முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்

அண்மையில் நியூஸ் 18 தொலைக்காட்சியில் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் பேசிய தமிழர் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, கருணாநிதி குறித்து சில விமர்சனங்களை வைத்தார். இது திமுக ஆதரவாளர்களிடையே விமர்சனத்துக்கு ஆளானது. ஒருசிலர் கருத்துக்களால் விமர்சனம் செய்துகொண்டிருக்க ஒருசிலர் தனிப்பட்ட தாக்குதலை வைத்தனர். தியாகுவுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் எழுத்தப்பட்டன. எழுத்தாளர் நலங்கிள்ளியின் பதிவு: “கலைஞருக்குத் தோழர் தியாகு தொடுத்த அதிரடிக் கேள்விகள்! நேற்று நியூஸ் 18 … Continue reading முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் கண்ணீரோடு அனுசரிக்கப்படுகிறது. ஈழத்தில் நடந்த இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான தமிழகர்களை இலங்கை அரசு கொன்று குவித்த  முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் அஞ்சலி செலுத்தினர். படங்கள் நன்றி: யோ. புரட்சி.

ஈழ அரசியல்: குளத்து ஆமைகளும் கடல் ஆமைகளும்!

“மத்தியில் பிஜேபி அரசு அமைந்தால் போர் நிறுத்தம் வந்துவிடும்” என்று ஆசை காட்டுவதில் மொட்டு விட்ட இவர்களது கயமை “இலை மலர்ந்தால் ஈழல் மலரும்” என்பதாக விரிந்து ஈழத்தில் ரத்தம் குடிப்பதில் போய் முடிந்தது.

ஈழம், ராஜுவ்காந்தி, பிரபாகரன்: சர்ச்சையை கிளப்பிய இரண்டு பதிவுகள்!

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அண்மையில் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி ஈழ ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள், விமர்சகர்கள் என பலரும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.  ஒரு கட்டத்தில் திமுக ஆதரவாளர்களுக்கும் ஈழ ஆதரவாளர்களுக்குமிடையே கருத்து மோதலாக இது உருவெடுத்தது. குறிப்பாக திராவிடர் கழக ஆதரவாளர் பிரபாகரன் அழகர்சாமி மற்றும் எழுத்தாளர் விநாயக முருகன் எழுதிய பதிவுகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. பிரபாகரன் அழகர்சாமி தனது முகநூலில் எழுதிய பதிவு: இன்று இராஜிவ் காந்தி தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்ட நாள். … Continue reading ஈழம், ராஜுவ்காந்தி, பிரபாகரன்: சர்ச்சையை கிளப்பிய இரண்டு பதிவுகள்!

ஈழப்பிரச்சினையை வணிகமாக்கும் ஊடகங்கள்: திமுகவையும் அதிமுகவையும் ஒரே கோட்டில் நிறுத்துவது சரியா?

யுவகிருஷ்ணா தேர்தல் தேதி அறிவித்தாகி விட்டது. இனி ஜெயா அரசு காபந்து அரசுதான். இன்னுமா விகடனாருக்கு பயம்? அண்ணன் ப.திருமாவேலன் அவர்கள் இவ்வார விகடனில் எழுதியிருக்கும் ’இன்னும் எத்தனை நாடகங்கள்?’ கட்டுரை, ஜெயலலிதாவையும் கலைஞரையும் ஈழப்பிரச்சினையில் ஒரே தராசில் சரிக்கு சமமாக நிறுத்திவைக்க முயற்சிக்கிறது. மநகூ என்கிற அதிமுகவின் ‘பீ’ டீம் செய்யும் அதே வேலையைதான் விகடனும் செய்கிறது. ஈழப்பிரச்சினையில் கலைஞர் என்ன சொல்கிறாரோ, அதற்கு நேரெதிரான கருத்தை ஜெ. சொல்லுவார் என்று கட்டுரை சொல்கிறது. உண்மைதான். … Continue reading ஈழப்பிரச்சினையை வணிகமாக்கும் ஊடகங்கள்: திமுகவையும் அதிமுகவையும் ஒரே கோட்டில் நிறுத்துவது சரியா?

ஈழம் என்பது தமிழக அரசியலாளர்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது தொண்டை அடைத்தால் குடித்துக்கொள்கிற சோடா: தமிழ்நதி

தமிழ்நதி துரைப்பாண்டி என்ற அதிகாரியின்மீது எல்லோருடைய கோபமும் திரும்பியிருக்கும். ரவிச்சந்திரனின் மரணத்திற்கு அந்த அதிகாரி மட்டும் காரணமில்லை. ரவிச்சந்திரனை அவ்வாறு செய்யத் தூண்டியது நாட்பட்ட அவமானம். நிலந் திரும்பவியலாத கோபம். ‘எத்தனை நாள் இந்தத் துயரம் நீடிக்கும்?’என்று சீறிப் பாய்ந்த வெப்பியாரம். சில ஆண்டுகளுக்கு முன்னதாக, அகதி முகாமொன்றுக்குச் சென்றபோது, அங்கிருந்த அதிகாரிகள் அகதிகளை சகவுயிரிகளாகப் பார்க்கவில்லை; தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழுள்ள வளர்ப்புப் பிராணிகளைப் பார்க்கும் கண்களால் பார்ப்பதை அவதானித்தேன். நான் சந்திக்கச் சென்றிருந்த பெண், முகாமுக்கு … Continue reading ஈழம் என்பது தமிழக அரசியலாளர்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது தொண்டை அடைத்தால் குடித்துக்கொள்கிற சோடா: தமிழ்நதி

#சர்ச்சை“மாட்டுக் கறி தின்னு. என் மாட்டைத் தொட்ட பிச்சுப்புடுவேன் பிச்சி” ஒரு முற்போக்காளரின் அறைகூவல்!

இளங்கோ கல்லாணை என்னிடம் சல்லிக்கட்டு நடக்குமா என்று கேட்பவர்களுக்கு, ஏற்கனவே நடக்க ஆரம்பிச்சாச்சு. இன்று பயிற்சி காளைக்கு பக்கத்தில போயி லேசா கையில கீறல். உடம்பு மனசு எல்லாம் ஒரு சந்தோசம். ஊரில் எல்லோரும் தடையை மீறுவது பற்றி மட்டுமே பேசுகிறார்கள். தமிழ் உணர்வாளர்கள் தனி நாடு என்பதை ஏன் நாம் இந்த சமயத்தில் உயிர்ப்பிக்கக் கூடாது என்கின்றனர். இருக்கட்டும். போராட்டங்களை விட மக்கள் காளைகளை தயார் செய்வதில் மும்முரமாக இருக்கிறார்கள். துப்பாக்கி ஏந்திய போலீசைக் கொண்டு … Continue reading #சர்ச்சை“மாட்டுக் கறி தின்னு. என் மாட்டைத் தொட்ட பிச்சுப்புடுவேன் பிச்சி” ஒரு முற்போக்காளரின் அறைகூவல்!

#BeepSong: இளையராஜாவிடன் கேள்வி கேட்பது தவறா?

செந்தில் வேல் இசைத்துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சர்ச்சை குறித்து, அதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், அது குறித்து அந்த துறையின் ஞானியாக நான் உட்பட நம் அனைவரும் கொண்டாடும் ஒருவரின் கருத்தை பெற வேண்டும் என்று ஒரு செய்தியாளர் நினைப்பதில் என்ன தவறு ? அவர் அந்த கேள்வியை அந்த இடத்தில் எழுப்பியதை இசைஞானி விரும்பவில்லையெனில், இந்த இடத்தில் இந்தக் கேள்வியை நான் தவிர்க்கிறேன்..என்றோ அல்லது அது குறித்து … Continue reading #BeepSong: இளையராஜாவிடன் கேள்வி கேட்பது தவறா?