’காங்கிரஸுக்கு வாருங்கள்!’: பழ. கருப்பையாவுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் அழைப்பு!

அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பழ.கருப்பையா வீட்டில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றும், பழ. கருப்பையா, காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும் என்று அழைப்பு விடுப்பதாக காங்கிரஸ் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது, 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தை பா.ஜ. தலைமையிலான மத்திய அரசு வேண்டுமென்றே முடக்கிவருகிறது. சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக, கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். காங்கிரஸ் … Continue reading ’காங்கிரஸுக்கு வாருங்கள்!’: பழ. கருப்பையாவுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் அழைப்பு!

காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விஜயதாரணி அதிமுகவில் இணைகிறார்?!

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணிக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்ட நிலையில், விஜயதரணி தமிழக மகளிர் காங்கிரஸ் பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, மறைந்த தலித் காங்கிரஸ் தலைவர் பொன்னம்மாள் பேத்தி  ஜான்சிராணி மகளிர் காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். தவறு செய்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நீக்காமல், கட்சி தலைமை தன்னை நீக்கியது, நியாயமற்ற செயல் என, விஜயதரணி குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து தி இந்து (ஆ) நாளிதழுக்கு அளித்த பேட்டியில் “இளங்கோவன் பெண்களை … Continue reading காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விஜயதாரணி அதிமுகவில் இணைகிறார்?!

ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெளியிட்ட 25 ஊழல் புகார்கள் என்ன ? இதை படியுங்கள் முதலில்!

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிமுக அரசுக்கு எதிராக 25 ஊழல் புகார்கள் அடங்கிய பட்டியலை தமிழ் காங்கிரஸ்  தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டார். *நெல்லை வேளாண் பொறியாளர் முத்து குமாரசாமி தற்கொலை *மின் கொள்முதலில் ஊழல் *கோகோ-கோலா நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியதில் ஊழல் *உயர்கல்வித் துறையில் ஊழல் *பள்ளி கல்வித்துறையில் ஊழல் *ஆவின் பால் கலப்பட ஊழல் *லேப்-டாப்ஊழல் *நெடுஞ்சாலைத்துறைஊழல் *பாதாளச் சாக்கடைஊழல் *ஊழலால் தடை செய்யப்பட்ட உடன்குடி மின் திட்டம் *டாஸ்மாக் ஊழல் *நெல்மூட்டைகளில் கலப்பட … Continue reading ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெளியிட்ட 25 ஊழல் புகார்கள் என்ன ? இதை படியுங்கள் முதலில்!

மீண்டும் திமுகவுடன் கூட்டணியா ? : சோனியா, ஈவிகேஎஸ் ஆலோசனை

கேரளாவின் வர்கலாவில் நாராயண குருவின் 83-வது ஆண்டு நினைவு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். அப்போது "சமூக சீர்திருத்தவாதிகளை சொந்தம் கொண்டாட முயற்சிக்கும் பாரதிய ஜனதா,  சமூகத்தில் பிளவை ஏற்படுத்தவும்  முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டினார். இதனிடையே கேரளா வந்த சோனியா காந்தியை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திடீரென  சந்தித்து பேசினார். அப்போது திமுகவுடனான சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. கூட்டணி குறித்து … Continue reading மீண்டும் திமுகவுடன் கூட்டணியா ? : சோனியா, ஈவிகேஎஸ் ஆலோசனை

விஜயகாந்த் எங்களொடு வந்தால் மகிழ்ச்சிதான்: இப்போது இளங்கோவனும் அழைக்கிறார்

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை நெசப்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பங்கேற்று மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி குறித்த கேள்விகளுக்கு “ஒரு கட்சி, மற்ற கட்சியுடன் கூட்டணியில் இணைவது என்பது தேர்தல் நேரத்தில் நடக்கும் இயல்பான விஷயம் என்று தெரிவித்த இளங்கோவன், தேமுதிக தங்களோடு கூட்டணியில் இணைந்தால் மகிழ்ச்சி தான்” என்று பதிலளித்தார்.