அம்பேத்கர் பிறந்த நாளை ‘தண்ணீர் தின’மாகக் கொண்டாடும் மத்திய அரசு; சாதி ஒழிப்பை நீர்க்கச் செய்யும் முடிவு!

அ. குமரேசன் கடந்த நான்கு நாட்களின் பரபரப்புகளில் நழுவிவிட்ட இந்தச் செய்தி இன்றுதான் கண்ணில் பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை ‘தண்ணீர் தினம்’ என்று அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. “நாட்டின் அரசமைப்பு சாசனத்தை உருவாக்கியதில் மையமான பங்காற்றிய அம்பேத்கர், நீராதாரங்கள் நிர்வாகம் குறித்த ஒரு திட்டவட்டமான அகில இந்தியக் கொள்கையையும் முன்வைத்தவர். இதனை மக்கள் அறியச்செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது,” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி தெரிவிக்கிறது. “சுதந்திர இந்தியாவின் பன்னோக்கு அணைத்திட்டங்கள் பலவற்றை … Continue reading அம்பேத்கர் பிறந்த நாளை ‘தண்ணீர் தின’மாகக் கொண்டாடும் மத்திய அரசு; சாதி ஒழிப்பை நீர்க்கச் செய்யும் முடிவு!

மனிதர்களின் அழுக்குகளால் பார்வையை இழந்துகொண்டிருக்கும் கங்கை நதி வாழ் டால்ஃபின்கள்!: உமா பாரதி ஒப்புதல்

மனிதர்கள் தங்களுடைய அழுக்குகளை மூழ்கி தொலைக்கும் கங்கை நதியில் வாழும் டால்ஃபின்கள் அந்த அழுக்குகளால் (மாசுபடுதலால்) பார்வையிழப்பை சந்தித்துக்கொண்டிருப்பதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி ஒப்புதல் அளித்துள்ளார். புதன்கிழமை இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, கங்கை நதி மாசுபடுவதால், அந்த நதி நீரில் வாழும் அறிய வகை டால்ஃபின்கள் அழிந்துவருவதாக குறிப்பிட்டார். இதுகுறித்து பின்னர் விளக்க அறிக்கை வெளியிட்ட நீர் வளத்துறை அமைச்சகம், அமைச்சர் சொன்னது உண்மை என்றாலும், அது … Continue reading மனிதர்களின் அழுக்குகளால் பார்வையை இழந்துகொண்டிருக்கும் கங்கை நதி வாழ் டால்ஃபின்கள்!: உமா பாரதி ஒப்புதல்