கோவையின் அடையாளம் ஈஷா மையமா? எதிர்ப்பால் பின்வாங்கிய ரயில்வே!

ந.பன்னீர் செல்வம் கோவையிலிருந்து சென்னை செல்லும் சேரன் அதிவிரைவு வண்டியில் கோவையின் அடையாளமாக ஈஷா யோக மையத்தின் லிங்கம் படம் போட்டிருப்பது தவறானது என்றும், கோவை ரயில் நிலையத்தின் படம் போட நடவடிக்கை கோரியும் அண்மையில் கோவையிலிருந்து சென்னை வரை செல்லும் சேரன் அதிவிரைவு வண்டியில் கோவையின் அடையாளமாக ஈஷா நிறுவனத்தின் புகைப்படம் போட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சமூக நீதிக்கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்திருந்தோம். தென்னிந்திய இரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் வரும் வெள்ளிக்கிழமை தார் … Continue reading கோவையின் அடையாளம் ஈஷா மையமா? எதிர்ப்பால் பின்வாங்கிய ரயில்வே!

ஈசா மையம் ஆக்கிரமித்திருக்கும் அரசு நிலத்தை மீட்க போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தை ஈசா யோகாமையம் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி வருகிறது. சுமார் 44 ஏக்கரை இதுவரை ஈஷா யோகா மையம் ஆக்கிரத்திருக்கிறது. இந்த நிலத்தை நிலம் இல்லாத பழங்குடி மற்றும் தலித் மக்களை திரட்டி நவம்பர் முதல்வாரத்தில்  கைப்பற்றும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். ஞாயிறு அன்று முள்ளாங்காடு மற்றும் முட்டத்துவயல் ஆகிய பகுதியில் உள்ள ஆதிவாசி மக்கள் பங்கேற்ற சிறப்பு மக்கள் சந்திப்பு கூட்டம் முட்டத்துவயல் … Continue reading ஈசா மையம் ஆக்கிரமித்திருக்கும் அரசு நிலத்தை மீட்க போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

“14 வயது குழந்தைகளுக்கு சந்நியாசம்; இரண்டு வேளை பத்திய சாப்பாடு”: ஈஷா மையம் குறித்து முன்னாள் ஊழியர்

ஈஷா யோகா மையத்தில், குழந்தைகளும், பெண்களும் வலுக்கட்டாயமாக துறவியாக்கப்படுவதாக அந்த மையத்தின் முன்னாள் ஊழியர் செந்தில் குற்றம்சாட்டியுள்ளார்.  மகள்களை பிரிந்து வாடும் பேராசிரியர் காமராஜ் போன்றோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது இவற்றை தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். “நான் ஈஷா மையத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். எங்கள் ஊரில் மொத்தம் ரூ. 15 லட்சம் மரம் நடுவதற்கென்று வசூலித்து கொடுத்தேன். ஆனால், அந்த அளவுக்கு மரங்களை நடவே இல்லை. ஊர் மக்கள் கேட்க ஆரம்பித்தனர். ஈஷா மையத்தின் நடவடிக்கைகள் … Continue reading “14 வயது குழந்தைகளுக்கு சந்நியாசம்; இரண்டு வேளை பத்திய சாப்பாடு”: ஈஷா மையம் குறித்து முன்னாள் ஊழியர்

விவாதம்: திருமண மறுப்பு என்பது ஆழ்ந்த பெண்வெறுப்பால் வருவது!

நியாண்டர் செல்வன் இந்த பதிவில் ஏன் பிரம்மசர்ய துறவு முறை இந்து மதத்துக்கு ஒப்புதலானதில்லை என்பதையும், அதன் எதிக்ஸையும் நவீன கண்ணோட்டத்தில் பார்க்கலாம். அகத்தியர், வசிஷ்டர், விசுவாமித்திரர் என வேதரிஷிகளை எடுத்துகொண்டால் அவர்கள் யாரும் பிரம்மசாரிகள் அல்ல, வெஜிட்டேரியன்களும் அல்ல. ரிஷிகள், ரிஷிபத்தினிகள் என ஆசிரமம் அமைத்தே குடும்பத்துடன் வாழ்ந்தார்கள். இந்து கடவுளர்களும் சிவன், பார்வதி, முருகன், வினாயகர் என குடும்பத்துடனே அருள்பாலிக்கிறார்கள். திருமனம் செய்து, பிள்ளைபெறாவிடில் புத் என்ற நரகம் கிடைக்கும் என இந்துநூல்கள் கூறுகின்றன. … Continue reading விவாதம்: திருமண மறுப்பு என்பது ஆழ்ந்த பெண்வெறுப்பால் வருவது!

”நாங்கள் கடத்தப்படவில்லை” ஈஷா மையத்தின் மீதான புகார் குறித்து சாமியாரான பெண்கள் விளக்கம்

ஈஷா மையத்திலிருந்து தனது இரு மகள்களை மீட்டுத்தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர். கோவை வடவள்ளியைச் சேர்ந்த முனைவர் காமராஜ். இவரது மனைவி சத்தியஜோதி. சத்தியஜோதி, “எனது மூத்த மகள் கீதா லண்டனில் எம்.டெக் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இளைய மகள் லதா பி.டெக் முடித்துள்ளார். நாங்கள் குடும்பத்தோடு ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சியில் சேர்ந்தோம். அப்போது எனது இரு மகள்களை மூளைச் சலவை செய்த … Continue reading ”நாங்கள் கடத்தப்படவில்லை” ஈஷா மையத்தின் மீதான புகார் குறித்து சாமியாரான பெண்கள் விளக்கம்

யோகா செய்யப்போன மகள்களை போதைக்கு அடிமையாக்கி, சாமியாராக்கிவிட்டார் ஜக்கி வாசுதேவ்: பெற்றோர் புகார்

ஈஷா மையத்திலிருந்து தனது இரு மகள்களை மீட்டுத்தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர். கோவை வடவள்ளியைச் சேர்ந்த முனைவர் காமராஜ். இவரது மனைவி சத்தியஜோதி. இவர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து விட்டு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் புகார் மனு ஒன்றினை அளித்தார். தீக்கதிரில் வந்த செய்தியின்படி சத்தியஜோதி தெரிவித்தவை: எனது மூத்த மகள் கீதா லண்டனில் எம்.டெக் … Continue reading யோகா செய்யப்போன மகள்களை போதைக்கு அடிமையாக்கி, சாமியாராக்கிவிட்டார் ஜக்கி வாசுதேவ்: பெற்றோர் புகார்

யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்த ஈஷா மையத்தை எதிர்த்து வழக்கு நடத்தி வருகிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

VetriSelvan Muthuraj மனித செயல்களால் யானைகள் இறப்பதும், யானைகள் காரணமாக மனிதர்கள் இறப்பதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்த வரை கோவை மாவட்டத்தில் இத்தகைய சம்பங்கள் அதிகமாக நடைபெறுகிறது. இதற்கு முக்கிய காரணம், யானைகள் வழித்தடங்களான வனப்பகுதிகள் அனைத்தும் மத /ஆன்மீக குரு நிறுவனங்களாலும், கல்வி நிறுவனங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தான். யானைகள் ஒரே இடத்தில் தங்குவதில்லை. அவை நகர்ந்துகொண்டே இருப்பவை. உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் ஒவ்வொரு இடமாக நகரும் யானைகள் வழக்கமாக ஒரே வழியையே பின்பற்றுகின்றன. … Continue reading யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்த ஈஷா மையத்தை எதிர்த்து வழக்கு நடத்தி வருகிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு