாக்கிய பாக். போலீஸ்; சமூக ஊடகங்களின் தலையீட்டால் கைதானார்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் முதியவர் கோகுல் தாஸ், ரமலான் நேரத்தில் திண்பண்டங்கள் விற்றார் என்பதற்காக, உள்ளூர் போலீஸால் கடுமையாகத் தாக்கப்பட்டார். முதியவர் ரத்தக் காயங்களுடன் இருந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவின. பல பாகிஸ்தான் பிரபலங்கள், முன்னாள் அதிபர் பெனாசிர் புட்டோவின் மகள் பக்தவார் புட்டோ உள்பட பலர் கோகுல்தாஸுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் எழுதினார்கள். இந்நிலையில் சிந்து மாகாணத்தின் ஐஜி விரைந்து நடவடிக்கை எடுத்து, முதியவரைத் தாக்கிய குற்றத்துக்காக அந்தக் … Continue reading ரமலான் நேரத்தில் திண்பண்டங்கள் விற்ற முதியவரை தாக்கிய பாக். போலீஸ்; சமூக ஊடகங்களின் தலையீட்டால் கைதானார்!

ஓரினச் சேர்க்கையாளர் விடுதியில் துப்பாக்கிச் சூடு; 20 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டா நகரத்தில் ஓரினச் சேர்க்கையாளர் விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. “தீவிர’ கருத்துகளில் நம்பிக்கையுடையவரின் நடவடிக்கையாகத்தான் இதைப் பார்க்கிறோம். மேற்கொண்டு விசாரித்து வருகிறோம்” என்று தாக்குதலுக்கான காரணம் குறித்து காவல்துறை தெரிவித்துள்ளது. https://twitter.com/OrlandoPolice/status/741955142774325248 https://twitter.com/OrlandoPolice/status/741931400392249344